புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
63 Posts - 40%
heezulia
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
314 Posts - 50%
heezulia
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
21 Posts - 3%
prajai
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Barushree
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_m10மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய செய்திகள்

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:42 pm

First topic message reminder :

மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!

கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.

அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.

மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:54 am

பிகேஆர் உதவித் தலைவர் சேவியர் ஜெயக்குமார் கட்சியின் புகார்கள், மேல்முறையீடு மற்றும் ஒழுங்குமுறை குழுவிடமிருந்து எச்சரிக்கை கடிதம் எதையும் பெறவில்லை என்று கூறினார்.

அவருக்கு எதிராகப் புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து எச்சரிக்கை கடிதம் சேவியருக்கு அனுப்பப்பட்டதாக கட்சி-தொடர்புடைய ஒரு வலைத்தளத்தில் இன்று கூறப்பட்டது.

இன்று இரவு மணி 7.00 வரையில் தாம் எந்த ஒரு கடிதத்தையும் அக்குழுவிடமிருந்து எந்த விதத்திலும் பெறவில்லை என்று கூறிய சேவியர், எனக்குத் தெரிவிக்காமல், எனக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்காமல், மேற்கொண்டு விசாரணை நடத்தாமல் இக்குழு எப்படி முடிவெடுக்க முடியும் என்று அவர் வினவினார்.

இந்த விவகாரம் குறித்து நான் அந்தக் குழுவிடமிருந்து கடிதமோ, அறிவிப்போ பெறவில்லை என்பதை வலியுறுத்துகிறேன் என்று கூறிய சேவியர், இது என்னை கொடியவனாகக் காட்டும் நோக்கம் கொண்டது என்று நம்புகிறேன் என்றார்.

“இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு விளக்கம் பெறுவதற்காக நான் இக்குழுவின்தலைவர் சைட் ஹுசின் அலியை பிற்பகல் மணி 4.15 அளவில் தொடர்பு கொண்டேன். அவர் இன்று வரையில் அக்குழுவின் சார்பில் கையொப்பமிடுவதற்கோ, வெளியிடுவதற்கோ எந்த எச்சரிக்கை கடிதத்தையும் பெறவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்”, என்று சேவியர் தெரிவித்தார்.

மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:56 am

இன்னும் இரண்டு நாட்களில் சிங்கப்பூரில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பிரபு பத்மநாதன் என்ற மலேசியருக்கான தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்கும்படி கோரும் அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை சிங்கப்பூர் அரசுக்கு மலேசிய அரசாங்கம் அனுப்பவிருக்கிறது.

இந்த தண்டனை நிறைவேற்றம் தொடர்பாக உடனடியாக இந்தக் கடிதத்தை தாங்கள் அனுப்பவிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் லீயூவ் வூய் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் மலேசியாவின் வெளியுறவு அமைச்சும் உடனடி பணிகளில் ஈடுபடும். அதே வேளையில் சிங்கபூரில் உள்ள ஐநா அலுவலகமும் தனது பணியை மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

ஒருவேளை பிரபு தூக்கிலிடப்படுவாரேயானால் அது நமக்கு ஒரு சோகமான நாளாக இருக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்செயலுக்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் 31 வயதான பிரபுவுக்கு வெள்ளிக்கிழமையன்று சாங்கி சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட விருப்பதாகவும் இதனை தடுத்து நிறுத்தும்படியும் மலேசிய அரசாங்கத்திற்கு லாயர்ஸ் போர் லெபெர்ட்டி என்ற வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவரான என்.சுரேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண தண்டனை விதிப்பதை முற்றாக அகற்றுவதற்கு மலேசிய அரசாங்கம் அண்மையில் முடிவு செய்திருக்கும் நிலையில் அண்டை நாடுகளில் அத்தகைய மரண தண்டனைக்கு உள்ளாகவிருக்கும் மலேசியர்களின் நிலைமை குறித்தும் அரசு அக்கறை எடுத்துக் கொள்ளும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:57 am

கோலாலம்பூர், அக்.24- மலேசியர்கள் மத்தியில் நிலவும் இனம் சார்ந்த மேலாதிக்கம் தொடரக் கூடாது. அவ்வகையான மேலாதிக்கம் நாட்டு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று முன்னாள் அமைச்சரான டான்ஸ்ரீ ரபீடா அஸிஸ் கூறினார்.

மலேசியா என்ற நாட்டிற்கு மட்டும் தான் மேலாதிக்கம் இருக்க வேண்டும். எந்த மதத்தையோ, குழுவினரையோ அல்லது சமூகத்தையோ சார்ந்த மேலாதிக்கம் தொடரக் கூடாது என்று அவர் கருத்துரைத்தார்.

“திறமையான திறன் கொண்ட மலேசியர்களின் சாதனைகள் உலக அரங்கில் போற்றப் பட வேண்டும். மலேசியக் கொடியை ஏந்தியவாறு அவர்கள், ‘நான் மலேசியன்’ என்று கூறுவதில் மட்டும்தான் ‘மேலாதிக்கம்’ இருக்க வேண்டும்” என்றார் அவர்.

“நமது பாரம்பரியம் மற்றும் வம்சாவளியின் அடிப்படையில் ஒருவர் மலேசியராக கருதப் படுவதில்லை. ஒருவர் மலேசியர் என்றால், அவர் மலேசியர்தான். அதை யாரும் மறுக்க முடியாது. நான் மலேசியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மற்ற மலேசியர்களும் அவ்வாறு தான் பெருமை கொள்வர் என்று நான் நம்புகிறேன்” என்று ரபீடா சொன்னார்.

“புதிய மலேசியாவில் பல மாற்றங்களை நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு நல்ல எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.

“புதிய அரசாங்கம் நாட்டு மக்களின் சமூக மற்றும் பொருளாதார தரத்தை உயர்த்த தேவையான வழிமுறைகளை கையாள வேண்டும்” என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:58 am

மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Kahwin-

முஸ்லிம்கள் தான் பதின்ம வயது சிறுமிகளைத் திருமணம் செய்ய விருப்பம் கொண்டுள்ளனர் என்று பலர் விமர்சித்துவரும் வரும் வேளையில், முஸ்லிம் அல்லாத ஆண்களும் 16 வயதிலிருந்து 18 வயதிற்கு உட்பட்டவர்களை திருமணம் செய்ய விருப்புகின்றனர் என்ற திடுக்கிடும் தகவல் ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது.

மலேசியாவில், கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்து 2015-ஆம் ஆண்டு வரை, 10,240 முஸ்லிம்கள், சிறுமிகளை திருமணம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளனர் என்று பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஆய்வு நிறுவனமான பினாங்கு நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து 2014-ஆம் ஆண்டு வரை, 16 வயதிலிருந்து 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துக் கொள்ள 7,719 முஸ்லிம் அல்லாத ஆண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலை அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்து 2015-ஆம் ஆண்டு வரை சரவாக் (2,064), கிளந்தான் (1,929) மற்றும் திரெங்கானு (924) மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள், சிறுமிகளை திருமணம் செய்துக் கொள்வதற்காக விண்ணப்பம் செய்துள்ளனர் என்று மலேசிய ஷாரியா நீதிமன்ற இலாகா தெரிவித்துள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து 2014-ஆம் ஆண்டு வரை, சரவாக் மாநிலத்திலைச் சேர்ந்த 1,750 முஸ்லிம் அல்லாத ஆண்கள், மற்றும் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத 1,000 ஆண்கள், சிறுமிகளை திருமணம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளனர் என்று பினாங்கு நிறுவனத்தின் அரசியல் ஆய்வாளரான ஊய் கொக் ஹின் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதே காலக் கட்டத்தில், பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த 250 முஸ்லிம் அல்லாத ஆண்களும், சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 700 முஸ்லிம் அல்லாத ஆண்களும், சிறுமிகளை திருமணம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

2015-ஆம் ஆண்டில்,சிறுமிகளைத் திருமணம் செய்துக் கொள்ள விண்ணப்பம் செய்த முஸ்லிம்களின் விண்ணப்பங்களில் 81 விழுக்காடு விண்ணப்பங்களுக்கு அனுமதிகள் வழங்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில், முஸ்லிம் அல்லாத ஆண்கள் 18 வயதிற்கு குறைந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ள விரும்பினால், அவர்கள் மாநில மந்திரி புசார் அல்லது முதல்வர்களின் அனுமதியை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:59 am

உலக நாடுகளின் சபையான ஐநா அதன் நிலையான இலக்குகளுக்கு தமது பங்களிப்பை ஆற்றிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவரும் சமூக ஆர்வலருமான டத்தோ அம்பிகா ஸ்ரீநிவாசனுக்கு ஐநா விருதளிப்பில் மனித உரிமைக்கான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

டத்தோ அம்பிகா மக்கள் மனதிற்கு நெருக்கமானவராகவும், அரசியல்வாதிகள் பலருக்கு சிம்ம சொப்பனமாகவும் இருப்பவர்.
அவர் மலேசியா கண்டெடுத்த மாபெரும் ஆளுமை என்றாலும் மிகையாகாது.

அவர், 2009-ஆம் ஆண்டில் உலக அளவில் துணிச்சல்மிக்க பெண்மணியாக அமெரிக்காவின் செயலவைத் தேர்வு செய்து கௌவுரவித்த எட்டு பெண்களில் ஒருவராவார். தூயத் தேர்தலுக்காக இரண்டு முறை மலேசியாவில் நடைபெற்ற பேரணிகளுக்கு அம்பிகா தலைமைத் தாங்கினார். அதன் தாக்கம் பல்லின மக்களிடையே அவரை பிரபலமாக்கியதோடு அவருக்கு சவாலாகவும் உருவெடுத்தது.

பல சவால்களை அம்பிகாவை உரசிப் பார்த்தும் அவர் அதே போராட்ட உணர்வுடன் இன்னும் மக்களுக்காக சேவை செய்து வருகிறார்.

2011-ஆம் ஆண்டில் மனித உரிமைக்காக வாதாடும் அம்பிகாவின் சேவையை அங்கீகரித்து அவருக்கு பிரான்ஸ் அந்நாட்டின் மிக உன்னத செவாலியர் விருதை வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 09, 2018 9:21 am

மலேசியாவில் கொத்தடிமைகளாக தவித்த 48 தமிழர்கள் மீட்பு:
உணவு, தண்ணீர்கூட கொடுக்காமல் வேலை வாங்கிய
நிறுவன உரிமையாளர் கைது

---
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 MalaysiaJPG
-
மலேசியாவில் சம்பளம், உணவு, தண்ணீர் கிடைக்காமல்
3 மாதங்களாக கொத்தடிமையாக வேலை செய்துவந்த
48 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள
தலைவன்கோட்டை, தாருகாபுரம், ராமசாமியாபுரம்
மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 48 பேர் கடந்த
4 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக மலேசியாவுக்கு
சென்றுள்ளனர்.

அங்குள்ள மலைப் பகுதியில் உயர் மின்கோபுரம்
அமைக்கும் பணிக்காக அவர்களை அழைத்துச் சென்ற
நிறுவனம், முதல் ஒரு மாத சம்பளத்தை மட்டும்
கொடுத்துள்ளது.

அதன் பிறகு 3 மாதங்கள் சம்பளம் தரவில்லை.
மேலும், ஒருவேளை மட்டும் உணவு, தண்ணீர் கொடுத்து
விட்டு மற்ற நேரம் பட்டினி போட்டுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது
நிலை குறித்து செல்போனில் வீடியோவாக பதிவு செய்து,
நெல்லை மாவட்டத்தில் உள்ள உறவினர்களுக்கு
வாட்ஸ்அப் மூலம் அனுப்பினர்.

பாஸ்போர்ட்கள் முடக்கம்‘‘எங்களது பாஸ்போர்ட்கள்
அனைத்தும் நிறுவனத்தின் வசம் உள்ளது. காலை 8 மணி
முதல் இரவு 7 மணி வரை கட்டாய வேலை
வாங்குகின்றனர். 3 மாதமாக சம்பளம் தரவில்லை.

இதுகுறித்து கேட்டால் அடியாட் களை வைத்து அடித்து,
கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். சோறு,
தண்ணீர் இன்றி பட்டினி கிடக்கிறோம். எங்களை மீட்க
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’
என்று அந்த வீடியோவில் அவர்கள் கண்ணீர்விட்டு
அழுதனர்.

இந்த காட்சிகள், மலேசியாவில் உள்ள தமிழர்கள்
மத்தியில் அதிகம் பகிரப்பட்டது.

இது, மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன்
முருகேசனின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதையடுத்து, அவரது முயற்சியால் 48 தமிழர்களும்
மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழ் வம்சாவளியை சேர்ந்த, மலேசியாவின் கரக் தொகுதி
எம்எல்ஏ காமாட்சி துரைராஜு, தமிழக தொழிலாளர்களை
நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதைக் காட்டும்
வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

“தமிழக தொழிலாளர்கள் 48 பேரும் பத்திரமாக
இருக்கின்றனர். எனவே, உறவினர்கள் பயப்பட வேண்டாம்.
சம்பந்தப்பட்ட நிறுவ னத்தாருடன் பேசி, அவர்களது
சம்பளத்தை பெற்றுத் தந்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்க
நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதனால், தொழிலாளர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி
அடைந்துள் ளனர். 48 தமிழர்களும் ஓரிரு நாட்களில் சென்னை
வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், 48 தமிழர்களை கொத்தடிமையாக
வைத்திருந்த மலேசிய நிறுவனத்தின் உரிமை யாளரை
மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
---------------------------------
தி இந்து

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 28, 2018 7:40 am

மலேசியா மாரியம்மன் கோவிலில் பயங்கர தாக்குதல், 21 பேர் கைது; விசாரணைக்கு வலியுறுத்தல்
--
மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 201811271711291612_Malaysia-Hindu-temple-violence-demanded-a-full-and_SECVPF
மலேசியாவின் செலங்கோர் மாநிலத்தில் உள்ள சுபாங் ஜெயா
பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

பழமையான கோவில் அமைந்துள்ள இடம் தனியார் நிறுவனத்திற்கு
சொந்தமான இடம் என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம்
கோவிலை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்ற
போதும் கோவிலை மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் கோவிலை இடமாற்றம் செய்ய ஒருதரப்பு ஏற்றுக்
கொள்ளவில்லை.

இதற்காக வழங்கப்பட்ட காலக்கெடு சமீபத்தில் முடிந்தது,
இதனையடுத்து 24 மணி நேரமும் கோவில் பாதுகாப்பு வளையத்தின்
கீழ் கொண்டுவரப்பட்டது.

பயங்கரத் தாக்குதல்

இந்நிலையில் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்தபோது
கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் ஒன்று
அங்கிருந்தவர்களை நோக்கி கடுமையான தாக்குதலை
மேற்கொண்டது.

கோவிலில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியது.
அங்கிருந்த கோவில் நிர்வாகிகள், பூசாரியின் கழுத்தில் கத்தியை
வைத்து மிரட்டியுள்ளனர். பூர்வீக மலாய் மக்களான அவர்கள்
கோவிலுக்குள் இருந்த அனைவரையும் வெளியே அடித்து
விரட்டியுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்த கார்களும் சேதப்படுத்தப்பட்டது.
10க்கும் மேற்பட்ட கார்கள் அடித்துக் நெறுக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதும் பாதுகாப்பு
ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணைக்கு வலியுறுத்தல்

இதற்கிடையே இருதரப்பு இடையிலான மோதல்தான்,
இனவாத ரீதியிலான மோதல் கிடையாது எனவும் போலீஸ்
தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக தகவல்
தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை,

போலீஸ் நேர்மையாக செயல்படுவதிலிருந்து தவறுகிறது
எனவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குற்றச்சாட்டை முன்
வைத்தனர். இதனையடுத்து சுதந்திரமான விசாரணைக்கு
உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனம் இடையிலான
மோதல் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்
தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காண
சுதந்திரமான விசாரணை அவசியமானது என அமைச்சர்கள்
வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரதமர் அலுவலக அமைச்சர் பி வேத மூர்த்தி பேசுகையில்,
கோவில் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது
செய்யப்பட்டு, தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று
வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே வணிக வளாகம் ஒன்றில் அதிகாலையில்
அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

21 பேர் கைது

கோவில் மீதான தாக்குதல் மற்றும் வணிக வளாகம் மீதான
தாக்குதல் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருவதாக
போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 21 பேரை கைது செய்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------
தினத்தந்தி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 28, 2018 7:53 am

Code:

கோவிலில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியது.
அங்கிருந்த கோவில் நிர்வாகிகள், பூசாரியின் கழுத்தில் கத்தியை
வைத்து மிரட்டியுள்ளனர். பூர்வீக மலாய் மக்களான அவர்கள்
கோவிலுக்குள் இருந்த அனைவரையும் வெளியே அடித்து

விசாரணைக்கு வலியுறுத்தல்

இதற்கிடையே இருதரப்பு இடையிலான மோதல்தான்,
இனவாத ரீதியிலான மோதல் கிடையாது எனவும் போலீஸ்
தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக தகவல்
தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை,

இது இன் மோதல் மாதிரி தெரிகிறது

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 11:23 pm

தேசியப் புனர்வாழ்வு திட்டத்தில் (பிபிஎன்) நடமாட்டக் கட்டுப்பாட்டின் முதல் கட்டத்திலிருந்து படிப்படியாக மீண்டு வரும் மாநிலங்கள், மீண்டும் முதலாம் கட்டத்திற்குப் ‘பின்வாங்காது’ என்று பிபிஎன் ஒருங்கிணைப்பு அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

நிதியமைச்சருமான அவர், ஒரு மாநிலத்தை ‘திறந்து மூடுவது’ என்பது நிலையானது அல்ல என்றும், மக்கள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதற்குப் பிபிஎன் ஒரு சிறப்பு திட்டமிடலாகும் என்றும் கூறினார்.

“நிலை மாற்றப்பட்ட மாநிலங்களில், கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், சில இடங்கள் அல்லது பகுதிகள் மட்டுமே இறுக்கமான இயக்கக் கட்டுப்பாட்டு ஆணைக்கு (பிகேபிடி) உட்படுத்தப்படும், முழு மாநிலமும் அல்ல.

“நாம் படிப்படியாக பிபிஎன்-இன் முதல் கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்கு மீண்டு வந்தால், நாம் முதலாம் கட்டத்திற்குச் சென்று இரண்டாம் கட்டத்திற்குச் செல்ல முடியாது. இரண்டாம் கட்டத்திற்குச் சென்றதும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் அல்லது இருப்பிடத்தில் நேர்வுகள் (கோவிட்-19) இருந்தால், அது மூடப்படும் அல்லது பிகேபிடி-க்கு உட்படுத்தப்படும், முழு மாநிலமும் அல்ல,” என்று அவர், புத்ராஜெயாவில், செய்தியாளர்களிடம் கூறினார்.

பெர்லிஸ், பேராக், பஹாங், கிளந்தான், திரெங்கானு, பினாங்கு, சபா மற்றும் சரவாக் ஆகிய எட்டு மாநிலங்கள், இதுவரை பிபிஎன் -இன் இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்துள்ளன.

மற்ற மாநிலங்களும், இதனைப் பின்பற்றி இரண்டாம் கட்டத்திற்கும், பின்னர் மூன்றாம் கட்டத்திற்கும் செல்லும் என்று தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, பி.கே.பி.டி. பகுதிகளில் செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) மேம்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் ‘அத்தியாவசிய’ பிரிவில் உள்ள சில தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த வாரம் பல அரசியல் கட்சிகள் மற்றும் பங்குதாரர்களுடன் பிபிஎன் தொடர்பான ஓர் அமர்வை நடத்தியதாகவும், எதிர்காலத்தில் அந்த அமர்வு தொடரும் என்றும் தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

அந்த அமர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் பல்வேறு உள்ளீடுகள் பெறப்பட்டதாகவும் அவர் சொன்னார். குறிப்பாக, சுகாதார அம்சங்கள் மற்றும் பி.கே.பி.டி. பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொடர்பாக பேசப்பட்டது என்றார் அவர்.

மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 11:25 pm

மலேசியாவின் பரபரப்பான மருத்துவமனைகளில் ஒன்றான கோலாலம்பூர் மருத்துவமனை (HKL.), தற்போது அங்குள்ள மருத்துவ ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க மருத்துவரல்லாதத் தன்னார்வலர்களைத் தேடுகிறது.

மலேசிய முதலுதவி அமைப்பு (மைஃபாஸ்ட்), தற்போது அதிகரித்து வரும் நோயாளிகளின் சேர்க்கையைச் சமாளிக்க, மருத்துவ ஊழியர்கள் போராடி வருவதால் மருத்துவமனை தங்களிடம் உதவி கோரியதாக தெரிவித்துள்ளது.

“தற்போது அதிகப்படியான பணிச்சுமையுடன் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு உதவ தன்னார்வலர்களின் உதவியைக் கேட்டு மைஃபாஸ்டுக்கு எச்.கே.எல். கடிதம் அனுப்பியுள்ளது.

“#கீத்தாஜாகாகீத்தா விழிப்புணர்வு குறித்து, ஆர்வமுள்ள அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம், எச்.கே.எல். ஊழியர்களுக்கு உதவும் வகையில், அங்கு மருத்துவமற்ற கடமைகளைச் செய்ய, நேரம் இருப்பவர்களை நாங்கள் அழைக்கிறோம்,” என்று அது ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தது.

மலேசியா - மலேசிய செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக