புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
2 Posts - 5%
Balaurushya
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
1 Post - 2%
prajai
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
26 Posts - 3%
prajai
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_m10ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 03, 2016 12:48 am

மேஷம்

ஜூலை 1 முதல் 15 வரை

சொந்த முயற்சியாலும், மனத்துணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசி அன்பர்களே நீங்கள் தைரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு வக்ர நிவர்த்தி ஆகிறார். தொழில் லாபாதிபதி  சனியுடன் இருக்கும் அவரால் காரியங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தை கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம்  தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும்.

சில சிக்கலான பிரச்னைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். சூரியனின் சஞ்சாரம் ராசிக்கு 3ல் இருப்பதால் மனத்தடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் ஸ்தானம் நடுநிலைமையாக இருக்கிறது. தொழில் வியாபாரம்  நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது.

குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய், சனி பார்க்க குடும்பாதிபதி சுக்கிரன் தைரிய ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் ஏதாவது பிரச்னை தலைதூக்கலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். பெண்களுக்கு சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனத்தடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள்  வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: முருகனுக்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக் கவலை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 03, 2016 12:49 am

ரிஷபம்

ஜூலை 1 முதல் 15 வரை

இனிய சுபாவமும், மென்மையான பேச்சும் உடைய ரிஷப ராசியினரே! நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர். இந்த காலகட்டத்தில் தன ஸ்தானத்தில் சூரியன், புதன், ராசிநாதன் சுக்கிரன் இருப்பது பொன், பொருள் சேர்க்கையை தரும். ஆனால், அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாகப் பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். தொழில் ஸ்தானத்தில் கேது இருக்கிறார். விரயாதிபதி செவ்வாயும் - அஷ்டம லாபாதிபதி குருவும் பார்க்கிறார்கள்.

தொழில்- வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். தன ஸ்தானத்தில் இருக்கும் சுகாதிபதி சூரிய சஞ்சாரம் இருப்பதால் போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும்.

குடும்பாதிபதி புதன் ஆட்சியாக இருக்க ராசிநாதன் சுக்கிரனுடன் இணைந்திருக்கிறார். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் - மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். பெண்கள் எதைப்பற்றியாவது நினைத்து கவலைப்படுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல் துறையினருக்கு சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: பௌர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனக் கவலை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 03, 2016 12:49 am

மிதுனம்

ஜூலை 1 முதல் 15 வரை

காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட மிதுன ராசியினரே! நீங்கள் எடுக்கும் முடிவு மிகவும் ஆராய்ந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ராசியில் தைரியாதிபதி சூரியன் - ராசிநாதன் புதன் - சுக்கிரன் இருக்கிறார்கள். ராசியை செவ்வாய் பார்க்கிறார். ராசியில் இருக்கும் சூரியனால் திடீர் கோபம் ஏற்படலாம். மேலும் கேது ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் இருந்து திரிகோண ரீதியாக தொடர்பு கொள்வதால் நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளிப் போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும்.

தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பெண்களுக்கு எந்தக் காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும்.

கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்: பானகம் அர்ப்பணித்து பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 03, 2016 12:51 am

கடகம்

ஜூலை 1 முதல் 15 வரை

அன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப் பெற்ற கடக ராசியினரே! நீங்கள் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள். இந்த காலகட்டத்தில் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கைகாப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

தொழில், வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்திதரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்பாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம் சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம்.

மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்னைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 03, 2016 12:52 am

சிம்மம்

ஜூலை 1 முதல் 15 வரை

மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு தனித்தன்மையுடன் செயலாற்றும் குணமுடைய சிம்ம ராசியினரே! நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர்கள். இந்த காலகட்டத்தில் ராசியில் குரு இருப்பதால் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். ராசியாதிபதி சூரியனின் சஞ்சாரத்தால் தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின் நலனில் அக்கறை தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் மெத்தனப்போக்கு காணப்பட்டாலும் பணவரத்து நன்றாக இருக்கும்.

சரக்குகளை கவனமாகக் கையாள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்யோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பாதிபதி புதன் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டியது இருக்கும். கேதுவின் சஞ்சாரம் ஆன்மிகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். பணவரத்து குறையலாம். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்க்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாக செயலாற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 03, 2016 12:53 am

கன்னி

ஜூலை 1 முதல் 15 வரை

எதையும் ஒருமுறை பார்த்தாலே அதைப்பற்றி கிரகித்துக் கொள்ளும் திறமையையுடைய கன்னி ராசியினரே! நீங்கள் உழைத்து உயர வேண்டும் என விரும்புபவர்கள். இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி புதன் ராசிக்கு 10ல் சூரியன் - சுக்கிரனுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் நெருக்கடியான பிரச்னைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும்.

சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் புதன் ஆட்சியாக இருக்க அவருடன் தனாதிபதி சுக்கிரன் இணைந்திருக்கிறார். தொழில், வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் பணவரத்து இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும்.

குடும்பாதிபதி சுக்கிரன் பத்தாமிடத்தில் ராசிநாதன் புதனுடன் இணைந்திருக்கிறார். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். பெண்களுக்கு திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள்.

அவர்களால் உங்களின் செல்வாக்கு கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.

பரிகாரம்: ஐயப்பனுக்கு அபிஷேகத்திற்கு நெய் வாங்கிக் கொடுத்து வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 03, 2016 12:54 am

துலாம்

ஜூலை 1 முதல் 15 வரை

காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும் சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொண்ட துலாம் ராசியினரே! நீங்கள் எந்த காரியத்தையும் கச்சிதமாக முடிக்கும் திறன் கொண்டவர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும்.

தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பணப் பிரச்னை நீங்கும். சூரியனால் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில்ஸ்தானம் வலு குறைந்து காணப்பட்டாலும் மற்ற கிரகங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் தொழில், வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் ஒன்று நடக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பஸ்தானத்தில் சனி இருந்தாலும் அவர் உங்கள் ராசிக்கு நட்பு கிரகம். எனவே குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும்.

கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள்.

உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்னை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 03, 2016 12:54 am

விருச்சிகம்

ஜூலை 1 முதல் 15 வரை

நியாயத்தின் பக்கம் நிற்கும் விருச்சிக ராசியினரே! நீங்கள் அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர். இந்த காலகட்டத்தில் பேச்சுத் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். ராசியில் சனி இருந்தாலும் ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் இருக்கும் குருவுடன் கேந்திரம் பெற்று குருமங்கள யோகம் பெறுகிறார். சுக்கிரன் புதனுடன் சேர்க்கை பெற்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்தாலும் பலம் பெறுகிறார். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சைக் கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும்.

நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். தொழில், ஸ்தானம் வலுப்பெற்று இருப்பதால் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. பெண்கள் பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.

அரசியல் துறையினருக்கு இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனக்கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன்; தேய்பிறை: வியாழன், வெள்ளி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 03, 2016 12:55 am

தனுசு

ஜூலை 1 முதல் 15 வரை

யாருடைய அதிகாரத்திற்கும் கட்டுப்படாமல் தனித் தன்மையுடன் விளங்கும் தனுசு ராசியினரே! நீங்கள் நேர்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். ராசிநாதனான குரு பாக்கிய ஸ்தானத்தில் நட்பு வீட்டில் அமர பாக்யாதிபதி சூரியன் சப்தம ஸ்தானத்தில் கூட்டணியாக இருந்து ராசியைப் பார்க்க என இந்த காலகட்டத்தில் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். கிரகச் சேர்க்கைகள் எதிலும் வெற்றியையும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும். குடும்ப ஸ்தானாதிபதி சனி விரய ஸ்தானத்தில் இருந்தாலும் அவர் தனது மூன்றாம் பார்வையால் குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கிறார்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.ஏழரைச் சனி இருந்தாலும் ராசிநாதன் பார்வையாலும், சப்தம ஸ்தானத்தில் இருக்கும் சூரியனாலும் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும்.

தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பெண்கள் காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும்.

வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 03, 2016 12:56 am

மகரம்

ஜூலை 1 முதல் 15 வரை

பார்த்தால் கடுமையானவர்போல் தோற்றமளிக்கும் மகர ராசியினரே! நீங்கள் பழகினால் இனிமையானவர். எதிலும் சரியாக செயல்படுபவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சனி லாபஸ்தானத்தில் இருந்தாலும் ரண ருண ஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாகப் பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை. குடும்ப ஸ்தானத்தை குரு, செவ்வாய் பார்க்கிறார்கள்.

குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பண விஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் அந்த ஸ்தானத்திற்கு பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். உத்யோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.

வேலை செய்யும் இடத்தில் மன வருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்துச் செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படலாம். பெண்கள் கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால், கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள். மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல்ஆரோக்யம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: வியாழன், வெள்ளி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக