புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
56 Posts - 73%
heezulia
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
221 Posts - 75%
heezulia
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
8 Posts - 3%
prajai
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாயோ.... அஞ்சுகமே .....


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 7:24 pm

First topic message reminder :

அறியாயோ.... அஞ்சுகமே .....

மருதாணி பறிச்சுவந்து
ஆட்டுரலில் அரச்சுவந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில ஒட்டிவச்சா
உச்சந்தல குளுரடிச்சு
கூச்சத்துல சிலுத்துக்குவ
சின்ன  பொண்ணே  தெரியாதா..??

உன் மூக்குகீழ  தூசு அத
ஒனக்கு நான் தொடச்சிவிட
காலையில நீ வந்து
கண்ணாடி பாக்கையில
செவந்த மீச கொஞ்சம்
செரப்பத்தான் மொளச்சிருக்கும்
ஊரே குலுங்கி அத
ஒக்காந்து சிரிச்ச கத
ஒனக்குந்தான் தெரியாதா..???

பாண்டி வெளையாட்ட
பக்குவமா நீயாட
நொண்டி வெளையாட்ட –நீ
நொனசொல்லி நானாட
உப்புமூட்ட ஒன்ன தூக்கி
ஒருவீதி சுத்திவந்து
எறங்க சொல்லி நான் கேக்க
எறங்காம நீ இருக்க –நான்
இடுச்சி விட்டதால –நீ
இடுப்போடிஞ்சி போனகத
எலஞ்சியமே தெரியாதா ...??  

ஆளுக்கொரு பிடிச்ச
அரிசியத்தான் எடுத்துவந்து
கரிசமர வெறகு கொல்லி
கணக்கத்தான் பொருக்கிவந்து
ஆத்துகோயில் பக்கத்துல
அடுப்பத்தான் பத்தவச்சு
கூட்டாஞ்சோறு ஆக்கிதின்னு
கொண்டாடி குளுந்தோமே
கொஞ்சங்கூட தெரியாதா...??

கரடோரம் மாடுமேய்க்க
கயிர்புடிச்சி நடக்கையில
ஓமாடு முன்ன போக
ஏமாடு பின்ன வர
கோமியத்த ஓமாடு
கொடங்கோடமா  அடிச்சிவிட
பாவாட நனைஞ்சதால
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சமண்ணே தெரியாதா..??

ஒங்க ஊட்டு வாசலுல
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடிழுக்க
நான் கொஞ்சம் கலரடிக்க
ஒரு நாள் முழுக்க அத
ஒக்காந்து ரசிப்போமே
ஒனக்கு அது தெரியாதா..??

வாழதோப்பு ஓரத்துல
வரப்போரம் நடக்கையில
வாழக்கா நான் பறிக்க
வாஞ்சையோட நீ கடிக்க
வரிபல்லு கரையாள –நீ
அர கெழவியான கத –என்
அஞ்சுகமே தெரியாதா...??

வயசுக்கு நீ வந்த பின்ன
வெளையாட வாரத்துக்கு
ஓஊட்டுல தடவிழுகவிழ
ஏமனசுல இடிவிழுகவிழ
இடிஞ்ச மனசோட
இத்தன நாள் இருக்கேனே
இந்த கத ஒனக்குந்தான்
இப்பவரைக்கும் தெரியாதா..??



                கே.செந்தில்குமார்



மெய்பொருள் காண்பது அறிவு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 13, 2016 10:14 pm

K.Senthil kumar wrote:
அண்ணே...... இனியவன் அண்ணே...
உங்க பாட்டுக்கு  எதிர்பாட்டு பாடியாச்சு  நீங்க அதை கவனிச்சு மாறுபட்டு போடலையே....??? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

இப்பத்தான் அடி வாங்கி ரொம்ப நாள் ஆச்சேன்னு நெனச்சேன் - அது உங்களுக்கு பொறுக்கலையா? புன்னகை




K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 13, 2016 10:21 pm

யினியவன் wrote:
K.Senthil kumar wrote:
அண்ணே...... இனியவன் அண்ணே...
உங்க பாட்டுக்கு  எதிர்பாட்டு பாடியாச்சு  நீங்க அதை கவனிச்சு மாறுபட்டு போடலையே....??? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

இப்பத்தான் அடி வாங்கி ரொம்ப நாள் ஆச்சேன்னு நெனச்சேன் - அது உங்களுக்கு பொறுக்கலையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187588

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 17, 2016 1:13 pm

விமந்தனி wrote:// கண்கலங்கி நிக்கிறேன் கதிகலங்கி நிக்கிறேன் –என்
கண்ணான மச்சானே கொஞ்சம் காதுகொடுத்து கேட்டிடுங்க
மருவாத கொடுதிதுக்கு மறுபதில போடுமைய்யா –நான்
மருவூடு வாரதுக்கும் இல்ல சுடுகாடு போறதுக்கும்....//
- பலே...! சூப்பருங்க மனம் கலங்க செய்யும் வரிகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1187349

நன்றி அக்கா ...



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 19, 2016 9:44 pm

மறு பதிலும் வந்திருச்சு மனம் நெறஞ்சு போயிருச்சு
சலுதீள வாரமுன்னு சங்கதியும் கெடச்சிருச்சி –மனசுக்குள்ள    (சலுதீள-விரைவில்)
ஒட்டடையும் ஒழிஞ்சிருச்சு உள்மனசும் தெளிஞ்சிருச்சு –இனி  
ஒரு வழியா ஒறங்கிக்குவேன் ஒன் நெனப்புல உருகிக்குவேன்

கண்ணாலம் கிட்டவர கார கொஞ்சம் பூசுறாக
கண்ணால செலவுக்கு ஆட்ட கொஞ்சம் விக்கிறாக
பந்த கால பதிச்சிபுட்டு பட்டணமும் போகுறாக
பட்டு சேல எடுத்தாந்து பரிகாசமும் பன்னுறாக (பரிகாசம் –கிண்டல்)

ஒருவாரம் பின்னபோய் உள்ளம் கொஞ்சம் இருட்டுதைய்யா
ஒருவாறு எனக்கென்னவோ உள்மனசோ உருட்டுதைய்யா(ஒருவாறு-ஒருமாதிரி)
பொல்லாத சொப்பனமும் வந்து வந்து போகுதைய்யா –பட்சி
பொழுதோட சவனமும் சொல்லி சொல்லி காட்டுதைய்யா  

அடுப்புக்குள்ள பூன கண்டேன்
ஆந்த தெனம் அலற கண்டேன்
கோட்டானும் கொனைக்க கண்டேன்
கோபுரமும் சாய கண்டேன்

சாவி கொத்து சரிய கண்டேன்
சாவு மேளம் எடுக்க கண்டேன்
குடுகுடுப்ப கோடாங்கி  
கொரலேன்னவோ கேக்க கண்டேன்

விடிஞ்சித்தான் நான் இருந்தேன் வெறகு கட்டோட
வெரசாத்தான் வருதைய்யா வண்டி ரோட்டோட
வெசனம் மனசுக்கு மச்சான் வண்டில  –நான்   (வெசனம் –தவிப்பு,ஏக்கம்)
வெரசா போனேனே வண்டி பின்னால

ஜீப்பு ஒன்னு வாருதைய்யா சிங்கத்த தான் ஏத்திக்கிட்டு
மாமன் ஊடு போகுதைய்யா மச்சான் பேர கேட்டுகிட்டு

கோட்டுசூட்டு போட்டுக்கிட்டு கோலகலமா இருப்பாரோ
துப்பாக்கி தூக்கிகிட்டு துடிதுடிப்பா இருப்பாரோ
ஒரு சேல எடுத்தாந்தேன் ஒருவார்த்த தொடுப்பாரோ
ஒண்டி நானும் பாக்குறனே ஓரக்கண்ண கொடுப்பாரோ

மாருக்குள்ள படபடப்பு அடி அடின்னு அடிக்கிறதே
மனசுக்குள்ள அவர்நெனப்பு இடி இடியா இடிக்கிறதே
மச்சானோட மொகத்த பாக்க மனசு ரொம்ப துடிக்கிறதே
மாமன் ஊட்டுபக்கம் பாத்து மனுச பட எடுக்கிறதே

ஜீப்பு போய் நின்னுருச்சு சிங்கம் அங்க எறங்கலையே
மாமன் ஊட்டு வாசலுல மச்சான் மொகத்த காங்கலையே  

நாலு பேரு எறங்குறாக நாலா பக்கமும் பாக்குறாக
சவப்பெட்டிய தூக்குறாக சங்கதிய சொல்லுறாக
சலுதீள வாறேனுட்டு சடலமாவே வந்துட்டாரே (சலுதீள –விரைவில்)
சரிஞ்சி நானும் விழுகுறேனே சடலமாத்தான் ஆகுறேனே




ரதியவள் போல் பேரழகில்
கருநிறத்தில் இருந்திட்டால்
நம் கதையின் மதியவளே

மதியவளின் மனமதனை
ஆள்பவனோ மதுவதனின்
காலடியில் கிடந்திட்டான்
அனுதினமும் பதியவனே

பதியவனின் கதியுனர்ந்த
மதியவளோ பணமென்னும்
நிதி செய்ய படிபித்தால் பதியவனை

மதியவளின் சொல்லதனில்
உதித்தனவே மதிமாற்றம் பதியவனில்
மதியவளின் சொல்லதனை  
மதித்தானே மதிமனதன்
பதியவனே புதியவனாய்

கதியந்த காலத்தை
நிதியதனின் கைவசத்தால்
விதியதனை வென்றிடவே
விழித்திட்டான் வீருகொண்டான்
விடைபெற்றான் மதியவளின்
விருப்பமின்றி புதியவனாய்

புதியவனாய்...புதியவனாய் ....  
படைக்களமும் புகுந்திட்டான்
படைவீர முகமெடுத்தான்
சதி செய்த நாட்டினரை
கொதி யுண்ட குருதியினால்
குதித்தெழுந்தான் துடித்தெழுந்தான்
மிதித்து சென்றான்  வதைத்து சென்றான்  
சதிகார படையதனை பதியவனே

பலத்தோடு போரிட்ட
பதியவனின் மதி ஒளிந்து
குதித்தானே சதிகாரன் –முதுகில்
குருவாளில் துளைத்தானே

விதிவசத்தால் வீழ்ந்திட்டான்
வீரனவன் பதியவனே
விதியவனின் விளையாட்டில்
பதியவனும் போய்விட்டான்
பரமேசன்…….கைவசமே

பதியவனின் மரண கதியறிந்து
பதியவனின் முகமதனை பாராமல்
மதியவளும் மறுநொடியே மரித்தனளே

மதி மயங்கி கிடந்திட்டான்
மதுவினது கைவசத்தால் என ஏசி
பதியவனை எலனமாய் சிரித்தவர்கள்
துதித்தார்கள் பின்னாளில்
அவன் வீர துதிபாடி  

இரு சடலமதை
சிதையில் இட்டு கொளுத்தியதால்  
கிடைதிட்ட சாம்பலதை
திதி கொடுத்து
நதியதனில் கரைத்தனரே  
நதியினது உதவியினால்
நன்றாக கலந்தனரே
நற்சேர்க்கை பெற்றனரே
நாம் அறிந்த காதலர்கள் ......
பதியவனும் மதியவளும் . ஐ லவ் யூ  ஐ லவ் யூ
அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 19, 2016 10:26 pm

என்றும் மனதில் நிலைத்து நிற்கும் கவிதை .
கிராமத்திற்கு கொண்டு சென்றது .
முடிவு இவ்வளவு துக்கம் தருகிறதே ,
இன்று தூக்கம் வருமா ?
வந்தாலும் அதிலும் வருவார்களே
பதியவனும் மதியவளும் ..

ரமணியன் அழுகை சோகம்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 20, 2016 7:24 am

தொடுகை இல்லாத் தீண்டலாக
எதுகை மோனை இதமாய் சேர்த்து
உவமை உருவக அணிகள் கோர்த்து
அடுக்கு மொழியும் எடுப்பு நடையும்
அழகாய் கோர்ப்பதே அற்புதக்கவி

கருவிற்கு உயிர் கொடுத்து
கற்பனை தேன் கலந்து
ஒப்பனை வளம் சேர்த்து
ஓசையோடு நயமும் தென்றலாகி
ஓலித்து வருமே அழகியகவி

ஏண்ண அலைகளை எழுத்தில் வடிக்க
வண்ண சொற்களை வளமாக்கி
திண்ணமாய் தீட்டும் ஓவியம்
சந்தங்கள் சங்கதிகள் சேர்ந்து
சந்தோசக் கவியாகிப் படையலாகும்

முத்துச் சரங்கள் அட்சரமாகி
முல்லைப் பூக்கள் அச்சாரமாகி
மனதிற்கு மத்தாப்பாய்
இனமாக  முத்தாய்பாய் தந்தாய்.

காதல்தான்  சோகம் என்றோம்.
காதலர்கள் சோகமாகி போனார்கள்.
காதலர்கள் இறந்தாலும்.
காதல் இறப்பதில்லை.

விளையாட்டாய் வடித்த  கவி(இன்று).
விபரீத  முடிவை படித்த கவி.
வின்மீனும்  சிரித்த கவி.(இன்று)
வின்னகரும் அழுது கவி.

பின்னூட்டம் இட வார்த்தைகள் இல்லை.
சோகமான முடிவு  சுகம் கன்டது.

நன்றி  நன்பா.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 20, 2016 2:17 pm

T.N.Balasubramanian wrote:என்றும் மனதில் நிலைத்து நிற்கும் கவிதை .
கிராமத்திற்கு கொண்டு சென்றது .
முடிவு இவ்வளவு துக்கம் தருகிறதே ,
இன்று தூக்கம் வருமா ?
வந்தாலும் அதிலும் வருவார்களே
பதியவனும் மதியவளும் ..

ரமணியன் அழுகை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1188556
தூங்கினாரோ என்னவோ தெரியலையே ...
அய்யா(யோ).......பாவம் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 20, 2016 2:32 pm

கார்த்திக் செயராம் wrote:தொடுகை இல்லாத் தீண்டலாக
எதுகை மோனை இதமாய் சேர்த்து
உவமை உருவக அணிகள் கோர்த்து
அடுக்கு மொழியும் எடுப்பு நடையும்
அழகாய் கோர்ப்பதே அற்புதக்கவி

கருவிற்கு உயிர் கொடுத்து
கற்பனை தேன் கலந்து
ஒப்பனை வளம் சேர்த்து
ஓசையோடு நயமும் தென்றலாகி
ஓலித்து வருமே அழகியகவி

ஏண்ண அலைகளை எழுத்தில் வடிக்க
வண்ண சொற்களை வளமாக்கி
திண்ணமாய் தீட்டும் ஓவியம்
சந்தங்கள் சங்கதிகள் சேர்ந்து
சந்தோசக் கவியாகிப் படையலாகும்

முத்துச் சரங்கள் அட்சரமாகி
முல்லைப் பூக்கள் அச்சாரமாகி
மனதிற்கு மத்தாப்பாய்
இனமாக  முத்தாய்பாய் தந்தாய்.

காதல்தான்  சோகம் என்றோம்.
காதலர்கள் சோகமாகி போனார்கள்.
காதலர்கள் இறந்தாலும்.
காதல் இறப்பதில்லை.

விளையாட்டாய் வடித்த  கவி(இன்று).
விபரீத  முடிவை படித்த கவி.
வின்மீனும்  சிரித்த கவி.(இன்று)
வின்னகரும் அழுது கவி.

பின்னூட்டம் இட வார்த்தைகள் இல்லை.
சோகமான முடிவு  சுகம் கன்டது.

நன்றி  நன்பா.
மேற்கோள் செய்த பதிவு: 1188575


அருமை அருமை கார்த்திக்...

க(வி)தை உருவாக காரணமே நீங்கள் தானே

புகழ்ச்சியை கூட பூக்களை போன்ற வார்த்தைகளால் எடுத்து தொடுத்து தூவுவது உங்களால் தான் முடியும்

ஒரு திரியில் இருவரும் பங்களிப்பு செய்தது என்றுமே மறவாதது..

நன்றி .....அன்பு நண்பர் கார்த்திக் ....



மெய்பொருள் காண்பது அறிவு
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 21, 2016 11:53 pm

துயரமான முடிவு செந்தில். மனமும், விழியும் சட்டென கனத்துவிட்டது..... மறக்கமுடியாது, என்னாலும் சில நாட்களுக்கு...........



அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 22, 2016 8:19 pm

விமந்தனி wrote:துயரமான முடிவு செந்தில். மனமும், விழியும் சட்டென கனத்துவிட்டது..... மறக்கமுடியாது, என்னாலும் சில நாட்களுக்கு...........
மேற்கோள் செய்த பதிவு: 1188784

மிகவும் நன்றி அக்கா ..
பின்தொடர்ந்து படித்து ஏற்பட்ட உணர்வை பின்னூட்டமாய் பதிவிட்டமைக்கு... நன்றி நன்றி நன்றி



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக