புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_lcapமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_voting_barமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்...

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Mar 04, 2016 4:41 pm

எண்பத்தொரு வயதான ஒரு டாக்டர்,நோயாளிகளுக்கு தொண்டு செய்வதே என் பாக்கியம் என்று வாரத்தின் ஏழு நாளும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும் ஆனால் அதுதான் உண்மை.
அடுத்து ஒரு உண்மை அவர் பார்க்கும் வைத்தியத்திற்கு காசு என்று கைநீட்டி வாங்குவது இல்லை போகும்போது ஐந்து ரூபாயை மேஜையின் மீது வைத்துவிட்டு செல்கின்றனர், அதுவும் இல்லாதவர்கள் 'நன்றி' என்று சொல்லி கும்பிடு மட்டும் போட்டுவிட்டு செல்கின்றனர்.

இந்தக்காலத்தில் இப்படி ஒரு டாக்டரா? யார் அவர்?என்ற கேள்விக்கு விடையாக நிற்பவர்தான் டாக்டர் வி.ராமூர்த்தி.

மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... Gallerye_173522387_1468229

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு மணிக்கூண்டு அருகில் உள்ள டாக்டர் ராமமூர்த்தி கிளினிக்கில்தான் இந்த அதிசயம் கடந்த ஐம்பத்தெழு ஆண்டுகளமாக நடந்தேறிவருகிறது.

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவரான இவர் இந்த குடும்பங்களின் முதல் படிப்பாளி முதல் பட்டதாரி முதல் டாக்டர் எல்லாம்.
படிப்பு மிகவும் பிடித்து போனதால் பல கிலோ மீட்டர் துாரம் உள்ள பள்ளிக்கு நடந்தே சென்று படிப்பார்.இவர் 58ம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவம் முடித்த கையோடு மயிலாடுதுறை வந்து கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டியர்தான் இன்று வரை கிழே வைக்கவில்லை.

மிகவும் சிரமமான பின்னனியில் இருந்து வந்தவர் என்பதால் ஏழைகளின் கஷ்டம் என்ன என்பது இவருக்கு நன்கு தெரியும் ஆகவே மருத்துவத்திற்காக அதிகம் பணம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆரம்பகாலத்தில் ஒரு ரூபாய்தான் வாங்கிக்கொண்டு இருந்தார் அது கூட இவர் கைநீட்டி எப்போதுமே வாங்குவது இல்லை போகும் போது மேஜை மீது வைத்துவிட்டு போய்விடுவர்.அதுதான் இன்று ஐந்து ரூபாய் அளவிற்கு உயர்ந்து இருக்கிறது.

ஒரு வேளை சாப்பாடு , இரவு இரண்டு இட்லி இதற்கு இந்த ஐந்து ரூபாயே அதிகம் ஆகவே கிராமத்தில் இருந்து வருபவர்கள் பலருக்கு பஸ், சாப்பாட்டுக்கு பணம் கொடுத்து அனுப்புவதும் உண்டு.

எளிமையாக இருப்பதும் இனிமையாக பேசவதும்தான் இவரது அடையாளம்,அன்பும் பாசமும்தான் இவரது முதல் மருத்துவும்.மருந்து,மாத்திரைகள் எல்லாம் பிறகுதான்.எப்போதும் நான்கு முழ வேட்டியும் கைவைத்த பனியனும்தான் அணிந்திருப்பார், வெளியில் போனால் மட்டும் சட்டை அணிந்து கொள்வார்.

ஐம்பத்தெழு ஆண்டுகால அனுபவம் காரணமாக ஒரு நோயாளியிடம் ஐந்து நிமிடம் பேசிய உடனேயே நோயாளியின் பிரச்னையை தெரிந்து கொள்வார் இரண்டு நாளைக்கு மட்டுமே மாத்திரைகள் எழுதிக்கொடுப்பார் தொன்னுாறு சதவீதம் ஊசி போடுவது கிடையாது.அவர் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகளும் விலை மிகக்குறைவாகும் இரண்டு நாளைக்கு வாங்கினாலும் இருபது ரூபாய்தான் பில்வரும்.மாத்திரை சாம்பிள்கள் இருந்தால் அதையும் இலவசமாக தந்துவிடுவார்.நம்மால் முடியாது, பிரச்னை தீவீரமாக இருக்கிறது என்றால் மட்டும் எங்கே போகவேண்டும் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டிவிடுவார்.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடுவார் காலை 8 மணி முதல் இரவு 9 மணிவரை இடைவிடாமல் நோயாளிகளை கவனித்துவந்தவர் இப்போது மதியம் இடைவௌிவிட்டு பார்க்கிறார்.தொழில் பொழுது போக்கு எல்லாமே இவருக்கு மருத்துவம்தான்.ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான மருத்துவர்கள் விடுமுறையில் இருப்பதால் அன்று அவசியம் இவர் கிளினிக்கில் இருப்பார்.

மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் யாருக்கு என்ன உடல் பிரச்னை என்றாலும் முதலில் செல்வது ராமமூர்த்தியிடம்தான் இதனால் அவரை தெரியாதவர்கள் யாரும் கிடையாது, அவருக்கு தெரியாதவர்களும் யாரும் கிடையாது.

எளிமையின் உறைவிடமான காமராஜரே என் எளிமையைப் பார்த்து பாராட்டிவிட்டு சென்றார் அதைவிட பெரிய பாராட்டு பதக்கம் எதுவும் தேவையில்லை.வைத்தீஸ்வரன் அருளாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத என் மனைவி நீலாவின் அன்பாலும் இன்னும் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் என்னைத்தேடிவரும் ஏழை மக்களுக்காக இரங்குவேன்... இயங்குவேன்.

மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்... Manidham_1971074h
டாக்டர் ராமமூர்த்தியிடம் பேச விரும்புபவர்களுக்கான எண்:04364-223461.

(இவரைப்பொறுத்தவரை நோயாளிகளின் நலன்தான் முக்கியம் போன் அழைப்பு என்பது அவ்வளவு முக்கியம் இல்லை ஆகவே அவர் உடனே போனை எடுக்காவிட்டால் யாரோ எளிய கிராமத்து நோயாளியை கவனித்துக்கொண்டு இருக்கிறார் என்பதாக எடுத்துக்கொண்டு பொறுமையாக இடைவெளிவிட்டு திரும்ப முயற்சிக்கவும்.)

-எல்.முருகராஜ்.
தினமலர்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பணம், காசு என அலையும் இந்த காலத்திலும் பணத்தை ஒரு பொருட் டாகப் பார்க்காமல் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு மனிதநேயத்துடன் மருத்துவம் பார்த்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் வி. ராமமூர்த்தி.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் வசித்து வரும் இவருக்கு சொந்த ஊர் முடிகொண்டான் கிராமம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது வயது 79. மயிலாடுதுறையில் அதே இடத்தில் 1959-ம் ஆண்டு முதல் மருத்துவம் பார்த்துவரும் இவரை தெரியாதவர்கள் அந்த ஊரில் யாரும் இருக்க முடியாது.

இன்றும் அதே துடிப்புடனும் அக்கறையுடனும் சிகிச்சைக்கு வருபவர்களை அணுகி மருத்துவம் செய்கிறார். சிகிச்சை பெற கட்டணமாக இவ்வளவு தர வேண்டுமென இவர் கேட்பதில்லை. அவர் பணத்தை கைநீட்டியும் வாங்குவதில்லை. தங்களால் எவ்வளவு முடியுமோ (ரூ.5 அல்லது ரூ.10 தான்) அவரது மேஜை மீது வைத்துச் செல்லலாம். காசு இல்லை என்றாலும், போயிட்டு வா என தோளைத் தட்டி அனுப்பி விடுவார். இவர் எழுதும் மருந்துகளும் ரூ.20 அல்லது ரூ.30-க்குள்தான் இருக்கும்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்தால் நீ எந்த ஊரு, என்ன படிக்கிற, எங்க தங்கியிருக்கிற என வாஞ்சையோடு விசாரித்து விட்டு, ஊருக்கு செல்ல செலவுக்கு பணம் வைத்திருக்கியா, இந்தா இதை வைச்சுக்கோ என ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்து அனுப்புவார் டாக்டர் ராமமூர்த்தி.

எப்படி உங்களால் இது முடிகிறது என அவரிடமே கேட்டதற்கு அவர் “தி இந்து” நிருபரிடம் கூறியது:

சென்னை மருத்துவக் கல்லூரியில்தான் மருத்துவம் படித்தேன். அங்கு பேராசிரியர்களாக இருந்தவர்கள் மருத்துவத் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். இவர்கள் யாரும் தனியாக கிளினிக் வைத்து பணம் சம்பாதித்தவர்கள் அல்லர். இவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம் மருத்துவத்தை மனிதாபிமான அடிப்படையில் செய்யுங்கள், பணத்துக்காக செய்யக் கூடாது என்பதுதான்.

ஏழைகளிடம் காசு வாங்காதே, ஒத்தாசையாக இரு என 45 ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சி மகா பெரியவர் கூறினார். அதை இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.

என்னிடம் வரும் மக்கள் பாசத்துடன் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்கிறேன். மருத்துவத் தொழில் இன்று அப்படி இல்லை. பணம் கொடுத்துதான் மருத்துவராக வேண்டியிருக்கிறது. அந்த பணத்தை திரும்ப சம்பாதிக்க மக்களிடம் பணம் அதிகமாக வாங்க வேண்டியிருக்கிறது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 20 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோருக்கு லட்சக்கணக்கான கையொப்பங்களை (அட்டெஸ்டெட்) இலவசமாகவே போட்டிருக்கிறேன்.

நான் பெற்ற பெரும் பாக்கியமே எனது மனைவி நீலாதான். எனது மனிதாபிமான சேவைக்கு எனது மனைவியும் முக்கிய காரணம். திருமணமானதிலிருந்து இதுவரையில் பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென அவர் கேட்டதில்லை. அதனால்தான் மருத்துவத் தொழிலை சேவையாக செய்ய முடிகிறது. நான் சொத்துகள் எதுவும் சேர்க்கவில்லை, ஆனால் ஏழை மக்களின் பாசத்தைத்தான் சொத்தாக சேர்த்துள்ளேன்.

எனது மகன் சீனிவாசன் மருத்துவம் படித்துவிட்டு சென்னையில் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறையிலிருந்து வருகிறோம் என யார் சென்றாலும், அவர்கள் மீது தனி அக்கறை எடுத்து மருத்துவம் செய்கிறார். பலரும் இங்கு வந்து அதை என்னிடம் சொல்லும்போது எனக்கு பெருமையாக இருக்கும். அவன் கார் வாங்கியுள்ளான், பங்களா வாங்கியுள்ளான் என்பதில் எனக்கு திருப்தி இல்லை. அவனும் ஏழைகளுக்கு உதவுகிறான் என்பதில்தான் எனக்கு திருப்தி என்றார் மனிதநேய மருத்துவர் ராமமூர்த்தி.

-தி இந்து தமிழ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Mar 04, 2016 4:52 pm

மயிலாடுதுறையை சேர்ந்தவன் என்ற முறையிலும்  , ரெண்டு ரூபா டாக்டர் என்று நாங்கள் பள்ளி & கல்லூரியில் படிக்கும் காலத்தில் பெயர் பெற்ற ஐயா ராமமூர்த்தி அவர்களிடம் சிகிச்சை பெற்ற கோடிக்கணக்கானவர்களில் ஒருவன் என்ற முறையிலும் இந்த பதிவை பகிர்வதுக்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

"கால்பந்து , கிரிக்கெட் அல்லது எந்த விளையாட்டிலும் சுளுக்கு அல்லது அடிபட்டு இரத்தம் வந்தாலும் முதலில் பள்ளி மாணவர்களாகிய நாங்கள் ஓடுவது ராமமூர்த்தி அவர்களிடம் தான் , அப்போது அவர் வாங்குவது (வாங்குவது கிடையாது , மக்கள் சாமிக்கு உண்டியலில் போடுவது போல வைத்துவிட்டு வருவது) இரண்டு ரூபாய் தான் என்றாலும் மைதானத்தில் இருந்து மிதிவண்டியில் அடிபட்டவனை அழைத்து செல்லும்போது அப்போது அது கூட எங்களிடம் இருக்காது, ஆனாலும் நம்பிக்கையுடன் செல்வோம்.

பார்த்து , மாத்திரை எழுதி கொடுத்து (பல நேரம் அவரே கொடுத்துவிடுவார்) விட்டு அடுத்த ஆளை பார்க்க ரெடியாகிவிடுவார் நாங்கள் நன்றி என்று சொல்வதோடு சரி...

ஐயா ராமமூர்த்தி அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 04, 2016 5:46 pm

ஐயா ராமமூர்த்தி அவர்களின் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 04, 2016 8:14 pm

அருமையான தகவல் .
இப்பிடியும் ஒருவரா என்று கேட்க தோன்றினாலும் ,
திருச்சியிலும் ,காந்தி மார்கெட் பக்கத்தில் ஒரு டாக்டர் இருந்தார் . 1960...களில்
இப்போது இருக்கிறாரா என்று தெரியாது ?
இவரும் யாரிடமும் காசு வாங்க மாட்டார் . அவர் மேஜையில் ஒரு உண்டி மாதிரி  பெட்டி இருக்கும் .
கூட்டமென்றால் எப்போதும் கூட்டம் . முடிந்தவர்கள் 2 ரூபாய் போட்டு விட்டு போவார்கள் .
போடாவிட்டாலும் இவர் கண்டுக்கமாட்டார் . Dr subbiah என்று நினைவு .
பொது உடைமை தத்துவவாதி என்றும் இவரைப் பற்றிக் கூறுவார் .
இவருக்கும் ஒரு நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Mar 05, 2016 5:15 am

இந்த காலத்திலும் இப்படி ஒருவரா ? ரொம்ப சந்தோஷம் .

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Mar 05, 2016 5:28 am

எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அளிப்பாராக சேவை செய்ய...வணங்குவோம் அன்பரே.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 05, 2016 7:05 pm

டாக்டர் ராமமூர்த்தி அவர்களின் தொண்டுள்ளத்தை பாராட்டுவோம்...
-
:வணக்கம்:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 06, 2016 3:12 pm

அனைவருக்கும் நன்றி ,
பாலாஜி wrote:ஐயா ராமமூர்த்தி அவர்களின் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை .
நீங்க இவரை பார்த்துள்ளீர்களா தல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Mar 06, 2016 4:49 pm

ராஜா wrote:அனைவருக்கும் நன்றி ,
பாலாஜி wrote:ஐயா ராமமூர்த்தி அவர்களின் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை .
நீங்க இவரை பார்த்துள்ளீர்களா தல

இல்லை தல ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 06, 2016 4:57 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:அனைவருக்கும் நன்றி ,
பாலாஜி wrote:ஐயா ராமமூர்த்தி அவர்களின் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை .
நீங்க இவரை பார்த்துள்ளீர்களா தல

இல்லை தல ....
மணிகூண்டு பக்கத்தில் , புதிய காளியாகுடி Hotel எதிர்புறம் இருப்பார் தல ..

எனக்கு இந்த பதிவை whatsappil பார்த்ததும் நினைவுகள் அப்படியே பள்ளிகாலத்திற்கு சென்றுவிட்டது புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக