புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
21 Posts - 70%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
6 Posts - 20%
viyasan
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
213 Posts - 42%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
21 Posts - 4%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !

Page 30 of 34 Previous  1 ... 16 ... 29, 30, 31, 32, 33, 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.

காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 13, 2016 9:58 am

T.N.Balasubramanian wrote:நல்ல பகிர்வு க்ரிஷ்ணாம்மா ,
இருப்பினும் ஜெகதீசன் கூறும் வரை காத்திருப்போம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215591

ஆமாம் ஐயா, காத்திருப்போம்......இப்படி ஒரு 'செட்' வந்ததும் சிலது தப்போ என்று தோன்றியது, அது தான் ஐயாவை கேட்கலாம் என்று இங்கே பதிவு போட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 13, 2016 11:50 am

கிருஷ்ணம்மாவுக்கு ...

சரிபார்த்து பதிவிடுவதற்கு சற்றுநேரம் ஆகிவிட்டது . எல்லா பொருட்களின் தமிழ்ப் பெயர்களும் சரியாகத்தான் உள்ளன.

தங்களுக்கு ஏதேனும் ஐயம் இருப்பின் கேட்கலாம்.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 13, 2016 6:04 pm

மகப்பேறு மருத்துவ மனையா ? அல்லது மகவுப்பேறு மருத்துவ மனையா ?

மக்களின் இளமைப்பெயர் " மகவு " என்பதாகும் . இது இருபாலருக்கும் பொதுவான சொல் . ஆணாக இருந்தால் " மகன் " என்றும் , பெண்ணாக இருந்தால் " மகள் " என்றும் அழைக்கிறோம் .

எனவே " மகவுப்பேறு மருத்துவமனை " என்பதே சரியாகும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 14, 2016 11:06 am

krishnaamma wrote:நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 PmN2mlCLRsq5ET4ZkrFI+4a4d2cb8-c604-47b2-98bf-dcaf95efd82e

இதிலும் பழச்சாறு என்பது ஓகே, மற்றவை ....சாக்கலேட்டுகள் என்பதரைக்கு 'இன்னட்டு' என்று போட்டுள்ளார்கள்அதிர்ச்சி ................, இதற்கு பொருள் என்ன ?...................அநியாயம் யார் இப்படி பெயர்களை தேர்வு செய்கிறார்கள் ?.......இப்படி நாம் சொன்னால் யார் புரிந்துகொள்வார்கள் ஐயா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 14, 2016 11:08 am

krishnaamma wrote:நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 UvqsRp1RlmTIjD07Wo4Y+9539af14-c9fe-4484-82dd-84e7297cace0

இதில் 'காற் பதனி  ' என்று போட்டுள்ளார்கள், அது 'காற்றுப் பதனி' என்று இருக்க வேணாமா ? ......காற் பதனி என்றால் ஏதோ நம் கால்களை சொல்லுவது போல இருக்கிறதே ஐயா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 14, 2016 11:14 am

M.Jagadeesan wrote:கிருஷ்ணம்மாவுக்கு ...

சரிபார்த்து பதிவிடுவதற்கு சற்றுநேரம் ஆகிவிட்டது . எல்லா பொருட்களின் தமிழ்ப் பெயர்களும் சரியாகத்தான் உள்ளன.

தங்களுக்கு ஏதேனும் ஐயம் இருப்பின் கேட்கலாம்.

மிக்க நன்றி ஐயா புன்னகை.............என் சந்தேகங்களை இங்கு வரிசைப்படுத்துகிறேன் !

1. ரோஜாவை 'முளரி' என்று சொல்கிறார்களே !

2. ஆப்பிள் - 'குமளி' ?

3. அன்னாசி - இதை 'செந்தாழை' என்று போட்டுள்ளனர்........அதுவோ மஞ்சள் நிறத்தில் இருக்கிறதே? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jul 14, 2016 11:19 am

ஆப்பிள் - அறத்தி பழம் என்று கூற கேள்வி பட்டுள்ளேன் இது சரியா ??

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 14, 2016 11:22 am

கார்த்திக் செயராம் wrote:ஆப்பிள் - அறத்தி பழம் என்று கூற கேள்வி பட்டுள்ளேன் இது சரியா ??
மேற்கோள் செய்த பதிவு: 1215788

ம்ம்..தெரியலையே கார்த்தி, ஐயா தான் சொல்லவேண்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 14, 2016 11:26 am

krishnaamma wrote:
krishnaamma wrote:நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 30 UvqsRp1RlmTIjD07Wo4Y+9539af14-c9fe-4484-82dd-84e7297cace0

இதில் 'காற் பதனி  ' என்று போட்டுள்ளார்கள், அது 'காற்றுப் பதனி' என்று இருக்க வேணாமா ? ......காற் பதனி என்றால் ஏதோ நம் கால்களை சொல்லுவது போல இருக்கிறதே ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215784

Air Conditioner என்பதைத்தான் காற்பதனி என்று தமிழில் சொல்கிறார்கள் .

கால் + பதனி = காற்பதனி

கால் என்றால் காற்று என்று ஒரு பொருள் உண்டு .

ஜன்னலுக்கு " காலதர் " என்று ஒரு பெயருண்டு .

கால் + அதர் = காலதர்

கால் என்றால் காற்று
அதர் என்றால் வழி

அதாவது காற்றுவரும் வழியைக் " காலதர் " என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டார்கள் .

வரும் காற்றினைப் பதப்படுத்துவதால் " காற் பதனி " என்று அக்கருவிக்குப் பெயர் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 14, 2016 11:29 am

krishnaamma wrote:
கார்த்திக் செயராம் wrote:ஆப்பிள் - அறத்தி பழம் என்று கூற கேள்வி பட்டுள்ளேன் இது சரியா ??
மேற்கோள் செய்த பதிவு: 1215788

ம்ம்..தெரியலையே கார்த்தி, ஐயா தான் சொல்லவேண்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215789

ஆப்பிளுக்கு ' குமளிப்பழம் ' , "அறத்திப்பழம் " என்று பெயர்கள் உண்டு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 30 of 34 Previous  1 ... 16 ... 29, 30, 31, 32, 33, 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக