புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
87 Posts - 67%
heezulia
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
3 Posts - 2%
sram_1977
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
423 Posts - 76%
heezulia
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
8 Posts - 1%
prajai
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
3 Posts - 1%
sram_1977
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10வேற்றாகி விண்ணாகி…!  Poll_m10வேற்றாகி விண்ணாகி…!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேற்றாகி விண்ணாகி…!


   
   
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 13, 2016 11:49 pm

வேற்றாகி விண்ணாகி…!
திருநாவுக்கரசர்

வேற்றாகி விண்ணாகி…!  FafZbuYTPWzdpZ5SP5vU+இராயப்புதுப்பாக்கம்_அரசனேஸ்வரர்_சிவலிங்கம்

பதிக எண்: 6.55      
திருக்கயிலாயம்          
திருத்தாண்டகம்

திருக்காளத்தி சென்ற அப்பர் பிரான், தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி திருப்பருப்பதம் (இந்நாளில் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுகின்றது; ஆந்திர மாநிலத்தில் உள்ள தலம்) சென்று அங்குள்ள இறைவனை வணங்கி பதிகம் அருளினார். அப்போது அவருக்கு திருக்கயிலாய மலை சென்று இறைவனை நேரில் காணவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தனது அடியார்களுடன், நெடிய பயணத்தை மேற்கொண்ட அப்பர் பிரான், வழியில் இருந்த கன்னடம், மாளவம், பைதிரம் (மத்திய பிரதேசம்) ஆகிய நாடுகளில் இருந்த காடு, மலை, ஆறுகளைக் கடந்து, வடநாட்டிலுள்ள காசி மாநகரை அடைந்தார். தன்னுடன் வந்தவர்கள் மிகவும் சோர்வு அடைந்திருந்த காரணத்தால், அவர்கள் அனைவரையும் காசி நகரில் விட்டுவிட்டு, அப்பர் பிரான் தான் மட்டும், தனது கயிலைமலைப் பயணத்தைத் தொடர்ந்து இந்திய நாட்டின் வடபகுதியில் உள்ள மலைப் பகுதியின் அடிவாரத்தை அடைந்தார்.

வழியில் இருந்த பாலைவனத்தையும், அடர்ந்த காடுகளையும், காடுகளில் இருந்த கொடிய மிருகங்களையும் பொருட்படுத்தாமல் இரவும் பகலும், இடைவிடாது நடந்துச் சென்ற அப்பர் பிரானின் திருவடிகள் கணுக்கால்கள் வரை தேய்ந்து போயின. அப்பர் பிரான் செல்லும் வழியில் இருந்த கொடிய காட்டு விலங்குகள் அவர் சென்ற பாதையை விட்டு அகன்றன என்றும், காட்டில் இருந்த பாம்புகள் தாங்கள் வைத்திருந்த மாணிக்கக் கற்களை உயர்த்திப் பிடித்து அப்பர் பிரானுக்கு வழிகாட்டின என்றும் சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். தனது கைகளை ஊன்றித் தாவித் தாவிச் சென்ற அப்பர் பிரானின் கைகளும் மணிக்கட்டுகளும் தேய்ந்து சிதைவுற்ற பின்னர், தனது மார்பினால் உந்திச் செல்லலானார். அந்த நிலையிலும் கயிலாயம் செல்ல வேண்டும் என்ற விருப்பம் மேன்மேலும் அவரது உள்ளத்தில் பொங்கியதாக சேக்கிழார் கூறுகின்றார்.
மலைப்பாதையில், பாறைகள் நிறைந்த வழியில், மார்பினால் உந்திச் சென்றமையால், அப்பர் பிரானின் மார்புத் தசைகள் தேய்ந்தன; மேலும் மார்பினில் ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருந்த எலும்புகள் தங்கள் கட்டினின்றும், விலகின. அந்த நிலையிலும் தனது குறிக்கோளிலிருந்து தளராத நிலையில் இருந்த அப்பர் பிரான், தரையில் புரண்டு சென்று தனது பயணத்தைத் தொடரலானார்.

உடல் உறுப்புகள் பலவும் சிதைந்த நிலையில், தனது பயணத்தை மேலும் தொடர  வழி ஏதும் புலப்படாத நிலையில், உள்ளத்தில் கயிலை செல்ல வேண்டும் என்ற ஆர்வம் சிறிதும் குறையாத நிலையில், தான் தவழ்ந்தும் புரண்டும் சென்று கொண்டிருந்த முயற்சியினை கைவிட்டு, அப்பர் பிரான் திகைத்து நின்றார். உடல் உறுப்புகள் முழுவதும் சிதைந்த நிலையில் அப்பர் பிரான் தனது பயணத்தைத் தொடர்ந்திருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்பதால் சிவபிரான் கயிலைப் பயணத்தினைத் தொடர்வதற்கு அருள் புரியவில்லை என்று சேக்கிழார் கூறுகின்றார். அப்பர் பிரான் மேலும் பல பதிகங்கள் பாடித் தன்னைப் புகழ வேண்டும் என்ற ஆசை இறைவனுக்கு இருந்தது என்றும் சேக்கிழார் கூறுகின்றார். அந்த நிலையில், சிவபிரான் ஒரு முனிவர் வடிவத்துடன், அருகில் ஒரு குளத்தினையும் உருவாக்கிய பின்னர், அப்பர் பிரானை சிவபிரான் அணுகினார்.




வேற்றாகி விண்ணாகி…!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேற்றாகி விண்ணாகி…!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேற்றாகி விண்ணாகி…!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 13, 2016 11:50 pm

தூய்மையான மரவுரி ஆடையைத் தரித்து, தனது மார்பினில் முப்புரிநூல் அணிந்து, ஒளி பொருந்திய சடைமுடியும் மார்பில் திருநீறும் விளங்க, வந்த அந்த முனிவர், அப்பர் பிரானை நோக்கி, உடல் உறுப்புகள் தேய்ந்து அழியுமாறு, கொடிய மலைப்பகுதிக்கு வந்த காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு அப்பர் பிரான், கயிலை மலையில், உமையம்மையுடன் சிவபிரான் எழுந்தருளி இருக்கும் கோலத்தினைக் காணும் விருப்பத்துடன் வந்ததாக பதில் கூறினார். அதற்கு அந்த முனிவர், கயிலை மலையானது இந்த நிலவுலகில் உள்ள மானிடர்கள் சென்று அடைவதற்கு மிகவும் அரிதானது; எனவே நீர் எதற்காக வெம்மை மிக்க இந்த பாலை நிலத்தில் வந்து சிக்கிக்கொண்டீர் என்று கேட்டார்;
நீர் இப்போது செய்யக்கூடிய செயல், கயிலை நோக்கிய உமது பயணத்தைத் தொடராமல், வந்த வழியே திரும்பிச் செல்வது ஒன்று தான் என்று அந்த அந்தணர் கூறினார். அதற்கு அப்பர் பிரான், தன்னை ஆளும் நாயகனாகிய சிவபிரான் கயிலையில் இருக்கும் காட்சி காணாமல், என்றேனும் மடியப்போகும் இந்த உடல் கொண்டு திரும்பிச் செல்லமாட்டேன் என்று மறுத்தார். என்றேனும் மடியப்போகும் இந்த உடல், இந்த கயிலைப் பயணத்தில் மடிவதால் தமக்கு நட்டம் ஏதும் இல்லை என்ற கருத்தில் இவ்வாறு அப்பர் பிரான் பதில் கூறினார். ஆனால் அவ்வாறு ஏற்பட்டால், கயிலைப் பயணத்திற்கு பின்னர் அப்பர் பிரான் அருளிய பதிகங்களை தமிழ் கூறும் நல்லுலகம் இழக்க நேரிடும் என்பதால், சிவபிரான், அப்பர் பிரான் கயிலைப் பயணத்தைத் தொடர்வதை தடுத்தார் என்று சேக்கிழார் மற்றொரு பாடலில் உணர்த்துகின்றார். .

அப்பர் பெருமானின் உறுதியை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டிருந்த சிவபிரான், அப்பர் பிரானின் பதிலைக் கேட்டதும் முனிவராக வந்த தன்னை மறைத்துக் கொண்டார். அப்போது விண்ணில் இருந்து, உயர்ந்த நாவுக்கரசரே, நீர் எழுந்திரும் என்ற ஒலி கேட்டது. அப்பர் பிரானின் உடலில் தேய்ந்திருந்த உறுப்புகள் வளர்ந்தன; தான் ஒரு புத்துணர்வினைப் பெற்றதை அப்பர் பிரான் உணர்ந்தார். ஓங்குதல் என்றால் உயர்ந்து நிற்றல் என்று பொருள். ஓங்கு திருநாவுக்கு அரசனே என்று இறைவன் மொழிந்ததும், உடல் உறுப்புகள் சிதைந்து, மிகவும் களைத்து, புரண்டும் தவழ்ந்தும் செல்வதற்கும் உடல் வலிவு இல்லாமல் இருந்த அப்பர் பிரான், தனது உடல் களைப்பு நீங்கப் பெற்று, எழுந்து நின்றது ஒரு அதிசயமே. முன்னவனே முனைந்தால் முடியாததும் உண்டோ என்று சேக்கிழார் (திருநகரச் சிறப்பு, மனுநீதிச் சோழன் வரலாறு) மொழிக்கு ஏற்ப, இறைவனின் அருள் இருந்தால் எந்த அதிசயமும் நிகழும் என்பதற்கு, இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.

ஓங்கு திருநாவுக்கு அரசனே என்ற இறைவனின் சொற்றொடர், நமக்கு வேந்தனும் ஓங்குக என்ற பதிகத் தொடரினையும் அதனால் விளைந்த அதிசயத்தையும் நினைவூட்டும். மதுரையில் சமணர்களுடன் நடந்த புனல் வாதத்தினை காண்பதற்காக, அனைவரும் கூடியிருந்தனர். அவர்களுள் கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்ட மன்னவனும் ஒருவன். வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடிக் கொண்டு, ஒரு பதிக ஏட்டினை வைகை ஆற்றில் சம்பந்தப் பெருமான் இட்டார். வேந்தனும் ஓங்குக என்ற தொடரைப் பாடிய போது, மன்னனின் கூன் நிமிர்ந்தது. அந்நாள் வரை கூன் பாண்டியனாக இருந்த மன்னன், நின்ற சீர் நெடுமாறனாக மாறிய அதிசயம் அப்போது நிகழ்ந்தது.

விண்ணிலிருந்து எழுந்த ஓசையைக் கேட்ட அப்பர் பிரான் சிவபெருமானை நினைத்து, அண்ணலே, என்னை ஆண்டு கொண்டு அருளிய அமுதே, விண்ணிலே மறைந்த வேத நாயகனே, எனது கண்களால் நான் திருக்கயிலையில் நீர் வீற்றிருக்கும் கோலத்தினைக் காண அருளவேண்டும் என்று இறைஞ்சினார். அவ்வாறு தன்னைத் தொழுது எழுந்த அப்பர் பிரானை, வானிலிருந்து எழும் ஒலி மூலமாக, அருகில் இருந்த குளத்தில் முழுகி, கயிலைக் காட்சியை திருவையாற்றில் காண்க என பணித்தார்.




வேற்றாகி விண்ணாகி…!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேற்றாகி விண்ணாகி…!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேற்றாகி விண்ணாகி…!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 13, 2016 11:52 pm

இறைவனின் திருவருளை நினைத்து உள்ளம் மகிழ்ந்த அப்பர் பிரான், வேற்றாகி விண்ணாகி என்று தொடங்கும் இந்த பதிகத்தினைப் பாடினார்; பின்னர் இறைவனின் அஞ்செழுத்தினை ஓதியபடியே அருகில் இருந்த குளத்தில் மூழ்கினார்.

பாடல் 3

மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி
என் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி
வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திருவே போற்றி தேசம் பரவப்
படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி கயிலை
மலையானே போற்றி

விளக்கம்;

சிவநெறியில் பொருந்தாமல் வேறு நெறியைச் சார்ந்திருந்து, உலகத்தவரை வருத்திய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பால் எரித்தவனே, மிகவும் விருப்பத்துடன் எனது சிந்தனையில் புகுந்தவனே, பிரமனின் உருக் கொண்டு என்னை படைத்தவனே, உடலின் உள்ளே இருக்கும் உயிரினை எவரும் காணாத வண்ணம் ஒளித்தவனே, பக்குவம் அடைந்த உயிர்களுக்கு உயர்ந்த முக்திச் செல்வத்தை அளித்து, என்றும் தீராத இன்பம் அளிக்கும் திறமை படைத்தவனே, உலகத்தார் அனைவராலும் வணங்கப் படுபவனே, நீரினை உட்கொண்ட மேகமாக நின்று மழை பொழிந்து உலகுக்கு நன்மை விளைவிப்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன்.

நன்றி: இணையம்.



வேற்றாகி விண்ணாகி…!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேற்றாகி விண்ணாகி…!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேற்றாகி விண்ணாகி…!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 14, 2016 11:35 am

வேற்றாகி விண்ணாகி…!  1571444738 வேற்றாகி விண்ணாகி…!  1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக