புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
44 Posts - 41%
heezulia
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_m10நேர்மைக் கடைப்பிடி - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மைக் கடைப்பிடி


   
   

Page 2 of 2 Previous  1, 2

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 09, 2016 4:40 pm

First topic message reminder :

ஸ்ரீ குருவே நம:
ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)
உலகின் உயர்தனிச் செம்மொழியாம் நம் அமுதத் தமிழில் பெண்பாற் புலவர்களில் நமக்கு மிகவும் அறிமுகமானவர் நமது தமிழ்ப்பாட்டி ஔவையார்தான். அவர் ஒரு சகலகலா வல்லவர். வாழும் மானுடத்திற்கு இல்லறநெறிகளாக ஆத்திச் சூடி, ஞானநெறிகளாகக் கொன்றைவேந்தன், யோக நெறிகளாக விநாயகர் அகவல் ஆகியனவற்றை அவர் தந்தமையை நமது குழுமப் பகிர்வில் முறையே 20.02.2016 முதல் நேற்று ( 05.09.2016) வரைக் கண்டோம்.
கீதை என்றால் ஸ்ரீமத் பகவத் கீதைதான் எல்லோருடைய நினைவிற்கும் வரும். ஆனால் பகவத் கீதையைத் தவிறவும் 1. உதத்திய கீதை, 2. வாமதேவ கீதை, 3. ரிஷப கீதை, 4. ஷடாஜ கீதை, 5. சம்பக கீதை, 6. மங்கி கீதை, 7. போத்திய கீதை, 8. ஆரித கீதை, 9. விருத்திர கீதை, 10. பராசர கீதை, 11. ஹம்ஸ கீதை, 12. கபில கீதை, 13. பிட்சு கீதை, 14. தேவி கீதை, 15. சிவ கீதை, 16. ரிபு கீதை, 17. ராம கீதை, 18. சூர்ய கீதை, 19. வஷ்ட கீதை, 20. அஷ்டாவக்ர கீதை, 21. அவதூத கீதை, 22. உத்தவ கீதை, 23. பாண்டவ கீதை, 24. வியாபன கீதை , 25. பிரம்ம கீதை , 26. உத்திர கீதை; 27 ஸ்ரீகுருகீதை என்றும் , அவற்றிற்கு மேலும் பல்வேறு கீதைகள் உள்ளன.

அதுபோலவே குறள் என்றதும் நம் அனைவருக்கும் நினைவில் வருவது நமது உலகப் பொதுமறையாகும் தமிழ்வேதம் - திருக்குறள்தான். ஆனாலும் கீதையைப்போலவே குறட்பாக்களும் அநேகம் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் நம் தமிழ்ப்பாட்டி ஔவையாருடைய, “ஔவைக்குறள்” ஆகும். ஔவைக்குறளும் முப்பால் கொண்டது . அவை , 1 வீட்டு நெறிப்பால்; 2.திருவருட்பால்; 3 தன்பால் என்பன. ஔவைக்குறளின் உட்பிரிவுகளுக்கும் அதிகாரம் என்றே பெயர். ஒவ்வொரு அதிகாரமும் 10 குறட்பாக்கள் கொண்டவை. முதற்பாலாகிய வீட்டு நெறிப்பால் 10 அதிகாரங்களையும், இரண்டாம் பாலாகிய திருவருட்பால் 10 அதிகாரங்களையும், மூன்றாவது பாலாகிய தன்பால், 11 அதிகாரங்களையும் கொண்டு, மொத்தம் 31 அதிகரங்களில் 310 குறட்பாக்களாக ஔவைக்குறள் என்னும் அற்புத நூல் நிறைவடைகிறது. ஔவைக்குறளும் அற்புத அறிவுத்தெளிவைத் தருவதே.
பெரும் பொருட்செல்வத்தை ஈட்டுவதிலேயே குறிக்கோளாகக் கொண்டு ,இன்றைய உலகம் ஓடுகின்றது - தம் பிள்ளைகளையும் அவ்வாறே ஓட வைக்கின்றது . அதன் விளைவாய்ப் பிள்ளைகளைப் பொருள் ஈட்டும் இயந்திரமாக ஆக்குவதில் பள்ளிக்கல்வி ஆரம்பம் முதலே மானுடம் முழு ஈடுபாடு காட்டுவதால், பெற்றோரும் பிள்ளைகளும் நிலையில்லாத செல்வத்தையே நாடுதலிலேயே தம் முழு கவனத்தையும் ஈடுபடுத்தி, ஆடம்பர வாழ்விலும் ஆரவாரத்திலும் அவ்வாறு சம்பாதித்தப் பொருளைச் செலவழித்து,முடிவில் நிலையான மன நிம்மதியை இழந்து தவிப்பதை பொதுவாக நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கின்றோமே தவிற, மாற்றத்திற்கான பிற எதனையும் செய்ய இயலவில்லை.
அந்த மாற்றத்திற்கான ஒரு முயற்சியாகத் தான், நமது தமிழ்நூல்கள் மற்றும் சம்ஸ்க்ருத நூல்கள் ஆகியன காட்டும் நீதிநெறிகளையும், மானுட ஒழுகலாறுகளையும் ஒவ்வொன்றாக அனுதினமும் நமது குழுமப் பகிரிகளில் பகிர்ந்து வருகிறோம். நல்வழிக்கான வித்துக்களை விதைத்து வைப்போம். அது வளர்ந்து முழுமை அடையும் தருணத்தில் அவற்றைப் புரிந்து வாழும் விதியின் பதிவுகளோடு பிறக்கும் மனிதர்களுக்கு அவை பயன்படட்டும். இல்லையேல், ‘நாம் அதற்கு என்செய்வோம்’ என்னும் மனநிம்மதியாவது நமக்குக் கிட்டட்டும் .
அத்தகைய எண்ணத்தில் உதயமாகி , இனி நாம் பார்க்கப்போவதுதான் ஔவைக்குறள்.

என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்
(+91 94438 09850) ramalingamgpo@gmail.com
புதுச்சேரி 605 009 09.09.2016.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 10, 2016 10:27 am

மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
நீதி நூல் என்னும் இந்த அற்புதப் படைப்பிற்கு அளிக்கப்பட்டுள்ள சாற்றுக் கவிகளுள் ஒன்றை முதலில் காணல், நூலின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ள ஏதுவாகி அதனைப் பயிலும் ஆர்வத்தையும் நம்மில் உண்டாக்கும் . ஆகையால் ஒரு சாற்றுக்கவியை மட்டும் முதலில் பார்ப்போம்.
நூலுக்கு ஒரு சாற்றுக்கவி :
வள்ளுவரா தியரேநல் நீதிநூல் உரைப்பதற்கு வல்லா ரென்று
துள்ளுவர்யா வரும் அனைய துண்மையா யினுங்குளத்தூர்ச் சுகுண வள்ளல்
உள்ளுவர்பா லருள்நிறவும் வேதநா யகமகிபன் உரைத்த நீதி
தள்ளுவர்யா ராதலில்தேற் றேகாரந் தவிர்த்திசைத்தல் தகுதி யாமே.

பொருள் :
உலகப் பொதுமறையாகிய தமிழ் வேதம் தந்த திருவள்ளுவர் போன்ற ஞானியர்களே நன்மையைப் பயக்கும் நீதிபோதனை நூல்களை இயற்றி உலக மக்களுக்குப் போதிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் என்று யாவரும் ஆரவாரம் செய்து அரற்றுவார்கள். அதுவும் உண்மையே யாகிலும், குளத்தூரில் அவதரித்த நற்குணங்களின் வள்ளலாகிய அன்பே உருவாகி அருளே நிறைந்தவருமாகிய வேதநாயகம் பிள்ளையை அறிந்து அவரது நீதிநூலைக் கற்றவர்கள் அவ்வாறு கூறமட்டார்கள். அவரது படைப்பாகிய இந்த நீதி நூலைப் புறந்தள்ளுபவர் யாராக இருந்தாலும் அவர்கள் சான்றோர்கள் கூடிருக்கும் சபையிலிருந்து நீக்கப்பட்டுத் தனித்தும் தள்ளியும் வைக்கத் தகுதியானவர்களே.
(பதப்பொருள்: இசை – சான்றோர் குழு)
கடவுள் துணை
நீதி நூல்
காப்பு (1)
படைத்துக் காக்கும் பண்பினன் பரமன்


ஆதிநூ லொன்றும் அரும்பயன்யா ருந்தெளிவான்
நீதிநூ லொன்று நிகழ்த்தவே - மாதிரமோ
இத்தரைய னைத்தையுமி யற்றினி தில்திதிசெய்
கத்தன்மலர் ஒத்தகழல் காப்பு.


தெளிவுரை:
உலக வாழ்வில் , மானுடம் நல்ல நீதிநெறிகளைக் கற்றும் அவைகளைத் தம் வாழ்வில் கடைப்பிடித்தும் வாழும் முகத்தான், நீதிநெறிகளைக் கூற வல்ல முதன்மை நூலாக அமையவேண்டியும் , அவற்றின் பயன்களை அனைவரும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்றும், நந்நீதிகளை மானுடர்களுக்கு உணர்த்த விரும்பி, இந்நூலும், நூற்பயனும் அவர்களைச் சென்று சேரவேண்டும் என மிகவும் உயர்ந்த சிறப்புமிகு இவ்வுலகம் யாவையையும் படைப்பித்து, அதில் வாழும் உயிர்களுக்கு நன்மையைப் பயக்க வல்ல இன்பத்தை நாளும் செய்விக்கின்ற மலர்போலும் மென்மையும் இனிமையும் வாய்ந்த பரம்பொருளை, இந்நூலில் தொடக்கத்திலேயே பணிகின்றேன்.
(பதப்பொருள் : மாதிரம்- உயர்வு; கத்தன் – பரம்பொருள்; கழல்-பாதம் , தொடக்கம்)


விளக்கவுரை :
இந்நூலின்கண் கூறப்படும் கருத்துகளும் அவற்றின் பயனும், மானுடம் யாவையையும் சென்று சேர வேண்டி பரம்பொருளை நூலாசிரியர் பணிகின்றார்.

என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.
(+91 94438 09850) ramalingamgpo@gmail.com
புதுச்சேரி 605 009
10.09.2016.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 10, 2016 11:27 am

தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .

“ உலகினோடு பூதம்யாவும் உனது தோற்றம்தான்.
உயிரினோடு பொருள்கள் யாவும் உனது இருப்புதான்.
நாலு வேதம் கோடி நீதி உனது வாக்குதான்.
நாளும் கோளும் நானும் கூடும் உனது மாயைதான்” – ஸ்ரீ ஞானஜோதி சம்பங்கி சுவாமிகள்.


திருமூலரின் படைப்பாகும் , திருமந்திர நூல் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டுள்ள அற்புத யோகமும் ஞானமும் புதைந்து கிடக்கும் ஒரு புதையல். அது உலக மானுடம் முழுமைக்கும் பொதுமை.
ஆனால் அது சைவத் திருமுறையில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு சைவபக்தி நூலாக்கப்பட்டு விட்டாமையால் அதன் பெரும்பாலான பாடல்கள் காலப்போக்கில் சைவத்திற்கேற்ப திருத்தப்பட்டு விட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. அப்பாக்கள், நமது சிவன் கோவில் கருவறைகளில் ஒதுங்கி நின்று , ஓதுவார்களால் ஓதப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். அத்திருமுறைப் பாக்களுக்குக் கொடுக்கப்படும் பக்தி பூர்வமான பொருள்விளக்கம் நம்மில் பெரும்பாலோருக்குப் புரிவதும் இல்லை – அப்படியே ஏதோ புரிந்து கொண்டவர்களும் அக்கருத்துக்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த இயலாத வகையிலேயே அக்கருத்துக்கள் உள்ளன என்பதை யாவரும் அறிவர்.

ஆகையால், யாவரும் அறிந்து பயன்பெறும் வண்ணம், திருமந்திரத்தை நமது ஈகரை வலைதளம் வாயிலாக யோகப் பார்வயில் அணுகும் முயற்சியே இந்த தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) என்னும் தொடர் பதிவின் நோக்கம். ‘நவில்தொறும் நூல் நயம்’ என்பார் நமது தமிழ்வேதம் தந்த தத்துவமேதை திருவள்ளுவர். எந்த ஒரு நூலுக்கும் ஏற்கந்தகுந்த பொருளை ஆதாரங்களோடு கூறும்போது , அவ்விளக்கம் இதுநாள் வரை மறபுவழி கொண்டிருந்த பொருளுக்கு மாறுபட்டமைபோல் காட்சி அளித்தாலும் , அத்தகைய பொருள் விளக்கம் நூலின் இன்னொமொரு பரிமாணம் எனக்கொள்ளுதலே சான்றாண்மையாக அமையும். மாற்றம்தானே மானுடர்க்கு ஏற்றம் தருவது!

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவைத்
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - நல்வழி -40


என்கிறார் நம் தமிழ்ப் பாட்டி ஔவை. ஆக நம் அமுதத்தமிழ் கண்ட திருக்குறள் , சஸ்க்ருத உபநிஷதங்கள் (ரிக் , யஜுர், சாம, அதர்வண வேதாந்தங்கள்), மூவர் தேவாரம், மணிவாசகப்பெருமானின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய அனைத்தும் சொல்ல விழைவது ஒன்றேயாகும் பரம்பொருளையே என்கிறார்.
இந்த வகையில் திருமந்திரம் என்னும் தேனை யோகமும் ஞானமும் கூடிய பார்வையில் இனி காண்போம். இது பக்திக்கு மாறுபட்ட கருத்தும் அல்ல – நாம் நாத்திகரும் அல்ல. மாறுபட்ட ஆனாலும் ஏற்கப்படும் கோணத்தில் கூறப்படும் நூலின் இன்னுமொரு பரிமாண விளக்கம் என்றே நாம் தெளிதல் வேண்டும். அதாவது எப்போதும் எங்குமாகவும் யாதுமாகவும், தோற்றம்-மாற்றம்- மறைவு ஆகியனவற்றிற்கு அப்பாலாகும் பரம்பொருளை யோகஞானத்தால் மனிதராகப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தன்னில் அறியும் ஒரு வழியே இந்த தொடரின் நோக்கமாக விளங்கும்.

முதலாவதாகப் பரம்பொருள் வாழ்த்து
பாயிரம் – பரம்பொருள் வாழ்த்து- திருமந்திரம் – 001.

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.

பதவுரை
ஒன்று – பரமாத்மா ஒன்றே .
அவன்தானே – எல்லாமும் தானே யாவது அது.
இரண்டு – அது பரமாத்மா , ஜீவாத்மா என இரண்டும் ஆவது;
அவன் இன்னருள் –பரம்பொருளின் இனிமையான அருட்தன்மையால்;
நின்றனன் மூன்றின் உள் –அப்பரம்பொருள் உடம்பு, உயிர், மனம் என்னும் மூன்றினுள்ளும் இருப்பதால்
மூன்றாகவும் இருப்பது.
நான்கு உணர்ந் தான் – ஜீவாத்ம நிலையில் தான் முயன்று அடையவேண்டியது அறம்(தர்மம்) பொருள் (அர்த்தம்), இன்பம்(காமம்), வீடு (மோட்சம்) என்ற நான்கையும் அது உணர்ந்திருப்பது.
ஐந்து வென்றனன் –அதன் நிமித்தமாக தன் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலங்களையும்
நெறிப்படுத்தித் தன்வசம் வைத்துக் கொள்ள வல்லது.
ஆறு விரிந்தனன் – கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மேல், கீழ் என்னும் ஆறு திசைகளிலும்
விரிந்துபரந்திருப்பது.
ஏழு உம்பர்ச் சென்றனன்- ஆனாலும் எல்லாவற்றிற்கும் அப்பாலாயும் அனைத்திற்கும் உயர்வானதாகவும்
இருப்பது.
தான் இருந் தான்உணர்ந்து எட்டே- அவ்வாறு இருக்கும் பரமாத்மாவை உனர்ந்து கொண்டு , ஜீவாத்மா மீண்டும் பிறவாமை ஆகிய ஆன்ம முக்தி நிலையை எட்டி அடைய முயலவேண்டும்.


அடிதோறும் பொருளுரை :

ஒன்று அவன் தானே இரண்டு அவன் இன்னருள்
- பரமாத்மாவகிய பரம்பொருள் ஒன்றேயாவது; ஆனாலும் அதன் அருட்பிரவாகத்தால் அதுவே பரமத்மா- ஜீவாத்மா என்னும்படிக்கு இரண்டாகக் கட்சியளிப்பது.

நின்றனன் மூன்றின் உள் நான்கு உணர்ந் தான்
- மேலும் அது உலக உயிர்களில் உடம்பு, உயிர், மனம் என மூன்றாகவும் ஆகி அவை வாழும் காலத்தில் அவற்றில் நிலைபெறுகிறது; தன் அம்சமாக ஜீவாத்மா என உலகில் மனிதனாகத் தன்னைப் பிறப்பித்துக் கொண்ட அந்த பரமாத்மா, தன் வாழ்நாளில் தான் முயன்று அடைய வேண்டிய புருஷார்த்தம் - அறம்(தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம்(காமம்), வீடு (மோட்சம்) என்ற நான்கு என்பதையும் உணர்ந்து இருப்பது;

ஐந்துவென்றனன் ஆறு விரிந்தனன்
- புருஷார்த்தத்தை அடைய வேண்டுவதற்காக மெய்,வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களையும் நெறிப்படுத்தி அவற்றின் இயல்பான போக்கை வெல்லும் தன்மையது; அதுவே பர வெளியில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மேல், கீழ் என்னும் ஆறு திசைகளிலும் விரிந்து உலகம் எங்கும் பரந்திருப்பது;

ஏழு உம்பர்ச் சென்றனன் - அப்பரம்பொருளே எல்லாவற்றிற்கும் அப்பாலாயும் அனைத்திற்கும்
உயர்வானதாகவும் இருப்பது.


தான் இருந் தான்உணர்ந்து எட்டே
- அவ்வாறாகும் அப்பரம்பொருள் இருப்பதை ஆத்ம வித்யா ஒழுகலாறுகள் என்னும் இராஜயோகப் பயிற்சியால் அறிந்துணர்ந்து அதனை அடைய ஜீவாத்மாவாகிய மனிதன் முயலவேண்டும்.

தெளிவுரை:

பரமாத்மாவகிய பரம்பொருள் பிரிவுகளற்ற ஒன்றேயாவது; ஆனாலும் அதன் அருட்பிரவாகத்தால் அதுவே பரமத்மா- ஜீவாத்மா என்னும்படிக்கு இரண்டாகக் கட்சியளிப்பது.

மேலும் அது உலக உயிர்களில் உடம்பு, உயிர், மனம் என மூன்றாகவும் ஆகி அவை வாழும் காலத்தில் அவற்றில் நிலைபெறுகிறது; தன் அம்சமாக ஜீவாத்மா என உலகில் மனிதனாகத் தன்னைப் பிறப்பித்துக் கொண்ட அந்த பரமாத்மா, தன் வாழ்நாளில் தான் முயன்று அடைய வேண்டிய புருஷார்த்தம் - அறம்(தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம்(காமம்), வீடு (மோட்சம்) என்ற நான்கு என்பதையும் உணர்ந்து இருப்பது;

புருஷார்த்தத்தை அடைய வேண்டுவதற்காக மெய்,வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களையும் நெறிப்படுத்தி அவற்றின் இயல்பான போக்கை வெல்லும் தன்மையது; அதுவே கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மேல், கீழ் என்னும் ஆறு திசைகளிலும் விரிந்து உலகம் எங்கும் பரந்திருப்பது;

புருஷார்த்தத்தை அடைய வேண்டுவதற்காக மெய்,வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களையும் நெறிப்படுத்தி அவற்றின் இயல்பான போக்கை வெல்லும் தன்மையது; அதுவே பரவெளியில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மேல், கீழ் என்னும் ஆறு திசைகளிலும் விரிந்து உலகம் எங்கும் பரந்திருப்பது;

குறிப்புரை : மந்திரத்தின் மூன்றாவது அடியின் இறுதிச் சீரில் ‘எழு’ என்னும் வினைப்பகுதி யாப்பு கருதி ஏழு என்று விகாரம் அடைந்தது.


விளக்கவுரை :

பரம்பொருள் உலகம் யாவையுமாக ஒன்றேயானது. அது அனைத்தின் உள்ளும் அவற்றைக் கடந்து அவற்றிற்கு வெளியிலும் இருப்பதால், அது. ‘கடவுள்’ என்று காரணப்பெயர் பெற்றது. உலகில் பிறவி எடுத்த ஜீவாத்மாக்கள் பரம்பொருளை அடைந்து ஆத்ம முக்தி என்னும் பிறவா நிலையை முயன்று பெறவேண்டும் என்பது கருத்து.


என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.
(+91 94438 09850) ramalingamgpo@gmail.com
புதுச்சேரி 605 009 10.09.2016.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 10, 2016 5:53 pm

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.

நன்றி அருமையான விளக்கம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக