புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
91 Posts - 61%
heezulia
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
1 Post - 1%
viyasan
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
1 Post - 1%
eraeravi
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
283 Posts - 45%
heezulia
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
19 Posts - 3%
prajai
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுற்றலாம் வாங்க! Poll_c10சுற்றலாம் வாங்க! Poll_m10சுற்றலாம் வாங்க! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றலாம் வாங்க!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 10:59 am

சுற்றலாம் வாங்க! KzFpT7J6Rq08x839HcO3+E_1460098047

கோடை விடுமுறை வந்து விட்டாலே, 'சுற்றுலா கிளம்பலயா?' என்ற விசாரிப்புகள் தான், முன்னே வந்து நிற்கும். உண்மையிலேயே, சுற்றுலாவில் மனம் நிறைய வேண்டும்; அதேசமயம், பர்சுக்கும் பங்கம் வராதிருக்க வேண்டுமா? இதோ... நால்வர் கொண்ட சிறு குடும்பத்துக்கு, இரு நாள் சுற்றுலாவாக குறைந்தது, 5,000 ரூபாய் முதல் அதிகபட்சம், 10,000 ரூபாய்க்குள் அடங்கும் சுற்றுலாத் தலங்கள் சில ஆங்காங்கே இந்த இதழில் வெளியாகியுள்ளன.

ஏலகிரி!

வேலூரிலிருந்து, திருப்பத்தூர் சாலையில் பொன்னேரி வந்து, அங்கிருந்து, 15 கி.மீ., மலைப் பாதையில் பயணித்தால், ஏலகிரியை அடையலாம். ரயில் மார்க்கம் எனில், ஜோலார்பேட்டை வந்து, அங்கிருந்து பஸ்சில் ஏலகிரி வரலாம். இங்கு, நீரூற்று மற்றும் சிறுவர் பூங்காவுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்கானூர் ஏரி, அரசு மூலிகைப் பண்ணை பழப்பண்ணை, முருகன் கோவில், தொலைநோக்கி இல்லம் மற்றும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியை கண்டு களிக்கலாம்.
மேலும், ஏலகிரியிலிருந்து, 25 கி.மீ., தூரத்தில், காவனூரில், இந்தியாவின் மிகப் பெரிய தொலைநோக்கி உள்ளது. இதை, குழந்தைகளுடன் கண்டு மகிழலாம். சாகசப் பிரியர்களுக்கான பாரா கிளைடிங், பைக்கிங், டிரெக்கிங் போன்ற விளையாட்டுகள், உள்ளூர் விளையாட்டு கழகத்தினரால் நடத்தப்படுகிறது. இங்கு, அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளன.

டாப்ஸ்லிப், வால்பாறை!

சுற்றுலாவை, காட்டு விலங்குகள், பறவைகள் என மறக்க முடியாத நினைவுகளால் நிறைக்க வேண்டுமா? பொள்ளாச்சிக்கு வாருங்கள்.

பொள்ளாச்சியில் தங்கினால், 37 கி.மீ., தூரத்தில் ஆனைமலை சரணாலயமும், 30 கி.மீ., தூரத்தில் டாப்ஸ்லிப் மற்றும் 64 கி.மீ., தூரத்தில் வால்பாறையும் உள்ளது.

ஆனைமலை சரணாலயத்தில் புலி, சிறுத்தை, யானை, முள்ளம்பன்றி மற்றும் பெயர் தெரியா பறவையினங்களை அருகிலேயே பார்த்து, ரசிக்கலாம். காட்டெருமைகள், விதவிதமான மான்கள் மற்றும் யானைகள் டாப்ஸ்லிப்பின் ஸ்பெஷல்!

மரகதப் பச்சை போல விரிந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள், வால்பாறையின் சிறப்பு, அருகில் உள்ள ஆழியாறு அணை, மங்கி பால்ஸ், நல்லமுடி பூஞ்சோலை மற்றும் நம்பர் பாறை போன்ற இடங்களையும் கண்டு களிக்கலாம்.

ஆரஞ்சு கவுன்ட்டி!


காவிரி ஊற்றெடுக்கும் கர்நாடக மாநிலம் குடகு மலையின் மடியில் அமைந்திருக்கிறது, 'ஆரஞ்சு கவுன்ட்டி!' நம்மூரில், 'கார்ப்பரேஷன் வார்டு' என்று சொல்வதைப் போல, அமெரிக்காவில், 'கவுன்ட்டி' என்று சொல்வர். சும்மா ஸ்டைலுக்காக தன் பெயருடன், 'கவுன்ட்டி'யை சேர்த்துள்ள ஆரஞ்சு கவுன்ட்டி அமைந்திருப்பது, காபி தோட்டத்தில்!

இங்கு பணிபுரியும் பெண்கள், குடகு மலைப் பெண்கள் அணிவதைப் போன்று, பாரம்பரிய உடைகளையே அணிகின்றனர். இங்கிருக்கும் ஒவ்வொரு காட்டேஜுமே, தனித் தனி பங்களா போன்று, அகன்ற தாழ்வாரம், விசாலமான பெட்ரூம், அதில் தேக்குமர கட்டில், ஈஸி சேர், வாசல், திண்ணை, வீட்டுக்குப் பின் தோட்டம், நீச்சல் குளம், அதற்கு பின் மரங்கள் மற்றும் ஏரி சூழ்ந்து காணப்படுகிறது. 'வாழ்ந்தால் இப்படி ஒரு வீட்டில் வாழ வேண்டும்...' என்ற எண்ணம் இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஏற்படும்.

இவ்வீடுகளில், கீசர் துவங்கி, 'டிவி' வரை அத்தனை நவீன வசதிகளும் உண்டு. அத்துடன், நாக்கின் சுவை அறிந்து, விதம் விதமான சுவைகளில் பரிமாறும் ஓட்டல்களுக்கும் பஞ்சமில்லை; பாதுகாப்புக்கும் குறைவில்லை. காடும், காபி தோட்டமுமாக இருப்பதால், சீசனுக்கு தகுந்த மாதிரி பறவை இனங்கள் வந்து போகின்றன. இந்த ஆரஞ்சு கவுன்ட்டிக்கு அருகில், திபெத் மக்கள் வசிக்கும் குடியிருப்பும் உள்ளது.

ஏற்காடு!


சேலத்தில் இருந்து, 36 கி.மீ., தூரத்தில் இருக்கிறது ஏற்காடு. ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, மலையை அடையலாம். நடுவில் நீரூற்றுடன் அமைந்துள்ள ஏரி தான், ஏற்காட்டின் மையக் கவர்ச்சி. கண்கவர் பூங்காவில், ஜப்பான் தோட்டக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து மரங்களை வளர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மே மாதம் இங்கே நடக்கும் மலர் கண்காட்சி தான் ஹைலைட்! தவிர, தொலை நோக்கியுடன் கூடிய, 'லேடீஸ் ஸீட்' மற்றும் தொலை நோக்கி இல்லாமலேயே ரசிக்க வைக்கும், 'பகோடா பாயின்ட்' கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, திகிலூட்டும் கரடி குகை, பக்தி மணம் கமழும் சேர்வராயன் மற்றும் ராஜேஸ்வரி அம்மன் கோவில்கள் என்று குடும்பத்தினர் அனைவரும் கண்டு களிக்கலாம்.

கொல்லிமலை!


சில ஆண்டுகளுக்கு முன் வரை மர்மம், அமானுஷ்யம், சித்தர்கள் என்றே வெளியுலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட கொல்லி மலை, இன்று வெகு ஜனங்களை ஈர்க்கும் அளவுக்கு மாறியிருக்கிறது. இதற்கு காரணம், அதன் தூய்மை மற்றும் கையைக் கடிக்காத செலவுகள் தான். 'எகோ டூரிசம்' எனப்படும் சுற்றுச்சூழலுக்கான, சிறப்பு சுற்றுலாத்தலமாக, கொல்லிமலையை அங்கீகரித்துள்ளது மாநில அரசு.

நாமக்கல்லில் இருந்து, கொல்லிமலைக்கு தனிப்பேருந்து மற்றும் வாடகை வாகனங்கள் கிடைக்கின்றன. 26 கி.மீ., தூர மலைப்பாதையில் பயணித்தால், கொல்லிமலை உங்களை வரவேற்கும்.

இங்கு, 600 அடி உயரத்தில் இருந்து கொட்டும், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி மற்றும் கொல்லி பால்ஸ் உள்ளன. வாசலூர்பட்டி படகுத் துறையில், 'போட்டிங்' போகலாம். சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில், அருமையான, 'வியூ' பாயின்ட்டுகள் உள்ளன. அரப்பளீஸ்வரர் மற்றும் சமணர் கோவில்கள் என, ஆன்மிகமும் விரிந்திருக்கிறது.

கையைக் கடிக்காத வகையில், ஓட்டல்களும் உண்டு.

நன்றி வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 11:47 am

சுற்றலாம் வாங்க! 103459460
-
சுற்றலாம் வாங்க! SnwSlvClRhmgEyXZ9dQb+5TheAliyarReservoir
-
ஆழியாறு நீர்த்தேக்கம்
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 11:54 am

ayyasamy ram wrote:சுற்றலாம் வாங்க! 103459460
-
சுற்றலாம் வாங்க! SnwSlvClRhmgEyXZ9dQb+5TheAliyarReservoir
-
ஆழியாறு நீர்த்தேக்கம்
-
மேற்கோள் செய்த பதிவு: 1201845

ரொம்ப அழகாய் இருக்கு ராம் அண்ணா புன்னகை ............... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 11:56 am

கையைக் கடிக்காத வகையில், ஓட்டல்களும் உண்டு.

வயித்தை கடிக்குமோ ?????



ஈகரை தமிழ் களஞ்சியம் சுற்றலாம் வாங்க! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 11:59 am

balakarthik wrote:
கையைக் கடிக்காத வகையில், ஓட்டல்களும் உண்டு.

வயித்தை கடிக்குமோ ?????
மேற்கோள் செய்த பதிவு: 1201851

ஹா..ஹா..ஹா அவங்க அப்படி போட்டிருக்கங்களே தவிர, அந்த கூர்க், அது தான் ஆரஞ்சு கவுன்ட்டி! இல் பார்த்தால் ஒரு நாளைக்கான வாடகை குறைந்தது 50,000/= என்று போட்டிருக்காங்க...............அவங்க சொன்ன வசதிகளுடன் கூடிய பங்களாவுக்கான தொகை அது சோகம் ....வேறு பல லாட்ஜுகள் இருக்கலாம் ஆனால் இங்கே இப்படி போட்டதால் நான் கூகள் செய்து பார்த்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 12:04 pm

சீசன் நேரத்தில் சம்பாதிசாதானே தீர விசாரித்து செல்வதே நலம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இல்லங்கள் இல்லையோ



ஈகரை தமிழ் களஞ்சியம் சுற்றலாம் வாங்க! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 12:10 pm

balakarthik wrote:சீசன் நேரத்தில் சம்பாதிசாதானே தீர விசாரித்து செல்வதே நலம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இல்லங்கள் இல்லையோ
மேற்கோள் செய்த பதிவு: 1201858

இது கர்நாடகா வில் இருக்கு பாலா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 12:12 pm

krishnaamma wrote:இது கர்நாடகா வில் இருக்கு பாலா புன்னகை


கூர்க் இல்லை மற்ற இடங்களிலும் இதே சங்கடம்தான் அங்க இருக்குதா என்று கேட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் சுற்றலாம் வாங்க! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 12:20 pm

balakarthik wrote:
krishnaamma wrote:இது கர்நாடகா வில் இருக்கு பாலா புன்னகை


கூர்க் இல்லை மற்ற இடங்களிலும் இதே சங்கடம்தான் அங்க இருக்குதா என்று கேட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1201861

ஆமாம் எல்லா இடங்களிலும் அப்படித்தான் இருக்கு, நாம் தான் நல்லா விசாரித்துவிட்டு , புக் செய்து விட்டு போகணும் இல்லை என்றால், திடீரென்று விலை ஏற்றி சொன்னால் நமக்கு ரொம்ப கஷ்டமாய் போகும் சோகம்...........இப்போ பெங்களூரில் ( மற்ற இடங்களில் தெரியலை ) ஒரு புது அபாயம் வந்திருக்கு பாலா.........சோகம்

அதாவது, நாம் கால் டாக்ஸி புக் செய்கிறோம் இல்லையா, இங்கு டிராபிக் ரொம்ப அதிகம் என்பதால், சில சமையங்களில் வண்டிக்கு போன் செய்து புக் செய்து விட்டு காத்திருக்கும்போது, அவர்களே எங்களால் குறித்த நேரத்துக்கு வரமுடியாது என்று கான்ஸல் செய்து விடுகிறார்கள்............. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

flight அல்லது வண்டி பிடிக்கணும் என்று கிளம்புபவர்களுக்கு இது பெரும் தொல்லையாக இருக்கு.......வண்டி வரும் வரை நிச்சையம் இல்லை என்றால் ...........என்ன செய்வது?.......மற்றும் ஒன்று இதைவிட கொடுமை.............

வாரக் கடைசிகளில் அல்லது பண்டிகை தினங்களில் வண்டியை காண தொகையை X 2. X 3, X 4 என்று ஏற்றி வாங்குகிறார்கள்.............. பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 12:57 am

சுற்றலாம் வாங்க! RWrvADBWQHyXJqhYupIP+E_1460710160

பிச்சாவரம்!: சிதம்பரத்தில் இருந்து, 16 கி.மீ., தூரத்தில் உள்ளது, பிச்சாவரம். உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக் காடுகளை கொண்டது. இங்கு, சுனாமியையே எதிர்த்து நிற்கும் சுரபுன்னைக் காடுகளின் ஊடாக மேற்கொள்ளும் படகு சவாரி தனிச்சிறப்பு. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பராமரிப்பு விடுதியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

லே!: ஜம்மு - காஷ்மீரில் உள்ள, 'லடாக்' மாவட்டத்தின் தலைநகரம் லே! 11,600 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்நகரில், லே அரண்மனை, உயரமான சாந்தி ஸ்தூபி, யுத்த அருங்காட்சியகம் போன்றவை சுற்றுலா பயணிகளை கவர்கிறது. இங்கு ட்ரெக்கிங் பாதைகளும் நிறைய உண்டு. மேலும், சீக்கியர்களுக்கான குருத்வாரா, இந்துக்களுக்கான சம்பா ஆலயம் மற்றும் முஸ்லிம்களுக்கு ஜும்மா மசூதி என்று அனைத்து மதத்தினரின் வழிபாட்டு தலங்களும் உள்ளன.

தவாங்!: அருணாசலப் பிரதேசத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது, தவாங். இங்கு, உலகின் மிகப் பெரிய புத்த மடாலயம் உள்ளது. ஆறாம் தலாய்லாமா பிறந்த இடம் என்பதால், இது, புத்த மதத்தினருக்கு புனிதத் தலமும் கூட! தேஜ்பூரிலிருந்து, 16 மணி நேரம் சாலை வழி பயணமாக இங்கு செல்லலாம். மாநில அரசு, கவுகாத்தியிலிருந்து ஹெலிகாப்டர் வசதி செய்து தருகிறது.

தேக்கடி!: முல்லை - பெரியாறு அணையின் நீர்பரப்பு தான் தேக்கடி! இங்கு, படகுப் பயணம் மற்றும் யானை சவாரி போன்றவை சிறப்பு. தமிழகம் மற்றும் கேரளா மக்கள் வணங்கும் மங்கலதேவி (கண்ணகி) கோவில், தேக்கடியில் இருந்து, 15 கி.மீ., தூரத்தில் உள்ளது.

தொடரும்...............





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக