புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Harriz
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
435 Posts - 47%
heezulia
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_m10தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்னாடுடைய சிவனே போற்றி...!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 07, 2016 10:28 pm

First topic message reminder :

மஹா சிவராத்திரி

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 LMgKpZ8XRouwUAfEsunB+IMG-20161202-WA0030

அனலாய் எழுந்த சுடர் தீபம்
அருணாச்சலத்தின் சிவ யோகம்.
ஒளியாய் எழுந்த ஓங்காரம்
உன் கோலம் என்றும் சிங்காரம்.

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 PjXFmmwS2Wf5mUQu4sTP+0

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 08, 2016 2:32 am

இன்னும் சற்று நேரத்தில் கரும்பு சாறு அபிஷேகத்துடன் நான்காம் ஜாம பூஜை ஆரம்பமாவிருக்கிறது.

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 3EBzoZ7kShKMVExXFlCO+537582_10151124004293835_502862161_n

இத்திரியில் காணப்படும் தகவல்கள் மற்றும் படங்கள் அனைத்தும் பல்வேறு இணைய தளங்களில் இருந்து திரட்டப்பட்டவையே. தகவல் திரட்ட உதவிய அத்தளங்கள் அனைத்திற்கும் என் நன்றிகள்.

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 GxeUIcl1QVSqXdk9Rke5+1360346051_837c62aa22

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 UPbUHKWMRSyoc1fW7UDa+0

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Mar 08, 2016 4:02 am

நல்ல பயனுள்ள திரி அக்கா . பொறுமையா படிக்கிறேன் .

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 24, 2017 10:39 pm

மஹாசிவராத்திரி – மகத்துவம் என்ன?

ரு வருடத்தில் 365 நாட்கள் இருக்க, மஹாசிவராத்திரி அன்று மட்டும் இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டது ஏன்? மஹாசிவராத்திரி என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

மஹாசிவராத்திரி இரவு என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு.

நிலவின் சுழற்சிக் கணக்கில், ஒரு மாதத்தின் 14வது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரி. இதுதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் இந்த இரவில் குறிப்பிட்ட சில ஆன்மீக சாதனாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தது. இது தான் மஹாசிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.

அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். இந்தியக் கலாச்சாரத்தில் பல யோகிகள், முனிவர்கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள். ஈஷாவிலும் இந்நாள், இதே காரணத்திற்காக அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

மஹாசிவராத்திரி அனைவருக்குமே உகந்த நாள். என்றாலும், யோகக் கலாச்சாரத்தில் சிவனை கடவுளாகப் பார்ப்பதில்லை. அவரை ஆதியோகியாக, யோகப் பாரம்பரியங்களை நமக்கு வழங்கிய ஆதிகுருவாகவே ஆராதிக்கின்றனர். ‘ஷிவா’ என்றால் ‘எது இல்லையோ, அது’. உங்களில் ‘நான்’ என்ற சுவடின்றி, அங்கே சிவன் குடியிருக்க நீங்கள் வழிசெய்தால், வாழ்வை முற்றிலுமொரு புதிய கோணத்தில், என்றும் இல்லா தெளிவுடன் காணமுடியும்.

இதை நோக்கியே நம் ஈஷா யோகா மையத்தின் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் அமைகின்றன. இன்னும் சொல்லப்போனால், ஈஷா யோக மையத்தை பொருத்தவரை, ஒவ்வொரு வருடமுமே, மஹாசிவராத்திரியை எதிர்பார்த்து, எதிர்நோக்கி காத்திருப்பது போலாகி விட்டது. இந்நாள், இந்த இரவு, ஒரு வாய்ப்பு. நம் உள்வாங்கும் திறனை சிறிதளவேனும் உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பு இது. எண்ணங்கள், உணர்வுகள், முன்முடிவுகள் போன்றவற்றின் இடையூறின்றி வாழ்வை அணுகுவதற்கான வாய்ப்பு.

வெறும் கண்விழித்திருக்கும் ஒருநாளாக இல்லாமல் அதிதீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும். இயற்கையே வழங்கும் இந்த இணையில்லா வரத்தை நீங்கள் பயன்படுத்திக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசையும் அருளும். ‘ஷிவா’ எனும் சொல்லின் வீரியத்தையும், இணையில்லா தீவிரத்தையும், அழகையும், பேரானந்தத்தையும் நீங்கள் எல்லோரும் உணர்வீர்களாக!

நன்றி: ஈஷா

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 24, 2017 10:41 pm

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத்
ம்ரித்யோர்முக்ஷி யமாம்ரிதாத்

சிவனை நினையாத உள்ளமும் - ஞானத்தைத்
தராத கல்வியும், நல்லதற்கு
உதவாத செல்வமும் - எளியோரைக்
காக்காத வீரமும் இருந்தும் என்ன பயன்

ஆலயம் செல்லாத கால்களும்
இறைவனைத் தொழாத கைகளும்
சிவனை நினையாத உள்ளமும்
இருந்தும் என்ன பயன்

பக்தியுடன் பரமனைப் பணிந்து - ஈசனை
நெஞ்சில் நினைந்து - நமசிவாய
என ஐந்தெழுத்தை நாளும் சொல்லி
சிவனின் அருள் பெறுவோம்.

★ஓம் நம சிவாய★

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 24, 2017 10:42 pm

ன்னியாகுமரி மாவட்ட ஆலய விழாக்களில் எத்தனையோ சிறப்புகள்.
அவற்றில் குறிப்பிடத்தக்கது, சிவாலய ஓட்டம். முப்பது, நாற்பது பேர் மகாசிவ ராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில்,  சுமார் 120கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலயப் பெருமான்களை தரிசிப்பது. இந்தக் கோயில்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் தரி சிக்க வேண்டிய காலம் கருதியே ஓட்டம்! இந்த சிவாலய ஓட்டம் எப்படி ஆரம்பித்தது? புருடாமிருகம் பாதி மனித உருவம், மீதி புலி உருவமாக அமைந்த ஒரு பிறவி. ஆழ்ந்த சிவபக்தர். சிவனைத் தவிர, வேறு இறைவனை ஏற்கமாட்டார்.  

விஷ்ணு நாமம், இவருக்குக் கேட்க சகிக்காது! ஆனால் தானும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை அவருக்கு உணர்த்த விரும்பினார் பகவான் கி ருஷ்ணன்.
அவர் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனை அழைத்தார். நடைபெறவிருக்கும் குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், அந்த புருடா மிருகத்தின் உதவியும் தேவைப்படுகிறது. ஆகவே, அதனை சந்தித்து அதன் உதவியைக் கோரி வருமாறு அவர் பீமனை அனுப்பி வைத்தார். கூடவே, அவனிடம் 12 ருத்ராட்சங்களைத் தந்து, தன்னுடைய கோவிந்தா, கோபாலா என்ற பெயர்களை உச்சரித்தவாறே புருடா மிருகத்தை நெருங்குமாறும் சொன்னார். ‘‘என் பெயரைக் கேட்க விரும்பாத புருடா மிருகம், உன் மீது பாயும். நீ உடனே ஒரு ருத்ராட்சத்தை அந்த இடத்தில் போட்டுவிடு.

அது ஒரு சிவலிங்கமாக மாறிவிடும். அதனைக்  காணும் புருடா மிருகம், அந்த லிங்கத்துக்கு உரிய வழிபாட்டினை செய்த பிறகுதான் மறுவேலை பார்க்கும். அங்கிருந்து நீ ஓடிவிடு. பிறகு அது உன் னைத் துரத்தி வரும். அடுத்த இடத்தில் இன்னொரு ருத்திராட்சத்தைப் போடு. இதுவும் லிங்கமாக மாறும். புருடா மிருகமும் பூஜை செய்யத் தொடங்கி விடும். இப்படி பன்னிரண்டு இடங்களுக்கு ஓடி, ஓடி அதனை அலைக்கழித்தால் பன்னிரண்டாவது ருத்திராட்சம் விழும் இடத்தில் நான், பரமேஸ்வரனு டன் உங்கள் இருவருக்கும் காட்சி தருவேன்’’ என்று விளக்கி, பீமன் நடந்துகொள்ள வேண்டிய முறையைச் சொன்னார்.   பீமனும் அவ்வாறே செய்தான். அப்படி முதல் ருத்திராட்சம் விழுந்த இடம்தான் திருமலை. பன்னிரண்டாவது விழுந்த இடம் நட்டாலம்.

நட்டாலத்தில்  ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து, சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று புருடா மிருகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே உணர்த்தினார். புருடா மிருகத்தின் உதவியும் குருக்ஷேத்திர யுத்தத்திற்குக் கிடைத்தது. இப்படி கர்ண பரம்பரையாகச் சொல்லப்படும் கதையை ஒவ்வொரு மகாசிவராத்திரி அன்றும் ஒரு குழுவினர் பீமனுடைய பிரதிநிதியாக ஓடி, ஓடிச் சென்று அந்த சிவாலயங்களைத் தொழுகிறார்கள்.
இந்த சிவாலய ஓட்டத்தில் பங்குபெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர்.

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 24, 2017 10:43 pm

சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 4 மணி அளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு வழியில் ஏற்படக்கூடிய செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் எடுத்துக்கொள்வர். முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கிவிட்டு ஓட ஆரம்பிப்பர். இப்போதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள்.

நிறைவாக மும்மூர்த்திகளும் அருளும் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு ஓட்டத்தை முடிக்கிறார்கள். இது ஒரு பக்தி செலுத்தும் முறை. இதனால் என்ன பயன் கிட்டுகிறது என்ற எதிர்பார்ப்பைவிட வித்தியாசமாக ஏதாவது ஒரு முறையில் இறைவழி பாட்டை மேற்கொள்ளும் பக்தி உணர்வுதான் அவர்களிடம் நிறைந்திருக்கிறது. ஓடி ஓடிச் சென்று வழிபடப்படும் பன்னிரு சிவாலயங்கள் யாவை?

1. திருமலை

சிவாலய ஓட்டத்தினர், திருமலை எனும் திருத்தலத்தில் உள்ள ஈசனை முதலில் வழிபடுகிறார்கள். விளவங்கோடு தாலுகாவில், குழித்துறைக்கு தெற்கே, ஆறு கி.மீ. தொலைவில் மலை உச்சியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இக்கோயில். மூலவர், சூலபாணி என்று போற்றப்படுகிறார். இங் குள்ள கல்வெட்டு இவரை ‘முஞ்சிறை திருமலைத்தேவர்’ என்று அழைக்கிறது.

2. திக்குறிச்சி

தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இத்தலம், இரண்டாவது வழிபாட்டுத் தலம். சிவாலயங்களில் முக்கியத்துவம் பெறும் நந்தி, இந்தக் கோயிலில் காணக் கிடைக்காது. ஒருவேளை ஓடி ஓடி வந்து சிவ தரிசனம் பெற விழையும் பக்தர்களுக்கும், தன் ஐயனுக்கும் இடையே தான் தடையாக இருக்க அது விரும்பவில்லையோ! மூலவர், திக்குறிச்சி மகாதேவர். நாற்சதுரமண்டபக் கருவறையில் அருள்கிறார், இந்த ஈசன்.

3. திற்பரப்பு

முக்கண்ணனை தரிசிக்க ஓடும் ஓட்டத்தில் மூன்றாவது கோயில், திற்பரப்பு. மூலவர் உக்கிரமான தோற்றத்தோடு விளங்குவதால் ஜடாதரர் என்றும் வீர பத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். மேற்கு நோக்கிய ஆலயத்தில் நந்திதேவர் வடக்கு நோக்கித் திரும்பி அமைந்துள்ளார். குழித்துறைக்கு வடகி ழக்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் கோதையாற்றின் கரையில் அமைந்துள்ளது, இத்தலம்.

4. திருநந்திக்கரை

திருநந்திக்கரை நான்காவதாக வரும் ஆலயம். சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களில் முதல் நபர் இந்த ஆலயத்திற்கு வரும் நேரத்தைக் கணக்கில் கொண்டே இங்கு நடைபெறும் பத்துநாள் உற்சவத்திற்கான கொடியேற்றம் நிகழ்கிறது. மூலவர், நந்திகேஸ்வரர். மார்த்தாண்டத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு.

5. பொன்மனை

குலசேகரத்திலிருந்து சுருளக்கோடு செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்மனை பரமன் ஆலயம். தீம்பிலேஸ்வரர் என அழைக் கப்படும் மூலவர், தீங்குகளை விரட்ட வல்லவர். முகப்பு மண்டபத்தில், நந்தி படுத்த நிலையில் காணப்படுவது வித்தியாசமானது. நந்தி மண்டபத்தின் மேற்கூரையில் புராண நிகழ்ச்சிகளையும், நவகிரகங்களையும் மரச்சிற்பங்களாகக் காணலாம்.

6. பன்னிப்பாக்கம்

தக்கலை-சுருளக்கோடு பாதையில் 6 கி.மீ. தொலைவில் உள்ள ஆறாவது சிவத்தலம் பன்னிப்பாக்கம். கிராத மூர்த்தியாக விளங்கும் இறைவன், தீராத வினை
களைத் தீர்த்து நற்கதி வழங்குகிறார். பைரவருக்கு இந்தக் கோயிலில் தனி சந்நதி அமைந்துள்ளது.

7. கல்குளம்

ஏழாவதாக தரிசிக்கப்படும் இந்த ஆலயம் தனிச்சிறப்பு கொண்டது. ஓட்டத்தில் இடம்பெறும் 12 சிவாலயங்களில் இங்கு மட்டும்தான் இறைவிக்கு தனி சந்நதி அமைந்துள்ளது. இறைவன் நீலகண்ட சுவாமியாகத் திகழ்கிறார்; அம்பிகை ஆனந்த வல்லியாக அற்புதக் காட்சியருள்கிறாள். அன்னையின் தோற்றம் மதுரை மீனாட்சியை நினைவூட்டுகிறது. நாகர்கோவிலுக்கு வடமேற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது, இத்தலம்.

8. மேலாங்கோடு

எட்டாவதாக, மேலாங்கோடு. இது, வேளிமலை என்ற பகுதிக்கு அருகில் உள்ளது. பசுமையான வயல்வெளிக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த ஆல யத்தில் ஈசன், காலகாலராக திருக்காட்சி நல்குகிறார். இத்தலத்தின் காவல் தெய்வமான இசக்கியம்மன், சிவாலயத்தின் அருகிலேயே செண்பகவல்லியா கவும் நீலாப்பிள்ளையாகவும் தனித்தனியே கோயில் கொண்டிருக்கிறாள்.

9. திருவிடைக்கோடு

பத்மனாபபுரத்தின் கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, திருவிடைக்கோடு. சிவாலய ஓட்டத்தில் ஒன்பதாவது ஆலயம். இடைக்காடர் எனும் சித்தரின் பெயரால் இத்தலம் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். மூலவர், மகாதேவர் என்று வணங்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுகள், இவரை ‘கொடம்பீஸ்வரமுடைய நாயனார்’ என்கிறது. கோயில் ஆவணங்களில், ‘சடையப்பர்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஈசனுக்குதான் எத்தனை பெயர்கள்!

10. திருவிதாங்கோடு

பத்தாவது தரிசனத் தலம், திருவிதாங்கோடு. பரிதிபாணி என்றழைக்கப்படுகிறார் இந்தக் கோயில் ஈசன். தக்கலையின் தென்மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள ஆலயம் இது. இதன் தென் பகுதியில் கேரள பாணியில் அமைந்த ஆலயத்தில், மகா விஷ்ணுவை தரிசிக்கலாம்.

11. திருப்பன்றிக்கோடு

திருப்பன்றிக்கோடு பக்தவத்சலர் ஆலயம், பதினோராவது திருத்தலமாக விளங்குகிறது. விஷ்ணு தலம்போல பெயர் அமைந்திருந்தாலும் பக்தர்கள் இத் தல இறைவனை, திருப்பன்றிக்கோடு மகாதேவர் என்றே அழைக்கின்றனர். நாகர்கோவிலில் இருந்து வட மேற்கில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள் ளது இவ்வாலயம்.

12. திருநட்டாலம்

சிவாலய ஓட்டம் நிறைவு பெறும் தலம், திருநட்டாலம். நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ. தொலைவு. இங்குள்ள குளத்தின் இரு புறங்களிலும் இரு ஆலயங்கள் உள்ளன. கிழக்கு நோக்கியுள்ள ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரராக அருட்காட்சி வழங்குகிறார், ஈசன். எதிர்புறத்தில் உள்ள ஆலயத்தில், மகாவிஷ்ணு, சங்கரநாராயணராக அருள்கிறார்.

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 24, 2017 10:49 pm

ஹா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது...

அடியார்கள் ,சிவாச்சாரியார்கள் ,கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார் -கள் என்று புரிய வில்லை ..

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டது காரணம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும்.

உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.

வைகுண்ட ஏகாதேசியும் இந்த நோக்கம் தான் .

கோவில் என்ன சிற்றுண்டி கடையா ? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் சொல்வது.

மகாசிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு ? ..

மேலும் சிவ பெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர் ,
ஏகாந்தம் ;ஏகாந்தம் ;ஏகாந்தம் .முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி….

மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறை -களையும் ஓதலாம்.

சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 24, 2017 10:51 pm

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !

ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.

மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

தல வரலாறு:
கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.

இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.

தலபெருமை:
காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.

சுந்தரரருக்கு அருள்: கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.

பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.

சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.

தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம்(திருக்கச்சூர் - ஊன்றுகோல் , காஞ்சி - இடக்கண், திருவாரூர் - வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.

ஒற்றை மாமரம் :
ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது "திருமணகோலம்' என்கிறார்கள்.

அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் - ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.

இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.

நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்): திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.

தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும்.

ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள்.

கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் "கந்த புராணத்தை' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.

திருவிழா:
பங்குனி உத்திரம் பெருவிழா - 13 நாட்கள் நடைபெறும் - வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

பொது தகவல்:
மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.

இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

பிரார்த்தனை
இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 24, 2017 10:52 pm

ஓம் பைர ருத்ராய.,
மஹா ருத்ராய..,
கால ருத்ராய...,
கல்பாந்த ருத்ராய....,
வீர ருத்ராய.....,
ருத்ர ருத்ராய......,
கோர ருத்ராய........,
அகோர ருத்ராய.........,
மார்தாண்ட ருத்ராய........,
அண்ட ருத்ராய...........,
ப்ரமாண்ட ருத்ராய...........,
சண்ட ருத்ராய...............,
பிரசண்ட ருத்ராய.............,
தண்ட ருத்ராய.............,
சூர ருத்ராய.............,
வீர ருத்ராய.................,
பவ ருத்ராய....................,
பீம ருத்ராய.......................,
அதல ருத்ராய....................,
விதல ருத்ராய....................,
சுதல ருத்ராய......................,
மஹாதல ருத்ராய..............,
தசாதல ருத்ராய..................,
தலாதல ருத்ராய..................,
பாதாள ருத்ராய... நமோ நமஹ.....!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா!
       போற்றி…!
          போற்றி…!!
-
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 24, 2017 10:53 pm

சிவாலய பிரதட்சிண பலன்கள்.....

நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-

3 முறை செய்தால் - நினைத்தது நடக்கும்.
5 முறை செய்தால் - வெற்றி உண்டாகும்.
7 முறை செய்தால் - நல்ல குணம் ஏற்படும்.
9 முறை செய்தால் - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
11 முறை செய்தால் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
13 முறை செய்தால் - வேண்டுதல் நிறைவேறும்.
15 முறை செய்தால் - செல்வம் கிடைக்கும்.
17 முறை செய்தால் - செல்வம் பெருகும்.
108 முறை செய்தால் - அஸ்வமேத யாகப் பலன்.
1008 முறை செய்தால் -ஒருவருட தீட்சை யாகப்பலன்

தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தென்னாடுடைய சிவனே போற்றி...! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக