புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
5 Posts - 3%
prajai
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
2 Posts - 1%
சிவா
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
435 Posts - 47%
heezulia
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
30 Posts - 3%
prajai
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
யோகாசன   விளக்கம்.... Poll_c10யோகாசன   விளக்கம்.... Poll_m10யோகாசன   விளக்கம்.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகாசன விளக்கம்....


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 10:52 am

யோகாசனம்

யோகா என்றால் என்ன?

"யுஜ்" என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே யோகா என்ற சொல் பிறந்தது.

யுஜ் என்றால் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் ஒன்றிப்பு என்று பொருள்.
யோகாவின் தந்தை எனக் கூறப்படும் பதஞ்சலி "யோக சூத்திரங்கள் என்ற நுாலில் யோகாவிற்கு 195 வழிகாட்டி நெறிகளை வழங்கியுள்ளார்.
அவை ஒழுக்கம் நிறைந்த உயர் வாழ்வுக்கு அடிப்படையாகும். அத்துடன் யோகாவுக்குள் அறிவியலும் இணைந்துள்ளது.


பதஞ்சலி தன்னுடைய யோகா சூத்திரங்களில் 8 பாகங்ளைக் குறிப்பிட்டுள்ளார்.

அவை:-
1.யமம்.
2.நியமம்.
3.ஆசனம்.
4.பிரணாயாமம்.
5.பிரத்தியாஹாரா.
6.தாரணா.
7.தியானம்.
8.சமாதி.

யோகாவின் அடிப்படை இதுதான்.

இது தவிர
ஹத யோகா
ஐயங்கார் யோகா
அஸ்தங்கா யோகா
சிவானந்தா யோகா
குண்டலினி யோகா
பவர் யோகா
கலையம்ச யோகா

என வெவ்வேறு கால கட்டங்களில் விஞ்ஞான ரீதியான மாறுதல்கயோடு மாற்றம் கண்டு வளர்ந்து வருகிறது.

இங்கே தியான முறையிலான யோகா பயிற்சிகளை விட இலகுவாக செய்யக் கூடிய

சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சி முறையிலான யோகாசனங்களை முறையான புத்தகங்கள் அல்லது தெளிவான விளக்கத்துடனான கட்டுரைகளை வாசித்து செய்யலாம்.

இவை பத்மாசனம் போன்ற கடின ஆசனங்களை செய்ய முயன்று , அந்தக் கலையையே வெறுக்க வைக்கக் கூடிய ஆசனங்களல்ல.
மிக மிக இலகுவானவை.


எதையும் நாம் பயமுறுத்தி வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டதால்,எதையும் செய்ய அஞ்சுகிறோம்.
எதையாவது தொடங்கு முன்பே எதிர்மறை விளைவுகளையே சொல்கிறோம்.

மனித வாழ்வுக்கு தன்னம்பிக்கை மிக மிக அவசியம்.
அதை யோகாசன பயிற்ச்சி தருகிறது.

எனவே கடினமில்லாத,
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை செய்யக் கூடிய இலகுவான ,
எதுவித பாதிப்புகளையும் உருவாக்காத சில யோகாசன உடற் பயிற்சிகளை
யோகாசன குரு: பெங்களுர் சுந்தரம் அவர்களது அனுமதி பெற்று எழுகிறேன்.

இதற்காக பெரிய இடவசதி தேவையில்லை. காலையிலோ - மாலையிலோ 10 - 15 நிமிடங்கள் செலவழிக்க முடிந்தால் அதுவே போதுமானது.


வாழ்க வளமுடன்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


-AJeevan

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 11:00 am

சூப்பர் பிரெய்ன் யோகா”

”தோப்புக் கரணம்”
நம்மூர் பள்ளிகளில் இது தண்டனை. அதையே அமேரிக்கர்கள் செய்தால் அது “சூப்பர் பிரெய்ன் யோகா” (Super Brain Yoga)!

நன்றி: குண. முருகேசன். யோகாசன   விளக்கம்.... 678642



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 11:04 am

குண்டலினி



யோகாசன   விளக்கம்.... Kundalini_snake-261x300அது என்ன குண்டலினி..? யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. இந்து மதத்தில் மிக முக்கிய அங்கமாக “யோகம்” இருக்கிறது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.

இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப் படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போதுதான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும்போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.

சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. (விரிவாக இதை எழுதினால் மனித உடலியல் பற்றிய கட்டுரையாகிவிடும் என்பதனால் சுருக்கமாக முடித்துவிட்டேன்.)
இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். (கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக் கருத வேண்டுகிறேன்.) இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.
யோகாசன   விளக்கம்.... 7-chakras-300x284முதலில் மூலாதாரம். இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம்தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.
இரண்டாவது சுவாதிஷ்டானம். இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

மூன்றாவது மணிப்பூரகம். இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

நான்காவது அனாகதம். இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் ஏன் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது? சிந்திக்க நேர்கிறது.)
ஐந்தாவது விசுக்தி. இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும். (ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்தப்பட்டது விசுக்தி உச்ச நிலையில் தூண்டப்பட்டிருப்பதை குறிக்கவோ என்னவோ, யாருக்குத் தெரியும்?)
ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை). இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.

இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்). இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது. (சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹாரம் தூண்டப்பட்ட நிலையைக் குறிக்கவே.) (சக்கரங்களோடு சேர்த்து பஞ்சபூதத் தத்துவத்தை இங்கே விளக்க இயலாது. அதில் கேள்வி, குழப்பம் இருப்பின் பின்னாளில் விளக்கம் தரப்படும்.)

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத்யோகாசன   விளக்கம்.... Patanjali_2-186x300 தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவதுதான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும்போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள்தான் யோகாவும் தியானமும். பொதுவாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டு வரும்போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது. இந்தவொரு அனுபவத்தை அடைவதே மனித வாழ்வின் இலட்சியம் என்று விவேகானந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு. ‘ஆமாம், இதெல்லாம் என்ன பேச்சு? சாதரண வாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’ என்கிறீர்களா?
நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, “நான் ஏன் பிறந்தேன்” என்று உங்களைக் கேட்டுக்கொண்டதுண்டா? கேட்டிருந்தால் பதில் கிடைத்ததா? கிடைத்த பதில் உண்மையில் முழுமையானதா? அப்பதில் முழுமை எனில் உங்கள் வாழ்வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும். ஆனால் பெரும்பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை பதிலாகத்தான் இருக்கும். அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது. ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால்தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவதில்லை. பெரும்பான்மை மக்கள் “பிறந்து விட்டேன்; அதனால் வாழ்கிறேன்” என்றுதான் வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வாழ்வை பரிபூரணமாக உணர்வதோ வாழ்வதோ இல்லை. (நீங்களும்தான்!!?)
பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப்பதால்தான் வாழ்கையை பற்றி ஒன்றும் புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவதில்லை. இறுதி நிலையாவது தெளிவாகத் தெரிந்தால்தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரணமாக்க முடியும். இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி செய்ததுண்டா? ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை, அந்தமும் (இறப்புக்கு பின்) புரியவில்லை. அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ளதை அறிவதே ஆன்மிகம். இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது. நீங்கள் வேறு எதிலாவது ஈடுபட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ / அல்லது படி நிலைகளாகவோ இருக்கலாம். உங்களுடைய இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி உங்களுக்குப் புரியவைக்க முடியாது. அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறுமனே நம்ப முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித் தள்ளத்தான் முடியும். இந்தக் கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரிபூரணமாக்கும் அருமருந்தாய் மேற்சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும். சாதரண மனிதனுக்கும் இது சாத்தியமே. தேவை முயற்சி மட்டுமே. அதற்கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகாவும் தியானமும். சாதாரண வாழ்வுக்கு இது மிகத் தொலைவானது அல்ல. மிக நெருங்கியதே. அத்தகையதொரு புலன்கள் தாண்டிய அனுபவம் உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாணத்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த்திச் செல்லும். இந்த, புலன்கள் தாண்டிய நிலையே, “யோகம்”. இந்த யோக நிலையையே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பலவாறாகச் சொல்கிறார்கள்.
சாதரண வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியாகிவிட்டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன். நம் வாழ்வில் எதை அடைவதாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது. இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொவொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.
உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம். உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம். உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம். உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.
யோகாசன   விளக்கம்.... Pathanjali-140x300இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம். இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும். அதற்குதான், “குரு” என்பவர் தேவை. ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால்தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.

இந்தத் தருணத்தில் யோகப் பயிற்சியை எளிமையாக வகுத்து, தொகுத்து, உலகுக்கு அளித்த யோகாவின் தந்தையாம் பதஞ்சலி முனியை வணங்கி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.


நன்றி - சின்னா யோகாசன   விளக்கம்.... 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக