புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
2 Posts - 2%
prajai
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
2 Posts - 2%
Barushree
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
1 Post - 1%
Rutu
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
1 Post - 1%
mini
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
1 Post - 1%
Guna.D
குவளையின் கர்வபங்கம்   Poll_c10குவளையின் கர்வபங்கம்   Poll_m10குவளையின் கர்வபங்கம்   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குவளையின் கர்வபங்கம்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 6:28 pm

அது ஓர் அழகிய தடாகம்.அந்தத் தடாகத்தில் தாமரையும்,அல்லியும்,குவளையும் பூத்துக் குலுங்கின.அருகருகே இருந்த அல்லியும்,தாமரையும் பேசிக்கொண்டன.

" தாமரை அக்கா! நேற்று இங்கு வந்து குளக்கரையில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தாயா?"

" பார்த்தேன்! அப்பப்பா! என்ன அழகு!! அவளைப் போன்ற அழகியை இதுவரையில் நான் பார்த்ததேயில்லை."

"மை தீட்டிய கண்களில்தான் எத்தனை கவர்ச்சி!'

" உண்மைதான் அல்லி! "கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான்" என்று கண்களைப் பற்றி வள்ளுவர் கூறியது உண்மைதான் என்று அவளுடைய கண்களைப் பார்த்தபிறகு தான் தெரிந்துகொண்டேன்."

"அவளுடைய கரிய விழிகளைப் பார்த்தபோது பழைய திரைப்படப்பாடல் ஒன்று என் நினைவுக்கு வந்தது அக்கா!"

"என்ன பாடல் அது?"

"இமையென்னும் சிறகை அடிக்கடி விரிக்கும்
இருவிழிக் கருவண்டு" என்பதுதான் அந்தப் பாடல்.

"ஆகா! அற்புதமான கற்பனை! அழகான உவமை!! அவளுடைய மருண்ட பார்வையைப் பார்க்கும்போது மான்விழி என்று சொல்லத் தோன்றுகிறது.துள்ளும் விழிகளைப் பார்க்கும்போது கயல்விழி என்று சொல்லத் தோன்றுகிறது."

"கொஞ்சம் வாயை மூடுகிறீர்களா?"என்ற அதட்டலான குரல்கேட்டு அல்லியும், தாமரையும் திரும்பிப் பார்த்தனர்.அங்கே குவளைமலர் கம்பீரமாக நின்றிருந்தது.

"அந்தப் பெண்ணுக்குக் குவளைமலர் போன்ற கண்கள் என்று சொன்னால் நீங்கள் குறைந்தா போய்விடுவீர்கள்? என் அழகைக் கண்டு உங்களுக்கெல்லாம் பொறாமை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்னைப் பெண்களின் கண்களுக்கு ஒப்பிட்டுப் பாடியுள்ளார். அந்தப் பாட்டைச் சொல்லவா?"

"என்ன பாடல் அது?"

"தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏந்தக்
குவளைக்கண் விழித்து நோக்க
தெண்டிரை எழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம் வீற்றிருக்கும் மாதோ.

என்பதுதான் அந்தப் பாடல். மருத நிலத்தைப் பெண்ணாக உருவகம் செய்து கம்பர் பாடிய இந்தப் பாடலில், "குவளைக்கண் விழித்து நோக்க" என்று பாடி என்னைப் பெருமைப் படுத்தியுள்ளார்."

அந்த சமயத்தில் நேற்றுவந்த அந்தப் பெண் குளக்கரையில் வந்து அமர்ந்தாள்.மூன்று பூக்களும் அவளுடைய கண்களையே பார்த்துக்கொண்டிருந்தன.வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.சிறிது நேரத்தில் அப்பெண் எழுந்து போய்விட்டாள்.

"குவளை அக்கா! அவளுடைய கண்களைப் பார்த்தீர்களா?"

குவளை மலரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாமல் போகவே அல்லியும், தாமரையும் திரும்பிப் பார்த்தன.

அங்கே, அதுவரையில் நீண்டு நிமிர்ந்திருந்த குவளை மலரானது கூனிக் குருகிப்போய்
தலை குனிந்து தரையைப் பார்த்தபடி இருந்தது.

குவளையைப் பார்த்து தாமரையும் , அல்லியும் , " என்ன பேச்சு மூச்சையே காணோம் ? " என்றன !

உடனே குவளை  ," என்னுடைய கர்வத்திற்குச் சரியான மரண அடி கொடுத்து விட்டாள் அந்தப் பெண் !  " என்றது .



காணின் குவளைக் கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழைக்கண் ஒவ்வேம் என்று. ( குறள்-1114)

கருத்து: அவளுடையக் கண்களைப் பார்த்தால் குவளை மலரானது,"இவளுடைய கண்களுக்கு நாம் நிகராகமாட்டோம்" என்று கூறி வெட்கித் தலை குனியும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 9:03 pm

கற்பனை ...கற்பனை ...என்னே கற்பனை .!.

காரப்பாக்க கவியே ,
கம்பனை கண்ணில் நிறுத்தி ,
குறளை மனதில் நிறுத்தி ,
குவளையை தலை குனிய வைத்தீரே !!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 9:12 pm

குவளையின் கர்வபங்கம்   PmCLZcvTRc2esnqU7JHn+80_Meena-new-stills-12

இதை விட சிறந்த கண்ணழகி படம் ,
ஆஸ்தான புகைப்பட கலைஞர் வெளியிடுவார் புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 9:16 pm

ஐயா !

நான் கவி அல்ல ! யாப்பிலக்கணம் முறையாகக் கற்றவனும் அல்ல ! இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவன் அவ்வளவே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 9:28 pm

இலக்கியத்தில் வெறும் ஈடுபாடு இல்லை .
ஆழ்ந்த, தீவிர ஈடுபாடு .
அதனால்தால்
கம்பனையும் , வள்ளுவரையும் , திரை உலகையும்
அளவாக சேர்த்து அழகாக தருகிறீர்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 9:33 pm

T.N.Balasubramanian wrote: கற்பனை  ...கற்பனை  ...என்னே கற்பனை .!.

காரப்பாக்க கவியே ,
கம்பனை கண்ணில் நிறுத்தி ,
குறளை மனதில் நிறுத்தி ,
குவளையை தலை குனிய வைத்தீரே  !!

மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப ரொம்ப சரியாக சொல்லி இருக்கீங்க ஐயா,
.
.
.
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே இல்லை, ஆச்சர்யத்தில் மலைத்துவிட்டேன் ஜகதீசன் ஐயா .................... குவளையின் கர்வபங்கம்   3838410834 குவளையின் கர்வபங்கம்   3838410834 குவளையின் கர்வபங்கம்   3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 9:35 pm

M.Jagadeesan wrote:ஐயா !

நான் கவி அல்ல ! யாப்பிலக்கணம் முறையாகக் கற்றவனும் அல்ல ! இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவன் அவ்வளவே !
மேற்கோள் செய்த பதிவு: 1193950

மிக மிக அழகிய பதிவு ஐயா............வேறு என்ன சொல்ல, மிகவும் ரசித்து படித்தேன் புன்னகை .............. குவளையின் கர்வபங்கம்   3838410834 குவளையின் கர்வபங்கம்   3838410834 குவளையின் கர்வபங்கம்   3838410834 குவளையின் கர்வபங்கம்   103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 9:36 pm

கிருஷ்ணம்மாவின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக