புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
91 Posts - 67%
heezulia
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
3 Posts - 2%
prajai
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
3 Posts - 2%
Barushree
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
1 Post - 1%
sram_1977
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
1 Post - 1%
nahoor
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
145 Posts - 74%
heezulia
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
8 Posts - 4%
prajai
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10பெஸ்ட் பாலிசிகள்! Poll_m10பெஸ்ட் பாலிசிகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெஸ்ட் பாலிசிகள்!

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 10, 2016 6:21 pm

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் அவரவரின் ஆண்டு வருமானத்தைப்போல 10 - 20 மடங்கு வரை ஆயுள் காப்பீட்டிற்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு குடும்பம் வருமானம் ஈட்டும் நபரைச் சார்ந்துள்ளதால், அவரின் இழப்பு அந்த குடும்பத்தின் நிதி நிலையைப் பாதிக்கும்.

எந்த நிறுவனத்தில் எந்த பாலிசியை எடுப்பது என்பதை பார்ப்பதற்குமுன், கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

பெஸ்ட் பாலிசிகள்! P30a

டேர்ம் இன்ஷூரன்ஸ்!

பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை அனைவரும், பிரீமியத் தொகையை வைத்தே முடிவு செய்வர். ஆனால், பிரீமியம் தவிர கீழ்க்கண்டவற்றை பின்பற்றி முடிவு செய்தால் மிகவும் உத்தமம்.

பின்னணி மற்றும் நிர்வாகத் திறன்!

இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் பின்னணி மற்றும் எத்தனை ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருக்கிறார்கள் என்று அறிந்து முடிவு செய்வது அவசியமாகும்.

க்ளெய்ம் விகிதம்!

டேர்ம் இன்ஷுரன்ஸை தேர்வு செய்வதற்குமுன் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, அந்த இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் க்ளெய்ம் செட்டில் செய்யும் விகிதம்தான். ஒரு இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் மூன்று வருட க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதத்தின் அடிப்படையில் தேர்வு செய்வது மிகவும் முக்கியமாகும்.

வாடிக்கையாளர் சேவை மையம்!

டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுப்பதற்குமுன், அவர்களின் கிளைகள் எத்தனை எனவும், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளரின் சேவையின் தரத்தையும் அறிந்து, அந்த நிறுவனத்தின் பாலிசியைத் தேர்வு செய்வது அவசியமாகும்.

பிரீமியம் தொகை!

மேற்கூறிய அனைத்து கருத்துக்களையும் மனதில் கொண்டு, பிரீமியம் சிறிது அதிகமானாலும், அந்த பாலிசியை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ்!

நீங்களே இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் வலைதளத்துக்குச் சென்று, விண்ணப்பித்து கேள்விகளுக்கு தகுந்த விடையளித்து, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு, பாலிசியை வாங்கிக்கொள்வது ஆன்லைன் டேர்ம் இன்ஷுரன்ஸ் ஆகும்.

இந்த வகையான பாலிசிகளின் பிரீமியம் குறைவு. நேரடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் வலைதளத்தில் எடுப்பதால், அவர்களுக்கு ஆகும் செலவு குறைவுதான் இதற்கு காரணம்.

இந்த பாலிசிகளில் கீழ்க்கண்ட அனுகூலமற்ற காரணங்கள் உள்ளன. அவற்றையும் ஆராய்ந்து தேர்வு செய்வதே உத்தமம் ஆகும்.

பெஸ்ட் பாலிசிகள்! P32a

ஆன்லைனில் பாலிசி எடுக்கும் தருவாயில் முதலில் ஒரு பிரீமிய தொகையை கட்டிவிட்டு, பாலிசிதாரர் மருத்துவ பரிசோதனை முடித்தவுடன் பிரீமியம் 25% முதல் 75% வரை அதிகமாக வாய்ப்புள்ளது.

ஒரு சில நிறுவனங்கள் ரூ.50 லட்சம் வரை மருத்துவ பரிசோதனை இல்லாமல் காப்பீடு தருகின்றன. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, பாலிசிதாரர் அவருக்கு பாலிசி எடுப்பதற்குமுன் அவருடைய பழக்கவழக்கங்களையும், அவருக்கு ஏதேனும் வியாதியோ அதற்காக அவர் சிகிச்சையோ எடுத்துக்கொண்டால் அந்த மருத்துவ குறிப்புகளை தெரிவிக்க வேண்டியதும் கட்டாயம் ஆகும். இதன் அடிப்படையில் மட்டுமே க்ளெய்ம் செட்டில் செய்யப்படும்.

க்ளெய்ம் செட்டில்மென்ட்!

மேலும், ஆன்லைன் டேர்ம் பிளானின் க்ளெய்ம் செட்டில்மென்ட்டை தனியாகப் பதிவு செய்வது கட்டாயமில்லை என்கிற காரணத்தினால், இதன் விகிதம் தனியாக தெரிவதில்லை. அந்த வகையில் நிறுவனத்தின் பாரம்பரியத்தையும் பார்ப்பது நல்லது.

வாடிக்கையாளர் சேவை!

ஆன்லைன் பாலிசியை எடுத்துவிட்டு க்ளெய்ம் செய்யும் தருவாயில், இறந்தவரின் மனைவியோ அல்லது இறந்தவரின் குடும்பத்தினரோ, வாடிக்கையாளரின் சேவை மையத்தை மட்டுமே தொடர்புகொண்டு க்ளெய்மை பெறவேண்டும். அவர்களுக்கு இன்ஷூரன்ஸ் பற்றி, ஓரளவுக்கு எழுதப் படிக்க மற்றும் பேசத் தெரிந்தவராக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு க்ளெய்மை பெறமுடியும். அப்படி இல்லையென்றால், ஆன்லைன் டேர்ம் பிளான் எடுப்பது நல்லதல்ல.

பெஸ்ட் பாலிசிகள்! P32n

ஹெல்த் இன்ஷுரன்ஸ்!

இன்றைக்கு மருத்துவத் துறையின் வளர்ச்சியினால், அனைத்து வியாதிகளுக்கும் மருத்துவம் பார்த்து சரிசெய்து கொள்ளும் நிலைமை உள்ளது. மேலும், பெருகிவரும் மருத்துவ செலவுகளை சமாளிக்க, இன்றைய தேதியில் ஒரு மருத்துவ காப்பீட்டால் மட்டுமே முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது.

இதனால் ஒவ்வொருவருக்கும் ஒரு மருத்துவ காப்பீட்டு பாலிசி வேண்டும் என்பது இன்றைய அத்தியாவசிய தேவையாகவே உள்ளது. இந்தியாவில் இருபதுக்கும் மேற்பட்ட பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும், 5 மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் எந்த பாலிசியை தேர்ந்தெடுப்பது? கீழ்க்கண்ட உத்திகளை பயன்படுத்தினால், மிகவும் சுலபமாக ஒரு சிறந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை தங்களது தேவைக்கேற்ப வாங்கி பயனடைய முடியும்.

காத்திருப்பு நாட்கள்!

ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்தவுடன் முதல் க்ளெய்ம் செய்ய 30 முதல் 90 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். ஆகவே, பாலிசியின் காத்திருப்பு நாட்கள் குறைவாக உள்ள பாலிசியை வாங்குவது மிகவும் சிறந்ததாகும்.

க்ளெய்ம் செட்டில் செய்யும் விதம்!

ஒரு சில பொதுக் காப்பீட்டு, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு (டிபிஏ) சேவை நிறுவனத்துடன் சேர்ந்துகொண்டு, க்ளெய்ம் செட்டில்மென்ட்டினை செய்து வருகின்றன. ஆனாலும், ஒரு சில நிறுவனங்கள், அவர்களே க்ளெய்ம் செட்டில்மென்ட் செய்து வருகின்றன. நிறுவனமே செட்டில்மென்ட் செய்வது பாலிசிதாரருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

உள்ளடக்கம் மற்றும் விதிவிலக்கு!

பாலிசி எடுப்பதற்குமுன், பாலிசிதாரருக்கு ஏதேனும் நோய்கள் இருந்தால், அந்த நோய்களுக்கான கவரேஜ் முதல் 3அல்லது4 வருடங்களுக்கு இருக்காது. மேலும், ஒரு சில நோய்களுக்கு கவரேஜிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஆகவே, பாலிசி எடுக்கும்முன், எந்த நோய்களுக்கு விதிவிலக்கு என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

பெஸ்ட் பாலிசிகள்! P34a

துணைக் கட்டணம்!

ஒரு சில நிறுவனங்களின் பாலிசிகளில், துணைக் கட்டணங்கள் (சப் லிமிட்) உள்ளன. இவை பொதுவான அறை வாடகை, டாக்டர்கள் கட்டணம் மூலம் நிர்ணயிக்கப் படுகிறது.

உதாரணமாக, நீங்கள் ரூ.2,00,000 காப்பீடு தொகை கொண்ட ஒரு திட்டத்தை எடுத்திருந்தால், அதில் 1% வரை அல்லது நாளொன்றின் வாடகைக் கட்டணம் ரூ.2,000 - இதில் எது அதிகமோ அதுவே வழங்கப்படும். மேலே குறிப்பிட்ட வரம்பை மீறுகிறது என்றால், அதிகப்படியான பணத்தை பாலிசிதாரரே செலுத்த வேண்டும். ஆகவே, துணைக் கட்டணம் இல்லாத பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது.

இணைக் கட்டணம்!

ஒரு சில நோய்களுக்கு இணைக் கட்டணம் (கோ பேமென்ட்) செலுத்த வேண்டும், இது அந்த பாலிசி ஆவணத்தில் தெளிவாக விளக்கப்பட்டு இருக்கும். இது சுமார் 20% முதல் 40% வரை இருக்கும். உதாரணத்துக்கு, க்ளெய்ம் தொகை ரூ.1 லட்சம் என்றால் குறைந்தபட்சம் ரூ.20,000 கையிலிருந்து போட வேண்டிவரும். மீதி ரூ.80,000 க்ளெய்மாக கிடைக்கும். இது மூத்த குடிமக்கள் பாலிசியில் கண்டிப்பாக முடியாததாகும். ஆகையால் எந்தந்த நோய்களுக்கு இணைக் கட்டணம் இருக்கிறது என்று அதற்கு தகுந்தாற்போல் பாலிசி எடுக்க வேண்டும்.

மூத்த குடிமக்கள் பாலிசி!

சில நிறுவனங்கள் மூத்தக் குடிமக்களுக்கான நல்ல பாலிசிகளை வழங்கி வருகிறது. இதன் சிறப்பம்சம், நுழைவு வயது 60 ஆண்டுகளுக்கு மேலும், வாழ்நாள் வயது வரை புதுப்பிக்கும் அனுகூலத்தையும் வழங்குகிறது. ஒரு குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருக்கும் தருவாயில், அவர்களுக்கான பிரத்யேக மூத்த குடிமக்கள் பாலிசியை எடுத்துக்கோண்டு, குடும்பத்தில் உள்ள மற்றவருக்கு, ஒரு குடும்ப ஃப்ளோட்டர் எடுத்துக்கொள்வது மூலம் பிரீமியம் குறைவாகும்.

ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் நிபுணர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட் காம்.

---ந.விகடன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 11, 2016 5:46 pm

நேற்றே பார்த்தேன், இப்போது தான் படித்தேன் பாலாஜி, நல்ல பகிர்வு ! ................ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மூத்த குடிமக்கள் பாலிசி!

சில நிறுவனங்கள் மூத்தக் குடிமக்களுக்கான நல்ல பாலிசிகளை வழங்கி வருகிறது. இதன் சிறப்பம்சம், நுழைவு வயது 60 ஆண்டுகளுக்கு மேலும், வாழ்நாள் வயது வரை புதுப்பிக்கும் அனுகூலத்தையும் வழங்குகிறது. ஒரு குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருக்கும் தருவாயில், அவர்களுக்கான பிரத்யேக மூத்த குடிமக்கள் பாலிசியை எடுத்துக்கோண்டு, குடும்பத்தில் உள்ள மற்றவருக்கு, ஒரு குடும்ப ஃப்ளோட்டர் எடுத்துக்கொள்வது மூலம் பிரீமியம் குறைவாகும்.

இது சும்மா கண்துடைப்பு பாலாஜி, நாங்க 3 வருடம் முன்பு இப்படி எடுத்தோம், அப்போவும் இதே போலத்தான் சொன்னார்கள், எனவே எங்கள் 4 பேருக்கும் சேர்த்து எடுத்தோம்.ஒரே வருடம் தான் குறைந்த பிரீமியம் வசூலித்தார்கள்..... .அடுத்த வருடமே எங்கள் பிரீமியத்தொகை முன்று மடங்காய்ப் போனது கேட்டால், " இப்போ ப்ரோசிஜர் மாறிவிட்டது, இப்போ யாருக்கு வயது அதிகமோ அவங்களை வைத்து இப்போ calculate செய்கிறோம்" என்று கூலாக சொன்னார்கள்.............. கோபம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

'ஓகே என்று நாங்கள் எங்கள் இருவருக்கு மட்டுமாக குறைத்து விட்டோம் பாலிசி யை"...எல்லாம் கண்துடைப்பு யாரும் மக்களுக்காக எதுவும் செய்வது இல்லை, அவங்க பாக்கெட்டுகளை நிரப்பவே புதிது புதிதாக பாலிசிகளைக் கொண்டு வராங்க சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 12, 2016 1:47 pm

krishnaamma wrote:நேற்றே பார்த்தேன், இப்போது தான் படித்தேன் பாலாஜி, நல்ல பகிர்வு ! ................ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மூத்த குடிமக்கள் பாலிசி!

சில நிறுவனங்கள் மூத்தக் குடிமக்களுக்கான நல்ல பாலிசிகளை வழங்கி வருகிறது. இதன் சிறப்பம்சம், நுழைவு வயது 60 ஆண்டுகளுக்கு மேலும், வாழ்நாள் வயது வரை புதுப்பிக்கும் அனுகூலத்தையும் வழங்குகிறது. ஒரு குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருக்கும் தருவாயில், அவர்களுக்கான பிரத்யேக மூத்த குடிமக்கள் பாலிசியை எடுத்துக்கோண்டு, குடும்பத்தில் உள்ள மற்றவருக்கு, ஒரு குடும்ப ஃப்ளோட்டர் எடுத்துக்கொள்வது மூலம் பிரீமியம் குறைவாகும்.

இது சும்மா கண்துடைப்பு பாலாஜி, நாங்க 3 வருடம் முன்பு இப்படி எடுத்தோம், அப்போவும் இதே போலத்தான் சொன்னார்கள், எனவே எங்கள் 4 பேருக்கும் சேர்த்து எடுத்தோம்.ஒரே வருடம் தான் குறைந்த பிரீமியம் வசூலித்தார்கள்..... .அடுத்த வருடமே எங்கள் பிரீமியத்தொகை முன்று மடங்காய்ப் போனது கேட்டால், " இப்போ ப்ரோசிஜர் மாறிவிட்டது, இப்போ யாருக்கு வயது அதிகமோ அவங்களை வைத்து இப்போ calculate செய்கிறோம்" என்று கூலாக சொன்னார்கள்.............. கோபம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

'ஓகே என்று நாங்கள் எங்கள் இருவருக்கு மட்டுமாக குறைத்து விட்டோம் பாலிசி யை"...எல்லாம் கண்துடைப்பு யாரும் மக்களுக்காக எதுவும் செய்வது இல்லை, அவங்க பாக்கெட்டுகளை நிரப்பவே புதிது புதிதாக பாலிசிகளைக் கொண்டு வராங்க சோகம்

நன்றி கிருஷ்ணம்மா ..

எல்லாம் கார்பெரெட் மாயம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 12, 2016 2:10 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:நேற்றே பார்த்தேன், இப்போது தான் படித்தேன் பாலாஜி, நல்ல பகிர்வு ! ................ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மூத்த குடிமக்கள் பாலிசி!

சில நிறுவனங்கள் மூத்தக் குடிமக்களுக்கான நல்ல பாலிசிகளை வழங்கி வருகிறது. இதன் சிறப்பம்சம், நுழைவு வயது 60 ஆண்டுகளுக்கு மேலும், வாழ்நாள் வயது வரை புதுப்பிக்கும் அனுகூலத்தையும் வழங்குகிறது. ஒரு குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருக்கும் தருவாயில், அவர்களுக்கான பிரத்யேக மூத்த குடிமக்கள் பாலிசியை எடுத்துக்கோண்டு, குடும்பத்தில் உள்ள மற்றவருக்கு, ஒரு குடும்ப ஃப்ளோட்டர் எடுத்துக்கொள்வது மூலம் பிரீமியம் குறைவாகும்.

இது சும்மா கண்துடைப்பு பாலாஜி, நாங்க 3 வருடம் முன்பு இப்படி எடுத்தோம், அப்போவும் இதே போலத்தான் சொன்னார்கள், எனவே எங்கள் 4 பேருக்கும் சேர்த்து எடுத்தோம்.ஒரே வருடம் தான் குறைந்த பிரீமியம் வசூலித்தார்கள்..... .அடுத்த வருடமே எங்கள் பிரீமியத்தொகை முன்று மடங்காய்ப் போனது கேட்டால், " இப்போ ப்ரோசிஜர் மாறிவிட்டது, இப்போ யாருக்கு வயது அதிகமோ அவங்களை வைத்து இப்போ calculate செய்கிறோம்" என்று கூலாக சொன்னார்கள்.............. கோபம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

'ஓகே என்று நாங்கள் எங்கள் இருவருக்கு மட்டுமாக குறைத்து விட்டோம் பாலிசி யை"...எல்லாம் கண்துடைப்பு யாரும் மக்களுக்காக எதுவும் செய்வது இல்லை, அவங்க பாக்கெட்டுகளை நிரப்பவே புதிது புதிதாக பாலிசிகளைக் கொண்டு வராங்க சோகம்

நன்றி கிருஷ்ணம்மா ..

எல்லாம் கார்பெரெட் மாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1197373

ம்ம்.. ஆமாம் ...லாபம் மட்டுமே குறி சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 12, 2016 6:29 pm

பப்ளிக் டெபொசிட் --நல்ல கம்பெனிகளில் முதலீடு செய்வதை தவிர வேறு வழி இல்லை .
இப்போதைய அரசு மூத்தக் குடிமகன்களை கசக்கிப் பிழிகிறார்கள் .SCSS வட்டிவிகிதம் 9.3% என மாற்றினாலும் , வருட கடைசியில் 10% tax பிடிக்கப் பட்டு tax return file பண்ணினால் பிடித்த வரி கொடுக்கப் படுமாம் . Incometax dept பணம் வந்த மாதிரிதான் .
100 கோடி பிடிப்பார்கள். 20 கோடி திருப்பித் தருவார்கள் .

ஆனால் பெரிய பெரிய முதலைகள் 1000 லக்ஷம் கோடி வரி ஏய்ப்பு செய்வார்கள் .
ரத்னக்கம்பளம் விரித்து பட்டு பீதாம்பரம் போர்த்துவார்கள் அவர்களுக்கு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 12, 2016 8:54 pm

T.N.Balasubramanian wrote:பப்ளிக் டெபொசிட் --நல்ல கம்பெனிகளில் முதலீடு செய்வதை தவிர வேறு வழி இல்லை .

மேற்கோள் செய்த பதிவு: 1197421

நிஜம் ஐயா, அது தான் பேப்பரில் தினமும் பார்க்கிறோமே சோகம் ..பேங்க் இல் டெபொசிட் போட்டுவிட்டு அந்த வட்டி இல் காலம் தள்ளுவது ரொம்ப கஷ்டம்........( நாங்கள் அனுபவித்து இருக்கோம் )......இப்போ PPF இல் வேறு கை வைக்கிறார்கள் பார்த்தீங்களா?........இந்த அரசால் மாதாந்திர சம்பளம் வாங்குபவர்களிடம்  இருந்து தான் எதையும் பெற முடியும்.....மத்தவங்களை ஒண்ணும் கிழிக்க முடியாது.............. கோபம் ...என்ன செய்வது? சொல்லுங்கோ!...............அவங்களை எல்லாம்............ கன்னத்தில் அறை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 12, 2016 9:51 pm

அவங்களை எல்லாம்............  கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

நீங்க பதிவிட்டப் படியே செய்து விடலாம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 14, 2016 1:12 am

T.N.Balasubramanian wrote:
அவங்களை எல்லாம்............  கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

நீங்க பதிவிட்டப் படியே செய்து விடலாம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197430

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2016 9:40 am

T.N.Balasubramanian wrote:பப்ளிக் டெபொசிட் --நல்ல கம்பெனிகளில் முதலீடு செய்வதை தவிர வேறு வழி இல்லை .
இப்போதைய அரசு மூத்தக் குடிமகன்களை கசக்கிப் பிழிகிறார்கள் .SCSS வட்டிவிகிதம் 9.3% என மாற்றினாலும் , வருட கடைசியில் 10% tax பிடிக்கப் பட்டு tax return file பண்ணினால் பிடித்த வரி கொடுக்கப் படுமாம் . Incometax dept பணம் வந்த மாதிரிதான் .
100 கோடி பிடிப்பார்கள். 20 கோடி திருப்பித் தருவார்கள் .

ஆனால் பெரிய பெரிய முதலைகள் 1000 லக்ஷம் கோடி வரி ஏய்ப்பு செய்வார்கள்  .
ரத்னக்கம்பளம்   விரித்து பட்டு பீதாம்பரம் போர்த்துவார்கள் அவர்களுக்கு .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1197421
-
அஞ்சலகத்தில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில்
முதலீடு செய்யும்போதே, 15 எச் படிவம், அந்த நிதியாண்டிற்கு
கொடுத்து விட வேண்டும்...
அப்படிச் செய்தால் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை.
ஏப்ரல் 1 - க்குப் பிறகு 2016-2017 ம் நிதியாண்டிற்கு அதே போல
15 எச் படிவம் கொடுக்கப்பட வேண்டும்
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 14, 2016 10:33 am

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:பப்ளிக் டெபொசிட் --நல்ல கம்பெனிகளில் முதலீடு செய்வதை தவிர வேறு வழி இல்லை .
இப்போதைய அரசு மூத்தக் குடிமகன்களை கசக்கிப் பிழிகிறார்கள் .SCSS வட்டிவிகிதம் 9.3% என மாற்றினாலும் , வருட கடைசியில் 10% tax பிடிக்கப் பட்டு tax return file பண்ணினால் பிடித்த வரி கொடுக்கப் படுமாம் . Incometax dept பணம் வந்த மாதிரிதான் .
100 கோடி பிடிப்பார்கள். 20 கோடி திருப்பித் தருவார்கள் .

ஆனால் பெரிய பெரிய முதலைகள் 1000 லக்ஷம் கோடி வரி ஏய்ப்பு செய்வார்கள்  .
ரத்னக்கம்பளம்   விரித்து பட்டு பீதாம்பரம் போர்த்துவார்கள் அவர்களுக்கு .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1197421
-
அஞ்சலகத்தில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில்
முதலீடு செய்யும்போதே, 15 எச் படிவம், அந்த நிதியாண்டிற்கு
கொடுத்து விட வேண்டும்...
அப்படிச் செய்தால் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை.
ஏப்ரல் 1 - க்குப் பிறகு 2016-2017 ம் நிதியாண்டிற்கு அதே போல
15 எச் படிவம் கொடுக்கப்பட வேண்டும்
-
மேற்கோள் செய்த பதிவு: 1197582

15 H கொடுத்தாலும் , போஸ்ட் ஆபீசில் பெற்ற மொத்த வட்டியில் 10% (20% பதிலாக ) பிடிப்பார்கள் .
அதாவது வருட கடைசியில் . 31/3/2016 முடியும் காலாண்டுக்கு ஏப்ரல் 1 தேதிக்கு மேல் தான் வட்டியை எடுத்துக் கொள்ளமுடியும் . அப்போது மொத்த வருடாந்திர வட்டியில் 10% வட்டி உண்டு . ஆகவே வட்டி column பூர்த்தி செய்ய வேண்டாம் . கணினியில் பார்த்து கூறின பிறகு வட்டி column பூர்த்தி செய்யவும் என்கிறார்கள்
முதல் மூன்று காலாண்டில் பிடித்தம் இல்லை . IT return file பண்ணி அந்த வட்டியை திரும்ப பெற வேண்டுமாம்
கடைசி காலாண்டில் பிடித்தம் இருக்கும் என அஞ்சலக பெண்மணி கூறினார் .
எனக்கு பிடித்தம் இல்லை என்றேன் .
எல்லோருக்கும் உண்டு என்றார் அவர் .
பிடித்தம் பிடிப்பதில் எனக்கு
பிடித்தம் இல்லை என்று விளக்கினேன் .
உங்களுக்கு பிடித்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
பிடித்தம் இருந்தால்
பிடித்தம் பிடிக்கவேண்டியது வருமானவரி அலுவலுக ஆணை ,
எனக்கு பிடித்தம் இருக்கிறது இல்லையோ
பிடித்தம் பிடிக்கவேண்டியது எனது கடமை என்கிறார்
அந்த அஞ்சலக அதிகாரி .
உங்களுக்கு அந்த அதிகாரி கூறிய பதிலில் பிடித்தம் இருக்கிறதா ?
பிடித்தம் இருந்தால் மறுமொழி   இடவும் .புன்னகை புன்னகை புன்னகை   ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக