புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10 
20 Posts - 50%
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10 
17 Posts - 43%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10 
20 Posts - 50%
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10 
17 Posts - 43%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 20 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....


   
   

Page 20 of 24 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 20 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!




சதுரகிரி பயணம்..... - Page 20 SxCdjytQQzO4vVLM3L0G+001




சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 06, 2016 5:37 pm

சுந்தர மகாலிங்க சந்நிதியில் இருந்து பார்த்தாலே மலையின் மீது உள்ள தவசிப்பாறை தெரியும்.

சதுரகிரி பயணம்..... - Page 20 BmrRmzTsGlQjN8LzGzgA+DSCN4242

இங்கு செல்ல சுந்தர மகாலிங்க சந்நிதியில் இருந்து சுமார் இரண்டு மணி நேரம் ஆகுமாம். இந்த தவசிப்பாறை குகையில் தான் மாதம் ஒருமுறை அதாவது அமாவாசையில் சித்தர்களின் சத் சங்க கூட்டம் நடை பெறுவதாக இன்றும் நம்பப்படுகிறது.

பெரும்பாலும் பக்தர்கள் யாரும் அங்கே போவது கிடையாது. அங்கே சூட்சும ரூபத்தில் சித்தர்கள் இருக்கும் பட்சத்தில் நம்முடைய பிரவேசம் அவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடும் என்பதாலேயே சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் தரிசனத்திற்கு பிறகு மலையை விட்டு பக்தர்கள் கீழிறங்கி விடுகிறார்கள்.

அடுத்து பெரிய மகாலிங்கம். இதுவும் சந்தன மகாலிங்கத்திற்கு சற்று மேலே போனால் இதையும் தரிசனம் செய்யலாம்.

சதுரகிரி பயணம்..... - Page 20 ZwGJSJE0TEKctR3mnTOL+sathuragiri-12
படம்: இணையம்

மிகப்பெரிய லிங்கப்பாறை. இங்கும் மாதம் ஒருமுறை பூசைகள் நடக்கிறது.

இங்கும், தவசிப்பாறைக்கும் பக்தர்கள் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது.




சதுரகிரி பயணம்..... - Page 20 VA22vStQi3Hyd5O7RsDw+001




சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 06, 2016 5:56 pm

துரகிரியில் ஆண்டவனுக்கு ஆகம பூஜை செய்வதில்லை, ஆத்மார்த்தமான பூஜையையே இறைவன் விரும்புகிறான் என்பதற்கு சாட்சியாக பக்தர்களுக்கு ஏதேனும் ஒரு ரூபத்தில் இன்றும் காட்சி கொடுத்து வருவதிலேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.

சதுரகிரி பயணம்..... - Page 20 8DUHMrkRFanoMzDyoiHZ+p97
சுந்தர மகாலிங்க சந்நிதி
படம்: இணையம்


சுந்தரமகாலிங்க சந்நிதியில் அபிஷேகம் ஆரம்பமாயிற்று. பஞ்சாமிருதத்துக்கு தேவையானதையும் நாங்களே எடுத்து சென்று விட்டதால். எம்பெருமான் அபிஷேகத்திற்கு தயாராகும் முன் அபிஷேகத்திற்கு வேண்டிய பஞ்சாமிருதத்தை தயார் செய்து விட்டோம். அப்படியே பைரவருக்கு பிடித்த புனுகும் வாங்கிக்கொண்டு போயிருந்தோம்.

கொஞ்ச, கொஞ்சமாய் விடிய ஆரம்பித்தது. இங்கும் சந்தன மகாலிங்க சந்நிதி போலவே அபிஷேகமும் பூஜையும் நடந்து ஆரத்தி காட்டி முடித்தார்கள்.

பக்தர்களுக்கு வெண்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. கூடவே பஞ்சாமிர்தமும்.

மனம் நிறைய ஆண்டவனை தரிசித்து விட்ட இன்பத்தில் மடத்திற்கு வந்தோம். அங்கே சுடச்சுட சாதம், சாம்பார், ரசம், மோர், பிர்க்கங்காய் கூட்டு, அப்பளம் என்று நிறைவாய் சாப்பிட்டு விட்டு, அவர்கள் கொடுத்த திணைமாவு பிரசாதத்துடன் அவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்ப ஆயத்தமானோம்.

அனைத்து குழுக்களும் கிளம்பிவிட்டிருந்தார்கள். நேற்றிரவு லேட்டாக வந்த அந்த பெண்கள் குழு மட்டும் கொஞ்சம் தேங்கியது. நேற்றிரவு என்னுடன் பேசிய பெண்ணுக்கு நடக்கவே முடியாத படிக்கு கால் வலி.

எப்படிப்போவது என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு டோலியில் போக முடிவு செய்தார்கள். அந்த பெண், அந்த பெண்ணினுடைய கணவர் மற்றும் உடன் வந்த சிறுவன் என மூவரும் டோலியில் வர ஏற்பாடு ஆயிற்று.

அந்த பெண்ணின் தந்தை மட்டும் நடந்து செல்வதாக கூறி, அவர் வேகமாக போயே, போய் விட்டார். மலையே வெறிச்சோடி விட்டது.

சதுரகிரி பயணம்..... - Page 20 BjLG3TNdTh6Qmyctwxx2+109

சதுரகிரி பயணம்..... - Page 20 YWNLB78nS5iHAcBkj1MP+IMG_20160409_082558

நாங்களும் நடக்க ஆரம்பித்தோம். மணி சரியாக எட்டரை. ஏனோ அன்று வானம் சற்றே மேக மூட்டத்துடன் இருந்தது. வெயிலே சரியாக காயவில்லை. மழை வரும் போலவே இருந்தது.

மலை ஏறும் போதும் இறங்கும் போதும் பக்தர்கள் நம்மை கடந்து போய்க்கொண்டே இருப்பார்கள். மனித நடமாட்டம் மனதிற்கு ஒருவித தெம்பை அளிக்கும். ஆனால் இப்போது அதுபோல யாரும் இல்லாமல் மலையே காலியாய், நாங்கள் மட்டுமே இறங்கி வந்து கொண்டிருப்பது என்பதை நினைக்கும் போதே மனதிற்குள் லேசாய் கிலியடித்தது. டிஸ்கவரியில் காட்டுவது போல, காட்டிற்குள் நாங்கள் மட்டும் தனியாக வருவது போல்...........

பத்தாதற்கு மேகமூட்டம் வேறு. மழை வருவது போல...... அந்த சூழ்நிலையின் மிரட்டல் என்னை வெகுவாய் பயமுறுத்தியது. இந்த நேரத்தில் தானா தேவையில்லாமல் சென்ற வருடம் பெய்த பேய்மழை நினைவுக்கு வரவேண்டும்....? கொடுமைடா சாமி.  

‘ஆண்டவா நாங்க கீழேப்போகிறவரை கொஞ்சம் கூடவே வா....’ வாய்விட்டே அரற்றிக்கொண்டு வந்தேன். ‘அப்போ.. கீழே போறவரை வந்தா போதுமா...? வீடுவரைக்கும் வேண்டாமா....’ இயல்பான குதர்க்கம் மனதிற்குள் கொக்கி போட்டது. கடவுளே எப்படித்தான் வேண்டறதுன்னே தெரியலையே....  

பிலாவடி கருப்பு சந்நிதி வரவும் கொஞ்சமாய் மேகங்கள் விலகி வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. மனதிற்கும் கொஞ்சம் தெம்பு வந்தது. பிலாவடி தாண்டியதும் தான் கவனித்தேன்.

எங்களுடன் ஒரு பைரவரும் வருவதை.... சரி வழியில் அது பாட்டுக்கு ஏதாவது மேய்ந்து கொண்டிருக்கும் என்று நினைத்து ஆரம்பத்தில் கண்டுகொள்ளவில்லை. அதற்கேற்றார்போல் அதுவும் அங்காங்கு நின்று, நின்று பாதையோரங்களில் முகர்ந்து பார்த்து மேய்ந்து கொண்டே வந்தது.

ஆனால், தொடர்ந்து பதினைந்து நிமிடங்களாக அது எங்களை பின் தொடர்ந்து வரவும், மனதில் பளிச்சென்று உதயமானது..... அந்த ஆண்டவனே பைரவர் ரூபத்தில் துணைக்கு வருகிறார் என்பது.

சதுரகிரி பயணம்..... - Page 20 SnkvJ40fRMuiZsv3GoIM+DSCN4333

பைரவருக்கு புனுகு சாத்தியதின் பலனா...? அல்லது சற்றுமுன் நான் அரற்றியதின் விலைவா.... அல்லது நேற்றிரவு, ‘நமக்கு மட்டும் கொடுப்பினை இல்லாமல் போகும் அளவிற்கு பாவப்பட்ட ஜென்மமா என்று நான் மருகியதின் விளைவா....? ஏதேதோ கேள்விகள். புதிது புதியதாய் முளைத்துக்கொண்டு இருந்தது. ஆனால் விடை தான் தெரியவில்லை.

பகலிலேயே எங்களுக்கு வழி காட்ட வந்துவிட்டாயா ஆண்டவனே... உனக்கு தான் எவ்வளவு கருணை. எங்களுடன் நீ உடன் வர அவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறோமா நாங்கள்.... பல விதமாக எண்ணிக்கொண்டும், பேசிக்கொண்டும் வழி எல்லாம் நாங்கள் ஒருவருக்கொருவர் சிலாகித்த வண்ணம் வியப்பும், பிரம்மிப்பும் மேலிட நடந்து கொண்டிருந்தோம்.

அதனாலேயே உடன் வரும் அதன் மீது ஒரு வாஞ்சையும், கருணையும் பிறந்து அதனுடனேயே தொடர்ந்தோம். அதுவும் வழியெங்கும் முகர்ந்து பார்த்துக்கொண்டே, மிச்சம், மீதி ஏதேனும் பக்தர்கள் போட்டுவிட்டு போனதை ஆராய்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தது. இந்த பிரம்மிப்பிலேயே எவ்வளவு தூரம் கடந்து வந்தோம் என்று தெரியவில்லை. கோரக்கர் குகையருகே வந்ததும், நாங்கள் எதிர்பாராத ஒன்று நடந்தது.

அது......




சதுரகிரி பயணம்..... - Page 20 89FKq6oOQuyzRufufRRv+001




சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 06, 2016 7:10 pm

யாரது ? விமந்தனியா ?? இந்த நேரத்தில் !!

உடன் வந்த பைரவருக்கு ,பை சொல்லி விடை கொடுத்தீரா ?
சுந்தர மகாலிங்க சுவாமிகள் அனுப்பிவைத்த பாடிகார்ட் அவர் .
நன்றாக இருக்கிறது அனுபவங்கள் .
அடுத்த முறை போகும் போது எனக்கும் ஒரு டிக்கட் .

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 06, 2016 7:51 pm

புகைப்படங்கள் எல்லாமே நேர்த்தியாக உள்ளது . சதுரகிரி போய்வரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது . அருமையாக எழுதுகிறீர்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 06, 2016 9:38 pm

T.N.Balasubramanian wrote:யாரது ? விமந்தனியா ?? இந்த நேரத்தில் !!

உடன் வந்த பைரவருக்கு ,பை சொல்லி விடை கொடுத்தீரா ?
சுந்தர மகாலிங்க சுவாமிகள் அனுப்பிவைத்த பாடிகார்ட் அவர் .
நன்றாக இருக்கிறது அனுபவங்கள் .
அடுத்த முறை போகும் போது எனக்கும் ஒரு டிக்கட் .

ரமணியன் .
நன்றி ஐயா. நன்றி நன்றி



சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 06, 2016 9:39 pm

M.Jagadeesan wrote:புகைப்படங்கள் எல்லாமே நேர்த்தியாக உள்ளது . சதுரகிரி போய்வரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது . அருமையாக எழுதுகிறீர்கள் !
மிக்க நன்றி ஐயா.



சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 06, 2016 9:48 pm

ந்த மலையின் பிரதான கடவுளான சுந்தரமகாலிங்கம் பற்றி சொல்லவேயில்லையே. இப்போது சுந்தரமகாலிங்கம் இங்கே எழுந்தருளியதைப்பற்றி பார்ப்போம்.

சதுரகிரி பயணம்..... - Page 20 B9JauAkgTqEMftfswSFB+blogger-image-1479935928
படம்: இணையம்

கயிலாயத்தில் இருப்பதை ஒருகணம் மறந்து சிற்றின்பத்தில் திளைத்ததின் விளைவாய் ஈசனின் கோபத்திற்கு ஆளான யாழ்வல்லத்தேவன் – பூலோகத்தில் பச்சைமால் என்ற மானிடனாய் பிறப்பெடுத்து, அடுத்த நாற்பதாண்டுகாலங்களில் மறுபடியும் இந்த பக்தனை, எம்பெருமானால் தடுத்தாட்கொள்ள அந்த கயிலை மலையான் சதுரகிரியில் எழுந்தருளிய இடமே இன்றைய சுந்தரமகாலிங்க சந்நிதி.

இங்கே லிங்கத்திருமேனி சற்றே சாய்ந்தபடி இருப்பதை காணலாம். அதன் காரணமும் பச்சைமால் தான்.

எம்பெருமான் மகா சித்தராகி வந்து பச்சைமாலின் மனைவி (கைலாயத்தில் இவர் ஒரு தேவமாது. யாழ்வல்லதேவரும், தேவமாது – இருவரும் தான் பரமனின் கோபத்திற்கு ஆளானது) சடைமங்கை-யை உரிய காலத்தில் தடுத்தாட்கொண்டார்.

இடையரான பச்சைமாலும் மனைவியின் பிரிவிற்கு பிறகு தனது பசுமாடுகளை ஓட்டிக்கொண்டு சதுரகிரிக்கு வந்துவிட்டான். இங்கு தான் சுந்தரானந்த சித்தர், அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பூஜித்து வந்ததை பார்த்து, பச்சைமால் தன்னிடமிருந்த பசுக்களில் ஒன்றின் பாலை மட்டும் சித்தருக்கும், சுவாமியின் அபிஷேகத்திற்கும் தர தன்னை அனுமதிக்குமாறு சுந்தரானந்தரிடம் வேண்டி நின்றான்.

சுந்தரானந்தரும் அதற்கு சம்மதித்ததில் தினமும் பச்சைமால், தான் சொன்னபடியே ஒரு பசுவின் பாலை சுவாமியின் அபிஷேகத்திற்கும், பசியாற சித்தருக்கும் வழங்கி வந்தான்.

இந்நிலையில், பச்சைமாலின் விமோச்சன நேரம் நெருங்கவே ஈசன் மகா சித்தராக சதுரகிரியில் தோன்றி தன் திருவிளையாடலை ஆரம்பித்தார்.

ஒருநாள் தொழுவத்தில், அபிஷேகத்திற்கான நேரம் ஆகிவிட்டிருந்த நிலையில், பச்சைமால், அந்த குறிப்பிட்ட பசுவை தேடிப்போனபோது.... அந்த பசு அங்கில்லை.

“எல்லா மாடுகளையும் சரியாக தானே ஒட்டி வந்தோம் இது மட்டும் எப்படி வழி தவறியது...?” என்று குழப்பம்.

“சரி, வந்த வழியே சென்று பார்ப்போம்....” என்று நினைத்து பச்சைமால் அந்த பசுவைத்தேடி போக, அந்த பசு ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்ததை பார்த்ததும்....

ஈஸ்வரனின் அபிஷேகத்திற்கு நேரமாகிறதே என்ற பதை, பதைப்பில் பசுவின் அருகே ஓடிச்சென்றவன், அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து போனான்.

சதுரகிரி பயணம்..... - Page 20 6TvynKMsSy2sQatNoc4r+11234
படம்: இணையம்

சுந்தரானந்தர் பூஜிக்கும் லிங்கத்திற்கு பால் தரும் அந்த பசுவின் மடியில் மகா சித்தராக வந்த ஈசன் பாலை பருகிகொண்டிருந்தார். அபச்சாரம் நிகழ்ந்து விட்டதாக கருதிய பச்சைமால் கோபத்தின் உச்சிக்கே சென்று, மாடு மேய்க்க கையில் வைத்திருந்த கழியால் சிவனாரை மண்டையில் ஓங்கி அடித்துவிட்டான்.

மகா சித்தரான ஈசனின் தலையிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தது அறிந்து ஓடிவந்த சுந்தரானந்தர் வெகுண்டெழுந்த போது, எம்பெருமான் தடுத்து, தான் பச்சைமாலை தடுதாட்கொள்ளவேண்டியே இத்திருவிளையாடல் நிகழ்த்தியதை கூறி அவர்களுக்கு சிவபெருமான் தனது ஜடாமுடி, சர்ப்ப ஆபரணங்களுடன் காட்சி தந்தார்.

அதன் பிறகு, பச்சைமாலின் விருப்பப்படியே அவனை தனது திருவடிகளில் ஐக்கியப்படுத்திக்கொண்டார். சித்தர்களின் விருப்பத்திற்கிணங்க, பக்தர்களுக்கு அருளை வழங்க தான் நின்ற இடத்திலேயே சற்றே சாய்ந்த நிலையில், பச்சைமால் அடித்ததினால் ஏற்பட்ட காயத்தழும்புடன், சுயம்பு லிங்கமாய் தோன்றினார் எம்பெருமான்.

சுந்தரமகாலிங்க அபிஷேகத்தின் போது லிங்கத்திருமேனியில் இருக்கும் காயத்தழும்பை நாமும் காணலாம்.




சதுரகிரி பயணம்..... - Page 20 NONLOSojSrW1zIKk3rVD+001




சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 1:46 am

ஜூன் 2 லிருந்து படிக்கலை, நாளை படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 08, 2016 1:29 pm

நாங்கள் எதிர்பாராமல் அங்கு நடந்த விஷயம்.........

துணையாக உடன் வந்த நாய் அசிங்கத்தில் வாய்வைத்து விட்டது. அதைப்பார்த்ததும் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்த நால்வரும் ஒருவித அருவருப்பு ஏற்பட முக சுளிப்புடன் தேங்கி நின்றார்கள். பின்னால் கூப்பிடும் தூரத்தில் வந்து கொண்டிருந்த எனக்கு, அங்கிருந்தே தகவல் சொன்னார்கள் பிள்ளைகள்.

அதைக்கேட்டதும், ஏனோ மனதிற்குள் எனக்கும் ஒருவித அருவருப்பு மண்டியது. எனில் இவ்வளவு நேரம் நம்முடன் வந்தது பைரவர் இல்லையா... என்ற எண்ணம் கேள்வியாக எழுந்த போது மனம் ஏமாற்றத்தில் சோர்ந்தது. உள்ளுக்குள் மனம் இந்த துர்பாக்கியத்தை எண்ணி ஊமையாக அழப்பார்த்தது.

அடக்கடவுளே ஒரு கணம் நம்மை எவ்வளவு பாக்கியசாலிகளாக நினைத்து கர்வம் மேலிட புளங்காகிதம் அடைந்து விட்டேன்..... சென்ற முறை போலவே மறுபடியும் அந்த கர்வத்திற்கு கிடைத்த அடியா.... மனதிற்குள் பலவாறாக நினைத்தபடி, அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தேன். அந்த நாயும் அங்கேயேதான் சுற்றிக்கொண்டு இருந்தது.

நான் வரும் வரை என்னவரும் காத்திருந்தார். ‘என்ன இப்படி பண்ணிடுச்சே....’ என்று வருத்ததோடு சொன்னார். அதற்கு அவருக்கு, நான் பதிலாக சொன்னது எனக்கே ஆச்சரியமூட்டும் விதத்தில் இருந்தது. அதுவரையிலும் மனதிற்குள் புலம்பிக்கொண்டு வந்த எனக்கு எப்படி அப்படி ஒரு பதிலை சொல்லத்தோன்றியது என்பது இன்னமும் எனக்கு வியப்பான விஷயமாக தான் இருக்கிறது. நானே சொன்னேனா அல்லது எனக்குள் இருந்து என்னை செலுத்தியது அந்த ஆண்டவனா.... இன்னமும் புதிராகத்தான் இருக்கிறது.

நான் சொன்ன பதில், ‘எடுக்கும் உருவத்திற்கேற்ற இயல்பு தானே இருக்கும். சீதையை அடைய, ராவணன் ராமன் உரு எடுத்த போது அவனுக்குள் எப்படி ராமனின் மேன்மையான குணங்களும் இயல்பாய் எழுந்ததோ.... அப்படி தான் இதுவும் இருக்கணும். நாயின் இயல்பான பிறவிகுணங்கள் வெளிபட்டிருகிறது...... ‘ என்றேன். அந்த பதில் அவரை எந்த அளவிற்கு சமாதானப்படுத்தியதோ தெரியாது. ஆனால், நான் – என் மனம் தெளிந்து விட்டது.

தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். ஒரு பத்து நிமிஷ இடைவெளியில் திடீரென்று எங்கிருந்து வந்ததோ தெரியாது, இன்னொரு வெள்ளை நிற நாய் எங்களை தொடர ஆரம்பித்தது. இப்போது எங்கள் வரையில் இது சாதாரண நிகழ்வாக ஆகிவிட்டிருந்தது. முன்னவர் கொடுத்த அனுபவத்தில்....

சதுரகிரி பயணம்..... - Page 20 XtzeEgQAS6WQTjTnsRJm+DSCN4337

சதுரகிரி பயணம்..... - Page 20 Xv2uFyjxTIybEVBOeyAQ+DSCN4361

இரண்டாவதாக வந்த பைரவர் ஓரங்களில் எங்கும் முகர்வதோ, மேய்வதோ இன்றி அது பாட்டிற்கு உடன் வந்து கொண்டிருந்தது. முதலில் வந்தது வழக்கம் போலவே மேய்ந்து கொண்டுத்தான் உடன் வந்து கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் மேலே படத்தில் உள்ள இடத்தில் இரண்டாம் பைரவர் உட்கார்ந்து விட்டது. பின்னாலேயே வந்த முன்னவர் அதன் அருகில் சென்று முகரும் போது, உக்கார்ந்திருந்த பைரவர் ஒரு உறுமல் உறுமியது பாருங்கள்.... பாய்ந்து குதறிவிடும் ஆவேசம். எங்கே அங்கொரு யுத்தம் தொடங்கி விடுமோ என்று பயந்து விட்டேன்.

ஒரே உறுமல் தான். கணநேரத்தில் அதிலேயே இருவருக்கும் பரிபாலனை நடந்து முடிந்து விட்டிருந்தது. முன்னது, இரண்டாவதிடமிருந்து விலகி முன்னால் ஓடியது.
நாங்களும் நடையை தொடர்ந்தோம். சற்று நேரம் கழித்து தான் கவனித்தோம், வெள்ளை பைரவர் எங்களை தொடரவில்லை என்பதை. அதுமட்டுமல்ல தலைய குனிந்த படியே எந்நேரமும் மேய்ந்து கொண்டிருந்த முதலாமவர், எங்கேயும் வாயை வைக்காமல் அது பாட்டுக்கு கூடவே வந்து கொண்டிருந்தது.

ஏனிந்த திடீர் மாற்றம்?

நாங்கள் தவறாக நினைக்க வாய்ப்பு கொடுத்துவிட்டதற்காக முதலாமவரை தன் ஒரேயொரு உறுமலில் இரண்டாமவர் கண்டித்திருக்கவேண்டும். ஆம், அது தான் நிகழ்ந்திருக்க வேண்டும். அதை எங்களால் நன்றாகவே உணர முடிந்தது.

அதற்கேற்றார்போல் முன்னவரும் கருமமே கண்ணாய் எங்களுடன் வந்தது அதிசயமும், ஆச்சரியமுமாய் இருந்தது. கீழே அடிவாரம் வரை வழியில் எந்த இடத்திலும் அது வாய் வைக்கவில்லை. அதன் மீது ஒரு வித பரிதாபம் தோன்றியது.

எவ்வளவு தூரம் நமக்காக நம்முடன் நடந்து வருகிறது.... அதற்கு சாப்பிடக்கொடுப்பதற்கு கூட அந்த நேரத்தில் எங்களிடம் எதுவுமில்லாமல் இருந்தது என்னை ரொம்பவே வருத்தப்பட வைத்தது.

மலை ஏறும் போது வழியெங்கும் இருந்த கடைகளில் ஒன்றைக்கூட இப்போது காணவில்லை. ஆளுக்கு ஒரு அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலுடன் தான் இறங்கினோம். ஸ்நாக்ஸ் போன்ற தின்பண்டங்கள் ஏதும் எங்களிடம் இல்லை.

பைரவரின் மீது ஏற்பட்ட பரிதாபத்தினால் ஏதேனும் அவருக்கு சாப்பிடக்கொடுக்கவேண்டும் என்று தோன்றியது. அடிவாரம் சென்ற பிறகு தான் ஏதாவது வாங்கித்தரமுடியும். ஆனால், அதுவரை உடன் வரவேண்டுமே என்றும் கவலையாக இருந்தது.

சதுரகிரி பயணம்..... - Page 20 PVahmC61R4SV9OkLwiUU+DSCN4339

சதுரகிரி பயணம்..... - Page 20 HU1F8jeSRJyHykvbwr4D+DSCN4370

அதனாலேயே பைரவரிடம் நேரிடையாகவே சொல்லிவிட்டேன். பாதியிலேயே விடை பெற்றுக்கொள்ளாமல் அடிவாரம் வரை எங்களுடம் வரவேண்டுமென்று.....

நான் சொன்னது புரிந்துதான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் குறிப்பிட்ட safe ஆன இடம் வந்ததும்  நம்முடன் வரும் பைரவர் இனி இவர்களுக்கு பயமில்லை என்று விடைபெற்று சென்று விடாமல் அடிவாரம் வரை உடன் வந்ததும் ஆச்சரியம் தான்.




சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 08, 2016 1:30 pm

ஏற்கனவே மேகம் வெகுவாய் திரண்டிருந்தது. அதன் காரணத்தினால், வழியில் சங்கிலிப்பாறை தாண்டியதும் மழை சடசடவென பிடித்துக்கொண்டது.

இடையில் எங்கே மழை பெய்துவிடுமோ என்று பயந்த மனம். இப்போது நிஜமாகவே மழை பெய்யும்போது, எதுவானாலும் தயார் என்ற மனநிலைக்கு வந்துவிட்டது.

மழை சற்றே வலுத்த போது ஒரு கனத்த மரத்தடியில் நின்றோம். ஆனாலும், மழை நேரத்தில் மரத்தினடியில் நிற்பது உசிதமில்லை என்பதனால்   வேகவேகமாய் மரங்களினூடே இருந்த ஒற்றையடி பாதையில் வேக நடை போட்டோம். கிட்ட தட்ட நாங்கள் அனைவருமே நனைந்து விட்டோம். பைரவரும் எங்களுடன் முழுக்கவே நனைந்து தான் விட்டார்.

நனைந்த பாறைகளின் மீது நடப்பது என்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான். நல்லவேளை அப்படிப்பட்ட பாதைகளை எல்லாம் கடந்து விட்டோம். இனி இருப்பது வழுக்கு பாறை மட்டும் தான். அதையும் கடந்து விட்டால் பிரச்னை ஏதுமில்லை.

வழுக்கு பாறையும் வந்தது. மழை சற்று நின்று, தூறலாக கீழே இறங்கிக்கொண்டிருந்தது. பாறை முழுவதும் நனைந்திருந்ததால் நன்றாகவே வழுக்கியது. செருப்பை கழட்டி விட்டு வெறும் காலோடு நடந்தாலும் கூட வழுக்கத்தான் செய்தது.

எப்படியோ என்னவர் துணையுடன் பாறையை ஏறி இறங்கி விட்டேன். குதிரயூத்து அருகே வந்ததும் மழை சுத்தமாக நின்று விட்டிருந்தது. விரைவாக நடந்து அடிவாரத்திற்கு வந்து விட்டோம். இறங்கும் போது சரியாக நான்குமணி நேரம் ஆகியிருந்தது. மதியம் மணி 12.35 ஆகியிருந்தது.ஆக, ஏறுவதற்கு ஆறுமணி நேரமும் – இறங்குவதற்கு நான்கு மணி நேரமும் ஆகியிருக்கிறது.

ஏறும் போது இன்னொரு விஷயமும் இருக்கிறது. முதன் முறையாக ஏறுபவர்கள் மலையிலிருந்து தரிசனம் முடித்து திரும்பிக்கொண்டிருப்பவர்களிடம் “இன்னும் எவ்வளவு தூரம் போகணும்...?”  என்று யாரிடம் கேட்டாலும் வரும் ஒரே பதில் –

‘கொஞ்ச தூரம் தான்..... இன்னும் அரைமணி நேரத்துல வந்துடும்....’ என்று சொல்வார்கள். சங்கிலிப்பாறை அருகே கேட்டால் கூட இதைத்தான் சொல்லுவார்கள். இவர்கள் மட்டுமில்லை வழியிலிருக்கும் கடைகாரர்கள் கூட அப்படித்தான் சொல்வார்கள். நம் மனதை தளரவிடாத வார்த்தைகள்.... நமக்குள் டானிக் மாதிரி செயல் படும் அதிசயத்தை சதுரகிரி செல்லும் போது அதை நேரிலேயே நாம் உணரலாம்.

அடிவாரம் வந்ததும் ஊன்று கோலாய் வந்த தடியை அடுத்து வரும் பக்தர்களுக்கு உபயோகமாக எடுத்த இடத்திலேயே போட்டுவிட்டு சதுரகிரி நுழைவாயிலுக்கு வந்தோம்.

என்னவர் பைரவருக்கு ஏதேனும் வாங்கிக்கொடுக்க கடைகள் பக்கமாக சென்றார். பைரவரும் உடன் சென்றுவிட்டது. நாங்கள் மடத்தில் கார் நிறுத்துமிடத்திற்கு வந்தோம். ஏற்கனவே எங்கள் லக்கேஜுகள் வந்து விட்டிருந்தது.

அந்த பிறகு இவர் வந்ததும் அங்கிருந்து கிளம்பினோம். மூன்று மணியளவில் வழியில் சாப்பிட்டுவிட்டு நாங்கள் வீடு வந்து சேர்ந்த போது இரவு மணி பதினொன்று.




சதுரகிரி பயணம்..... - Page 20 N2fvRqG5Ri2vJRwB4frV+001




சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 20 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 20 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 20 of 24 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக