புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_m10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_m10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10 
6 Posts - 33%
heezulia
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_m10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_m10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_m10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10 
88 Posts - 38%
i6appar
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_m10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_m10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_m10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_m10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_m10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_m10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_m10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_m10திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Jan 13, 2016 5:47 am

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் FxzXzGcTSVIOZjtYHDRp+kunram(1)

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் வேதகிரீஸ்வரர், தாயார் திரிபுரசுந்தரி. தலமரமாக வாழை மரமும், தீர்த்தமாக சங்குதீர்த்தமும் உள்ளன. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய் காட்சியளித்த தலம் இதுவென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Jan 13, 2016 5:50 am

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் XAgjK2i5SDm2xO8Nn3Ic+kunram(2)

இத்தலம் வேதமே, மலையாய் இருத்தலின் 'வேதகிரி' எனப் பெயர் பெற்றது; வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.
மலைமேல் ஒரு கோயில்; ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே திருமலை, தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது.
500 அடி உயரமுள்ள இம்மலையில் நாடொறும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' என்றும்; திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று.
தாழக்கோயில் - மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சிறப்புக்கள்

இத்தலத்திற்கு வரும் வடநாட்டு யாத்ரிகர்களுக்குப் 'பட்சி தீர்த்தம் ' என்று சொன்னால்தான் புரியும். மலைமீது ஏறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட மலைப்பாதை - செம்மையான படிகளுடன் உள்ளது. இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது.

தாழக்கோயில், கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயில். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோயிலுக்கு வெளியே ஐந்து தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சந்நிதிக்கு எதிரில் உள்ள மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்த'த்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சங்கு' பிறக்கின்றது. இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்கும். (இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அனுபவத்தும் உணர்ந்துள்ளனர்.)

அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடக்கின்றது.

ஆலயத்தை வலம் வரும்போது நந்தி தீர்த்தத்தையடுத்து, அலுவலகச் சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது; இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. இங்கு பைரவர் வாகனமின்றி உள்ளார். பிரகாரத்தில் ஆத்மநாதத் சந்நிதி - பீடம் மட்டுமே உள்ளது; பாணம் இல்லை. எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது.

மணிவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம்; அப்பெருமான் வாக்கிலும், திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. இத்தலத்திற்கு அந்தக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Jan 13, 2016 5:53 am

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் 2vfXiFgkTbqeQtUXAmmA+kunram(3)
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் 1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது. திருக்கழுக்குன்றம் திருமலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

தீர்த்தங்கள்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் 1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது. திருக்கழுக்குன்றம் திருமலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Jan 13, 2016 5:55 am

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் T68iN76hSACr6LNrwLjg+kunram(5)

திருவிழாக்கள்

தேர்த்திருவிழா

ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் சித்திரை மாத தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா, திருமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதில் ஏழாம் நாள் தேர்த்திருவிழாவில் பல ஊர்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் வந்திருந்து வடம் பிடித்து இழுக்கும் போது தேர் அசைந்து வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

பத்து நாட்கள் திருவிழாவிற்கு பிறகு, பதினோராம் நாள் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த வணிகர்கள் அனைவரும் பட்டாசு, வாணவேடிக்கை என சித்திரை திருவிழாவை நிறைவு செய்து வைப்பர்.

சங்காபிஷேகம்

திருக்கழுக்குன்றம் திருமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) ஒரு திங்கள் கிழமையில் 1008 சங்குகளால் வேதகிரீசுவரருக்கு அபிஷேகம் நடைபெறும். அங்குள்ள சங்குகளில், இதற்கு முந்தய காலங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றிய அதிசய சங்குகளும் இடம் பெற்றிருக்கும். சங்கு தீர்த்தக்குளத்திலிருந்து கொண்டுவரப்படும் புனித நீர் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும்.

இந்திர வழிபாடு

புராணங்களின் படி, தேவர்களின் தலைவனான இந்திரன் இடி மின்னல் வடிவில் வந்து இங்குள்ள இறைவனை வழிபாடு செய்வதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, 1930ம் ஆண்டு நவம்பர் 10ம் நாள் மிகப்பெரிய இடி ஒன்று திருமலைக் கோயில் கலசத்தை தாக்கி அந்த துளை வழியாக கருவறையில் நுழைந்து சிவனை அடைந்ததாகவும், அதனால் உருவான தாங்கமுடியாத வெப்பம் மற்றும் அதிர்வுகளை மறுநாள் கோயில் கதவை திறந்ததும் உணர்ந்ததாகவும் கூறுகின்றனர்.

இப்பொழுதும் இந்த வழிபாடு நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Jan 13, 2016 6:03 am

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் JmAeztRlTfyZRFdXJlld+kunram(6)+

இறைவன் - பக்தவத்சலேஸ்வரர்.

இறைவி - திரிபுரசுந்தரி.

தலமரம் - வாழை.

தீர்த்தம் - சங்கு தீர்த்தம்.

மிகப் பழமையான கோயில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன - கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்தம்' உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்துதந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சங்கு தீர்த்தம் - பெரிய குளம். ஒரு பாதி படித்துறைகள் மட்டுமே செம்மையாக்கப்பட்டுள்ளன. நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன.

இக்குளத்திற்குச் சற்றுத் தொலைவில் 'ருத்ரகோடி' என்னும் பெயர் பெற்ற வைப்புத் தலம் உள்ளது. குளக்கரையிலிருந்து பார்த்தாலே இக்கோயில் விமானம் தெரிகின்றது. மிகப்பழமையானது. இங்குள்ள இறைவன் - ருத்ரகோடீஸ்வரர், இறைவி - அபிராமசுந்தரி, இவ்விடத்தைத் தற்போது மக்கள் 'ருத்ராங்கோயில்' என்றழைக்கின்றனர்.

தாழக்கோயில் கிழக்குக் கோபுரம் ஏழு நிலைகளையுடையது. உச்சியில் நவ கலசங்கள். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனர். கருங்கல்லில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் அழகுடையவை. கிழக்குக் கோபுர வாயில் வழியே உட்புகுவோம். வலப்பால் மண்டபத்தில் அலுவலகம் உள்ளது. இடப்பால் பதினாறுகால் மண்டபம் உள்ளது.

இம்மண்டபத்தின் பக்கமாகத் திரும்பி வெளிப் பிராகாரத்தை வலம் வரும் போது, விநாயகர் சந்நிதி, ஆமை மண்டபம் முதலியன உள்ளன. இம்மண்டபத் தூண்கள் கலையழகு மிக்கவை.

வடக்கு வாயிலை அடுத்து வரும்போது 'நந்தி தீர்த்தம்' உள்ளது. கரையில் நந்தி உள்ளது. வலமாக வரும்போது அலுவலக மண்டபக் கற்சுவரில், (நமக்கு இடப்பால்) அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இதன் கலையழகு கண்டுணரத்தக்கது.

நான்கு கால் மண்டபம். ஒருபுறம் துவார விநாயகர், மறுபுறம் சுப்பிரமணியர். இருவரையும் வணங்கி, ஐந்து நிலைகளையுடைய உள் கோபுரத்துள் நுழைகிறோம். இக்கோபுரம் வண்ணக்கோபுரமாகச் சிற்பங்களுடன் காட்சி தருகிறது. நுழையும்போது, வாயிலில் இடப்பால் 'அநுக்கிரக நந்திகேஸ்வரர்' தேவியுடன் காட்சி தருகின்றார். உள் நுழைந்து வலமாகப் பிராகாரத்தில் வரும்போது, சோமாஸ்கந்தர் சந்நிதி மிக அழகாகவுள்ளது.

இப்பிராகாரத்தில், ஆத்மநாதர் சந்நிதி (பீடம் மட்டுமே கொண்டது) , இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் முதலிய சந்நிதிகள் தனிக் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன. ஆறுமுகப்பெருமான் சந்நிதி அழகாகவுள்ளது. கந்தர் அநுபூதிப் பாடல்கள் சலவைக் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் அழகான முன் மண்டபத்துடன் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. உள்ளே வலம் வரலாம். நின்ற திருக்கோலம்.

அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் (1) ஆடிப்புரம் (2) பங்குனி உத்திரம் (3) நவராத்திரியில் வரும் நவமி ஆகிய மூன்று நாள்களில் மட்டுமே இங்கு அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்பெறுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடைபெறுகின்றது. அம்பாளின் கருவறையை வலம் வரும்போது அபிராமி அந்தாதிப் பாடல்களை சலவைக் கற்களில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளதைப் பாராயணம் செய்தவாறே வலம் வரலாம்.

அம்பாளுக்கு எதிரில் 'பிரத்யட்ச வேதகீரீஸ்வரர்' சந்நிதி உள்ளது. அடுத்துள்ள நடராச சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும் அழகாகவுள்ளது.

வலமாக வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்ற வலப்பால் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உட்சென்றால், உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், சுந்தரர் முதலாகவுடைய அறுபத்துமூவர் மூலத்திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து அறுபத்துமூவரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பைரவர் வாகனமின்றி உள்ளார்.

மூலவர் தரிசனம் - சிவலிங்கத் திருமேனி (பக்தவத்சலேசுவரர்.) சதுரபீட ஆவுடையாரில் அமைந்துள்ள அழகான மூர்த்தம். கருவறை 'கஜப்பிரஷ்ட' அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகியோர் உளர். சண்டேஸ்வரர் உள்ளார். மறுபக்கத்தில் தீர்த்தக் கிணறு உள்ளது. நித்திய வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன.

சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. கொடியேற்றம், யாகசாலை முதலியன மலைமீது நிகழும். திருவிழாக்கள், அனைத்தும் தாழக்கோயிலில்தான். சித்திரைப் பெருவிழாவில், மூன்றாம் நாள் உற்சவத்தில் காலையிலும், பத்தாம் நாள் விழாவில் இரவிலும், சுவாமி அதிகாரநந்தியிலம், பஞ்சமூர்த்திகளுடன் முறையே எழுந்தருளி மலைவலம் வருவதும் வழக்கம். அடிவாரத்தில் மாமல்லபுரம் போகும் பாதையில் நால்வர்கோயில் உள்ளது. இப்பகுதி 'நால்வர் கோயில்பேட்டை' என்று வழங்குகிறது.

கல்வெட்டில் இத்தலம் 'உலகளந்த சோழபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது. தொண்டை நாட்டுக்குரிய 24 கோட்டங்களுள் இது களத்தூர்க் கோட்டத்தைச் சார்ந்தது. 7 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர். சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Jan 13, 2016 6:04 am

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் GAMD1kVVQfCS9VurzoSa+kunram(7)

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Jan 13, 2016 6:04 am

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Airzc1fdQrOCxrXRcToS+kunram(8)

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Jan 13, 2016 6:08 am

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் LwyecjY4QsWjt0qRhnHQ+kunram(9)

சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில் 1400 ஆண்டுகள் பழமையானது. இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Jan 13, 2016 6:09 am

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் BbI93OIwQ5aa84VaKtMw+kunram(10)

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Jan 13, 2016 6:09 am

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் JUyuWAMQKWXtCp3HfTUg+kunram(11)

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக