புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_m10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10 
48 Posts - 51%
heezulia
வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_m10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_m10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_m10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_m10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_m10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10 
48 Posts - 51%
heezulia
வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_m10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_m10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_m10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_m10வள்ளுவர் காட்டும் அம்மா ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் காட்டும் அம்மா !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 06, 2016 9:49 pm

"அம்மா " என்ற சொல் திருக்குறளில் இல்லையென்றாலும் " தாய் " , " அன்னை " , " ஈன்றாள் " ஆகிய சொற்களைப் பயன்படுத்துகிறார் . வள்ளுவர் மனைவி வாசுகியா என்பதில் கருத்து மாறுபாடு இருந்தாலும் ,வள்ளுவர் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றவர் என்பதும் , தாயின் மீது பெருமதிப்புக் கொண்டவர் என்பதும் தெரிய வருகிறது .

பெண்பிள்ளை வளர்ந்து பருவத்திற்கு வந்துவிட்டால் , தாயானவள் அவளைக் கண்கொத்திப் பாம்பாக இருந்து கவனிக்கவேண்டும் . வயிறாரச் சாப்பிடுகிறாளா , சரியாகத் தூங்குகிறாளா , நேரத்திற்கு வீடு வந்து சேருகிறாளா  , செல்போனில் தனியாக நீண்டநேரம் பேசுகிறாளா என்பதையெல்லாம் கண்காணிக்க வேண்டும். செல்போனில் தனியாக நீண்டநேரம் பேசினால் , ஒரு பெரிய தவறைச் செய்ய ஆயத்தமாகிறாள் என்று பொருள். மகள் தவறு செய்யும்போது , முதலில் கண்டுபிடிப்பவள் தாய்தான் . கண்டிப்பதும் தாய்தான் . ஆகவேதான் வள்ளுவர் ,  "தந்தை சொல் " என்று சொல்லாமல் " அன்னை சொல் " என்று சொன்னார் .

இதிலே வேடிக்கை என்ன தெரியுமா ?  அன்னையானவள் திட்டத் திட்ட , மகளின் காதல் பயிரானது செழித்து வளருமாம் ! பெண்ணின் காதல் ஊருக்குத் தெரிந்துவிட்டது . ஊரார் இவளின் காதலுக்குக் கண் , காது , மூக்கு வைத்துப் பேசி மகிழ்கின்றனர் ! " பாரடி ! இவள் கெட்ட கேட்டுக்கு பண்ணையார் வீட்டுப் பையனுக்கு வலை வீசி இருக்கிறாள் ! " என்றெல்லாம் புறம் பேசுகின்றனர் .  ஆனால் இதற்கெல்லாம் அந்தப் பெண் அசரவில்லை ! மீண்டும் தீவிரமாகக் காதலிக்கிறாள் !

ஊரார் பேசும் பேச்சுக்கள் எல்லாம் , அவள் காதல் பயிருக்கு உரமாக அமைகிறது ; அன்னையின் வசவுகள் எல்லாம் அப்பயிருக்கு நீராக அமைந்து , காதல் பயிர் ஜோராக வளர்கிறது . இப்போது குறளைப் பார்ப்போமா !

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய் . ( அலர் அறிவுறுத்தல் - 1147 )

மகள் காதல் வயப்பட்டுவிட்டாள் என்று தெரிந்தவுடனே தாயானவள் என்ன செய்யவேண்டும் .சட்டுபுட்டென்று திருமணத்தை முடித்துவிடவேண்டும் . தாமதிக்கும் ஒவ்வொருநாளும் அவளின் காதல் பயிரானது தீவிரமாக வளரும் . " பருவத்தே பயிர் செய் " என்ற பழமொழி செடிகளுக்கு மட்டுமல்ல ; மனிதர்களுக்கும் தான் ! ஆண்கள் விஷயத்தில் சற்று தாமதிக்கலாம் ; ஆனால் பெண்கள் விஷயத்தில் அப்படி இருக்கக்கூடாது . முற்றிய வெண்டைக்காயை யாரும் வாங்கமாட்டார்கள் . பெண்கள் முற்றிப்போனால் அழகு குன்றிப்போகும் ; திருமணச் சந்தையில் விலைபோக மாட்டார்கள் . இதைத்தான் வள்ளுவர் ," மிகநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று " என்பார்.

மகளை மட்டுமல்ல; மகனை வளர்க்கும் பொறுப்பும் தாய்க்கு உண்டு.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே !
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே !

என்ற புறநானூற்று வரிகள் இக்காலத்திற்குப் பொருந்தாது. மகனை வளர்த்து சான்றோனாக்கும் பொறுப்பு தாய்க்கும் உண்டு . பெற்றெடுத்த தந்தை வேலையின் பொருட்டு ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறான்; வேளா வேளைக்கு வீட்டிற்கு வருவதில்லை . இந்த நிலையில் தாயின் பொறுப்பு மிகவும் அதிகமாகிறது.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் . ( மக்கட்பேறு- 69 )

இந்த குறளுக்கு வள்ளுவரின் நெஞ்சத்தை அறியாமல் , பரிமேழலகர் உரை எழுதிய காரணத்தால் வசமாக மாட்டிக்கொண்டார் . புலவர்களும் , பண்டிதர்களும் அவரைக் காய்ச்சி எடுத்துவிட்டனர் .

அப்படி அவர் என்ன சொல்லிவிட்டார் ?

பெற்றெடுத்த தாய்க்கு மகனைப் பற்றி அறிந்துகொள்ளும் சுயபுத்தி இல்லை என்று சொல்லிவிட்டார் . காரணம் அவள் ஒரு பெண் என்று சொல்லி பெண் இனத்தை இழிவு செய்துவிட்டார் என்பது அவர்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு . உரையை அவர் வாயாலேயே கேட்போமா !

“ பெண்ணியல்பால் தானாக அறியாமல் கேட்ட தாய் " என சிறப்பு  உரையில் கூறியுள்ளார்.

அதாவது பெண்ணிற்கு கல்வி, கேள்விகளால் வரும் அறிவில்லை எனவும் அதனால் தாய் தன் மகன் சான்றோனாய்த் திகழும் சிறப்பைத்  தானே அறிய மாட்டாள் எனவும் ஊர்ப்பெரியோர் வாயிலாகக் கேட்டே அறிவாள் எனவும் , அவ்வுரை கேட்டமையால் பெரிதும் மகிழ்வாள் எனப்  பரிமேலழகர் உரைக்கிறார்.  இது முற்றிலும் வள்ளுவத்திற்கு எதிரான கருத்து ஆகும்.

மகனைச் சான்றோன் ஆக்கியபின் , அவனுக்குத் திருமணம் செய்வது பெற்றோர் கடமை . அத்துடன் பெற்றவர்கள் கடமை முடிந்துவிடுகிறது . அடுத்து மகனின் கடமை தொடங்கிவிடுகிறது .

தன்னை ஈன்றெடுத்த தாயைக் காப்பது , தனயனின் தலையாய கடன் . பாலூட்டி , சீராட்டி வளர்த்த தாயை , அவளுடைய கடைசி காலத்தில் சோறூட்டி காப்பாற்ற வேண்டியது , மகனின் கடமையாகும் . மூன்று வேளையும் வயிற்றுக்குச் சோறிடவேண்டும் . எப்பாடு பட்டாவது அவள் பசியைப் போக்கவேண்டும் .

கையில் காசில்லையே ! என்ன செய்வது ?

காசில்லைஎன்றால் திருடியாவது அவள் பசியைப் போக்கவேண்டும் .

திருடுவது தப்பில்லையா ?

இல்லை என்கின்றன அறநூல்கள் .

இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக' என்னும் அறநூற்பொது விதி .

ஆனால் வள்ளுவரோ இந்த அறநூற் பொதுவிதியை ஏற்க மறுக்கின்றார் . பசியால் பெற்ற தாய் வருந்துவதாக இருந்தாலும் , சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதே ! அவளுக்கு உன் உழைப்பால் வந்த பணத்தில் சோறிடு ! அதுவே அவளுக்கு மகிழ்வைத் தரும் .

ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. ( வினைத்தூய்மை-656 )

கட்டிய மனைவி , பெற்ற பிள்ளைகள் பசியால் வருந்துவதாக இருந்தாலும் , சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதே என்று வள்ளுவர் கூறவில்லை; மாறாக

பெற்ற தாய் பசியால் வருந்துவதாக இருந்தாலும் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதே என்று கூறுவதன் மூலமாகத் தாயின் மீது வள்ளுவர் கொண்ட மதிப்பை நாம் அறிகிறோம் .

தாய் , மகனுக்கு ஒரு கஷ்டம் என்றால் நெஞ்சு பொறுக்கமாட்டாள் . மகனுக்கு தொழிலில் நஷ்டம்; கொடுத்த கடன் வரவில்லை; வாங்கிய கடனுக்குக் கடன்காரர்கள் நெருக்குகிறார்கள் . மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை . கட்டிய மனைவி சீர் கொண்டுவந்த நகைகளைத் தரமுடியாது என்று சொல்லிவிட்டாள் .

ஆனால் தாயால் அப்படி இருக்கமுடியுமா ?   "தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் " என்பதுபோல நெஞ்சம் பதறுகிறாள். மகனைப் பார்த்து,

' அப்பா ! கவலைப்படாதே ! இந்தா ! இந்த நகைகளை எடுத்துக்கொள் ! எனக்குப் பின்னால் இவையெல்லாம் உனக்குத்தானே ! அது இப்போது ஒரு கஷ்டத்துக்கு உதவட்டுமே ! " என்று சொல்வதுதான் தாயுள்ளம் .

அதே மகனுக்கு வறுமை வேறு விதத்தில் வந்தால் ?

மகன் குடித்துவிட்டு கும்மாளம் போடுகிறான் ; வேசியர் வீட்டுக்குச் சென்று வருகிறான் ; பெரும்பொருள் தொலைத்துவிட்டான் ; தீராத வறுமை வந்துவிட்டது .

இந்தநிலையில் அதே தாய் என்ன செய்வாள் ? தன்னிடம் உள்ள நகைகளைக் கொடுப்பாளா ? நிச்சயம் கொடுக்கமாட்டாள் ; மகனின் கண்ணில் படாதவாறு மறைத்துவைப்பாள்.

ஏனென்றால் இந்த வறுமை தானாக வந்ததல்ல ; அவனாகத் தேடிக்கொண்டது ! அறத்திற்கு முரணானது . எனவே அவனை மகனாகப் பார்க்கமாட்டாள் ; ஒரு அந்நியனாகவே பார்ப்பாள் .

அறஞ்சார நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும் . ( நல்குரவு -1047 )

இவைதான் வள்ளுவர் காட்டும் அம்மா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக