புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
435 Posts - 47%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
30 Posts - 3%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .


   
   

Page 5 of 46 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 25 ... 46  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 5 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 5 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 5 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 5 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 5 ><img src=]" />



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2016 5:42 pm

நல்ல பட தொகுப்பு .நன்றி .
குட்டி யானை க்யூட் யானை .
ஸ்ரீலங்கா சுற்றுலா பயணம் கொள்ள சிறந்த மாதம் எது என்று கூற இயலுமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 23, 2016 6:10 pm

பயணக்கட்டுரை சூப்பர் ஐயா .

யானைகள் பக்கத்தில் நிற்கிறீர்களே ஒன்னும் செய்யாதா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 23, 2016 6:56 pm

T.N.Balasubramanian wrote:நல்ல பட தொகுப்பு .நன்றி .
குட்டி யானை க்யூட் யானை .
ஸ்ரீலங்கா சுற்றுலா பயணம் கொள்ள சிறந்த மாதம் எது என்று கூற இயலுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1198956

நாங்கள் சென்ற சமயத்தில் பருவநிலை நன்றாக இருந்தது . அதிக வெயிலும் இல்லை ;அதிக மழையும் இல்லை . பிற்பகலில் சில நாட்கள் மழை பெய்தது; அதுவும் சிறிதுநேரத்தில் நின்றுவிட்டது .எனவே டிசம்பர்அல்லது ஜனவரி மாதத்தில் செல்வது நல்லது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 23, 2016 7:01 pm

ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை சூப்பர் ஐயா .

யானைகள் பக்கத்தில் நிற்கிறீர்களே ஒன்னும் செய்யாதா?
மேற்கோள் செய்த பதிவு: 1198959

நன்கு பழக்கப்பட்ட யானைகள் ; பாகன்கள் கூடவே இருப்பதால் பயமில்லை. சில பார்வையாளர்கள் , பாகன்களின் அனுமதியுடன் யானைகளுக்குப் பால் , பழம் போன்றவற்றைக் கொடுக்கிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 23, 2016 8:05 pm

பயணத்தின் 10 நாட்களும் நாங்கள் பயன்படுத்திய வேன்
====================================================

எனது இலங்கைப் பயணம் . - Page 5 SdZiEscLQ2GAq5qD4cOK+Van



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 10:34 pm

மிக அருமையான  படைகள் மற்றும் விளக்கம் ஐயா புன்னகை...............அந்த ஆற்றில் தான் எவ்வளவு தண்ணீர் ஜாலி ; ) ஜாலி
.
.
.
இலங்கை போய் இத்தனை யானைகளை பார்க்க முடியாதவர்கள், குருவாயூர் அருகே இதே போல இருக்கும் யானைகள் காப்பகத்தில் பார்க்கலாம்............அங்கு ஆறு இல்லை, ஆனால் மிகப் பெரிய குளங்களில் அந்த யானைகளைக் குளிப்பட்டுகிறார்கள் ...........அந்த இடம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு மிக அருகில் இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 23, 2016 10:41 pm

நான் இன்னும் குருவாயூர் போனதில்லை ! அந்தக் கோவிலில் நிறைய யானைகளை வைத்து பராமரிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கேன் . ஒரு தடவை போய் வரவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 10:51 pm

M.Jagadeesan wrote:நான் இன்னும் குருவாயூர் போனதில்லை ! அந்தக் கோவிலில் நிறைய யானைகளை வைத்து பராமரிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கேன் . ஒரு தடவை போய் வரவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1198980

கோவிலில் இல்லை யா, கொஞ்சம் தள்ளி அதாவது ஒரு 2 - 3 கிலோமீட்டருக்குள் இருக்கும் இடம் அது ........ரொம்ப நல்லா இருக்கும், ஆனால் எல்லாமே வயதான யானைகள் தான்.......அழகாய் வைத்து பராமரிக்கிறார்கள்..ஒருமுறை போய் வாருங்கள்.............போட்டோக்கள் தேடி போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 24, 2016 5:10 pm

M.Jagadeesan wrote:
ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை சூப்பர் ஐயா .

யானைகள் பக்கத்தில் நிற்கிறீர்களே ஒன்னும் செய்யாதா?
மேற்கோள் செய்த பதிவு: 1198959

நன்கு பழக்கப்பட்ட யானைகள் ; பாகன்கள் கூடவே இருப்பதால் பயமில்லை. சில பார்வையாளர்கள் , பாகன்களின் அனுமதியுடன் யானைகளுக்குப் பால் , பழம் போன்றவற்றைக் கொடுக்கிறார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1198966

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 25, 2016 8:55 am

பின்னவெல யானைகள் காப்பகத்தைப் பார்த்து முடித்த பின்னர் , கண்டிக்குப் புறப்பட்டோம். பிற்பகல் 3 மணிக்குமேல் ஆகிவிட்டபடியால் , பசி வயிற்றைக் கிள்ளியது . வேனை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இட்டலிகளை சாப்பிட ஆரம்பித்தோம் . காய்ச்சிய நீரைத் தேவையான அளவுக்கு கேன்களில் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார்கள் .

சாப்பிட்டு முடித்தபின்பு சிறிதுநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டோம் .

சாப்பிட்டு முடித்தபின்பு , எச்சில் பேப்பர் தட்டுகளைக் கண்ட இடத்தில் போடாமல் ,கவனமாக ஒரு பையில் போட்டுக்கொண்டோம்

நாங்கள் சாப்பிடுவதற்காக இறங்கிய இடத்தில் நிறைய தொட்டாற் சிணுங்கி செடிகள் இருந்தன.அதைப் பேரனுக்குக் காட்டினேன் . அதைத் தொட்டுப்பார்த்து , அது சுருங்குவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான் . அதன் பெயர் என்ன என்று கேட்டேன்.

" Touch me Not " என்று சொன்னான் ; அப்பா சொல்லிக் கொடுத்தாங்க ! " என்று சொன்னான் .
மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.

7 மணி அளவில் கண்டியை அடைந்தோம் .

இலங்கையில் மொத்தம் 9 மாகாணங்களும் , 25 மாவட்டங்களும் உள்ளன. கண்டி (Kandy) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று  . இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும்  கண்டி, நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ளது .

இலங்கையின் ஜனத்தொகையில் 70 % மக்கள் புத்தமதத்தைப் பின்பற்றுகிறார்கள். நம் தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெருவு பிள்ளையார் கோவில் இருப்பதைப்போல , இலங்கையில் ஆங்காங்கே சிறியதும் ,பெரியதுமாக புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. ஆட்டோ ஓட்டுனர்கள் ,டாக்சி ஓட்டுனர்கள் தங்கள் இருக்கைக்கு முன்பாக சிறிய அளவிலான புத்தர் சிலைகளை வைத்திருக்கின்றனர் .

புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது   இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும். தலதா மாளிகை என்பது இலங்கையின் கண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற பௌத்த ஆலயம் ஆகும். பௌத்த சமயத்தவர்களால் உயர்வாக மதிக்கப்படுகின்ற புத்தரின் புனிதப் பல் இங்கே வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இது புனித தந்த தாது ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது . ஆங்கிலத்தில் Temple of Tooth என்று அழைக்கிறார்கள் .
காலை, மதியம், மாலை என நாளொன்றுக்கு மூன்று தடவைகள் கிரியைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு புதன்கிழமையும் புனிதப்பல் "நனுமுரா மாங்கல்யா" என்றழைக்கப்படும் நறுமணப்பூக்கள், மூலிகைகள் சேர்க்கப்பட்ட நீரால் நீராட்டப்படுகிறது. குணமாக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படும் இந்தப் புனிதநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

அசோகப் பேரரசனால் அனுப்பி வைக்கப்பட்டதும், புத்தர் ஞானம் பெற்றதுமான வெள்ளரசு மரக் கிளையை நட்டு வளர்க்கப்பட்ட அரச மரம் இன்றும் அநுராதபுரத்தில் உள்ள புத்த கோயில் ஒன்றில் உள்ளது.

புத்தர் பல்லைக் காண்பதற்காகத்  "தலதாமாளிகை " சென்றோம் . இரவு 8-30 மணிக்குத்தான் புத்தர் பல்லைக் காணமுடியும் என்று சொன்னார்கள். எனவே அருகிலிருந்த புத்தர் அருங்காட்சியகத்தைக் காணச் சென்றோம் .
புத்தர் அருங்காட்சியத்தைப் பார்த்துவிட்டு " தலதா மாளிகைக்கு " வந்தோம் . புத்தருடைய பல்லைக் காண்பதற்காகக் கூட்டம் நிரம்பி வழிந்தது . சரியாக 8-30 மணி அளவில் புத்தருடைய பல் வைக்கப்பட்ட பேழை இருந்த அறை மின் விளக்குகளால் ஜொலித்தது .

புத்தருடைய பல்லை நாம் நேரடியாகப் பார்க்கமுடியாது . அந்தப் பல் வைக்கப்பட்ட பேழையைத்தான் நாம் பார்க்கமுடியும் .அந்த சமயத்தில் மக்கள் அனைவரும் பரவசப்பட்டனர்.நாங்களும் அந்தப் பேழையை வணங்கிவிட்டுப் புறப்பட்டோம் .

புத்தரின் பல் வரலாறு
====================

கி. மு. 500 -ம் நூற்றாண்டில் புத்தர் இறந்தவுடன் அவரது சீடர்கள் புத்தரின் உடலை எரித்துவிட்டார்கள் . புத்தரின் பெண் சீடரான கீமா என்பவர் மட்டும் , புத்தரின் நினைவாக ஒரே ஒரு பல்லை எடுத்துவைத்துக் கொண்டார் . அந்தப் பல்லை அப்போதைய கலிங்கத்து மன்னன் ( இப்போதைய ஒரிஸ்ஸா ) பிரம்மதாத்திக்கு அன்புப் பரிசாக கொடுத்தார் .
' புத்தரின் பல் எந்த நாட்டில் இருக்கிறதோ , அங்கே மழை பெய்யும் . செல்வம் கொழிக்கும் . சுபிட்சம் வரும் ' என்று சென்டிமென்ட்கள் பரவ ஆரம்பிக்கின்றன . வறட்சியில் வறளும் பல அரசர்கள் , புத்தரின் பல்லைக் குறிவைக்கிறார்கள் . அமைதி படிக்கச் சொன்ன புத்தனின் பல்லுக்காகப் பல்லாயிரம் உயிர்கள் மடிகின்றன . புத்தரின் பல் பல அரசுகளின் கைமாறிச் சென்றுகொண்டே இருக்கிறது .
புத்தர் இறந்து 800 ஆண்டுகள் கழித்து , மீண்டும் கலிங்க நாட்டுக்கு வருகிறது புத்தரின் பல் . அப்போது கலிங்கத்தின் அரசனாக இருப்பவர் குஹசீவா . இந்தப் பல்லால் தன் நாட்டில் பல அதிசயங்கள் நிகழ்வதாக நம்புகிறார் குஹசீவா . தகவல் வெளியே பரவி , மீண்டும் பல்லுக்காகப் பல போர்கள் ஆரம்பிக்கின்றன . பல்லைக் காப்பாற்ற குஹசீவா , தன்னுடைய மகள் , மருமகனிடம் பல்லைக் கொடுத்து இலங்கைக்கு அனுப்பிவைக்கிறார் . இலங்கை ராஜா குஹசீவாவின் குடும்பத்தை ராஜமரியாதையோடு வரவேற்று , பல்லை வாங்கிக் கொள்கிறார் . இன்றும் புத்தரின் பல் இலங்கை கண்டியில் உள்ள புத்த மதக் கோயிலில் பத்திரமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது . இதுதான் புத்தரின் பல் வரலாறு .
--- சார்லஸ் . ஆனந்தவிகடன் , 28 . 10 . 2009 .

" பெரஹெரா " திருவிழா .
========================
நம் நாட்டில் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவதுபோல் , ஸ்ரீலங்காவில் " பெரெஹெரா " என்னும் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் .இந்தத் திருவிழா ஜூலை அல்லது ஆகஸ்டு  மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப் படுகின்றன . இது அந்த நாட்டில் கொண்டாடப்படும் மிகப்பழமையான கோலாகலமான திருவிழா ஆகும்  
புத்தருடைய பல் அடங்கிய  பேழையை , நன்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது ஏற்றி , கண்டித் தெருக்களில் ஊர்வலம் வருகிறார்கள். இதுவே இத்திருவிழாவின் முக்கிய நோக்கமாகும்.

60 ஆண்டுகளுக்கு முன்பு அமரர் கல்கி அவர்கள் எழுதிய " பொன்னியின் செல்வன் " என்ற வரலாற்றுப் புதினத்தில் இந்த திருவிழாவைப் பற்றிக் கூறுகிறார் . இன்றும் அவர் விவரித்த பாணியிலேயே இந்த விழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .

சென்ற 2015 ஆம் ஆண்டில் கண்டியில் கொண்டாடப்பட்ட இத்திருவிழாவின் தொகுப்பை YOU TUBE -ல் காட்டுகிறார்கள் . அதை இறுதியில்  இணைத்துள்ளேன் .

பொன்னியின் செல்வனில் வருகின்ற " பெரஹெரா " திருவிழா .
===========================================================

சிறிது நேரத்துக்கெல்லாம் சமுத்திரத்தின் கொந்தளிப்பைப் போன்ற பேரிரைச்சல் ஒன்று கேட்டது. வந்தியத்தேவன் இரைச்சல் வந்த திக்கைத் திரும்பிப் பார்த்தான். தூரத்தில் ஒரு பெரிய சேனா சமுத்திரத்தைப் போன்ற பெருங்கூட்டம், - வீதிகளில் முடிவில்லாது நீண்டு போய்க் கொண்டிருந்த ஜனக் கூட்டம் வருவது தெரிந்தது. அந்த ஜன சமுத்திரத்தின் நடுவே கரிய பெரிய திமிங்கலங்கள் போல் நூற்றுக்கணக்கில் யானைகள் காணப்பட்டன. கடல் நீரில் பிரதிபலிக்கும் விண்மீன்களைப் போல் ஆயிரம் ஆயிரம் தீவர்த்திகள் ஒளி வீசின. ஜனங்களோ லட்சக்கணக்கில் இருந்தார்கள்.
வந்தியத்தேவன், "இது என்ன? பகைவர்களின் படை எடுப்பைப்போல் அல்லவா இருக்கிறது?" என்றான்.

"இல்லை, இல்லை! இதுதான் இந்த இலங்கை நாட்டிலேயே மிகப்பெரிய உற்சவமாகிய பெரஹராத் திருவிழா!" என்றார் இளவரசர்.

ஊர்வலம் நெருங்கி வரவர வந்தியத்தேவனுடைய வியப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த மாதிரி காட்சியை அவன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை.

முதலில் சுமார் முப்பது யானைகள் அணிவகுத்து வந்தன. அவ்வளவும் தங்க முகபடாங்களினால் அலங்கரிக்கப்பட்ட யானைகள். அவற்றில் நடுநாயகமாக வந்த யானை எல்லாவற்றிலும் கம்பீரமாக இருந்ததுடன், அலங்காரத்திலும் சிறந்து விளங்கியது. அதன் முதுகில் நவரத்தினங்கள் இழைத்த தங்கப் பெட்டி ஒன்று இருந்தது. அதன்மேல் ஒரு தங்கக் குடை கவிந்திருந்தது. நடுநாயகமான இந்த யானையைச் சுற்றியிருந்த யானைகளின் மீது புத்த பிக்ஷுக்கள் பலர் அமர்ந்து வெள்ளிப் பிடிபோட்ட வெண் சாமரங்களை வீசிக்கொண்டிருந்தார்கள். யானைகளுக்கு இடையிடையே குத்து விளக்குகளையும், தீவர்த்திகளையும், இன்னும் பலவித வேலைப்பாடமைந்த தீவர்த்திகளையும், தீபங்களையும் ஏந்திக்கொண்டு பலர் வந்தார்கள். கரிய குன்றுகளை யொத்த யானைகளின் தங்க முகபடாங்களும் மற்ற ஆபரணங்களும் பிக்ஷுக்களின் கைகளில் இருந்த அந்த வெண் சாமரங்களும் பல தீபங்களின் ஒளியில் தகதகவென்று பிரகாசித்துக் கண்களைப் பறித்தன.

யானைகளுக்குப் பின்னால் ஒரு பெரும் ஜனக் கூட்டம். அந்தக் கூட்டத்தின் மத்தியில் சுமார் நூறு பேர் விசித்திரமான உடைகளையும், ஆபரணங்களையும் தரித்து நடனமாடிக் கொண்டு வந்தார்கள். அவர்களில் பலர் உடுக்கையைப் போன்ற வாத்தியங்களை தட்டிக்கொண்டு ஆடினார்கள். இன்னும் பலவகை வாத்தியங்களும் முழங்கின. அப்பப்பா! ஆட்டமாவது ஆட்டம்! கடம்பூர் அரண்மனையில் தேவராளனும், தேவராட்டியும் ஆடிய வெறியாட்டமெல்லாம் இதற்கு முன்னால் எங்கே நிற்கும்! சிற்சில சமயம் அந்த ஆட்டக்காரர்கள் விர்ரென்று வானில் எழும்பிச் சக்கராகாரமாக இரண்டு மூன்று தடவை சுழன்று விட்டுத் தரைக்கு வந்தார்கள். அப்படி அவர்கள் சுழன்றபோது அவர்கள் இடையில் குஞ்சம் குஞ்சமாகத் தொங்கிக் கொண்டிருந்த துணி மடிப்புகள் பூச்சக்கரக் குடைகளைப் போலச் சுழன்றன. இவ்விதம் நூறு பேர் சேர்ந்தாற்போல் எழும்பிச் சுழன்றுவிட்டுக் கீழே குதித்த காட்சியைக் காண்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை தான்! இரண்டாயிரம் கண்களாவது குறைந்த பட்சம் வேண்டும். ஆனால் அத்தகைய சமயங்களில் எழுந்த வாத்திய முழக்கங்களைக் கேட்பதற்கோ இரண்டாயிரம் செவிகள் போதமாட்டா! நிச்சயமாக இரண்டு லட்சம் காதுகளேனும் வேண்டும். அப்படியாக உடுக்கைகள், துந்துபிகள், மத்தளங்கள், செப்புத் தாளங்கள், பறைகள், கொம்புகள் எல்லாம் சேர்ந்து முழங்கிக் கேட்போர் காதுகள் செவிடுபடச் செய்தன!

இந்த ஆட்டக்காரர்களும், அவர்களைச் சுற்றி நின்ற கூட்டமும் நகர்ந்ததும், மற்றும் முப்பது யானைகள் முன்போலவே ஜாஜ்வல்யமான ஆபரணங்களுடன் வந்தன. அவற்றில் நடுநாயகமான யானையின் மேலும் ஓர் அழகிய வேலைப்பாடு அமைந்த பெட்டி இருந்தது. அதன் மேல் தங்கக்குடை கவிந்திருந்தது. சுற்றி நின்ற யானை மீதிருந்தவர்கள் வெண் சாமரங்களை வீசினார்கள். இந்த யானைக் கூட்டத்துக்குப் பின்னாலும் ஆட்டக்காரர்கள் வந்தார்கள். இந்த ஆட்டக்காரர்களுக்கு நடுவில் ரதி, மன்மதன், முக்கண்ணையுடைய சிவபெருமான் வேடம் தரித்தவர்கள் நின்றார்கள். சுற்றி நின்றவர்கள் ஆடிக் குதித்தார்கள்.

"இது என்ன? சிவபெருமான் இங்கு எப்படி வந்தார்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"கஜபாகு என்னும் இலங்கை அரசன் சிவபெருமானை அழைத்து வந்தான். அதற்குப் பிறகு இங்கேயே அவர் பிடிவாதமாக இருக்கிறார்!" என்றார் இளவரசர்.

"ஓ வீர வைஷ்ணவரே! பார்த்தீரா? யார் பெரிய தெய்வம் என்று இப்போது தெரிந்ததா?" என்று வந்தியத்தேவன் கேட்டு முடிவதற்குள் மற்றும் சில யானைகள் அதேமாதிரி அலங்காரங்களுடன் வந்துவிட்டன. அந்த யானைகளுக்குப் பின்னால் வந்த ஆட்டக்காரர்களுக்கு மத்தியில் கருடாழ்வாரைப் போல் மூக்கும் இறக்கைகளும் வைத்துக் கட்டிக் கொண்டிருந்த நடனக்காரர்கள் சுழன்றும், பறந்தும், குதித்தும் மூக்கை ஆட்டியும் ஆர்ப்பாட்டமாக ஆடினார்கள்.

"அப்பனே! பார்த்தாயா? இங்கே கருட வாகனத்தில் எங்கள் திருமாலும் எழுந்தருளியிருக்கிறார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

மீண்டும் ஒரு யானைக் கூட்டம் வந்தது. அதற்குப் பின்னால் வந்த ஆட்டக்காரர்களோ கைகளில் வாள்களும், வேல்களும் ஏந்திப் பயங்கரமான யுத்த நடனம் செய்து கொண்டு வந்தார்கள். தாளத்துக்கும், ஆட்டத்துக்கும் இசைய அவர்கள் கையில் பிடித்த வாள்களும், வேல்களும் ஒன்றோடொன்று 'டணார் டணார்' என்று மோதிச் சப்தித்தன.
இவ்வளவுக்கும் கடைசியாக வந்த யானைக் கூட்டத்துக்குப் பின்னால் ஆட்டக்காரர்கள் அவ்வளவு பேரும் இரண்டு கையிலும் இரண்டு சிலம்புகளை வைத்துக் கொண்டு ஆடினார்கள். அவர்கள் ஆடும்போது அத்தனை சிலம்புகளும் சேர்ந்து 'கலீர் கலீர்' என்று சப்தித்தன. ஒரு சமயம் அவர்கள் நடனம் வெகு உக்கிரமாயிருந்தது. இன்னொரு சமயம் அமைதி பொருந்திய லளித நடனக் கலையாக மாறியது. இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டும், பலவித சப்த விசித்திரங்களைக் கேட்டும் பிரமித்து நின்ற வந்தியத்தேவனுக்கு இளவரசர் இந்த ஊர்வலத் திருவிழாவின் வரலாற்றையும் கருத்தையும் கூறினார்.

தமிழகத்து அரசர்களும் இலங்கை அரசர்களும் நட்புரிமை பாராட்டிய காலங்களும் உண்டு. கடல் சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும், சேரன் செங்குட்டுவனும் அவ்விதம் சிநேகமாயிருந்தார்கள். சேரன் செங்குட்டுவன் கண்ணகி என்னும் பத்தினித் தெய்வத்துக்கு விழா நடத்தியபோது கஜபாகு அங்கே சென்றிருந்தான். அந்நாட்டில் நடந்த மற்றத் திருவிழாக்களையும் கண்டு களித்தான். பின்னர் ஒருசமயம் சேரன் செங்குட்டுவன் இலங்கைக்கு வந்திருந்தபோது கஜபாகு மன்னன் விழா நடத்தினான். தமிழகத்தின் தெய்வமாகிய சிவபெருமான், திருமால், கார்த்திகேயர், பத்தினித் தெய்வம் ஆகிய நாலு தெய்வங்களுக்கும் ஒரே சமயத்தில் திருவிழா நடத்தினான். இந்த விழாக்களில் மக்கள் அடைந்த குதூகலத்தைக் கண்டு, பின்னர் ஆண்டுதோறும் அந்த விழாக்களை நடத்தத் தீர்மானித்தான். புத்தர் பெருமானுக்கு அவ்விழாவில் முதல் இடம் கொடுத்து மற்ற நாலு தெய்வங்களையும் பின்னால் வரச்செய்து விழா நடத்தினான். அன்று முதல் அந்த விழா இலங்கையில் நிலைத்து நின்று மிகப்பெரிய திருவிழாவாக ஆண்டு தோறும் விடாமல் நடந்து வருகிறது.

"ஆனால் தெய்வங்களை எங்கும் காணவில்லையே?" என்றான் வல்லவரையன்.

"ஒவ்வொரு யானைக் கூட்டத்திலும் நடுநாயகமாக வந்த யானை மீது வைத்திருந்த பெட்டியைப் பார்த்தீரா?"
"பார்த்தேன்! அந்தப் பெட்டிக்குள் தெய்வங்களைப் பூட்டி வைத்திருக்கிறார்களா, தப்பித்துக்கொண்டு தமிழகத்துக்குப் போய்விடக் கூடாது என்று?"

இதைக் கேட்ட பொன்னியின் செல்வர் நகைத்து விட்டு, "அப்படியில்லை; முதலில் வந்த யானை மீதிருந்த பெட்டிக்குள்ளே புத்த பெருமானுடைய பல் ஒன்றைப் பத்திரமாய்ப் பூட்டி வைத்திருக்கிறார்கள். புத்த சமயத்தார் இந்நாட்டில் போற்றிக் காப்பாற்றும் செல்வங்களுக்குள்ளே விலை மதிப்பற்ற செல்வம் அது. ஆகையால் அந்த மனிதப் பொருளை அழகிய பெட்டியில் வைத்து யானை மீது ஏற்றி ஊர்வலமாய் எடுத்துச் சென்றார்கள்!" என்றார்.
"பின்னால் வரும் பெட்டிகளுக்குள்ளே என்ன இருக்கிறது?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"சிவன், விஷ்ணு, முருகன், கண்ணகி ஆகியவர்களின் பற்கள் கிடைக்கவில்லை! ஆகையால் அவற்றுக்குப் பதிலாக அந்தந்தத் தேவாலயத்தின் தெய்வங்கள் அணியும் திரு ஆபரணங்களை அந்தப் பெட்டிகளில் பத்திரமாய் வைத்துக் கொண்டு போகிறார்கள்" என்று இளவரசர் கூறினார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 5 of 46 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 25 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக