புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_m10நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 16, 2016 8:30 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”
                                           
  நூல்.

1. அன்னையும் பிதாவும் முன்னறி  தெய்வம்.

பதப்பொருள்:

அன்னை – தன்னைப் பெற்றெடுத்தத் தாய்.
பிதா – தன் பிறப்பிற்குக் கரணமாகிய தந்தை.
முன் – காலத்தாலும் இடத்தாலும் முதலாவதாக இருத்திக்கொளல்.
அறி – அறிந்து , அறிகின்ற, அறியும்.
தெய்வம் – வினை விநாசகர்; துயரங்களைப் போக்குபவர்.

தெளிவுரை:

தன்னைப் பெற்றெடுத்தத் தாய்  மற்றும் தன் பிறப்பிற்குக் கரணமாகிய தந்தை ஆகிய  இருவர் மட்டுமே   தம் வாழ்நாளின் முக்காலத்திலும் தமது துன்பங்களைப் போக்குபவர்கள் என்பதை ஒருவன் அறியவேண்டுவனவற்றுள் எல்லாம்  முதலாவதாக அறிந்து கொள்ள வேண்டும்.

விளக்கவுரை:

ஔவையின் ஆத்திச்சூடி  இருசீர் கொண்ட ஓரடிச் செய்யுள்- இகவாழ்விற்கான இல்லறநெறி.

ஆனால் கொன்றைவேந்தன் நான்கு சீர்கொண்ட ஓரடிச்செய்யுள்- பரவாழ்விற்கான ஞானநெறி.

உயர்விற்கேற்ப சீர்களையும் ஔவைப்பாட்டி இரட்டிப்பாக உயர்த்திய திறன் வியப்பை அளிக்கின்றது.

அறிதெய்வம்  என்பது வினைத்தொகைச் சொல் – அதாவது  காலம் கரந்த பெயரெச்சம். அச்சொல் அறிந்த தெய்வம், அறிகின்ற தெய்வம், அறியும் தெய்வம் என முக்காலத்திற்கும் பொருந்துவது.

“மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ
அதிதி தேவோ பவ”

என்னும் தைத்ரிய உபநிஷத் வேத வாக்கியம்  ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.


ஒருவனது துயரத்தை எக்காலத்திலும் தீர்க்கவல்லவர்கள் அவனது பெற்றோர்கள்தான் என்பது யாவரும் முதன்மை அறிவாகக் கொள்ளவேண்டும் என்பது கருத்து.

காலம், பணம், ஆற்றல் ஆகியனவற்றை வீணடித்து விடியலைத்
தேடிக்கொண்டிருக்கும் இன்ன பிற எதுவும் ஒருவனது துயரத்தை எக்காலத்திலும் தீர்க்கவல்லவைகள் அல்ல என்பது மறைபொருள்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 17, 2016 7:24 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று –

பதப்பொருள்:

ஆலயம் - ஜீவாத்மனின் இருப்பிடம் ; மானுட உடல்.
தொழுதல் - பேணுதல் ; அறிந்து கொள்ளுதல்; பாதுகாத்தல்.
சாலவும் - மிகவும் .
நன்று – நன்மை அளிக்கும்.

தெளிவுரை:

ஜீவாத்மாவின் இருப்பிடமாகும் மானுட உடம்பைப் பற்றி அறிந்து கொண்டு அதனைப் பாதுகாத்தல் யாவருக்கும் நன்மை பயக்கும்.

விளக்கவுரை:

உடலைப்பற்றி அறிதல் என்பது, இந்த உடல் ஜீவாத்மா தன் கர்மப்பதிவுகளை அனுபவிக்க எடுத்துக் கொண்ட ஒரு கருவி. இந்த உடல், பிறப்பு, வளர்ச்சி என்னும் மாற்றம், இறப்பு ஆகிய நியதிக்கு உட்பட்ட அசேதனப்பொருள். இந்த உடல் அழிந்தாலும் அதனுள் இருப்பதும் இயங்குவதுமாகும் ஆன்மா அழிவதில்லை. இறந்த உடலை விட்டு நீங்கிய ஆத்மா வேறு உடலைத் தாங்கி மறு பிறவி எடுக்கின்றது . ஆகையால் உடலுக்குத்தான் அழிவே ஒழிய அதுனுள் இயங்கும் ஆத்மாவிற்கு அழிவு இல்லை என்பதே உடலைப்பற்றி அறியும் மெய்யறிவாகும்.

உடம்பு, உயிர், மனம் – இவை மூன்றையும் இராஜயோகக் கல்வியைப் பயின்று பழகுவதால் பாதுகாக்கலாம்.

யோகாசனங்களைப் பழகலால் நிலையான உடல் ஆரோக்கியம், பிராணாயாம ( நெறிப்படுத்தப்பட்ட சுவாச முறைகள்) சாதகத்தால் நீடித்த ஆயுள், தியான சாதகத்தால் நிறைவான மனதின் நிம்மதி ஆகியவற்றைப் பெறுதலே உடம்பைப் பாதுகாக்கும் விதமும் ஆகும்.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் . . . . .” திருமந்திரம். என்னும்

‘பயிற்சி இல்லா உடம்பு பாழ் ’– பழமொழி வழக்கு

ஆகவே உடல் பாதுகாக்கப்படவேண்டியதாகிறது.

இதனையே நன்றாக நவில்கிறது கொன்றைவேந்தன் என்னும் வாழிவிற்கான ஞான நூல்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Sep 18, 2016 5:11 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

3. இல்லற மல்லது நல்லற மன்று.

பதப்பொருள்:

இல்லறம் - இல்லத்தில் மனைவி மக்களோடு கூடிவாழும் ஒழுக்கம்.
அறம் – ஒழுக்கநெறி.

தெளிவுரை:
ஒருவன் இல்லறத்தில் தன் மனைவி மற்றும் மக்களோடு கூடிவாழும் ஒழுக்கத்தை விடவும் மேலான நல்லொழுக்கம் என்பது இப்பூவுலகில்  வேறு எதுவும் கிடையாது.

விளக்கவுரை:

அறம் என்பது ஒழுக்கநெறி. இவ்வொழுக்கம்,  இல்லறம் என்னும்  குடும்ப வாழ்வு மற்றும் துறவறம் எனப்படும் சந்நியாச வாழ்வு என இருபால் படும். துறவறவிகள்,  தம் உடம்பு மற்றும் உயிரின் இருப்பிற்கு  இல்வாழ்வானையே அண்டி இருப்பதால் துறவறவாழ்வு  இல்லறவாழ்விற்குள் அடங்கி விடுகிறது. எனவே இல்லறவாழ்வே முதன்மையானதாகிறது.

மேலும் ஒவ்வொரு மனிதனும் முயன்று அடைய வேண்டியவை அறம்(தர்மம்), பொருள்(அர்த்தம்), இன்பம்(காமம்), வீடு(மோட்சம்) எனப்படும் நான்குமாவன. அதற்குப் புருஷார்த்தம் என்று சம்ஸ்க்ருதத்தில் பெயர்.   இல்லறவாழ்வில் மட்டுமே இவை நான்கையும் பெற முடியும்.

கடுமையான துறவற வாழ்வால் கிடைப்பது வீடு எனப்படும் மோட்சம் மட்டுமே. எனவேதான்  இல்லற வாழ்வு ஒருவனுக்கு மிகவும் நன்மை பயப்பதோடு ஆன்ம முக்தியையும் அளிக்கக் கூடியதாகிறது. அதனால்தான் நம் தமிழ்ப்பாட்டி , மனிதனானவன்  இல்லறத்தில் தன் மனைவி மற்றும் மக்களோடு கூடிவாழும் ஒழுக்கத்தை விடவும் மேலான நல்லொழுக்கம் என்பது இப்பூவுலகில்  வேறு எதுவும் கிடையாது என்கிறார்.

இதனை ,
“அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை . . . . . . . .”  என்கிறது   குறள்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 19, 2016 5:03 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

4 ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

பதப்பொருள்

ஈயார் – உதவி தேவைப்படும் பிறருக்குத் தன்னிடம் தனது தேவைக்கும் அதிகமாக உள்ளவற்றைக்
கொடுத்து உதவாதவர்.
தேட்டம் – சம்பாதித்து சேர்த்து வைத்துள்ள செல்வம்.
தீயார் – தீயகுணம் படைத்தக் கள்வர், ஏமாற்றுதாரர்.
கொள்வர் – வலிய அபகரித்துக் கொள்வர்.

தெளிவுரை:

தன்னிடம் தனது தேவைக்கும் அதிகமாக உள்ள செல்வம் முதலியவற்றை உண்மையில் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் பிறருக்குக் கொடுத்து உதவாதவர்கள், தாம் சம்பாதித்துச் சேர்த்து வைத்துள்ள செல்வத்தைத் தீயகுணம் படைத்த கள்வர் மற்றும் ஏமாற்றுக்காரர்கள் தாமே வலிய வந்து அபகரித்துக் கொள்வார்கள்.

விளக்கவுரை:

மனித வாழ்வில் செல்வம் மிகவும் இன்றியமையாவது. அது பொருட்செல்வம் மற்றும் அருட்செல்வம் என இருவகைப்படும். கருணை எனப்படும் குணமும் பொருள் எனப்படும் செல்வமும் செல்வம் என்றே கருதப்படுவன. மேலும் செல்வம் என்பது கல்வி - பொருள் எனத் தன்னுள் இருபால் படும்.
“உற்ற கலைமடந்தை இன்னமும் ஓதுகிறாள்” என்பதால் கல்வி தினமும் கற்கவேண்டுவதாகிறது. பிறருக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தாலும் கல்வி வளரும் தன்மையதே தவிற குறையாதது. பொருட்செல்வமோ கொடுத்தால் குறையும் தன்மையது. இறைக்கச் சுரக்கும் கேணிபோல் பிறர்பால் கருணையோடு கொடுத்த செல்வம் இயல்பாகவே ஒருவரின் சாதாரண முயற்சியாலேயே வளரும் தன்மையது.

கொடுத்தல் என்பது ஆத்ம பலம். எதிர்ப்பலன் கருதாது கொடுத்தலால் ஆன்ம மேம்பாடு கிட்டுகிறது. ஈதலால் ஒருவருக்குப் புகழும் உண்டாகிறது. அதனால்தான் ஈதலும் இசைபட வாழ்தலும் உயிராகிய ஜீவாத்மாவிற்குக் கிடைக்கும் ஊதியம் என்கிறார் திருவள்ளுவர்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு - திருக்குறள் 231.

அவ்வாறு ஆத்ம உயர்வை அளிக்கவல்ல கொடுக்கும் குணம் இல்லையானால் அச்செல்வத்தைத் தீயவர்கள் அபகரித்துக் கொள்வார்கள் என்று ஔவையார் கூறுகிறார்.


மேலும், ஒருவர் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை :
i. சம்பாதித்தவர் செலவு செய்து அதனாலாகும் இன்பத்தை அடைய வேண்டும்.
ii. அல்லது அச்செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து அதனைப் பெற்றவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு தானும் இன்புற வேண்டும்.
iii. இவை இரண்டும் இல்லையேல் அச்செல்வம் எதுவாயினும் தானே அழிந்துவிடும் அல்லது தீயவர்களால் அபகரிக்கப்படும் என்பது இயற்கையின் நியதி.

இந்த அற்புத தத்துவ ஞானத்தைத்தான் கொன்றை வேந்தனின் இந்த ஞானப்பாடல் வரிகள் மிக அழகாகவும் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவிக்கின்றன.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 20, 2016 1:25 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு.

பதப்பொருள்:

உண்டி – நுகர்ச்சி; அனுபவித்தல்.
சுருங்குதல் – குறைத்தல்.
பெண்டிர் – நல்லவர்; சான்றோர்.
அழகு – இலக்கணம்; இலட்சணம்.

தெளிவுரை:

உண்ணும் உணவில்  கட்டுப்பாடும்  உணவைக் குறைவாக உண்பதும்  சான்றோர்களாகும் நல்லவர்களின் இலக்கணம்- அவர்களுக்கு அழகு கூட்டுவதாகும்.

விளக்கவுரை :

மனிதன் உண்ணும் உணவு அவனுடைய குணநலங்களில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்தவல்லது.

உணவில் சாத்வீக உணவு, இராஜஸ உணவு மற்றும் தாமஸ உணவு என்னும் முப்பெரும்பிரிவுகள் உள்ளன. இவற்றை முறையே மென்மையான உணவு, வன்மையான உணவு மற்றும் சோம்பல் தரும் உணவு எனத் தமிழ்ப்படுத்தலாம்.

கீரை, காய்கறிகள், பழங்கள் போன்ற சைவ உணவு அனைத்தும் மென்மை உணவு வகைகளாவன. அதாவது சாத்வீக உணவுகள்

அசைவ உணவுகள், கூடுதலாக எண்ணெய் சம்பந்தப்பட்ட உணவுகள்,  கிழங்குகள் எல்லாம் வன்மை உணவுகள். அதாவது ராஜஸ உணவுகள்

தயிர் , தக்காளி, புளி போன்ற புளிப்பு, மற்றும் காரம், துவர்ப்பு, கசப்பு, கார்ப்பு  போன்றவை கூடுதலாக சம்பந்தப்பட்ட உணவுகள்  எல்லாம் சோம்பலைத் தரும் உணவுகள்.அதாவது தாமஸ வகை உணவுகள்

மானுடர்கள் பசித்து உண்ணவேண்டும். மேலும் உண்ணும்போது தமக்குத் தேவைப்படும் உணவில் வயிற்றில் பாதியளவும், கால்பாகம் தண்ணீரும், கால்பாகம் வெறுமனே காலியாகவும்  இருக்குமாறு உண்ணவேண்டும் என்கிறது மனுநீதிநூல். இவ்வாறு உணவு உட்கொண்டால் உடம்பு, உயிர், மனம் ஆகியன மேன்மை அடையும். நோயற்றதும் குறைவற்றதுமான வாழ்வு வாழலாம்.

‘உணவே மருந்து – மருந்தே உணவு’ என்னும் வழக்கு கவனத்தில் கொள்ளவேண்டுய ஒன்றாகும். இந்தக் கருத்துதான், ‘உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு’ என்று நான்கு சீர்களில் ஒரே வரியில் நம் தமிழ்ப்பாட்டி  அற்புத ஞானத்தை அழகுற உபதேசிக்கிறார்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Tue Sep 20, 2016 1:38 pm

உணவு பாதியளவும், கால்பாகம் தண்ணீரும், கால்பாகம் வெறுமனே காலியாகவும் இருக்குமாறு உண்ணவேண்டும் இவ்வாறு உணவு உட்கொண்டால் உடம்பு, உயிர், மனம் ஆகியன மேன்மை அடையும். நோயற்றதும் குறைவற்றதுமான வாழ்வு வாழலாம்.

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 20, 2016 8:14 pm

நல்ல வேந்தன் தேவை நாட்டுக்கு . அவ்வை பிராட்டியார் அருளியவாறு>>>>>>>>>>>>>>>

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 21, 2016 8:31 pm


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

6 ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

பதப்பொருள் :

ஊர்- அதிகாரம் செல்லுமிடம்;வல்லமை.
பகை – விரோதம், எதிர், வெறுப்பு.
வேர் – கோபம்.
கெடுதல் –அழிதல்.

தெளிவுரை :

அதிகாரமும் வலிமையையும் உடையவர்களை ஒருவர் வெறுத்து அத்தகையோர்களிடம் பகைமை பாராட்டினால், அப்பகைமைக்குக் காரணமாகிய கோபமே அவ்வாறு பகைமை பாராட்டியவரை அழித்து விடும்.

விளக்கம்:

“Familiarity with powerful person is never to be trusted” என்பது வழக்கு. அதாவது அதிகாரமும் வல்லமையும் உடையவர்களின் நட்பு நம்பத் தகாதது என்று பொருள். அதிகாரம் உடையவர்களின் நட்பே நம்பிக்கைக்கு உகந்ததல்ல என்னும்போது அத்தகையோர்களை வெறுத்து அவர்களைப் பகைத்துக் கொண்டால் அவ்வாறு பகைத்துக் கொள்பவர்களுடைய நிலை என்னவாக இருக்க முடியும்? வெறுப்பிற்கு அடிப்படைக் காரணமாவது பெறுப்பவர் வெறுக்கப்படுபவரின்மீது கொள்ளும் கோபமே. அவ்வாறான கோபமே கோபம் கொண்டவரை அழித்துவிடும் என்பது ஞான போதனை.

இப்பாடலின் மூலம் இருவகை நற்பண்புகள் உபதேசிக்கப்படுகின்றன. அவை:
1. அதிகாரமும் வல்லமையும் கொண்டவர்களைப் பகைத்துக் கொண்டால் பகைத்துக் கொண்டவருக்கு அழிவு உண்டாகும்.
2. எவர் மீதும் கோபம் கொள்ளக் கூடாது. அவ்வாறு கோபம் கொண்டவருக்கு அக்கோபமே அழிவை உண்டாக்கும்
என்பனவாவன.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 23, 2016 10:00 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
பதப்பொருள்:
எண் – சான்றோர்களின் நற்போதனைகளைச் செவிவழிக் கேட்டல் .
எழுத்து – சான்றோர்கள் எழுதி வைத்த நூல்களிலிருந்து நல்லொழுக்க நெறிகளைப் படித்து அறிதல்.
கண் - அறிவு
தகுதல் – ஏற்றதாதல்.
தெளிவுரை:
கல்விகேள்விகளில் சிறந்தும் நல்லொழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தும் வாழ்ந்த மற்றும் வாழும் சான்றோர்களின் நற்போதனைகளைச் செவி வழிக் கேட்டலும், மற்றும் அத்தகையவர்கள் எழுதி வைத்த நூல்களிலிருந்து நல்லொழுக்க நெறிகளைப் படித்து அறிதல் ஆகியவையும் ஒருவரின் வாழ்வில் அப்படியே பின்பற்றி வாழத்தகுதியான அறிவு என்று ஏற்கத்தகுந்தன.

விளக்கவுரை:
கண் என்பது அறிவு என்றும் பொருள்படும். அறிவு என்றால் அறிந்து வைத்துக் கொள்வது. இந்த அறிவு, கொள்கை அறிவு( Theoretical knowledge ) என்றும் , அனுபவ அறிவு (Practical knowledge)என்றும் இருவகைப்படும். படித்தல் என்பது கொள்கை அறிவு, பழகல் என்பது அனுபவ அறிவு. இவை இரண்டும் கூடியது பயிலல் அறிவு - அதாவது கற்றறிவு என்பதாகும். இந்த கற்றலாகிய அறிவே மானுட வாழ்வில் செயல் படுத்தி அதன் விளைவாய் நேரடிப் பலனைப் பெறவல்லது.

உலகில் வாழும் ஒவ்வொருவரும் எல்லாவற்றையும் தாமே கற்று அறிதல் என்பது ஒருவரது வாழ்நாளில் இயலாத செயல். ஆகையால் சான்றோர்களின் நற்போதனைகளைச் செவி வழிக் கேட்டலும், மற்றும் அத்தகையவர்கள் எழுதி வைத்த நூல்களிலிருந்து நல்லொழுக்க நெறிகளைப் படித்து அறிதல் ஆகியவையும் ஒருவரின் வாழ்வில் அப்படியே பின்பற்றி வாழத்தகுதியான கற்றறிவு என்று ஏற்கத்தகுந்தன என்று உபதேசிக்கப்படுகிறது. அத்தகைய அறிவைச் சோதித்துப் பார்க்க வேண்டியதில்லை. அவற்றை அவர்கள் சொல்லியபடியே வாழ்வில் நடைமுறைப்படுத்தி நன்மை அடையலாம் என்பது கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 10:39 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

8. ஏவா மக்கள் மூவா மருந்து

பதப்பொருள்:

ஏவுதல் – அபகரித்தல்; ஏமாற்றுதல்.
மக்கள் – மானுடவினம்; மனிதர்கள்.
மூவா - கேடுறாத
மருந்து - இனிமை; மகிழ்ச்சி

தெளிவுரை:

பிறர் பொருளை அபகரிக்காமலும், பிறரை ஏமாற்றாதும் வாழும் மனிதர்கள், தம் வாழ்நாளில் தீங்கில்லாத மகிழ்ச்சியைத் தாமும் அடைந்து, பிறரையும் மகிழ்விப்பார்கள்.

விளக்கம் :

பிறரது பொருட்களை அவர்களுக்குத் தெரியாமல் திருடுதல், கொள்ளை அடித்தல் , மேலும் அவர்களுக்குத் தெரிந்தே வலிய அவர்களிடமிருந்து அபகரித்தல், பிறரை ஏமாற்றுதல் போன்றவற்றைத் தவிர்த்த மனிதர்கள் தாமும் மகிழ்ச்சியுடன் வாழ்வதோடு மற்றவர்களையும் மகிழ்விப்பார்கள் என்பது கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக