by ayyasamy ram Today at 5:46 am
» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 12:25 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm
» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:43 pm
» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm
» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm
» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:40 pm
» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:08 pm
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:07 pm
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Sat Jul 02, 2022 7:08 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Sat Jul 02, 2022 7:02 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:41 pm
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Pradepa |
|
மலேசிய செய்திகள்
மலேசிய செய்திகள்
மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!
கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.
அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
Re: மலேசிய செய்திகள்
கோலாலம்பூர், ஜூலை 22 – காஜாங்கில், போலீஸ் நிலையத்திற்குள் ஆட்டம் பாட்டம் என கேளிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட நான்கு போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், போதைப் பொருள் உட்கொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
போலீஸ் நிலையத்தின் ஓர் அறையை ‘குட்டி டிஸ்கோ’ தளமாக மாற்றி கும்மாளமிட்ட , நான்கு போலீஸ் அதிகாரிகளும், நான்கு பெண்களும் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என, புக்கிட் அமானின் உயர்நெறி கட்டொழுங்கு துறையின் இயக்குநர் டத்தோ அஸ்ரி அஹ்மாட் ( Datuk Azri Ahmad ) தெரிவித்தார்.
தொடக்க முடிவில், ஒரு போலீஸ் அதிகாரி THC வகை போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மலேசிய செய்திகள்
கோலாலம்பூர் : கடந்த ஜனவரி மாதத்தில் அமுலாக்கப்பட்ட அவசர கால சட்டத்தை அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் 4 தீர்மானங்கள் எதிர்க்கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்துவதற்கோ, மறுப்பதற்கோ நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு அதிகாரமில்லை என இந்தத் தீர்மானங்களைச் சமர்ப்பித்த புருவாஸ் நாடாளுமன்றத்திற்கான ஜசெக உறுப்பினர் இஙே கூ ஹாம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானங்கள் ஜூலை 19-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டன.
மலேசிய அரசியலமைப்பு சட்டம் விதி 150 (3) வரையறுத்தபடி அவசர கால சட்டங்கள் நாடாளுமன்றத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும், எனவே அவைத் தலைவர் அசார் ஹாருண் இந்தத் தீர்மானங்களை நிராகரிக்க முடியாது எனவும் இஙே மேலும் குறிப்பிட்டார்.
இஙே சமர்ப்பித்துள்ள தீர்மானங்கள் ஜனவரியில் கொண்டுவரப்பட்ட அவசர கால சட்டம் மற்றும் மேலும் மூன்று அவசர கால சட்டங்களை இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
இந்தத் தீர்மானங்கள் மீதான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதால் ஜூலை 26 நாடாளுமன்றக் கூட்டத்தின் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் ஒரு கடுமையான மோதலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன என்பதையே ஜசெகவின் தீர்மானங்கள் காட்டுகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மலேசிய செய்திகள்
கோலாலம்பூர் : ஆளும் தேசியக் கூட்டணியையும், பிரதமர் மொகிதின் யாசினையும் ஆட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் அகற்றுவது என்பது இப்போதைக்கு இயலாத காரியம் – காரணம் எந்தக் கட்சிக்கும் அதற்கான பெரும்பான்மை இல்லை என வீடமைப்புத் துறை அமைச்சர் சுரைடா கமாருடின் (படம்) கூறியுள்ளார்.
சுரைடா பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினருமாவார். பிகேஆர் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த சுரைடா, அஸ்மின் அலியோடு இணைந்து பெர்சாத்து கட்சிக்குத் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார்.
எனவே, அடுத்த பொதுத் தேர்தல் வரை அனைத்துக் கட்சிகளும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் – பிரதமரின் ஆட்சி தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் சுரைடா கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருக்கும் நிலையில் மொகிதின் யாசினை பிரதமர் பதவியில் இருந்து அகற்றும் இன்னொரு முயற்சியை எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எனினும், இந்த முயற்சிக்கு அம்னோ ஒத்துழைப்பு வழங்குமா என்பது இன்னும் தெரியவில்லை.
அம்னோவின் இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பதால் அம்னோ திருப்தியடைந்து விடுமா அல்லது ஏற்கனவே அம்னோ உச்சமன்றம் எடுத்துள்ள முடிவின்படி மொகிதின் அரசாங்கத்திற்கு ஆதரவு தராமல் விலகிக் கொள்ளுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் பிரதமர் அலுவலகம் சென்று இஸ்மாயில் சாப்ரியை சந்தித்துப் பேசியிருப்பதும் பல்வேறு ஆரூடங்களுக்கு வித்திட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மலேசிய செய்திகள்
இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவே அதிகம். செயலில் உள்ள கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையும் மிக உயர்ந்த அளவில் (147,386) உள்ளது.
மேலும், இன்று 144 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 7,718- ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 10,094 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 456 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
வகை அடிப்படையில் முறிவு
வகை 5 – (மோசமான நிலை, சுவாசக் கருவியின் உதவி தேவை) : 29 நேர்வுகள் (0.2%)
வகை 4 – (உயிர்வளி உதவி தேவை) : 74 நேர்வுகள் (0.5%)
வகை 3 – (நிமோனியா) : 102 நேர்வுகள் (0.6%)
வகை 2 – (இலேசான அறிகுறிகள்) : 7,095 நேர்வுகள் (45.6%)
வகை 1 – (அறிகுறிகள் இல்லை) : 8,273 நேர்வுகள் (53.1%)
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (7,672), கோலாலம்பூர் (2,063), கெடா (937), ஜொகூர் (722), நெகிரி செம்பிலான் (682), பினாங்கு (530), சபா (516), சரவாக் (461), பஹாங் (457), மலாக்கா (452), பேராக் (415), கிளந்தான் (372), திரெங்கானு (229), புத்ராஜெயா (41), லாபுவான் (21), பெர்லிஸ் (3).
மேலும் இன்று, 30 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 16 சமூகப் பரவலுடன் தொடர்புடையது, 7 பணியிடத் திரளைகள் ஆகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மலேசிய செய்திகள்

தடுப்பூசி மையங்களில், ஆடைக் குறியீடுகள் குறித்த விதிகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) தெரிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக, கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த அதிகத் தடுப்பூசிகளைச் செலுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அதன் தலைவர், டாக்டர் எம். சுப்பிரமணியம் பரிந்துரைத்தார்.
முன்னதாக, இரண்டு பிபிவி-க்களில் ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிக்காத இருவரை உபசரிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு பிபிவி, தனது முகநூலில் ஆடைகள் குறித்த வழிகாட்டுதல்களை அறிவித்தது.
மலேசியாகினியிடம் பேசிய சுப்பிரமணியம், அத்தகைய விதிமுறைகள் தேவையில்லை என்று கூறினார்.
“உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு எந்தவிதமான நடத்தை விதிகளும் இருக்கக்கூடாது. அவர்களுக்குத் தடுப்பூசி நியமனம் இருக்கும் வரை, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்.
“இப்போது முக்கிய முன்னுரிமை, முடிந்தவரைப் பலருக்குத் தடுப்பூசி போடுவதுதான். மக்களைப் புறக்கணிப்பதற்கான நேரம் இதுவல்ல,” என்றார் அவர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மலேசிய செய்திகள்
கவனமாக இருக்கவும்.
Profile பார்த்தேன். இப்பிடித்தான் வண்டியை ஓட்டுவீர்களோ?
கால்கள் வைக்கும் இடத்தில் அதிகமாக சுமைகள் வைக்கலாம்.
நல்ல ஐடியா

@சிவா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12054
சிவா likes this post
Re: மலேசிய செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1348973T.N.Balasubramanian wrote:உங்கள் இருப்பிடம் எந்த பகுதியில் வருகிறது.?
கவனமாக இருக்கவும்.
Profile பார்த்தேன். இப்பிடித்தான் வண்டியை ஓட்டுவீர்களோ?
கால்கள் வைக்கும் இடத்தில் அதிகமாக சுமைகள் வைக்கலாம்.
நல்ல ஐடியா![]()
@சிவா
நான் இருப்பது சிலாங்கூர் மாநிலம், பூச்சோங் என்ற இடம். கோலாலம்பூரிலிருந்து 25 கிமீ
நிற்கும் பைக்கில் எப்படி காலை வைத்தால் தான் என்ன?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மலேசிய செய்திகள்


இதுவும் சரிதான்.
எந்தன் இளம் வயது மலரும் நினைவுகள்........
5ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.( உண்மையாகத்தான் 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன்.)
அண்ணன் 7ம் வகுப்பு . அவருக்கு சைக்கிள் உண்டு.நீ சின்னவன் ஓட்டக்கூடாது. பெடல் எட்டாது என தடுத்துவிடுவான்.வீட்டில் ஸ்டாண்ட் போட்டு வண்டி நிறுத்தப்பட்டு இருக்கும்.அதில் குரங்கு பெடல் பண்ணி சந்தோஷமடைவேன்.

@சிவா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12054
சிவா likes this post
Re: மலேசிய செய்திகள்
T.N.Balasubramanian wrote:நிற்கும் பைக்கில் எப்படி காலை வைத்தால் தான் என்ன?![]()
இதுவும் சரிதான்.
எந்தன் இளம் வயது மலரும் நினைவுகள்........
5ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.( உண்மையாகத்தான் 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன்.)
அண்ணன் 7ம் வகுப்பு . அவருக்கு சைக்கிள் உண்டு.நீ சின்னவன் ஓட்டக்கூடாது. பெடல் எட்டாது என தடுத்துவிடுவான்.வீட்டில் ஸ்டாண்ட் போட்டு வண்டி நிறுத்தப்பட்டு இருக்கும்.அதில் குரங்கு பெடல் பண்ணி சந்தோஷமடைவேன்.
@சிவா
எனக்கு சைக்கிள் ஓட்டி பழகித் தராததால் என் அண்ணனின் சைக்கிளில் காற்றைப் பிடுங்கி அடிவாங்கிய அழகான நினைவுகளும் எனக்குண்டு...
Re: மலேசிய செய்திகள்
அரசாங்கப் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்றும் இதுபோன்ற கடினமான காலங்களில் ஒற்றுமையுடன் இருப்பது முகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
“எனவே, யாரும் விரல்களைக் காட்டவும் சுட்டிக்காட்டவும் தேவையில்லை. நாட்டிலுள்ள மக்கள் ஒட்டுமொத்தமாக அவதிப்படுகிறார்கள், அதே நேரத்தில் முன்னணி மற்றும் மருத்துவமனைகள் மிக அழுத்தத்தில் உள்ளன, “ என்றும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மலேசிய செய்திகள்
- Code:
காற்றைப் பிடுங்கி அடிவாங்கிய அழகான நினைவுகளும் எனக்குண்டு...
விஷமம் செய்து அதற்கு தண்டனையும் பெற்று அழகான நினைவாக பாவிக்கும் அற்புதம்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12054
சிவா likes this post
Re: மலேசிய செய்திகள்
பிரதமரின் அமரிக்கையான அழுத்தமான பதில்.

Last edited by T.N.Balasubramanian on Mon Jul 26, 2021 4:40 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12054
சிவா likes this post
Re: மலேசிய செய்திகள்
சிலாங்கூரில் மட்டும் 6,616 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 2,457 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த சில நாட்களில் தொற்றுகள் அதிகரித்து வரும் கெடாவில் ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 1000 ஆக பதிவாகியது.
கொவிட் தொற்று மரணங்கள் 207 – மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 31
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மலேசிய செய்திகள்
ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை!
ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகள் தொடங்கியதில் இருந்து மலேசியாவுக்கு பதக்கங்கள் ஏதும் கிடைக்குமா எனக் காத்திருந்த விளையாட்டு இரசிகர்களுக்கு இறுதியில் ஓர் இனிப்பான செய்தி கிடைத்திருக்கிறது.
பூப்பந்துக்கான இரட்டையர் போட்டியில் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை இன்று வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டது. தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மலேசியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.
இந்தோனிசியாவின் முகமட் அஹ்சான் – ஹென்ட்ரா செத்தியாவான் இணையை 52 நிமிடங்களில் 17-21, 21-17, 21-14 என்ற புள்ளிகளில் மூன்று ஆட்டங்களில் விளையாடி இறுதியில் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை வெற்றி கொண்டனர்.
இதன் மூலம் மலேசியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்திருக்கிறது. நமது நாட்டிற்கு தோக்கியோ ஒலிம்பிக்சில் கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 30) நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் அரை இறுதி ஆட்டத்தில் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை சீனாவின் லீ ஜூன் ஹூய்-லியூ யூ இணையிடம் வீழ்ந்தனர்.
கடுமையான போராட்டத்தை வழங்கினாலும் முதல் இரண்டு ஆட்டங்களிலும் 24-22, 21-13 புள்ளிகளில் மலேசிய இணையர் தோல்வியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை நடைபெற்ற இரட்டையர் பிரிவுக்கான ஆட்டத்தில் அவர்கள் மீண்டும் களமிறங்கி நாட்டிற்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: மலேசிய செய்திகள்

“தோல்வியடைந்த அரசாங்கம்” என்று எழுதப்பட்டப் பதாகைகள் மற்றும் பெயர்ப் பலகைகளை அதிகமானோர் கையிலேந்திச் சென்றனர், மற்றவர்கள் கருப்பு கொடிகளை அசைத்தனர்.
கோவிட் -19 நோய்த்தொற்றை அரசாங்கம் தவறாக நிர்வகிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 இறப்பைக் குறிக்கும் வகையில், சடலங்களின் மாதிரிகளை அவர்களில் சிலர் எடுத்துச் சென்றனர்.
மெர்டேக்கா சதுக்கம் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்ததால், சுமார் 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தைச் சுற்றி கூடினர்.
ஆர்ப்பாட்டத்தின் அமைப்பாளரான மக்கள் ஒற்றுமை செயலகம், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 1,000 என மதிப்பிட்டுள்ளது.

முன்னதாக, காலை 11.35 மணிக்கு, “கொடுங்கோன்மை அரசாங்கத்தை எதிர்ப்போம்!” மற்றும் “முஹைதீனை பதவியிலிருந்து விலக்குவோம்!” என்று கோஷமிட்டபடி அவர்கள் மெர்டேக்கா சதுக்கத்தை நோக்கி அணிவகுத்தனர்.
மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மட்டுமின்றி, காவல்துறையினரும் கோலாலம்பூர் நகர மண்டபமும் போராட்டம் நடந்த பகுதியைக் கண்காணித்து வந்தனர்.
மக்கள் ஒற்றுமை செயலகத்தின் இளைஞர் குழு ஏற்பாடு செய்த இன்றையப் போராட்டம், பிரதமர் முஹைதீன் யாசினை இராஜினாமா செய்யக் கோரியது.
இதற்கிடையில், #Lawan (#லாவான்) என்ற ஹேஷ்டேக் இப்போது மலேசியக் கீச்சகத்தில், 100,000-க்கும் மேற்பட்ட கீச்`களுடன் பிரபலமாக உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|