புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_m10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_m10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10 
62 Posts - 34%
i6appar
விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_m10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_m10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_m10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_m10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_m10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_m10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_m10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10 
1 Post - 1%
prajai
விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_m10விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 12, 2016 9:20 pm

விக்ரம் நடித்த ‘இருமுகன்’ – சினிமா விமரிசனம் ElkVKnvETYyxMypa6LhI+irumugan1
-
விக்ரம் ஒரு ஃபீனிக்ஸ் பறவை. தன் வீழ்ச்சியின் சாம்பலில் இருந்து அவ்வப்போது உயிர்த்தெழுவார். அப்படி எழ பாலா, ஹரி, ஷங்கர் போன்ற இயக்குநர்கள் இதற்கு முன் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவரது சினிமா கிராஃபை கவனித்தால் அவ்வப்போது உற்சாகமாக மேலே ஏறி மீண்டும் அவ்வப்போது பாதாளத்தில் வீழ்ந்திருப்பதைக் கவனிக்கலாம்.

இந்த ஃபீனிக்ஸ் பறவை உயிர்த்தெழும்போதெல்லாம் அதை டீஃப் ஃபிரை செய்ய சில இயக்குநர்கள் உற்சாகக் கத்தியுடன் தயாராக இருப்பார்கள். 2015-ல் விஜய் மில்டன் (பத்து எண்றதுக்குள்ள). இப்போது ஆனந்த் ஷங்கர். இப்படி செத்து செத்து விளையாடும் ஆட்டத்தை விக்ரம் ஏன் தொடர்ந்து அனுமதித்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் புரியவில்லை.

இருமுகன் எதைப் பற்றியது?

ஜேம்ஸ்பாண்ட் வகையிலான ஒரு திரைப்படத்தை தமிழில் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் சீன் கானரி காலத்திலிருந்து பல ஹாலிவுட் திரைப்படங்களில் கதறக் கதற உபயோகப்படுத்தப்பட்டு விட்ட இந்தப் பாணி திரைக்கதையை மீண்டும் தூசு உதறி நவீன நுட்ப சாகசங்களுடன் திறமையாகவே சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால், தவறாக அசெம்பிள் செய்யப்பட்ட வெளிநாட்டுக்காரில் விபரீதமாக பயணம் செய்த அலுப்பே மிஞ்சுகிறது.

***

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 12, 2016 9:21 pm

மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒரு தாத்தா உள்ளே நுழைகிறார். அவர் திடீரென ‘இந்தியன்’ தாத்தாவாகி பாய்ந்து பாய்ந்து அங்குள்ளவர்களைக் கொன்று போட, இந்திய அரசு தரப்பில் பதற்றம் ஏற்படுகிறது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட போராக இந்தச் சம்பவத்தை இந்தியா கருதுகிறது. தாத்தா சண்டை போட்ட வீடியோவை ஆராயும்போது அவர் கழுத்தின் பின்பகுதியில் ஒரு பிரத்யேக ‘லவ்’ சின்னம் காணப்படுகிறது.

அபாயகரமான மருந்துகளைக் கண்டுபிடித்து சர்வதேச அளவில் விற்பனை செய்துவந்த ‘லவ்’ எனப்படும் அதிபயங்கர வில்லனின் குழு அடையாளக் குறி அது. ஆனால், இந்திய உளவுத்துறையால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னே அவன் சாகடிக்கப்பட்டு விட்டான். அவனுடைய தொழிற்சாலையும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தவர், அகிலன் வினோத் என்கிற இந்திய உளவுத்துறை அதிகாரி. இவருக்கு மட்டுமே ‘லவ்’ குறித்தான அனைத்து விவரங்களும் தெரியும். ஆனால் இந்த ஆபரேஷனில் அவருடைய மனைவியை இழந்த துயரத்தில் முரட்டுத்தனமான ஆசாமியாகி விட்டதால் அவர் பணியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.

இப்போது ‘லவ்’ விவகாரம் மீண்டும் உயிர்தெழுந்திருப்பதால் அதைத் திறமையாகச் சமாளிக்க ‘அகிலனின்’ உதவி நிச்சயம் வேண்டும். வடகிழக்கு மாநிலத்தில் பணத்துக்காக மனிதச்சண்டைப் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அவரை தேடிப்பிடித்து அழைத்து வருகிறார்கள். உளவுத்துறை பணிக்கு மீண்டும் திரும்ப அகிலனுக்கு விருப்பமில்லை என்றாலும் தன் மனைவியைப் பறிகொடுத்த ஆபரேஷன் தொடர்பானது என்பதால் ஒப்புக் கொள்கிறார்.

அகிலன் வினோத் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தாரா? அவருடைய மனைவியின் மரணத்துக்குக் காரணம் என்ன? யார் இந்த லவ்? நான்கு வருடங்களுக்கு முன் முடிந்த போன விவகாரம் ஏன் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது ஆகிய விஷயங்களை ஆக்ஷன் மசாலாவில் தோய்த்து தந்திருக்கிறார்கள்.

***

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 12, 2016 9:21 pm

***

விதம்விதமான ஒப்பனைகளை இட்டு தன் பாத்திரங்களில் வித்தியாசம் தர முயன்ற முன்னோடியான சிவாஜி கணேசனைத் தொடர்ந்து ஒப்பனையைத் தாண்டி தன் உடலையும் பாத்திரத்துக்கேற்றபடி வருத்தி மாற்றிக்கொள்பவர் கமல்ஹாசன். அவரைப் பின்தொடரும் அடையாளம், விக்ரம்.

இப்படி அர்ப்பணிப்புடன் கதாபாத்திரங்களுக்காக தங்களின் உடல்களை மாற்றுவது ஒருபுறம் பாராட்டத்தக்க விஷயம்தான் என்றாலும் அது எந்த அளவுக்குத் திரைக்கதைக்குத் தேவையானது, எந்த அளவுக்குப் பொருந்துகிறது என்பதை முக்கியமாக கவனிக்கவேண்டும். இதை ஒரு ஜிம்மிக்ஸ் ஆகப் பயன்படுத்தக்கூடாது. திரைக்கதை கோரும் விதத்தில்தான் பாத்திரங்கள் உருவாகவேண்டும். ‘வித்தியாசமான’ பாத்திரங்களைத் தீர்மானித்துவிட்டு அதற்கேற்ப திரைக்கதையைப் பூசி மெழுகக்கூடாது. தசாவதாரம் அப்படி நிகழ்ந்த ஒரு விபத்து.

‘இருமுகனில்’, ‘லவ்’ எனப்படும் பாத்திரத்தில் ஒரு பெண்ணின் மெலிதான நளினத்துடனும் வித்தியாசமான ஒப்பனையுடனும் விக்ரமே நடித்திருக்கிறார். அபாரமான பங்களிப்பு. பிளாஸ்டிக் முகம் போல இருந்தாலும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விட முடியாதபடியான உடல்மொழி, வசன உச்சரிப்பு, ஒப்பனை என்று துல்லியமான வேறுபாட்டைப் பின்பற்றியிருக்கிறார். ‘கழுத்தின் எந்த இடத்தில் வெட்டினால் எத்தனை நிமிடத்தில் உயிர் போகும்’ என்று விளக்கியபடியே நித்யா மேனனை சாவகாசமாகக் கொல்லும் காட்சியில் அவரிடமிருந்து வெளிப்படும் நளினமான குரூரம் அபாரம். போலவே பெண்களின் கழிப்பறையில் இருந்து வெளியே வரும் இன்னொரு காட்சி.

இப்படி சிலபல காட்சிகளில் ‘லவ்’ பாத்திரத்தின் வசீகரம் மிளிர்ந்தாலும், சுவாரசியம் அளிக்காத ஒட்டுமொத்த ரைக்கதையினால் இந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் வீணாகி விடுவதைக் காண பரிதாபமாகத்தான் இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் வரும் ‘தாத்தா’ கூட விக்ரம்தானோ என்று சந்தேகத்துடன் பார்த்து பின்பு தெளிவானேன்!

***

அகிலன் வினோத் என்கிற அண்டர்கவர் உளவு ஆசாமியாக இன்னொரு விக்ரம். மனிதர் எப்படி இத்தனை ஃபிட் ஆக இருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் நவீன ஒப்பனை, உடை, சிகையலங்காரத்தைத் தாண்டி முகத்தில் அலுப்பு தெரிகிறது. போலவே நயன்தாராவும். படத்தின் இதர இடங்களில் கெமிக்கல் விஷயங்கள் வருகின்றன. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் எவ்வித வேதியியல் சமாச்சாரமும் நிகழவில்லை. விவாகரத்து ஆன தம்பதியினர் போல விலகலாகவே வந்து போகிறார்கள். மலேசிய போலீஸ் அதிகாரியாக வரும் தம்பி ராமையாவின் கோணங்கித்தனங்களை இந்திய சினிமாக்களில் மட்டுமே காண முடியும். மலேசிய நாட்டின் வெளியுறவுத்துறைத் துறை ஆட்கள் இந்தத் திரைப்படத்தைக் காணாமலிருப்பது நமக்கு நல்லது. மலேசியப் பின்னணியில் ரித்விகா வரும் காட்சிகளைப் பார்த்தால் ‘கபாலி’ பார்ட் 2 சினிமாவில் உட்கார்ந்திருக்கிறோமோ என்று சந்தேகமே வந்துவிடுகிறது.

By சுரேஷ் கண்ணன்

தினமணி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக