புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_m10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_m10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_m10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_m10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_m10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_m10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_m10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_m10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_m10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_m10கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 2:07 pm

கும்பகோணம், ஜன.28–
-
கும்பகோணம் மகாமக விழா: பிப்ரவரி 1-ந்தேதி கொடியேற்றம் 005aViDISeizadPz2H27+3e62925a-50dd-4dc5-81a4-7864c1f2690a_S_secvpf.gif
-

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் பெருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும்.

இந்த விழா அடுத்த மாதம் 13–ந் தேதி தொடங்கி 22–ந் தேதி வரை நடைபெறுகிறது. 13–ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது. அன்று முதல் 22–ந் தேதி வரை புனித நீராடலாம் என ஆதீனங்கள் தெரிவித்து உள்ளனர்.

வட மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளா போல் கும்பகோணம் மகாமக விழாவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆன்மீக திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் கலந்து கொள்வார்கள்.

சுமார் 45 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி கும்பகோணத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கும்பகோணம் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகப் பெருவிழா, வருகிற 22–ந் தேதி சூரியன் கும்பராசியிலும், குரு சிம்மராசியிலும் வரும்போது பவுர்ணமி திதியில் மாசி மாத மக நட்சத்திரம் அன்று இடப லக்னத்தில் சேரும் புனித நாளில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் 14 உலகங்களிலும் உள்ள தேவர்கள் யாவரும் புனித நீராட வருகிறார்கள் என்பது வரலாறு.

இறைவனுடைய உபதேசங்களே வேத சாஸ்திரங்கள். அவைகளில் மனிதர்களின் பாவங்களைப் போக்கிக் கொள்ள பல வழிகள் கூறப்பட்டுள்ளன. அவ்வழிகளில் தீர்த்த ஸ்நானம் மிகச் சிறந்த ஒன்றாகும். அதிலும் மகாமகத் தினத்தன்று மகாமகக் குளத்தில் புனித நீராடுதலுக்கு ஈடானது ஒன்றுமில்லை. இப்புனித மகாமகம் நடைபெறுவதற்கான புராண வரலாறு ஒன்று உண்டு.

ஒரு சமயம் கங்கை முதலான ஒன்பது புண்ணிய நதிகள் ஒன்றுசேர்ந்து கயிலாய மலை சென்று சிவபெருமானை வணங்கி, எங்களிடத்தில் மகாபாவிகளும், மிகப்பெரிய பாதகங்களைச் செய்தவர்களும், நீராடி எல்லா பாவங்களையும் எங்களிடம் விட்டுவிட்டு நற்கதி அடைந்து வருகிறார்கள். எங்களிடம் விட்ட பாவங்களை நாங்கள் எங்கு சென்று போக்கிக் கொள்வது என்று கேட்டார்கள்.

அப்போது இறைவன் தீர்த்த தேவதைகளிடம் திருக்குடந்தையில் (கும்பகோணத்தில்) மகாமகத்தன்று மகாமகக் குளத்தில் நீராடுங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகுவதோடு, அவர்களிடமிருந்தும் பாவங்கள் விலகிவிடும் என்றார்.

உடனே 9 தீர்த்தங்களும் கன்னிகை வடிவெடுத்து குடந்தை வந்து மகாமகக் குளத்தில் புனித நீராடி வடகரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இந்த மகாமக தீர்த்தத்தை ஒரு தடவை வணங்கினால் எல்லா தேவர்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

இந்த மகாமகக் குளத்தை ஒருமுறை சுற்றி வந்தால் இந்த பூமியை 100 முறை சுற்றிய புண்ணியம் கிடைக்கும். இந்த மகாமகக் குளத்தில் ஒரு தடவை நீராடினால் கங்கைக் கரையில் 100 ஆண்டுகள் வாழ்ந்து 3 காலமும் நீராடிய பலன் கிடைக்கும்.

இந்த புண்ணிய நாளில் மகாமகக் குளத்தில் வடபுறத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு தனது கோத்திரம், மனைவியின் கோத்திரம், உள்ளிட்ட 7 கோத்திரங்களையும் சேர்ந்தவர்கள் (7 தலைமுறைகளுக்கு) நற்கதி அடைவர்.

வடபுறத்தில் உள்ள கிணற்றில் மகாமகத்தன்று காசியிலிருந்து கங்கை வருகிறது. அங்கு பல குமிழிகள் இடப லக்னத்தில் ஏற்படுவதைக் காணலாம்.

மகாமக குளத்தில் உள்ள தீர்த்தங்கள்:–

வாயு தீர்த்தம், கங்கா தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், யமுனை தீர்த்தம், குபேரத் தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், ஈசானிய தீர்த்தம், நர்மதை தீர்த்தம், இந்திர தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அக்னி தீர்த்தம், காவேரி தீர்த்தம், யம தீர்த்தம், குமரி தீர்த்தம், நிருதி தீர்த்தம், கிருஷ்ணா தீர்த்தம், தேவ தீர்த்தம், வருண தீர்த்தம், சரயு தீர்த்தம், கன்னிகா தீர்த்தம்

மகாமகக் குளத்தின் பரப்பளவு 6 ஏக்கர் 2813 சதுர அடியாகும். இதனைச் சுற்றியுள்ள 16 சன்னதிகள் சோடசமகாலிங்க சுவாமி என்று அழைக்கப்படுகிறது. அவற்றில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சோடசமகாலிங்க சுவாமி கோவில், கும்பகோணம் நகர் காசிவிஸ்வநாத சுவாமி கோவிலின் துணை ஆலயமாகும்.

இத்திருக்குளத்தை மகாமகக் குளம், மகாமகத் தீர்த்தம், கன்னிகா தீர்த்தம், அமுதவான தீர்த்தம் என அழைப்பர். புண்ணிய காலத்தில் புனித நீராடும் வகையில் இத்திருக்குளத்தில் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.

மகாமகக் குளத்தில் நீராடும் முன் காவிரியில் சங்கல்பம் செய்து நீராட வேண்டும். மகாமகத்தன்று காசிவிசுவநாதர், அபிமுகேஸ்வரர், ஆதிகும்பேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர் ஆகிய 12 சைவத் தலங்களுக்கும், சாரங்கபாணி, ராமசாமி, ஹனுமார், சரநாராயணப் பெருமாள், ஆதிவராகப் பெருமாள், ராஜகோபால சுவாமி கோவில், சக்கரபாணி பெருமாள் ஆகிய 7 வைணவத் தலங்களுக்கும் சென்று வணங்குவது அதிக பலனைத் தரும்.

மேலே குறிப்பிட்ட 12 சைவத் தலங்களிலிருந்தும் சுவாமிகள் எழுந்தருளி மகாமகக் குளம் சென்று தீர்த்தவாரி நடைபெறும். அதேபோல் 5 வைணவத் தலங்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி காவிரி நதியில் தீர்த்தவாரி நடைபெறும்.

இப்புனிதத் திருநாளில், ஈரேழு உலகம் சேர்ந்த தேவர்கள் ஒன்றுகூடி மகாமகக்குளத்தில் புனித நீராடுவார்கள் என்பது ஐதீகம்.

ஒரே நேரத்தில் 12 சைவத் கோவில்களின் சுவாமிகள், ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது கும்பகோணம் மகாமகத்திருக்குளத்தில் மட்டுமே. இந்நிகழ்வு வேறு எங்கும் கிடையாது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 2:15 pm

2004 ல் அடித்த மகாமக கூத்து 2006 ல் ஒரு மாற்றம் தந்தது - 2016 ல் கூத்தும், மாற்றமும் வருமா அதேபோல்.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 2:29 pm

ம்ம்.. மஹா மகம் என்று நினைத்தாலே பயமாய் இருக்கே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 28, 2016 3:42 pm

யினியவன் wrote:2004 ல் அடித்த மகாமக கூத்து 2006 ல் ஒரு மாற்றம் தந்தது - 2016 ல் கூத்தும், மாற்றமும் வருமா அதேபோல்.
மேற்கோள் செய்த பதிவு: 1190340
நீங்கள் சொல்லுகிற மகாமகக் கூத்து 1992 -ல் நடந்தது. அந்தக் கூத்தில்தான் நிறையப்பேர் செத்துப் போனார்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 3:44 pm

அய்யா - அம்மாவும் சின்னம்மாவும் அடித்த கூத்து எந்த வருடத்தில்?




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 28, 2016 3:46 pm

யினியவன் wrote:அய்யா - அம்மாவும் சின்னம்மாவும் அடித்த கூத்து எந்த வருடத்தில்?
மேற்கோள் செய்த பதிவு: 1190366
1992-ல் தான் அவர்கள் இருவரும் கூத்தடித்தார்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 3:56 pm

ஓகோ 24 வருடங்கள் ஆகிவிட்டதா - வருடம் மறந்துவிட்டது, கூத்து மறக்கவில்லை.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக