உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி
+6
விமந்தனி
யினியவன்
Aathira
ayyasamy ram
T.N.Balasubramanian
ராஜா
10 posters
Page 2 of 2 •
1, 2

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி
First topic message reminder :
நன்றி - குங்குமம் தோழி
ஆதிரா முல்லை - பேராசிரியர் / எழுத்தாளர்

நான்...
உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் நூற்றுக்கணக்கான இளைஞர் இளைஞிகளுக்கு அம்மாவாக இருப்பதில் தொடங்கு கிறது என் மனிதப் பிறவிக்கான பயன். இந்தத் தாய்மை தவமிருந்தாலும் பலருக்கும் கிடைக்காதது. தாய்மைக்கு அடுத்து அக்கா என்பது அழகான உறவு. அக்காவாகவே என் வலைத்தள உறவுகளுக்கு அறியப்பட்டிருப்பதில் ஆனந்தம். வெகு சிலருக்குத் தோழியாகவும் இருக்கிறேன். முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன்.
பள்ளியும் ஆசிரியர்களும்
ஐந்தாம் வகுப்பு வரை கிராமத்தில் ஈராசிரியர் பள்ளி. ஆண்-பெண் வேறுபாடு அறியாமல் புளிய மரத்தடியில் விளையாடியதும் புளியம்பழம் பொறுக்கி உப்பு, வெல்லம் வைத்து இடித்து நட்புகளுடன் சேர்ந்து சுவைத்தது நினைவில் இன்றும் இனிக்கிறது. அதன் பின் விராலிமலை அரசு உயர்நிலைப் பள்ளியில். 8 முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை ஊஞ்சலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில். பள்ளி இறுதி வகுப்பு தேர்வுக் கட்டணம்கூட கட்ட முடியாத நிலை. வரலாற்று ஆசிரியர் விசுவநாதன் கட்டணத்தைக் கட்டி என்னை உற்சாகமூட்டியது பசுமையான பதிவாக உள்ளது.
சென்னை
அஞ்சறைப் பெட்டிக்குள் வாசம் புரிந்த என் விரல்கள் அகிலத்தை நோக்கி நீளக் காரணமானது சென்னை வாழ்க்கை. நினைத்தே பார்க்காத இந்தப் பெருமித வாழ்க்கையை வசமாக்கியது சென்னைதான். கற்றுக் கொண்டது... ஆர்வமும் ஊக்கமும் உழைப்பும் இருந்தால் எல்லாவற்றிலும் வெற்றி பெறலாம் என்பதை.
புத்தகங்கள்
வால்காவிலிருந்து கங்கை வரை, கலைஞரின் சங்கத்தமிழ், கவிப்பேரரசுவின் கருவாச்சி காவியம், நாஞ்சில் நாடனின் திகம்பரம், கொங்குதேர் வாழ்க்கை, இறையன்புவின் ரெளத்திரம் பழகு, பிரபஞ்சனின் வானம் வசப்படும், பாரதி கிருஷ்ணகுமாரின் ‘அருந்தவப் பன்றி’ சுப்பிரமணியபாரதி, தமிழன்பனின் திராவகக் கவிதைகள், கவிக்கோவின் ஹைக்கூக்கள் என்று பிடித்த புத்தகங்களின் பட்டியல் மிக நீளமானது. கல்வி கரையில... கற்பவர் நாள் சில. என்ன செய்ய?
சொந்தங்கள்
சொந்தங்கள் நீர்ப்பறவைகள். குளத்தில் நீர் இருக்கும்போது கூடுவதும் வற்றிய போது ஓடுவதுமான குளத்து நீர்ப்பறவைகள் சொந்தங்கள்.. வறுமையையும் கவலைகளையும் ஒருபோதும் சொந்தங்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. சொந்த பந்தங்களுடன் கூடி இருக்க வேண்டுமானால் நாம் வளமாகவும் நலமாகவும் இருப்பதாகவே காட்டிக் கொள்ள வேண்டும்.
கடந்து வந்த பாதை
கலைஞர் பாணியில், ‘நான் தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டி யிருக்கிறேன்’ என்று கூறலாம். கரடு முரடான பாதைக்குப் பழக்கப்பட்டுப் போன பாதங்கள் எப்பேர்பட்ட வழி(லி)யையும் எளிதாகக் கடக்கும் வலிமையையும் உரத்தையும் பெற்று விடுகின்றன. துன்பம் நேர்கையில் யாழ் போல இன்பம் சேர்க்கும் தோழமைகள் இப்போது என் வசம். துன்ப வேளையில் ‘எதுவும் நம் கையில் இல்லை’ என்று கூற மாட்டேன். ‘இதுவும் கடந்து போகும்... எவ்வளவோ பாத்துட்டோம் இதப் பார்க்க மாட்டோமா’ என்னும் சொல்லாடல்கள் எனக்கு வலிமை தருவதாக உணர்வேன்.
சினிமா
எனக்கு வாழ்க்கையை எதிர் கொள்ளும் துணிவு, எப்போதும் கண்ணீர் சிந்தக் கூடாது என்னும் உறுதி ஆகியவற்றுக்கு கே.பாலசந்தர் இயக்கிய ‘அவர்கள்’ திரைப்படம் காரணமாக இருந்தது என்றால் நம்புவார்களா என்று தெரியவில்லை. ஆனால், அதுதான் உண்மை. அந்தத் திரைப்படத்தின் கதாநாயகி எந்தச் சூழலிலும் அழமாட்டேன் என்று சபதம் எடுத்திருப்பாள். இப்போதும் என் மாணவர்கள் யாராவது அழுதால் இதைத்தான் கூறுவேன். கே.பி.யின் ஆளுமை நிறைந்த பெண் கதை மாந்தர்கள் மனதில் நிறைந்தவர்கள். பாலுமகேந்திராவின் கேமரா கண்களைப் பார்க்கப் பிடிக்கும். பாரதிராஜாவோடு கிராமங்களை வலம் வர பிடிக்கும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘வழக்கு எண்...’ போன்ற படங்களையும் பிடிக்கும்.
எழுதியதில் பிடித்தவை
என் படைப்புகள்... ‘பட்டாம்பூச்சிகளின் இரவு’ - கவிதைத் தொகுப்பு, ‘உச்சிதனை முகர்ந்தால்’ - கட்டுரைத் தொகுப்பு, ‘பேராசிரியர் அ.மு.ப.’ - வாழ்க்கை வரலாற்று நூல். ‘எங்க அப்பா ரொம்ப அழகு’ சிறுகதை என் மனதுக்கு மிகவும் அணுக்கமானது. கவிதைகளில் பெரியாருக்காக நான் எழுதியது ‘திராவிட விருட்சம்’. இது எனக்கும் பிடித்தது. படித்த அனைவரது பாராட்டையும் பெற்றது.
இசை
இளையராஜாவின் இசை இல்லாமல் வாழ்க்கையைக் கடப்பது இசைப் பிரியர்களுக்கு மட்டுமல்ல... எந்த ஒரு சாமானியருக்கும் இயலாத செயல். என் இன்ப, துன்ப தருணங்கள் இரண்டும் இசைராஜாவின் எண்பதுகளின் இசையில் கரைந்து போகும். கர்நாடக இசைக்கும் நான் ரசிகை. கே.ஜே.ஏசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, உண்ணி கிருஷ்ணன் மூவரும் உருகி உருகிப் பாடி என்னைக் கரைத்து விடுவார்கள்.
‘கருணா செய்வாய்’ என்று ஏசுதாஸும், ஜெயதேவரின் அஷ்டபதியை பாலமுரளி கிருஷ்ணாவும், ‘சாந்தி நிலவ வேண்டும்’ என்று உண்ணி கிருஷ்ணனும் பாடினால் கண்களில் பெருக்கெடுக்கும் ஆனந்தக் கண்ணீர். ‘ஏசுதாஸ் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் வேலை செய்யக் கூடத் தயார்’ என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அவர் குரலைக் கேட்டு கொண்டே இருக்கலாம் அல்லவா?
பிடித்த ஆளுமைகள்
1. என்றென்றும் முத்தமிழறிஞர் கலைஞர். காரணங்கள் கூறுதல் வேண்டுமோ!!! வயது ஏற ஏற (அவருக்கு) அவர் மீதான என் காதல் ஏறிக்கொண்டே போகிறது.
2. அடுத்ததாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசரும் கர்நாடக ஆளுநருமான ச.மோகன். ஆங்கில - தமிழ் இலக்கியப் புலமை, திராவிட இயக்கக் கொள்கை, தொடர்ந்து வாசிப்பது, எல்லோரையும் பாரபட்சம் பார்க்காது நேசிப்பது, சமுதாய அவலங்களைக் கண்டு ரெளத்திரம் கொள்வது, அவற்றை எழுத்தாக்கி ஊடகங்களில் பரிமாறுவது என்று என்னை அசர வைத்தவர்.
பிடித்த பெண்கள்
எத்தனை சோதனைகள் வந்தாலும் பதற்றப்படாமல் எளிதாகவும் அமைதியாகவும் அவற்றை எதிர்கொள்ளும் மனப்பான்மையால் குடும்பத்தில் என்னைக் கவர்ந்தவர் என் மாமியார். படிப்பறிவே சிறிதும் இல்லாத அந்த மூளையில் ஐந்தடி கூட இல்லாத அந்த உடலில் எங்கு ஒளிந்திருக்கின்றன அத்தனை தைரியமும் அத்தனை நுட்பமான அறிவும் என்று இன்றும் வியந்து கொண்டே இருக்கிறேன். என் தோழி ராஜி. அவளின் எதிர் பார்ப்புகள் சூழியம். அவளது உதவிகள் 100 என்னும் விகிதத்தில் பழகுபவள். அவளோடு பழகும் எவர்க்கும் பிடிக்கும் அவளை.
அழகென்பது...
அகமும் புறமும் நிறைந்திருக்கும் உண்மையும் அறிவும் நேர்மையும் அன்பும் தியாகமுமே அழகு!
வாழ்க்கை
வாழ்க்கை நாம் அஞ்சும் போது மிரட்டும்... மிஞ்சும் போது அது அஞ்சும்... இலக்கியத்தின் கரம் பிடித்த இனிய நட்புகளோடு எந்தச் சூழலையும் இன்பமாகக் கடந்து விடலாம். வாழ்தல் இனிது!
சமையல்
பாரம்பரிய உணவுகளை சமைப்பதில் நான் கில்லாடி. நவீன உணவு வகைகளை சமைக்கச் சொன்னால் அல்லாடிப் போவேன். இப்போதெல்லாம் என் விருப்பம் கிச்சன் இல்லாத வீடு வேண்டும்!

Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி
வாழ்த்துக்கள் ஆதிரா
krissrini- பண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி
நம்மளும் வாழ்த்தி வச்சிருவோம் - ஒரு வேளை காப்பி கூட கெடைக்காம போயிடுச்சுன்னா 

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி
நன்றி ராஜா அண்ணாந...
ஆனால் நான் படிக்கல....
புக் வாங்கி தான் படிப்பேன்
ஆனால் நான் படிக்கல....
புக் வாங்கி தான் படிப்பேன்
Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி
Madhu neenga thaan andha padikkaatha maethai 

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி
சூப்பர் ஆதிரா, இப்போது தான் பத்ரி upload செய்துள்ளதை டவுன்லோட் செய்து கொண்டேன், பார்த்தால் இது மற்றும் ஒரு பதிவு !...................அட்டகாசம் போங்கள்!
; ); )

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|