புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
90 Posts - 76%
heezulia
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
255 Posts - 76%
heezulia
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10சிறுகதை : பிடிவாதம் ! Poll_m10சிறுகதை : பிடிவாதம் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை : பிடிவாதம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2016 12:53 am

பொங்கி வந்த பாலை அணைத்து, அளவான சர்க்கரை டிக்காஷனுடன் சேர்த்து, கிளம்பிய மணத்தை நாசிக்குள் இழுத்தவாறே கோப்பையுடன் டிவி முன் அமர்ந்தான் ரகு.

இன்று காலை பத்து மணிக்கு ஞாயிறு மகளிர்மலர் நிகழ்ச்சியில் இளம் மருத்துவர் சக்தி ரகுநாதன் நம்முடன் கலந்துரையாடுகிறார். காணத் தவறாதீர்கள்.

உறிஞ்சத் தொடங்குகையில் தேவாமிர்தமாய் இருந்த காஃபி ஒரே கணத்தில் வெறுத்தது. கடனே என குடித்து முடித்தான் மிச்சத்தை. ஆனால் மீத வாழ்க்கையை அப்படி சலிப்புடன் கழிக்கத் தான் தயாராக இல்லை என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தான்.

இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே ரெகார்ட் செய்ய சக்தி செட் செய்திருந்தது நினைவுக்கு வந்தது. மெயின் சுவிட்சை அணைத்து விடலாம் என அற்பமாக யோசித்த வேளையில் தொலைபேசி ஒலித்தது. ஊரிலிருந்து அம்மா.

“”ஏன்டா, சக்தி ப்ரோக்ராம் இன்னிக்குதானே? போன ஞாயிறே அவ சொன்னதாலே பார்க்கச் சொல்லி அக்கம்பக்கம் தெரிஞ்ச எல்லார்க்கிட்டேயும் கொட்டடிச்சாச்சு. அவ பேட்டி முடிஞ்ச கையோட நானும் அப்பாவும் சம்பா சித்தி பொண்ணு கல்யாணத்துக்குக் கிளம்பிட்டிருக்கோம். வந்து பேசறேன்னு சக்திட்ட சொல்லு. இருக்காளா?”

“”சின்ன தயக்கத்துக்குப் பின் நைட் ட்யூட்டி முடிஞ்சு வரல இன்னும்” என்றான்.

“”ம்ம். சரி. அவதான் வர முடியாட்டியும் நீயாவது வந்திருக்கலாம்டா. சித்தி நீ ஏன் வரலைன்னு என்னப் பிச்சு எடுக்கப் போறா?” பதிலை எதிர்பார்க்காமல் ஃபோனை வைத்து விட்டாள் அம்மா.

“”வந்தா என்னைய ஆளாளுக்குப் பிச்சுத் தொங்க விட்டுறுவீங்களே”

போன வாரம் கல்லூரி நண்பன் கதிரேசன் தம்பிக்குத் திருமணம். குடும்பத்தோடு வந்து அவனுக்குச் சட்டை, சக்திக்குப் பட்டுப்புடவை தந்து அழைப்பு வைத்திருந்தார்கள். ஒருமாதம் முன்னாலிருந்தே சக்தியிடம் நினைவுபடுத்தியபடி இருந்தும் அன்று காலை தவிர்க்க முடியாத பிரசவ கேஸ் எனக் கிளம்பிப் போய் விட்டாள். நண்பர்களின் கலாட்டா தாங்கவில்லை. அதுவும் குரு இவன் காலை வாருவதிலேயே குறியாயிருந்தான்.

“”வந்துட்டான்யா வந்துட்டான், கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி வந்துட்டான்” அத்தனை நண்பர்களும் கொல் என சிரித்தது காதுக்குள் இன்னும் காய்ச்சி ஊற்றிய ஈயமாக. கல்லூரி நண்பர்கள் எப்போதுமே அதிக உரிமை எடுத்து கிண்டல் செய்வது சகஜம்தான். என்றாலும், வரவர இது போன்ற விளையாட்டுக்களை ரசிக்க முடியவில்லை.

அதிக நேரம் அங்கிருக்கப் பிடிக்காமல் மணமக்களை வாழ்த்திவிட்டு சாப்பிடாமலே நழுவி வந்து விட்டிருந்தான் ரகு.

ஏற்கனவே மாமாவால் புகையத் தொடங்கியிருந்த மனம் குபுக் என பற்றிக் கொண்டதும் அன்றுதான்.

தொடரும்............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2016 12:54 am

வேலை விஷயமாக ஊரிலிருந்து வந்து அவனோடு இரண்டு நாள் தங்கியிருந்த தாய்மாமா கிளம்பும் முன்னே, “”என்ன வாழ்க்கடா வாழற. நல்லாப் படிச்சு உத்தியோகத்துல மடமடன்னு முன்னேறி என்ன பிரயோசனம் எங்கியோ பார்த்தேன், இவதான் வேணும்னு டாக்டர் பொண்ணக் கட்டுன.

நீ வீட்டுக்கு வந்தா அவ கிளம்பிப் போறா. அவ காலையில திரும்பி வரும் போது நீ போயிடுற. எப்ப பாக்குறீங்களோ? எப்ப பேசுறீங்களோ? புள்ளக் குட்டியும் இன்னும் ரெண்டு வருஷம் வேண்டாம்னு இருக்கோம்ங்கிற. ஒண்ணும் நல்லதாத் தெரியல” என்றவர் போகிற போக்கில் ஒரு ஆலோசனையையும் தூக்கிப் போட்டார்.

“”ஒண்ணு பண்ணு. என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு எம் எம் மெடிக்கல் காலேஜில் இருக்கான். அவன் மூலமா லெக்சரர் வேலைக்கு ஏற்பாடு செய்யறேன். நேரத்துக்கு போனமா வந்தமான்னு வாழ்க்கை சுலபப்படும். யோசிச்சு எனக்கு ஃபோன் செய். அவ மாட்டேன்னுதான் சொல்லுவா. பேசிக் கீசி கன்வின்ஸ் செய்யப் பாரு”

அதை முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன் நண்பர்களின் கலாய்த்தலில் நொந்த தருணத்தில் பரிசீலிக்கத் தொடங்கி, இரண்டு நாள் முன்னர் சக்தியிடம் பேச்சை ஆரம்பிக்க முடிவற்றதாய் நீண்டு, இனி சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை என்கிற உச்சத்தைத் தொட்டு, இப்போது அவள் நர்சிங்ஹோம் கெஸ்ட் ஹவுஸில்.

பிடிவாதக்காரி. பிரிவதில் தனக்கு உடன்பாடில்லை என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னாளே தவிர, தன் ஆலோசனையைப் பரிசீலிக்கக் கூட அவள் தயாராக இல்லாதது இவனுக்குப் பெரும் கோபத்தைக் கிளப்பி விட்டது.

இத்தனைக்கும் சக்தியை விரும்பிக் கைப் பிடித்தான்.

எப்போது பார்த்தான் முதன் முதலில் அவளை? பெரியம்மா மகனின் திருமணத்தில் மணப்பெண்ணின் தோழியாக. பார்த்த சில நிமிடங்களிலேயே அப்படிப் பிடித்துப் போனது அவனுக்கு. அவள் டாக்டர் எனத் தெரியவந்த போது அவனால் நம்பவே முடியவில்லை.

படித்து ஓரளவு நல்ல வேலையில் அமர்ந்ததுமே மனிதர்களிடம் இயல்பாக வந்து ஒட்டிக் கொள்ளும் கெத்து எதுவும் இல்லாமல் மிக எளிமையாகவும் கலகலப்பாகவும் ஓடியாடி ஒவ்வொருவரையும் உபசரித்துக் கொண்டிருந்தாள் சக்தி. அப்போதே பெரியம்மாவைக் கைக்குள் போட்டுக் கொண்டு கட்டினால் சக்தியைத்தான் கட்டுவேன் எனக் கைகாட்டி விட்டு வந்து விட்டான்.

“நம்ம சமூகம் இல்லை. டாக்டர் பொண்ணு குடும்பத்துக்குச் சரிப்பட்டு வராது’ என அவன் பக்கத்திலும், “எங்க ஆட்கள் இல்லீங்களே.

அது கூடப் பரவாயில்ல. நாங்க டாக்டர் பையனா தேடறோமே’ என சக்தி குடும்பத்திலும் கிளம்பிய எதிர்ப்புகளையும் மறுப்புகளையும் நடுவில் நின்று சமாளித்து, பரஸ்பரம் சந்திக்க வைத்துப் பேசி முடித்தது பெரியம்மாதான்.

சக்தி மிகத் தெளிவாக இருந்தாள்.

தொடரும்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2016 12:55 am

ஒரு டாக்டரை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னா என் ப்ரொஃபஷனைப் பற்றிய புரிதலோட நடந்துப்பாங்கன்னு என் அப்பா நினைக்கறதில தப்பில்லை. நான் ஆசைப்பட்டதுக்காக பல சிரமங்களுக்கு மத்தியில என்னப் படிக்க வச்சவரு அவரு. அந்தப் படிப்புக்கான மரியாதை நான் இதுல உயர்ந்து காட்டறதுதான். அதுக்கு உங்களால…”

“”நோ சக்தி. இது ஒரு புனிதமான வேலைன்னு புரியாதவன் இல்லை நான். எங்க சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியிலும் நேரங்காலமில்லாத உழைப்புகள் எல்லாம்தான் இப்போ சகஜமாகி விட்டதே. என்னோட மனைவின்னு ஒரு வட்டத்துக்குள்ள கண்டிப்பா உங்களக் கட்டிப் போட மாட்டேன்” அவள் நம்பினாளோ இல்லையோ தான் அப்படி இருப்போம் என்பதில் அவனுக்கு ரொம்ப நம்பிக்கை இருந்தது அப்போது. ஓரளவு தொழிலில் கவனம் செலுத்தி ஒரு நிலைக்கு வர மூன்று வருடமாகலாம் என்றும், அதுவரை குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைக்க முடியுமா என்றும் அவள் கேட்டதற்கு, “”அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை” என்று தலையைத் தலையை ஆட்டியவன்தான் அப்போது.

இப்போது அவன் பார்வை முழுவதுமாய் மாறி விட்டிருந்தது. பொறுமை போய் விட்டிருந்தது.

ஆனால் அவளோ மாமாவின் ஆலோசனையை முன் வைத்த போது கோபப்படவே இல்லை.

“”ஏன் ரகு, திடீர்னு இப்படி லெக்சரர்? தட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ. ஜஸ்ட் இன்னும் ஒரே வருஷம். ஒரு சிறந்த குழந்தைப்பேறு நிபுணராகிடுவேன். அப்புறம் ஒண்ணென்ன ரெண்டோ மூணோ கூட பெத்துத் தந்துட மாட்டேனா. வேலைக்கும் போயிக்கிட்டு, ஆளுங்களப் போட்டு குழந்தைகளையும் நிச்சயம் நல்லாப் பார்த்துக்க முடியும் என்னாலே”

“”பெரிய தப்பு பண்ணிட்டேன்னு இப்போ தோணுது” ஏதேதோ இவன் பேச, பதிலுக்கு அவளும் பேச “”அவுட்” என வாசலைக் காட்டிக் கொந்தளித்து விட்டான்.

“”உங்களிடம் இப்போ என்ன பேசியும் புண்ணியமில்லை. ஆற அமர யோசிங்க. என்னைப் பார்க்கப் பார்க்க கோபம்தான் அதிகமாகும். இப்போதைக்கு நர்சிங்ஹோமிலேயே தங்கிக்கறேன்” என துணிமணிகளை அடுக்க ஆரம்பித்து விட்டாள்.

“”வீராப்பா போறியா? போ போ. ஊர் வாய்க்குப் பயந்துகிட்டெல்லாம் உங்கிட்டே தோற்க மாட்டேன். திரும்ப வந்து கூப்பிடவும் மாட்டேன். நீயா வர்றியான்னு ஒரு மாசம் பார்ப்பேன். நான் சொல்றதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா சேர்த்துப்பேன். இல்லைன்னா டைவர்ஸ்தான்”.

அடம் பிடிக்கும் சின்னக் குழந்தையைப் பார்ப்பது போல ஒரு புன்னகையை வீசி விட்டுக் கிளம்பி விட்டாள்.

அலைபேசி அழைத்தது. அறியாத எண்கள்.

அழைத்தது, நண்பன் பாலகணேஷ்

“”டேய்ய்ய் பாலா…” அலறினான் ஆனந்தத்தில்.

“”மாறவே இல்ல ரகு நீ. அப்பாவுக்கு பை பாஸ் சர்ஜரி. சென்னை வந்து ஒரு வாரமாச்சு. காலையிலே ஃப்ரீயா சொல்லு. எனக்கு 12 மணிக்கு ஃப்ளைட். அதுக்குள்ள உன்னைப் பார்த்துட்டு போலாம்னு..”

“”வா வா. ப்ரேக்ஃபாஸ்ட் இங்கயே வச்சுக்கலாம்’”

சமையல்காரி சீதாம்மாவைப் பாலாவுக்குப் பிடித்த பூரிக்கிழங்கை செய்யச் சொல்லிவிட்டுக் குளிக்க ஓடினான்.

பாலா ப்ளஸ் டூ வரைக் கூடப் படித்த பால்ய சிநேகிதன். பக்கத்து தெருவும் ஆகிப் போக எப்போதும் சேர்ந்தே திரிவார்கள். எத்தனை நட்புகள் பின்னாளில் கிடைத்தாலும் எதிர்பார்ப்புகளற்ற கள்ளமில்லா சிறுவயது நட்புக்கு ஈடாகுமா? கல்லூரிக்காகப் பிரிந்தவர்கள். பிறகு சந்திக்கும் வாய்ப்பே கிடைத்திருக்கவில்லை. கல்லூரி முடித்த கையோடு இவன் சென்னையிலும் அவன் டெல்லியிலுமாய் செட்டிலாக ஒருவர் திருமணத்துக்கு மற்றவர் போகவும் இயலவில்லை.

சொன்னபடியே ஒரு மணிநேரத்தில் அங்கிருந்தான் பாலா. ஆரத் தழுவிக் கொண்டார்கள். நான்கு கண்களும் மினுங்கி மினுங்கிப் பழைய காலத்துக்குப் போய்த் திரும்பின.

தொடரும்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2016 12:55 am

பாலா சொன்னான்: “”ஒருவகையில நான் இப்ப நல்ல நிலமையில இருக்கதுக்கு உன் கூடவே இருந்து கத்துக்கிட்ட அந்த பிடிவாத குணமும் ஒரு காரணம். அப்போ அதோட அருமை தெரியல. அவரவர் வழியில பிரிஞ்ச பிறகு வாழ்க்கையில எந்தத் தடை வந்தாலும் இத ரகு எப்படி சமாளிச்சிருப்பான்னு என்னய நானே கேட்டுப்பேன்னா பார்த்துக்கோயேன்”

சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவன் அலைபேசி சிணுங்கியது.

“”சொல்லும்மா…. அவகிட்ட ஃபோனைக் குடும்மா நான் பேசறேன்…. அனுக்குட்டி, செல்லமாச்சே நீ. பாட்டியைப் படுத்தாம குடுத்ததை சமர்த்தா சாப்பிடுவியாம். அப்பா இதோ வந்துட்டேயிருக்கேன்…. சரி சரி… வாங்கிட்டு வர்றேன். குளிச்சு ரெடியா இருக்கணும். நாம ரெண்டு பேரும் ஏர்போர்ட் போகணுமில்லையாடா.. குட் கேர்ள்” போனை வைத்தான்.

“”வொய்ஃப் வரலையாடா உன்னோட?”

“”இல்லடா. அவங்க ஆன்சைட் ப்ராஜக்டுக்காக யு கே போய் ஆறுமாசமாகுது”

“”அப்போ குழந்தைய யார் பார்த்துக்கறது?” ஆச்சரியமாய் கேட்டான் ரகு.

“”ஏன் நான்தான். ஆயாம்மா காலையில எட்டு மணிக்கு வந்து சாயங்காலம் நான் வந்ததுமா ஆறுமணிக்குப் போவாங்க. அதுக்கு மேல நான் பாத்துக்கறேன்”.

“”எப்படிடா மூணு வயசுதான் ஆகுதுங்கறே?”

“”அனுக்குட்டிக்கு ஒண்ணரை வயசா இருக்கும் போதே ஒரு மாசம் பிரியா ஜெர்மனி போனப்போ பார்த்துக்கிட்டவன் நான். இப்ப முடியாதா என்ன ஆறு மாசமேன்னு ரொம்ப யோசிச்சாங்க இந்த தடவை. திறமைக்குச் சவாலா தேடிவந்த பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாதுன்னு தைரியம் சொல்லி அனுப்பி வச்சிருக்கேன். சீக்கிரமா வாழ்க்கையில செட்டிலாகணும்னோ கவுரவுத்துக்காகவோ வேலைக்குப் போற பொண்ணுதான் வேணும்னே அடமா நின்னு பண்ணிக்கறவங்க எத்தனை பேரு. ஆனா வொய்ஃப் ஒரு ஏடிஎம் மெஷினப் போல பணங்காய்ச்சி மரமா ஒரே எடத்துல நிக்கணும்னா எப்படி?”

ரகுவுக்கு வியர்த்தது.

“”ஒண்ணுக்கு ரெண்டு பசங்க ஆயிட்டா வேலைய விடச்சொல்ற ஆளுங்களையும் நிறையப் பார்த்துட்டேன். வர்ற ப்ரோமோஷனை வேண்டாம்னுட்டு, தன்னைவிடத் திறமை குறைஞ்சவங்க தாண்டிப் போறத கைகட்டி வேடிக்க பார்த்துகிட்டு, சம்பளத்தை மட்டும் கொண்டு தரணும்னாஅநியாயமா இல்லே மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை”

ரகுவுக்கு லேசாக வெட்கம் வந்தது. தன்னிச்சையாக செட் டாப் பாக்ஸ் பக்கம் பார்வை சென்றது. சக்தியின் பேட்டி அதில் ரெகார்ட் ஆகிக் கொண்டிருந்தது.

“”உறவும் ஊரும் இன்ன வரை என்னப் பேசாத கேலி இல்ல. வர்றான் பாரு ஃபீடிங் பாட்டில்னுதான் ஃப்ரெண்ட்ஸ் கிண்டலடிப்பாங்க. அவங்களுக்கென்ன, ஜாலியாச் சொல்லிட்டு அடுத்த வேலயப் பார்க்கப் போயிடுவாங்க. நாம ஏன் அதை மனசுல ஏத்திட்டுத் திரியணும்னு எதையும் சட்டை செய்யறதில்ல. இது நம்ம வாழ்க்கை. அடுத்தவங்க மூக்கை நுழைக்கப்படாதுங்கறதுல தீர்மானமா இருந்தோம் ரெண்டு பேருமே. நா ஒரு முட்டாள். யாரு கிட்ட என்ன சொல்லிட்டிருக்கேன் பாரு அன்னக்கி உம்மேல வச்ச பிரமிப்பு இன்ன வர மாறல, நா சொல்லியா தெரியணும் இதெல்லாம்? ஊரே மெச்சுற டாக்டரையில்ல கட்டிக்கிட்டிருக்க. அவங்கள பார்க்காம போறமேன்னுதான் வருத்தம் எனக்கு. அடுத்த தடவை ஃபேமிலியோட மீட் பண்ணலாம்”

விடாமல் பேசிய பாலா கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே எழுந்தான்.

ஏதேதோ மிதப்பில் இருந்த ரகு மெல்லத் தரை தொட்டிருந்தான்.

“இது நம்ம வாழ்க்கை’ உதடுகள் முணுமுணுக்க, டின்னருக்கு சக்தியை எங்கே அழைத்துச் செல்லலாம் எனும் சிந்தனை வந்திருந்தது.

நன்றி : ராமலக்ஷ்மி
தினமணிக்கதிர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 17, 2016 5:19 pm

நல்ல கருத்துள்ள கதை பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2016 11:36 pm

எனக்கும் பிடித்தது பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக