புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
91 Posts - 62%
heezulia
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
6 Posts - 4%
eraeravi
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
1 Post - 1%
viyasan
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
19 Posts - 3%
prajai
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தியும் கதையும்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 10, 2016 11:22 am

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழனிசாமி என்பவர் பணியாற்றி வந்தார். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். இந்நிலையில், தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையால் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த பரிந்துரைக்கப்பட்டார். அப்போது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து பெற்றோரிடம் எடுத்துரைத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறி அழுதுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை நேற்று காலை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ‘தமிழ் பாடம் நடத்திய ஆசிரியர் பழனிசாமி கொடுத்த பாலியல் தொந்தரவு காரணமாக 18 மாணவிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பழனிசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். மேலும் அவர்கள், பழனிசாமிக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
இதையடுத்து, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராதேவி தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், உதவி தொடக்க கல்வி அலுவ லர் ராஜகோபால் மற்றும் காவல் துறையினர் கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விரைந்தனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மற்றும் பெற்றோரிடம் தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ‘உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் காரணமாக, நேற்றைய வகுப்புகள் பாதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, பாலியல் தொந்தரவுக்கு ஆளான 18 மாணவிகளிடம் தி.மலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பவானி விசாரணை நடத்தினார். அதில், ஆசிரியர் பழனிசாமிக்கு எதிராக மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், ஆசிரியர் பழனிசாமியிடம் விசாரணை நடத்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
மாணவிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், ஆசிரியர் பழனிசாமியை தற்காலிகப் பணிநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இதுபோன்ற செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி நாம் காணலாம் . வேலியே பயிரை மேய்ந்த கதையாக , நல்லொழுக்கத்தைப் போதிக்கவேண்டிய ஆசிரியர்களே , ஒழுக்கக் கேடர்களாக  மாறி வருகின்றனர் . பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளைத் தன் மகளாக நினைக்கவேண்டும் . அடுத்தவன் வீட்டுக் குழந்தைதானே என்று எண்ணக்கூடாது . " பிறவும் தமபோற் செயின் " என்ற நீதி வணிகர்களுக்கு மட்டுமல்ல ; நம் அனைவருக்கும்தான் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் .

இந்த செய்தியை அடிப்படையாக வைத்து ஒரு சிறுகதையை இங்கு தருகிறேன் . தங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்தவும் .

அது ஆண்,பெண் இருபாலரும் படிக்கும் பள்ளி.பத்தாம் வகுப்புக்குத் தமிழாசிரியர் பெயர்  வில்லாளன். அர்ச்சுனன் என்ற தனது பெயரைத் தமிழ்ப் பற்றின் காரணமாக " வில்லாளன் " என்று மாற்றி வைத்துக் கொண்டார் . மாணவர்கள் அனைவரும் அவரை "வில்லு வாத்தியார்" என்று அழைப்பார்கள்.

வில்லு வாத்தியார் மாணவர்களை விட, மாணவிகளிடம் தனி அக்கறை காட்டுவார். பாடம் நடத்தும்போது கூட மாணவிகளைப் பார்த்தே பாடம் நடத்துவார். மாணவிகள் யாராவது தாமதமாக வகுப்புக்கு வந்தால் கூட, "போம்மா, போய் உட்காரு" என்று சொல்லுவார். அதே சமயத்தில் மாணவன் யாராவது தாமதமாக வந்தால்,"தண்ட சோறு! ஏண்டா லேட்டு? எங்க ஊரை சுத்திட்டு வர்றே?"என்று கோபிப்பார். மாணவிகள்எத்தனைமுறைசந்தேகம்கேட்டாலும்சளைக்காமல்பதில்சொல்லுவார்.ஆனால் மாணவர்கள் கேட்டால்," மரமண்டையில் ஒரு தடவை சொன்னால் ஏறாதோ?" என்று எரிந்து விழுவார்.விடைத்தாள் திருத்தும்போது கூட மாணவிகளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுப்பார். பருப்பு உசிலி செய்வது எப்படி? வாழைப்பூ உருண்டை செய்வது எப்படி?விதவிதமான கோலங்கள் போடுவது எப்படி?என்றெல்லாம் மாணவிகளுக்குப் பிடித்தமான விஷயங்களையே அதிகம் பேசுவார்.. இதனால் அவருடைய "வில்லு வாத்தியார்" என்ற பெயர் நாளடைவில் மறைந்து மாணவர்கள் அவரை,"ஜொள்ளு வாத்தியார்" என்று அழைக்கத்தொடங்கினர்.

ஒருநாள் இரண்டாம் பாடவேளை ஜொள்ளு வாத்தியார் பத்தாம் வகுப்பில்  பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அன்று மிகவும் சிரத்தையாகப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். எப்போதும் மாணவிகளைப் பார்த்துப் பாடம் நடத்தும் அவர் அன்றைய தினம் மாணவர்களைப் பார்த்தும் பாடம் நடத்தினார். தாமதமாக வந்த மாணவர்களையும் கடிந்து கொள்ளவில்லை. மாணவர்கள் கேட்ட வினாக்களுக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார். மாணவிகளுக்குப் பிடிக்கும் என்பதற்காகப் பாடத்துக்குப் புறம்பான விஷயங்களைப் பேசும் வழக்கமுடைய அவர் அன்றைதினம் பாடத்துக்குப் புறம்பாக எதுவும் பேசவில்லை. சுமார் முக்கால் மணி நேரம் பாடம் நடத்தியும் அன்றையதினம் அவருடைய வாயிலிருந்து ஒரு சொட்டு ஜொள்ளு கூட ஒழுகவில்லை.மாணவர்கள் மிகுந்த வியப்படைந்தனர்.காரணம் தெரியாமல் விழித்தனர்.

கடைசி பாடவேளை முடிந்து மணி அடித்தது.மாணவர்கள் வீட்டிற்குச் செல்லத் தொடங்கினர்.ஜொள்ளு வாத்தியார் பத்தாம் வகுப்புக்கு முன்புறமாக நின்றுகொண்டு,"மணிமேகலை!"என்று அழைத்தார்."இதோ வந்துட்டேன் அப்பா!" என்று சொல்லிக்கொண்டே ஒரு மாணவி வெளியில் ஓடிவந்தாள்.மணிமேகலை அன்றுதான் பத்தாம் வகுப்பில் சேர்ந்து இருந்தாள்.அவள் ஜொள்ளு வாத்தியாரின் மகள் என்ற விஷயம் அப்போதுதான் மாணவர்களுக்குத் தெரிந்தது.அன்றையதினம் ஜொள்ளு வாத்தியாருக்கு ஜொள்ளு ஒழுகாத காரணத்தையும் மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக