புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
1 Post - 5%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
1 Post - 5%
Barushree
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
2 Posts - 2%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
2 Posts - 2%
Barushree
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
1 Post - 1%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
1 Post - 1%
Shivanya
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 16 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 16 of 34 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 25 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 26, 2016 12:20 pm

புளிக்கொம்பா ? புளியங்கொம்பா ? - எது சரி ?

புளியங்கொம்பு என்பதே சரி .

புளி + கொம்பு = புளியங்கொம்பு என்று " அம் " சாரியை பெற்று வரும் .

புளிக்கொட்டை என்று சொல்லாமல் புளியங்கொட்டை என்று சொல்லவேண்டும் .
புளியமரங்கள் நிறைந்த சோலையை புளியஞ்சோலை என்று சொல்லவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 661
இணைந்தது : 19/06/2016

Postprajai Sun Jun 26, 2016 12:37 pm

M.Jagadeesan wrote:யவனர் , எவனர் - எது சரி ?

யகர வரிசையில் " யா " என்னும் நெட்டெழுத்தே மொழிக்கு முதலாக வரும் .
யானை , யாது , யான் என்பதுபோல .

எனவே எவனர்  என்பதே சரி .

யினியவன் , யசோதா என்று எழுதக்கூடாது .
மேற்கோள் செய்த பதிவு: 1212630

அப்படியானால் இனியவர் இனியவன் என்று மாற்றிக்கொள்ளவேண்டுமென்று சொல்லுங்கள்! புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 26, 2016 12:45 pm

M.Jagadeesan wrote:
யினியவன் என்று எழுதக்கூடாது .

தெரிந்தே தான் அய்யா எழுதுகிறேன் புன்னகை

சொன்ன பேச்சு கேட்டிருந்தா எப்பவோ உருப்பட்டிருப்பேன் புன்னகை

இனி உருப்பட்டு என்ன ஆகப்போகிறதுன்னு அப்படியே இருக்கிறேன் அய்யா புன்னகை




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 26, 2016 12:48 pm

அது அவருடைய Trade Mark . மாற்றிக்கொள்ளத் தேவையில்லை !

பைசா கோபுரம் சாய்ந்து இருக்கும் வரைதான் மதிப்பு ! நிமிர்த்தினால் மதிப்பிழந்து போகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sun Jun 26, 2016 1:40 pm

யவனர் என்பது வடசொல்லாக இருப்பதால் தவறாக இருக்க வாயிப்பில்லை ஐயா.
புறத்தில் -யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் -எனவும்,அகத்தில்- யவனர் தந்த வினை மா ணன்கலம் -என்றும் சொல்லப்படுகிறது. யவனர் கிரேக்க-ரோமானிய வெளிநாட்டவரையும் குறிக்கும்.சில இடங்களில் யவன தேசம் என தெலுங்குதேசத்தையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

யினியவன் என்பது அவர் எண்சோதிடத்தை வைத்து மாற்றி இருப்பார்.

யசோதா என்பது வடசொல் பெயர். மாற்றிச் சொல்ல முடியாது.சில வடசொற்களுக்கு இ எழுத்தை சேர்க்கலாம்.எல்லாவற்றுக்கும் முடியாது.பொருள் மாறிவிட வாய்ப்புண்டு.

தமிழில் ய எழுத்து இடையினமாகவும் ,அரைஉயிர்சொல்லாகவும் இருப்பதால் -ய- தொடக்கத்தில் வரக்கூடாது என்பது தமிழ் இலக்கண மரபாகும். ஆனாலும் இது பிறமொழிச் சொற்களுக்கு எல்லா இடத்திலும் பொருந்தாது. ராமன்,யந்திரம்,யமன் போன்றவற்றுடன் -இ- சேர்க்கலாம். அப்படிப் பிறமொழிச்சொல்லுடன் பயன்படுத்துவது எல்லா இடத்திற்கும் பொருந்தாது.

எந்த மொழியும் பிறமொழி சொற்களை சில இடங்களில் ஏற்றுக் கொள்ளவே செய்கிறது. அந்த சொற்களுக்கு இணையான சொல் உருவாக்கப்படாத வரை,பழக்கப்படாத வரை ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. சில இடங்களில் மாற்றம் பெறாதபடி பாவிக்க வேண்டி உள்ளது. தவறல்ல.

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 26, 2016 1:43 pm

Vote என்ற ஆங்கிலச் சொல்லை வோட்டு,ஓட்டு என்கின்றனர்.அது தவறு என சொல்ல முடியாது.. ஓட்டு என்பது வாக்கு -வாக்குச்சீட்டு- வாக்களிப்பு என வருகிறது. ஓட்டு -ஓட்டுதல் எனவும் பொருள்படும்.ஓட்டுனர்

ஆங்கிலச்சொல்லை இன்று பல்வேறு முறையில் நாட்டுக்கு நாடு மாறுபட்டு உச்சரிக்கின்றனர்.vote என்பதை ஓட்டு எனச் சொல்ல வேண்டுமென்றால், Auto-ஆட்டோ, office-ஆபீஸ் இப்படி சொல்வதும் தவறாகிறது. பிறமொழிச் சொற்களை முடிந்தவரை தமிழில் பயன்படுத்தலாம். கம்புயூட்டர்-கணினி,இண்டர்னெட்-இணையம் ,பஸ்-பேரூந்து என பழக்கப்படுத்திக் கொண்டோம்.வோட்டு-ஓட்டு என்பதை இன்று பலரும் பயன்படுத்துவது போல் வாக்கு என பயன்படுத்த பழகிக் கொள்ளலாமே!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 26, 2016 1:59 pm

மூர்த்தி wrote:
யினியவன் என்பது அவர் எண்சோதிடத்தை வைத்து மாற்றி இருப்பார்.

ஹா ஹா ஹா

இல்லை இல்லை - சாதி மத சோதிட நம்பிக்கை அற்றவன் - அதான் புன்னகை




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 26, 2016 2:32 pm

மூர்த்தி wrote:Vote என்ற ஆங்கிலச் சொல்லை வோட்டு,ஓட்டு என்கின்றனர்.அது தவறு என  சொல்ல முடியாது.. ஓட்டு என்பது வாக்கு -வாக்குச்சீட்டு- வாக்களிப்பு என வருகிறது. ஓட்டு -ஓட்டுதல் எனவும் பொருள்படும்.ஓட்டுனர்

ஆங்கிலச்சொல்லை இன்று பல்வேறு முறையில் நாட்டுக்கு நாடு மாறுபட்டு உச்சரிக்கின்றனர்.vote என்பதை ஓட்டு எனச் சொல்ல வேண்டுமென்றால், Auto-ஆட்டோ, office-ஆபீஸ் இப்படி சொல்வதும் தவறாகிறது. பிறமொழிச் சொற்களை முடிந்தவரை தமிழில் பயன்படுத்தலாம். கம்புயூட்டர்-கணினி,இண்டர்னெட்-இணையம் ,பஸ்-பேரூந்து என பழக்கப்படுத்திக் கொண்டோம்.வோட்டு-ஓட்டு என்பதை இன்று பலரும் பயன்படுத்துவது போல் வாக்கு என பயன்படுத்த பழகிக் கொள்ளலாமே!
மேற்கோள் செய்த பதிவு: 1212644

உ ,ஊ ,ஒ, ஓ என்னும் நான்குயிர்
வ  என் எழுத்தோடு வருதல் இல்லை .

என்பது தொல்காப்பிய சூத்திரமாகும்.

வலை , வளை, வாளி , வீடு என்று வரலாம் .

ஆனால் வு ,வூ , வொ ,வோ ஆகிய எழுத்துக்கள் மொழிக்கு முதலாக வரக்கூடாது . புழக்கத்தில் உள்ளது என்பதற்காக ஒரு தவறான சொல்லுக்குச் சரியான சொல்லைத் தெரிந்து கொள்வதில் தவறில்லையே !
அது ஆங்கிலச் சொல்லாக இருந்தாலும் தமிழில் இலக்கண மரபுப்படி எழுதலாமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sun Jun 26, 2016 9:49 pm

ஐயா! தமிழ் இலக்கணம் சரியானதே.ஆனால் அந்த இலக்கணம் எதற்காக சொல்லப்பட்டது என்பதில் தெளிவு வேண்டும். தமிழ் சொற்களுக்கும், தமிழில் கலந்த பிறமொழி சொற்களுக்குமே அவை பொருந்தும். ஆங்கிலத்தை அப்படியே தவறாக உச்சரித்து எழுதுவதற்கு அல்ல.

தமிழில் ர-ல-ய சொல்லின் முதலெழுத்தாக வராது.அதற்கு இ-உ- பாவிக்கலாம் என்பது தொல் சொல்லும் இலக்கண மரபு. யசோதை எப்படி எழுதுவது? அதனால்தான் அதே தொல்காப்பியர் தமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும் என்றும், சில சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

இந்த இலக்கண மரபு தமிழில் இல்லாத சொற்களுக்கு பிறமொழிச் சேர்க்கைக்கே தவிர,பாவனையில் உள்ள சொற்களுக்குப் பதிலாக பிறமொழிச் சொல்லை சேர்ப்பது அல்ல.

அப்படி நாம் தமிழ் சொற்களைப் பாவிக்காது ஆங்கில சொற்களை எழுத்துப்பெயர்ப்பு (transliteration) ஆக பயன்படுத்தினால் மொழி அழிந்து விடும் அபாயம் ஏற்படலாம்.பாவனையில் உள்ள சொற்களை பயன்படுத்துவே தமிழுக்கு நல்லது.

இங்கிலிஷ்,கப்பி ,ரிம்,ரீம்,ரண்,என மாறலாம். ஒரு நாள் ரமில்-டமில் என்றோ மாறிவிடலாம். ரவி என சிலரின் பெயர் உள்ளது. அதை இரவி என எழுதினால் பொருள் மாறுவதுடன் பெயர்சிக்கல் வந்துவிடும்.

இவை பேச்சுத் தமிழாகவே பயன்படுத்தப்படுவதால், வோட்டும் வேண்டாம் ஓட்டும் வேண்டாம் தமிழில் சொல்லப்படும் வாக்கு என சொல்லலாமே. பாவனையில் இருக்கும் சொற்களை பயன்படுத்துவது தமிழுக்கு நல்லது .
நீங்கள் சொல்லும் இலக்கணம் சரியானதே, அதேசமயம் சில விதிமாறலை தொல்காப்பிய இலக்கணமே ஏற்றுக் கொள்கிறது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 26, 2016 11:26 pm

உங்கள் கேள்விக்கு ஒவ்வொன்றாகப் பதில் அளிக்கின்றேன் !

தமிழ் மொழியில் சைக்கிள் , பல்ப் ( Bulb ) , ரப்பர் , டயர் , டியூப் , கார் என்று ஏராளமான ஆங்கிலச் சொற்கள் கலந்துவிட்டன.
சைக்கிளை , துவிச்சக்கர வண்டி என்று யாரும் சொல்வதில்லை.
பல்பை , மின்விளக்கு என்று யாரும் சொல்வதில்லை .
காரை ( Car ) யாரும் மகிழுந்து என்று சொல்வதில்லை .
ரப்பர் , டயர் ,டியூப் போன்ற ஆங்கிலச் சொற்களுக்கு சரியான தமிழ்ச் சொற்கள் என்னவென்று தெரியவில்லை . அப்படி இருந்தால் நான் அதை அறியவில்லை .

பஸ் சில ஆண்டுகளுக்கு முன்புதான் பேருந்து ஆயிற்று .
Computer இப்போதுதான் கணினி ஆயிற்று .

எனவே ஒரு ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் காணும்வரை , அந்த ஆங்கிலச் சொல்லையே தமிழ் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதுவதில் தவறில்லையே !

பல்ப் என்று எழுதாதே ( ல், ப் சேர்ந்து வராது ) பல்பு என்று எழுது .

கம்ப்பியூட்டர் என்று எழுதாதே ( ம் , ப்  சேர்ந்து வராது ) கம்பியூட்டர் என்று எழுது.

ரப்பர் என்ற சொல்லை இரப்பர் என்று எழுதினால் பிச்சை எடுப்பவர் என்று பொருள்படும் . எனவே ரப்பர் என்றே எழுது .
விஜயகாந்த் என்று எழுதாமல் விஜயகாந்து என்று எழுது .

என்று சொல்வதில் தவறில்லையே ! இனி கம்பியூட்டருக்கும் , பஸ்ஸுக்கும் வேலையில்லை . அவற்றுக்குத் தமிழ்ச் சொற்கள் கண்டுபிடித்து விட்டோம் . எனவே ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் காணும் வரையில்  அந்த ஆங்கிலச் சொல்லை தமிழ் இலக்கணப்படி எழுதவேண்டும் என்பதே என் கருத்து.

மற்றவை பிறகு...



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 16 of 34 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 25 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக