புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_m10உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_m10உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_m10உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_m10உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_m10உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

மொஹமட்

Srinivasan23

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 11:44 am

உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!

உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! VuPws8nWTO2CSxFurqtJ+chit_2914130f

ஏலச்சீட்டு, பண இரட்டிப்பு, இரிடியம் சொம்பு, மண்ணுளிப் பாம்பு போன்ற மோசடி வகையறாக்கள் எல்லாம் பழைய பாணி. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப மோசடி பேர் வழிகளும் தங்களை தகவமைத்துக் கொண்டார்கள். இதோ கணினி யுகத்தில் நடக்கும் சில மோசடிகள் உங்கள் பார்வைக்கு. இவை நாளை உங்களை நோக்கியும் ஏவப் படலாம். உஷார் மக்களே.. உஷார்..

* பிரபல நிறுவனத்தின் குளிர் சாதனப் பெட்டி வாங்குகிறீர்கள். அடுத்த சில நாட்களில் அந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு பிரிவிலிருந்து வருவதுபோல குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வரும். அதில் நீங்கள் வாங்கிய பொருளுக்கு ரூ.10 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக குறிப்பிட்டு உங்கள் வங்கிக் கணக்கு எண், வங்கி அட்டையின் சி.வி.வி. எண் உள்ளிட்ட விவரங்களை கேட்பார் கள். அடுத்தடுத்த மின்னஞ்சல் தொடர்புகளில் அவர்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தி, வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு வரை வாங்கிவிடுவார்கள். பிறகென்ன மொத்தமாக உங்கள் பணம் மாயம்.

* சமீபத்தில் தொடர்பு கொண்ட குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து வரும் மின்னஞ்சலில் ‘உங்களுக்கு ரூ.15,000 மதிப்புள்ள பரிசு விழுந்திருக்கிறது. நாளை எங்கள் பணியாளர் உங்கள் வீட்டில் அதனை டெலிவரி செய்வார்’ என்று தகவல் வரும். அதேபோல மறுநாள் அழகாக பேக்கிங் செய் யப்பட்ட பெட்டியோடு வரும் டெலிவரி நபர், பேக்கிங் சார்ஜ் மற்றும் தபால் சேவை கட்டணம் என்று ரூ.500 வசூலிப்பார். இன்னும் சிலர் உங்கள் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்டு போன்றவற்றை கேட்பார்கள். கொடுத்தால் அவர்கள் கொடுத்த காலிப் பெட்டியைப் போலவே மொத்தப் பணமும் காலி.

* கொங்கு மண்டல பகுதிகளில் பெரிய மாடி வீடாக குறிவைப்பார் கள். பிரபல அலைபேசி நிறுவனத்தி லிருந்து பேசுவதுபோல அந்த வீட்டின் உரிமையாளரிடம் வீட்டு மாடியில் அலைபேசி டவர் வைக்க விரும்புவதாகவும் மாத வாடகை யாக பெரும்தொகை தருவதாகவும் பத்திரத்தில் எழுதி ஒப்பந்தம் போடு வார்கள். பத்திரப் பதிவு அலுவலகம் வரை உங்களை அழைத்துச் செல்வார்கள். கடைசி நேரத்தில் எங்கள் மேலதிகாரி பத்திரத்தில் கையெழுத்துப்போட ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்கிறார். கொடுத்துத் தொலையுங்கள். நாளையே உங்கள் வங்கிக்கணக்கில் ஐந்து லட்சம் வாடகை வரப்போகிறதுதானே என் பார்கள். கொடுத்தால் முடிந்தது, நொடியில் ‘எஸ்கேப்’.

* தென் மாவட்டங்களில் காற் றாலை அமைப்பதில் பங்குதாரராக சேருங்கள்; லாபத்தில் பங்கு கிடைக் கும் என்று அழைப்பு வரும். ரூ.1000 தொடங்கி 10,000 வரை இவர்களின் இலக்கு. பணம் சேர்ந்ததும் காற்று போல கண்ணுக்கு தெரிய மாட்டார்கள்.

* ஷாப்பிங் செய்வதற்காக பெரிய மால்களின் படியேறினால் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு கூப்பன்களை கையில் திணிப்பார்கள். அடுத்த நாளே குடும்பத்துடன் இலவச உல்லாச சுற்றுலாவுக்கோ அல்லது சொகுசு தங்கும் விடுதிக்கோ அழைப்பார் கள். குடும்பத்துடன் அங்கு சென்ற வுடன் உணவுக்கு, தங்கும் அறைக்கு, பராமரிப்புக்கு என கணிச மான தொகையை கறந்து விடுவார்கள்.

* ரயில்களில் பேருந்துகளில் பகுதி நேர வேலை; வீட்டிலிருந்த படி சம்பாதிக்கலாம் என்று அலை பேசி எண்களுடன் போஸ்டர் ஒட்டி யிருப்பார்கள். இது பெரும்பாலும் டேட்டா என்ட்ரி பணி தான். பி.டி.எஃப். பைலை வேர்டு’ பைலாக மாற்றி செம்மைப்படுத்தித் தரவேண்டும். நீங்கள் வேலையை முடித்து கொடுத்தப் பின்பு வேலையில் திருப்தியில்லை என்றுச் சொல்லி ரிஜெக்ட் செய்துவிடுவார்கள் அல்லது தலைமறைவாகிவிடு வார்கள். இது உங்கள் உழைப்பில் குளிர் காயும் மோசடி.

* அடுத்ததாக உங்கள் உணர்வை குறி வைத்து ஏவப்படும் சென்டிமென்ட் மோசடிகளும் இருக் கின்றன. முகநூலில் அறிமுகமாகும் அழகான இளம் பெண் சில நாட்கள் பழக்கத்துக்கு பின்பு தனக்கு பெற்றோர் இல்லை என்றும் தாய் மாமன் தன்னை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார் என்றும் அலறு வார். பெரும்பாலும் இவர்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற தொலைதூர நகரங்களில் தான் இருப்பார்கள். ஒருநாள் வாழ்ந்தாலும் உங்களோடுதான் வாழ்க்கை என்கிற ரீதியில் நீளும் உணர்ச்சி மிகுந்த வசனங்களில் எதிராளி விழுந்துவிட்டது தெரிந்தால் அவரது வசதியைப் பொறுத்து விமான டிக்கெட்டுக்கான பணம் முதல் சொத்தை மீட்பதற்காக ரூ.10 லட்சம் வரை பணத்தை கறந்துவிடுவார்கள்.

* மேற்கண்டதில் இன்னொரு வகை ஆதரவற்றோர் இல்லங்கள். உங்கள் சம்பளத்தில் மாதம் ரூ.1,000 கொடுத்தால் போதும் என்று ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களின் பரிதாபமான நிலையை விவரிக்கும் புகைப்படங் கள், இல்லத்தின் விவரங்கள் ஆகிய வற்றை அனுப்பி வைப்பார்கள். இது தொடர்பான மின்னஞ்சல்கள் பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் இருந்து தான் வரும். நேரில் சென்று உறுதி செய்யாமல் உதவிக்கரம் நீட்டாதீர்கள்.

தி ஹிந்து

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 11:49 am

எனக்கு ஒன்று புரியலை . எதுக்கு பாஸ்வர்ட் எல்லாம் தரணும், படம் போடணும் என்றால் வங்கி கணக்கு என் போறாதா?............குடுத்தால் அவன் எடுத்துக்கறான்........
.
.
அதேபோலத்தான், இந்த ஸ்வாதி கொலைக்கு முன்பாக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாளே, அவ தன் facebook பாஸ்வர்ட் ஐ காதலனிடம் (?) கொடுத்திருக்கா.............அவன் படம் போட்டுவிட்டான் உள்ளே போய்....எதுக்கு தரணும்?.......தாலி கட்டின கணவனிடம் தரமாட்டாளுங்க, அவனுக்குத் தெரியாம facebook அக்கவுண்ட் வெப்பாளுங்க, ஆனால் 4 மாசம் பழகின எவனிடமோ பாஸ்வர்ட் தருவாளுங்களாம்.........கொடுத்ததன் கதி தான் இப்போ தற்கொலை இல் முடிந்து இருக்கு.........
.
.

.
இனியாவது, எக்காரணம் கொண்டும் ,யாருடனும் பாஸ்வர்ட்க்ளை பகிராமல் இருக்க பழகணும்...........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 30, 2016 1:37 pm

கடந்த சில தினங்களில் SBI Bank மனேஜர் எனக் கூறி இந்த இலக்கங்களில் இருந்து 8298918512 , +918051339413 அழைப்பை ஏற்படுத்தி ,ATM Card மோசடி நடந்ததாகப் புகார் கொடுத்துள்ளனர்.(இன்றைய செய்தி படித்தேன்.) ஏமாறுபவர்கள் அனேகமாக படித்தவர்களும் இணையம் மோபைல் திருட்டு பற்றி தெரிந்தவர்களுமாக இருக்கிறார்களே!
இல்லையேல் கிருஷ்ணாஅம்மா சொல்வது போல்,
//தாலி கட்டின கணவனிடம் தரமாட்டாளுங்க, அவனுக்குத் தெரியாம facebook அக்கவுண்ட் வெப்பாளுங்க, ஆனால் 4 மாசம் பழகின எவனிடமோ பாஸ்வர்ட் தருவாளுங்களாம். //
ஏமாறுகிறார்கள்.சில இணையத்தளங்கள்,முக்கியமாக சமூகதளங்களில் வரும் பலவும் போலியாக ஏமாற்றாகவே இருப்பதைக் காண முடிகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 30, 2016 2:08 pm

நான் இதற்கெல்லாம் கவலை படுவது இல்லைங்க !!
எந்தன் பாஸ்வேர்ட் ****
யார் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளுங்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jun 30, 2016 3:21 pm

krishnaamma wrote:எனக்கு ஒன்று புரியலை . எதுக்கு பாஸ்வர்ட் எல்லாம் தரணும், படம் போடணும் என்றால் வங்கி கணக்கு என் போறாதா?............குடுத்தால் அவன் எடுத்துக்கறான்........
.
.
அதேபோலத்தான், இந்த ஸ்வாதி கொலைக்கு முன்பாக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாளே, அவ தன் facebook பாஸ்வர்ட் ஐ காதலனிடம் (?) கொடுத்திருக்கா.............அவன் படம் போட்டுவிட்டான் உள்ளே போய்....எதுக்கு தரணும்?.......தாலி கட்டின கணவனிடம் தரமாட்டாளுங்க, அவனுக்குத் தெரியாம facebook அக்கவுண்ட் வெப்பாளுங்க, ஆனால் 4 மாசம் பழகின எவனிடமோ பாஸ்வர்ட் தருவாளுங்களாம்.........கொடுத்ததன் கதி தான் இப்போ தற்கொலை இல் முடிந்து இருக்கு.........
.
.

.
இனியாவது, எக்காரணம் கொண்டும் ,யாருடனும் பாஸ்வர்ட்க்ளை பகிராமல் இருக்க பழகணும்...........புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1213438

உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! 3838410834 உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! 3838410834 உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! 1571444738

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 30, 2016 3:34 pm

உஷார் ...
விழிப்புணர்வு தரும் பதிவு..... உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! 103459460

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 30, 2016 7:56 pm

ஐயா இதுவா உங்கள் பாஸ்வேர்ட்?  மிக  சுலபமாக கண்டு  பிடித்து விட்டேன். உடனே மாற்றி விடுங்கள்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 30, 2016 8:08 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு. உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! 103459460 உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! 3838410834

உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 30, 2016 8:32 pm

என்னதான் சொன்னாலும் மக்கள் ஏற்றகொள்வதாக இல்லை. ஆசை காட்டி மோசம் செய்ய நினைக்கும் சீட்டு கம்பெனி பேராசை விடல. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலி ஓட்டுநர் பணிக்கான உத்தரவு ஆணை வழங்கியுள்ள
னர்.!!!!!!!!!!!!!!!!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 30, 2016 8:59 pm

மூர்த்தி wrote:ஐயா இதுவா உங்கள் பாஸ்வேர்ட்?  மிக  சுலபமாக கண்டு  பிடித்து விட்டேன். உடனே மாற்றி விடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1213512

ஹஹஹஹஹஹ .
மாற்றிவிட்டேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக