புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
32 Posts - 42%
heezulia
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
2 Posts - 3%
prajai
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
2 Posts - 3%
Saravananj
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
398 Posts - 49%
heezulia
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
26 Posts - 3%
prajai
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_m10கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Mar 14, 2016 11:04 am

சிறுவயதிலேயே நாடக மேடையில் ஏறிய கே.வி.மகாதேவன், பிறகு துணை இசை அமைப்பாளராகப் பணிபுரிந்து, இசை அமைப்பாளராக உயர்ந்தார்.

கே.வி.மகாதேவனின் சொந்த ஊர் நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன்கோவில் ஆகும். தந்தை - வெங்கடாசலம். தாயார்- லட்சுமி அம்மாள்.

மகாதேவனின் தந்தை வெங்கடாசலம், இசைஞானம் உடையவர். அதனால் சிறு வயதிலேயே மகாதேவன் தந்தையிடம் பாடக்கற்றுக் கொண்டார். பின்னர் திருச்சியில், விஸ்வநாத பாகவதரிடம் பயிற்சி பெற்று, மேடை கச்சேரிகளில் பாடினார். அந்த காலத்தில் பார்க்க அழகாக இருந்து, பாடவும் தெரிந்த சிறுவர்களை பாய்ஸ் நாடகக் கம்பெனிகளில் சேர்த்துக் கொள்வார்கள்.

அதன்படி டி.வி.சாரி என்பவர் மகாதேவனை சென்னைக்கு அழைத்து வந்து, பாலகந்தர்வகானசபா'வில் சேர்த்து விட்டார். அப்போது மகாதேவனுக்கு 13 வயது. 'சந்திராவளி' என்ற நாடகத்தில் பெண் வேடம் போட்டு நடித்தார். பின்னர், மற்ற கம்பெனி நாடகங்களிலும் நடித்தார். பெங்களூரில் நாடகம் நடிக்கச் சென்றபோது, உடன் வந்த நடிகர்கள் மகாதேவனை விட்டு விட்டு சென்று விட்டனர். அங்கிருந்து டிக்கெட் வாங்காமல் சென்னைக்கு வந்தார், மகாதேவன்.

இந்த நிலையில் நாடக ஆசிரியரான சந்தானகிருஷ்ணநாயுடு சிபாரிசின் பேரில், சென்னை கிண்டியில் இருந்த வேல்பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் மகாதேவனுக்கு வேலை கிடைத்தது. அப்பொழுது 'திருமங்கை ஆழ்வார்' என்ற படத்தை அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்தனர். அதில் கதாநாயகனாக நடித்த கொத்தமங்கலம் சீனு சொந்தக்குரலில் பாடினார்.

இந்தப் படத்தின் இசை அமைப்பாளரான டி.ஏ.கல்யாணம், அக்காலத்தில் பிரபல இசையமைப்பாளராக இருந்தார். கே.வி.மகாதேவனுக்கு நல்ல இசை ஞானம் இருப்பதை அறிந்து கொண்ட அவர், மகாதேவனை தனது உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.

'ஆனந்தன் அல்லது அக்கினி புராண மகிமை' என்ற படத்திற்கு, டி.ஏ.கல்யாணத்துடன் சேர்ந்து கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். 1940-ம் ஆண்டு, டி.ஏ.கல்யாணமும், மகாதேவனும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நிரந்தர இசை அமைப்பாளராகச் சேர்ந்தனர்.

அங்கு தயாரான சிவலிங்கசாட்சி, மனோன்மணி, திவான் பகதூர், ராஜராஜேஸ்வரி, அருந்ததி, பர்மாராணி, சுபத்ரா, சித்ரா முதலான படங்களுக்கு டி.ஏ.கல்யாணத்திற்கு உதவியாளராக இசை அமைத்து பாராட்டு பெற்றார், மகாதேவன்.

1950-ம் ஆண்டு, தனியாக இசை அமைக்கும் வாய்ப்பு மகாதேவனுக்குக் கிடைத்தது. எம்.ஜி.ஆர். நடித்த 'குமாரி' என்ற படத்துக்கு அவர் இசை அமைத்தார். 1954-ல் எம்.ஏ.வி.பிக்சர்ஸ் முதன் முதலாகத் தயாரித்த 'மாங்கல்யம்' படத்துக்கு இசை அமைத்தார். அந்தப் படம் வெற்றிப்படமாகியது.

'மாங்கல்யம்' படத்தின் கதாநாயகனாக நடித்தவர் ஏ.பி.நாகராஜன். அவருக்கும் கே.வி.மகாதேவனுக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது. தொடர்ந்து எம்.ஏ.வி.பிக்சர்ஸ் படங்களுக்கும், ஏ.பி.நாகராஜன் தொடர்புடைய படங்களுக்கும் இசை அமைத்தார்.

'டவுன்பஸ்', 'முதலாளி', 'சம்பூர்ணராமாயணம்', 'மக்களைப் பெற்ற மகராசி' முதலிய படங்களில், பல சிறந்த 'ஹிட்' பாடல்களைக் கொடுத்தார். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் நடித்த பல வெற்றிப் படங்களுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். அவற்றில் சில முக்கிய படங்கள் வருமாறு:-

எம்.ஜி.ஆர்:- குடும்பத்தலைவன், தாயைக்காத்த தனயன், நல்லநேரம், அடிமைப்பெண், காஞ்சித்தலைவன், வேட்டைக்காரன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப்பின்பாசம், பரிசு, பல்லாண்டு வாழ்க.

சிவாஜிகணேசன்:- திருவிளையாடல், நவராத்திரி, ரத்தத்திலகம், தில்லானா மோகனாம்பாள், சரஸ்வதி சபதம், கந்தன்கருணை, திருமால் பெருமை, வசந்தமாளிகை.

எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்த 'அடிமைப்பெண்' படத்தில், ஒரு பாடலை படத்தின் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடினார். 'அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு; ஆசான் என்றால் கல்வி. அதுவே உலகின் தெய்வம்' என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் கே.வி.மகாதேவன்.

தமிழ்ப்படங்களுடன், தெலுங்குப் படங்களுக்கும் மகாதேவன் இசை அமைத்தார். அவற்றில் மகத்தான இசைக் காவியமாக அமைந்தது 'சங்கராபரணம்.' இசையை உயிரினும் மேலாக மதிக்கும் இசை மேதையாக இதில் சோமயாஜுலு நடித்தார். இவருக்காக, கர்நாடக சங்கீதத்தில் கே.வி.மகாதேவன் இசை அமைத்த பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அற்புதமாகப் பாடினார்.

ஆந்திராவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் இசைக்காகவே ஓடிய மிகச்சிறந்த படம் 'சங்கராபரணம்.' தமிழிலும், தெலுங்கிலும் சுமார் 500 படங்களுக்கு இசை அமைத்தவர், கே.வி.மகாதேவன். மேல் நாட்டு இசையைத் தழுவாமல், முழுக்க முழுக்க கர்நாடக இசையில், நெஞ்சைத் தொடும் விதத்தில் இசை அமைத்து சாதனை படைத்தார். அவருடைய பெரும்பாலான பாடல்கள், காலத்தை வென்று, காற்றுள்ள வரை வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவை.

நன்றி மாலை மலர்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2016 12:53 pm

கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  103459460 கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  3838410834
-
பிரபல வீணை இசை மேதை காலம் சென்ற
திரு. எஸ். பாலச்சந்தர் அவர்கள் அடிக்கடி தன்
நண்பர்களிடமும் சிஷ்யர்களிடமும் இப்படிச்
சொல்லுவாராம்.:

“கல்யாணி ராகம் கேக்கணுமா. கே.வி. மகாதேவனோட
"மன்னவன் வந்தானடி" பாட்டைக் கேளு. அதுதான் கல்யாணி"

இதைவிடச் சிறந்த பாராட்டை வேறு ஒருவர் தரமுடியுமா என்ன?

இதை அவர் கே.வி.மகாதேவனிடமே குறிப்பிட்டுச் சொன்னார்.

அவரது பாராட்டைக் கேட்ட கே.வி. மகாதேவனோ மிகுந்த
கூச்சத்துடன் இப்படிச் சொன்னாரார்:

"இதைப் போய்ப் பெரிசாச் சொல்லறேளே! அம்பிகாபதி படத்துலே
ராமநாத அய்யர் (இசைச் சக்ரவர்த்தி ஜி.ராமநாதன்)
"சிந்தனை செய்மனமே" என்று போட்டிருப்பாரே அது கல்யாணி.
அதுக்கு முன்னாலே நான் போட்டதெல்லாம் ஒண்ணுமே இல்லே"

இந்த அளவுக்கு பணிவும் தன்மையும் வேறு எவரிடமும் எதிர்பார்க்க
முடியுமா என்ன?
-
----------------
நன்றி- இணையம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 14, 2016 1:37 pm

இவரைப் பற்றி நானறிந்த மேலும் ஒரு செய்தி .

பொதுவாக இயக்குனர்கள் எந்த சூழ்நிலைக்கு ஏற்ப , எவ்விதமான சூழ்நிலையில் பாட்டு அமையவேண்டும் எனக் கூறிவிடுவார் . அதற்கேற்ப ,
இசை அமைப்பாளர்கள் ட்யூன்களை பாடியோ சந்தங்கள் மூலமாக கவிஞர்களிடம் தெரிவித்து விடுவார்கள் .
அதற்கேற்ப கவிஞர்கள் பாட்டு இயற்றுவார்கள் .சந்தங்களுக்கு தக்கப் படி மாற்றங்கள் செய்யப்படும் .
ஆனால் KVM , கவிஞர்களின் கற்பனையில் ,இசை அமைப்பாளர் புகுந்து அதை மாற்று ,இதை மாற்று என அவர்கள் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது . அவர்கள் கற்பனைக்கு தக்க நாம் ட்யூன்களை போடவேண்டும் என்பார் . எப்பிடிப்பட்ட பாட்டுக்கும் ட்யூன் அமைத்தவர் KVM . .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 15, 2016 6:28 am

கல்யாணி ராகத்தில் வேறு திரைப்படப் பாடல் எதுவுமில்லையா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 8:57 am

பாடலாசிரியர்: வாலி
படம்: ஒரு நாள் ஒரு கனவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஹரிஹரன், சாதனா சர்கம், ஷ்ரேயா கோஷல், பவதாரணி
ராகம் : கல்யாணி

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு……..
ஒரு மருந்தாகும்..
இசை அருந்தும் முகம்
மலரும் அரும்பாகும்
இசையின் பயனே
இறைவன் தானே…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா….

ஆதார ஸ்ருதி அந்த
அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதிலயங்கள் தன்னைச்
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல
இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது
இதுபோல் இல்லம்
எது சொல் தோழி…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

கவிஞர் வாலியின் தெய்வீக வரிகளுக்கு உயிர் தந்து இந்தப் பாடலை அழகுக்கு அழகு சேர்க்கும்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 15, 2016 9:06 am

நன்றி கார்த்திக் ஜெயராம் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 9:58 am

கல்யாணி ராகத்தை அடிப்படையாகக் கொண்ட மேலும் சில திரைப்பாடல்கள்…
1. ஆத்மா- கண்ணாலே காதல்கவிதை சொன்னாலே
2. பாண்டிநாட்டுத்தங்கம்- சிறுகூட்டுல
3. என் சுவாசக்காற்றே- சில்லல்லவா
4. பாரதி- நிற்பதுவே நடப்பதுவே
5. தைப்பிறந்தால் வழிபிறக்கும்- அமுதும் தேனும்
6. சர்க்கரைப்பந்தல்- வேதம் ஓங்க
7. வெள்ளி நிலவே- ஹாய் ஹாய் வெண்ணிலவே
8. உத்தமபுத்திரன்- அன்பே அமுதே
9. கோகுலத்தில் சீதை- கோகுலத்து கண்ணா கண்ணா
11. தங்கப்பதுமை- முகத்தில் முகம் பார்க்கலாம்
12. மகனே கேள்- கலைமங்கை உருவங்கண்டு
13. பண்ணையார் மகன்- கலைவாணி கல்யாணி
14. பூம்புகார்- காவிரிப்பெண்ணே வாழ்க
15. மனிதன்- குயிலே உனக்கு
16. உயர்ந்த உள்ளம்- வந்தாள் மகாலட்சுமியே
17. என் ப்ரியமே- யாரிது தேவதை
18. ஆஹா- முதன்முதலில் பார்த்தேன்
19. புதுமைப்பித்தன்- உள்ளம் ரெண்டும் ஒன்று
20. ஏழாவது மனிதன்- வீணையடி நீயெனக்கு
21. புதுக்கவிதை- வெள்ளைப் புறாவொன்று
22. நாகநந்தினி- வள்ளுவன் வேதம் மறவாதே
23. பருவத்தின் வாசலிலே- கோவிலின் தேரென
24. கொக்கரக்கோ- கீதம் சங்கீதம்
25. பாபா- உன் படை கண்டு
26. தளபதி- யமுனை ஆற்றிலே
27. நாயகன்- நீயொரு காதல் சங்கீதம்
28. ஒருவர் வாழும் ஆலயம்- மலையோரம் மயிலே
இளையராஜா இந்த ராகத்தை அதிகம் கையாண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மு.கருணாநிதிக்குப் பிடித்த ராகமுமுகூட கல்யாணிதான் என்று ஒரு நேர்காணலில் வாசித்த ஞாபகம்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 15, 2016 2:56 pm

ஆஹா இதோ ஒரு செய்தி சுரங்கம் !கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  1571444738 கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  103459460 கே.வி.மகாதேவன் பிறந்தநாள் சிறப்பு பதிவு.  3838410834
ஆமாம் கார்த்திக் , பிசியா ,அதிகம் காணப் படுவதில்லையே !
வீட்டில் யாவரும் சுகமா >
புது இடத்தில் வசதிகள் எப்பிடி ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 3:20 pm

நன்றி அய்யா .

வீடு மிகவும் வசதியாக உள்ளது . அனைத்து வசதிகளும் உள்ளது மனதிற்கு நிறைவாக உள்ளது அய்யா. இனிமேல் தலை காட்டலாம் என்று உள்ளேன் ..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 15, 2016 5:24 pm

மிக்க மகிழ்ச்சி ,கார்த்திக் .
மனதிற்கு நிறைவாக உள்ளது .
தொடர்ந்து வருக .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக