புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 2 Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 2 Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 2 Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 2 Poll_c10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 2 Poll_m10--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 2 Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 06, 2016 5:18 pm

First topic message reminder :

மகா பெரியவா

காலுக்கு கீழே உள்ள மூலிகை!

பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது! ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக  இருந்ததில்லை.
ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள்.
அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் அந்த வீட்டு அம்மா.
ஒருநாள் ஒரு பரதேஸி, அவர்கள் வீட்டு முன்னால் வந்து நின்றபோது, அந்த அம்மா ஏதோ சில்லறை போட்டாள்.  அவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒங்கண்ணுக்கு தெரியலியே?” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
அந்த அம்மா அதிர்ந்து போனாள் ! “நான் பண்ற குத்துவிளக்கு பூஜை, இவனுக்கு எப்டி தெரிஞ்சுது?…..காலுக்கு கீழ மூலிகையா?…”
அந்தப் பரதேஸியோ, ஏதோ இவளிடம் மட்டும் பேச வந்தது போல், வேறு எந்த வீட்டிலும் யாஸிக்காமல் போய் விட்டான்.  ஒன்றும் புரிபடாமல் பெரியவாளிடம் வந்தாள்.
“ஆத்துல ரொம்ப கஷ்டம்…..குத்துவெளக்குல துர்க்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதியை ஆவாஹனம் பண்ணி, பூஜை பண்ணிண்டிருக்கேன் பெரியவா…..ரெண்டு நாள் முன்னாடி ஒரு பிச்சைக்காரனாட்டம் ஒத்தன் வந்தான். “குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒன் கண்ணுக்கு தெரியலியே?”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டான் பெரியவா…..எனக்கு ஒண்ணுமே புரியல….பெரியவாதான் வழி காட்டணும்”
“ஒங்காத்ல கருந்துளஸி இருக்கோ?…..”
“இல்லை பெரியவா! துளஸி வெச்சாலே எப்பிடியோ பட்டுப் போய்டும் ……”
“அதான்! அவன் சொன்ன மூலிகை! கருந்துளஸி வெச்சு பூஜை பண்ணு”
பெரியவாளே, கருந்துளஸி பூஜை பண்ணு என்றதால், மறுபடி கருந்துளஸி பூஜை பண்ண தொடங்கினாள்.
ஆஸ்சர்யம்! கருந்துளஸி இப்போது கப்பும் கிளையுமா சின்ன ஆலமரம் மாதிரி வளர ஆரம்பித்தது. அது வளர வளர அவர்களுடைய துன்பங்களும் குறைய ஆரம்பித்தது.
கருந்துளஸி வருவது அபூர்வம். வந்ததை பூஜை பண்ணுவது மிகவும் ஸ்லாக்யம். பெரியவா வாக்கில் வந்த பூஜை இல்லையா?
அந்த வைஷ்ணவ பக்தையின் நாத்தனார் குழந்தைக்கு திடீரென்று கழுத்தில் பயங்கர வலி!
டாக்டர்களோ ‘நரம்புலதான் ப்ராப்ளம்! மேஜர் operation’ பண்ணித்தான் ஆகணும் !” என்று சொல்லிவிட்டார்கள் !
“நா….சொல்றதை கேளு! கொழந்தையை பெரியவாகிட்ட கூட்டிண்டு போ!……”
குழந்தையின் அம்மாவும், குழந்தையை கூட்டிக்கொண்டு முதல் முதலாக, தன் மன்னியின் நம்பிக்கைக்காக, காஞ்சிபுரம் ஓடினாள்.  இவர்கள் போன அன்று பெரியவா காஷ்ட மௌனம்! இவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டாலும், ஒன்றும் பதில் சொல்லவில்லை! ஆனால், தன் கழுத்தை தடவிக்கொண்டே உள்ளே போய்விட்டார்.
பையனின் பெற்றோருக்கு ஒரே ஏமாற்றம்.
“பெரியவாளை பத்தி கூடை கூடையா சொல்லுவேளே மன்னி! ஒரு ஜாடை கூட காட்டலியே! என் கொழந்தையை கைவிட்டுட்டாரே! ஒங்க பெரியவா! ”
புலம்பினார்கள்.
மறுநாள் ஆபரேஷனுக்காக ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆவதற்காக கிளம்பும்போது, குழந்தை சொன்னான்……
“அம்மா! எனக்குத் தொண்டை என்னவோ மாதிரி பண்றது!…..”
பையன் சொன்னதை கேட்டதும் குடும்பமே கதி கலங்கியது. ஒரே வாந்தியான வாந்தி !
வீட்டின் பின்பக்கம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையுடன் குடும்பமே நின்று கொண்டிருந்தது.
“டொடக்” ன்னு ஏதோ ஒன்று வாந்தியோடு வெளியே வந்து விழுந்தது!
என்னது?……ஒரு தேங்காய் ஓட்டின் சில்லும் சேர்ந்து வெளியே வந்தது.
அதன்பிறகு வாந்தியும் நின்றது!
“அம்மா! இப்போ செரியாப் போச்சும்மா!…”
குழந்தையின் சிரிப்பில் நிம்மதி அடைந்தனர். டாக்டரிடம் போனதும், பையனின் கழுத்தில் அழுத்தினார்.
” வலிக்கறதா?”
“இல்லை”
“x-ray ரிப்போர்ட்லயும் ஒண்ணுமில்லேன்னு வந்திருக்கு….அதுனால, operation தேவையில்லை”
“பெரியவா ஒரு ஜாடை கூட காட்டலியே?….கை விட்டுட்டாரே! ஒங்க பெரியவா…”
அன்று அப்படி அங்கலாய்த்தவர்கள்…..உடனே அந்த மஹா வைத்யநாதனை தர்ஶனம் பண்ண, குழந்தையோடு காஞ்சிபுரம் ஓடினார்கள்! பெரியவாளிடம் பக்தி பண்ணும் குடும்பங்களில் இன்னொரு குடும்பமும் சேர்ந்தது
இந்த ப்ரபஞ்சத்தில், சேதனமோ, அசேதனமோ எல்லாவற்றின் அசைவுகளும், பாதிப்பை [நல்லது, கெட்டது] உண்டாக்கும். ஸாதாரணமாக நாம் பேசுவது கூட இப்படித்தான்! அதனால்தான் அந்தக் காலங்களில், கண்ட வார்த்தைகளை சொல்லாமல், நல்லதையே பேசு என்பார்கள். வேத ஶப்தங்கள், பகவந்நாமம் மாதிரி,  பெரியவாளின் ஒவ்வொரு அசைவும், அசைவின்மையும் ஆயிரமாயிரம் விஷயங்களை ப்ரபஞ்சத்தில் உண்டாக்கும்.

நன்றி மின்னஞ்சல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 8:29 pm

ayyasamy ram wrote:இன்று, மஹா அனுஷம்.
இது தவிர, ஸ்ரீ மஹா பெரியவாளின் நினைவு நாளும் கூட.
ஆதியும் அந்தமும் இல்லா அந்தப் பரம்பொருளின் பிறந்த
நக்ஷத்திரமும், உடலை உகுத்து மறைந்த அந்த நாளும்
ஒரே நாளாக வருவதும் மிகப் பொருத்தமாகத்தான் தோன்றுகிறது.
-
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 2 17wIOeKMT6CgpCC8S25j+10250081_10205799087279180_7427688518061074464_n
மேற்கோள் செய்த பதிவு: 1185729

ஆமாம் ராம் அண்ணா, இன்று சங்கரமடம் கோலாகலத்தில் இருக்கும்  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:பெரம்பூரில் ரத உத்சவம் கூட பண்ணுவா.....நாங்க அது பின்னாலேயே போவோம்..............ஹும்..........அந்த காலம் எல்லாம் இப்போ நினைவில் மட்டுமே இருக்கு.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 06, 2016 8:40 pm

க்ரிஷ்ணாம்மா
அந்த மகானின் மெழுகு சிலையை பார்த்தோம், அப்படியே அவரை சேவிப்பது போலவே இருந்தது ஐயா.............நீங்கள் பார்த்திருக்கீங்களா ? புன்னகை

சிலையின் கண்களிலும் ஒளி!
பார்க்காமல் இருப்பேனா ?
மெழுகு சிலையா  இல்லைஇல்லை அவரே உட்கார்ந்து இருப்பதே போல் தோற்றம்.
அவர் கால்கள்   அதில் உள்ள நகங்கள்  
கை தேர்ந்த கலைஞனுக்கு மீண்டும் ஒரு வணக்கம் .
இவர் சிலை  வடிக்க என்ன தபசு செய்தானோ  இவன்  .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 9:08 pm

T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மா
அந்த மகானின் மெழுகு சிலையை பார்த்தோம், அப்படியே அவரை சேவிப்பது போலவே இருந்தது ஐயா.............நீங்கள் பார்த்திருக்கீங்களா ? புன்னகை

சிலையின் கண்களிலும் ஒளி!
பார்க்காமல் இருப்பேனா ?
மெழுகு சிலையா  இல்லைஇல்லை அவரே உட்கார்ந்து இருப்பதே போல் தோற்றம்.
அவர் கால்கள்   அதில் உள்ள நகங்கள்  
கை தேர்ந்த கலைஞனுக்கு மீண்டும் ஒரு வணக்கம் .
இவர் சிலை  வடிக்க என்ன தபசு செய்தானோ  இவன்  .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185749

ஆமாம் நாங்களும் ஒரு நிமிடம் அசந்தே போனோம் ....ஆ அவரா? என்றுபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 06, 2016 10:16 pm

மிகவும் நன்றி ஐயா, அருமையான பதிவு ஐயா.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2016 7:03 am

தெய்வ மகனின் தெய்வத் தாய்  

காஞ்சிப்  பெரியவர் 1907ம் ஆண்டு தனது  13ம் வயதில்  சந்நியாச வாழ்வை ஏற்றுக் கொண்டார் .
ஒருவர் சந்நியாச வாழ்வை ஏற்றப்பின் தாயை பார்க்கக்கூடாது  என்பது விதி . அதன் படி பெரியவரும் தாயாரிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை

1932இல் ஆந்திராவில் சித்தூர் அருகிலுள்ள நகரி என்னும் ஊருக்கு பெரியவர் விஜயம் செய்து இருந்தார்.அப்போது கும்பகோணத்தில்  இருந்து ஒரு தந்தி காஞ்சிபுரத்திலுள்ள மடத்து நிர்வாகிக்கு  அனுப்பப்பட்டு இருந்தது . அதில் பெரியவரின்  தாயாரான மகாலட்ஷுமி அம்மையார் சிவபதம் அடைந்த செய்தி இடம் பெற்றிருந்தது .
தந்தியுடன் சித்தூர் வந்த மடத்தின் நிர்வாகியை கண்டதுமே ," கும்பகோணத்திலிருந்து தந்தி வந்திருக்கிறதா? என்று கேட்டார் .
"ஆம் சுவாமி " என்ற நிர்வாகியிடம் மேற்கொண்டு பெரியவர் அதைப் பற்றி கேட்கவில்லை .
அப்போது பெரியவருடன் உரையாடிக்கொண்டு இருந்த சில பண்டிதர்கள் தந்தியைப் பற்றி அறிய முயன்றனர் . சில வினாடிகள் மவுனம் காத்த பெரியவர் அவர்களிடம் ,"தாயாரின் வியோகத்தைக் (மரணச்  செய்தி ) கேட்ட சன்யாசி செய்யவேண்டியது என்ன ? என்று கேட்டார் ..

தந்தியைப் பார்க்காமலே தன்  தாயார்  ​சிவலோக பதவி அடைந்ததை பெரியவர் எப்பிடி அறிந்தார் என்று பண்டிதர்கள் ஆச்சர்யப்பட்டனர் .ஆனாலும் , அது பற்றி எதுவும் கேட்காமல்,பெரியவர் கேட்டதற்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தனர்.

உடனே பெரியவர் நகரியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள காட்டுப் பகுதியை அடைந்தார் . அங்குள்ள அருவியில் நீராடினார்.பெரியவரை ஈன்றெடுத்த அந்தத்தாய் அவருக்கு மட்டுமல்ல......தங்களுக்கும் தாயே என்ற உணர்வுடன் பண்டிதர்களும், பக்தர்களும் அங்கு நீராடினார் .

காஞ்சி பெரியவரின் தாயார் மறைந்தது 1932,  ஜூன் 14.அன்று ஏகாதசி திதியாக இருந்தது .
ஏகாதசி மரணமும் ,துவாதசி தகனமும் பெரும் புண்ணியம் என்கிறது சாஸ்திரம்
மஹா பெரியவரின் நினைவு நாளும் அதே துவாதசியில் வந்து இருக்கிறது .அந்த தெய்வமகனை பெற்ற தெய்வத்தாயை மனதார வணங்குவோம் .

​நன்றி ஆன்மிக மலர்

ரமணியன் ​

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 25, 2016 8:19 am

நல்ல பதிவு ஐயா, தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 8:41 am

--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 2 D4ofoF5xT4eK1lkUUXGz+index
-
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 2 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2016 7:05 pm

சசி wrote:நல்ல பதிவு ஐயா, தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1189372

இவரை பற்றி அறிய அறிய ஆச்சர்யம் அதிகரிக்கும் .

ஈகரை உறவுகளுக்காக எனது நெருங்கிய உறவினரின் நண்பர் விஷயத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 26, 2016 12:55 am

நல்ல தொடர் ஐயா. இவரின் மகிமைகளை மேலும் பகிருங்கள்.

--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 26, 2016 11:39 pm

மகா பெரியவா  III

உறவினர் கூற ......

எந்தன் உறவினர் டில்லியில் அயல் நாட்டு தூதரகத்தில் உயர்ந்த பதவியில் இருந்தார் .
அவருடன் அவருடைய நெருங்கிய நண்பரும் அதே தூதரகத்தில் , வேறொரு பிரிவில் , அதே மாதிரி பதவியில்
இருந்தார் . இருவரின் வீட்டிலும் பெண்களும் அதே நட்புடன் பழகி , ஒரு சிறந்த நட்பை வளர்த்து வந்தனர் .
நண்பருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம் . காலை மாலை பூஜை புனஸ்காரங்கள் .குழந்தை கிடையாது .
காஞ்சி பரமாச்சார்யாள் மீது அதீத பக்தி . வருடம் ஒரு முறையாவது தம்பதி சமேதராய் வந்து தரிசித்துப் போவார்கள் .
வருடங்கள் பல கடந்த பின் , உழைத்தது போதும் என்று தோன்றியது . காஞ்சி மடத்தில் சேர்ந்து ,பக்தர்களுக்கு சேவை செய்யலாம்  என்று எண்ணம் . அவரது மனைவிக்கும் சம்மதமே .ஒரு நல்ல நாள் பார்த்து , காஞ்சிபுரம் வந்தனர் .
மறுநாள் காலை குளித்து , செய்யவேண்டிய பூஜைகளை முடித்துக் கொண்டு , பெரியவா தரிசனத்துக்கு போறா.
அவர் முறை வந்த போது , பெரியவாளை பாத்து  மரியாதையாக வாய் பொத்தி நிக்கறா என்ன சொல்லறது , எப்பிடி சொல்லறதுன்னு தவிக்கிறா பெரியவா கண்களை பாக்கறா ..கண்கள் கலங்குகின்றன .பேச நினைத்ததெல்லாம் மறந்து போய் அப்பிடியே நிக்கறா .
புன்சிரிப்போட பெரியவா ," என்ன மடத்துலே சேர்ந்துக்கனுமா " என்கிறார் .
கண்களில் இருந்து தாரை தாரையா கண்ணீர் .பேச முடில்லெ .தலையை ஆட்டிண்டு ஆமாம் என்கிறார் .
பெரியவா ," டில்லி போயிட்டு , முறைப்படி எல்லாத்தையும் செஞ்சுட்டு வா " என்கிறார் .
பெரியவா உத்தரவு என்று கூறி , சாஷ்டங்கமா விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு ,பிரசாதம் வாங்கிக்கொண்டு ,
சந்தோஷத்துடன் டில்லி திரும்புகின்றனர் .
மனைவி , என்னன்னா , பெரியவாள பாத்து அது கேட்கப்போறேன் இது கேட்கப்போறேன்னு சொல்லிட்டு , ஒண்ணுமே
பேசாமலே , காரியத்தை சாதித்து கொண்டேளே என்று கிண்டல் அடித்தாள் .
அவரும் ,"என்னமா ,பெரியவாளப் பாத்தா பேசவா தோணறது ? அவருக்கு தெரியாதா,நம்ம மனசுலே என்ன ஓடறதுன்னு . இனிமே டில்லிலே போய் , வேலை ரிசைன் பண்ணிட்டு , எல்லோருக்கும் பட்டுவாடா பண்ண
வேண்டியதை, பண்ணிட்டு மடத்துலே சேரனும்   ,என்றார் ..
ரெண்டு மாதங்கள் ரெண்டு நிமிஷமாக தோன்றும் வண்ணம் எல்லாம் முடித்து , காஞ்சிபுரம் வந்து , பெரியவாள
தரிசனம் பண்ணினார் .
பெரியவா கண்ணசைப்புக்கு காத்து இருந்தார் போல் , ஸ்ரீகாரியம் ,வந்து இவரை அழைத்துப் போய் ,இவர் பொறுப்பில் நடக்கவேண்டிய காரியங்களை எல்லாம் விலாவரியாக சொன்னார் .
வருடங்கள் பல கடந்தன .
மனதிற்கு நிம்மதி இந்த தம்பதிகளுக்கு . வீட்டில் செய்ய வேண்டிய நித்யானுஷ்டங்களை , முடித்துக் கொண்டு நண்பர்
மடத்திற்கு வந்து அவர்  கடமையை செவ்வனே செய்து கொண்டு இருப்பார் . சமயத்தே பெரியவாள தரிசித்து விபுதி பிரசாதம் வாங்கி , வீடு சென்று மதிய உணவு அருந்தி , மாலை நேரத்தில் திரும்பி மடம் வருவார் .
அவரது மனைவியோ ,வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு , அம்மனை தரிசித்து விட்டு , பெரியவாள பாத்து ஆசீர்வாதம்,  குங்கும பிரசாதம் வாங்கிக் கொண்டு வீடு வருவார் .இருவரிடமும் ஒரு சாவி இருந்ததால் ,  முதலில் வந்தாலும் மற்றவர் வருகைக்காக காத்திருக்க வேண்டாம் என்பதால் இந்த அரேஞ்ச்மென்ட் .பெரியவாளும் அப்போதைக்கு அப்போ பிரசாதம் தருகையில் ஷேம லாபங்களை கருணையுடன் விசாரித்து பிரசாதம் தருவார் .
பக்தியுடன் வாங்கி , அவரை விட்டு விலகி , வெளி வந்து நெற்றியில் பிரசாத விபுதி /குங்குமத்தை இட்டுக் கொள்வது அவர்கள் வழக்கம் .
இப்பிடிப் பட்ட ஒரு நாளில் , நண்பரும் பெரியவா பிரசாதம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போறார் .
எதிர்த்தார் போல் அவருடைய மனைவி , என்னவோ ஏதோ வேலை ,இப்பதான் முடிந்தது . நீங்க ஆத்துக்கு போயிண்டே
இருங்கோ . பெரியவாள தரிசனம் பண்ணிவிட்டு வந்துடறேன் . பெரியவ இருக்களோனோ என்று கேட்டுக்கொண்டே
மடத்தை நோக்கி நடக்கிறார் . நண்பரும் , சீக்கிரம் போம்மா , நேரம் ஆயிடுத்து என்கிறார் .
மனைவியும் , வேகமாக உள்ளே நுழைகிறார் .சரியான நேரம் .
ஒரு நிமிடம் தவறி இருந்தாலும் , பெரியவா தரிசனம் கிடைத்து இருக்காது .மூடப்பட போகிற திரை , பெரியவா கண்ணசைவில் ,சிறிது நின்றது
பெரியவாள தரிசித்து கை நீட்டி அவர் கொடுக்கும் பிரசாதத்தை வாங்குகிறார் .
இவர்தான் கடைசி , பிரசாதம் கொடுக்கும் போது பெரியவா  late ஆயிடுத்து என்கிறார் .
இவரும் , என்னவோ தெரில்லே, பெரியவா ,  மச மச ன்னு வேலை , அதான் நேரமாகி விட்டது என்கிறார்.
திரைப் போடப்படுகிறது .
இவர் பெரியவா இருந்த திசைப்பக்கம் கை தூக்கி கும்பிட்டு விட்டு ,வீடு போக  வெளியே வருகிறார் .நடந்து கொண்டே
பெரியவா கொடுத்த  பிரசாதம் இட்டுக்கொள்ள ,கையை திறந்து,விரலால் ,ஒத்த , ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார்.. தாழம்புமனத்துடன் மிருதுவாக இருக்கும் குங்குமம் அன்று கர கர என்று இருந்தது . பார்த்தால் , விபுதி .
ச்சே இனிமே இப்பிடி அரக்க பறக்க கடைசி நேரத்தில் வரக்கூடாது . . நமக்காகவே , பெரியவா , திரையை மூட வேண்டாம் எனக்கூறி பிரசாதம் கொடுத்தார் .பிரசாதம் மாறி விட்டது என்று தனக்கு தானே கூறிக்கொண்டு ,
வீடு திரும்பினார் ..
ஊஞ்சலில் நண்பர் படுத்து இருந்தார் எப்போதும் போல் . மனைவி கைகால் அலம்பி , வாங்கோன்னா , தட்டு வைக்கிறேன் என்று கூறி , சமையலறை சென்று , பலகை போட்டு தட்டு வைத்து , டம்ப்ளரில் நீர் எடுத்து வைத்து ,
இவரை கூப்பிட வருகிறார் .
வரேளா என்று கூப்பிட்டுக் கொண்டே ஊஞ்சல் பக்கம் வந்தார். பதில் ஒன்னும் இல்லையே என்ன ஆச்சு இவருக்கு , தூங்கிட்டாரா என்ன என்று .....யோசித்துக்கொண்டே அருகில் வருகிறார் .
நண்பரின் மேல் துண்டு , ஈரமாக இருக்கிறது . பேச்சு மூச்சு காணோம் .ஏதோ பொறி தட்ட பக்கத்து வீட்டுக்கு ஓடிப் போய் ,  அம்பி , சீக்கிரம் வாடா , மாமாக்கு ஏதோ போல் இருக்கு ,டாக்டரை உடனே கூட்டி வா என்று அழுதுகொண்டே கூறுகிறார் . அவர் வீட்டில் இருந்து ஓரிருவர் ஓடி வந்து , ஈரத்தை துடைத்து விசிறி , மாம்மா மாமா என்று கூப்பிடுகிறார்கள் . ஆளாளுக்கு ஒன்று கூறுகிறார்கள்
இதற்குள் டாக்டரும் வந்து சேர , கூட்டம் போடாதீங்கோ , கொஞ்சம் காத்து வரட்டும் என்கிறார் டாக்டர் .
பிறகு கை பிடித்து நாடிப் பார்த்து , டார்ச் லைட் எடுத்து கண்களில் ஒளி பாய்ச்சி ,
சிறுது பெருமூச்சு விட்டு , அங்கு இருந்த பெரியவரை  தனியே அழைத்து , 20 நிமிஷத்திற்கு மேல் ஆயிருக்கும்.
மேலே ஆகவேண்டியதை பாருங்கோ. மாமிக்கு ஆறுதல் சொல்லுங்கோ . உங்காத்து மாமி வரச்சொல்லி இவாளுக்கு துணை இருக்கச் சொல்லுக்கோ என்று கூறி விட்டு ச் சென்றார் ..
 
.
​(உறவினர் கூறிய சாராம்சம்
இன்று எழுத்துருவில் )​

​ரமணியன் ​

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக