புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
1 Post - 2%
prajai
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
383 Posts - 49%
heezulia
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
26 Posts - 3%
prajai
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel
   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_m10   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 24, 2015 9:16 pm

சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்!
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடாக, 1954இல் ,‘சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும்’என்ற தலைப்பில், ஓலைச் சுவடியிலிருந்து ஒரு நூல்  வெளியிடப்பட்டது. இதன் பதிப்பாசிரியர் அங்கே பணி புரிந்த ஒரு புலவர்தான் ! ஆனால் டி.சந்திரசேகரன் என்பவர் பதிப்பித்ததாக அந்த நூலில் அச்சிடப்பட்டுள்ளது! அதைத்தான் பலரும் பட்டியல்களில் போட்டுவருகின்றனர் ! (டி.சந்திர சேகரன் ஊழல் விசாரணைக்கு முன் விஷம் அருந்தி இறந்தார் என்பது வேறு கதை !)

இந்த நூலில் இரு பகுதிகள் உள்ளன ; ஒன்று – கும்மி ; மற்றது- அம்மானை.

முத்துச்சாமி என்பவர் – சிவகங்கைச் சரித்திரக் கும்மியை எழுதிய ஆசிரியர்.

முருகையன் என்பவர் – சிவகங்கைச் சரித்தி அமானையை எழுதிய ஆசிரியர்.

‘சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும்’ என்ற நூலின் காலம் 1820-1840 ஆகும்.

இந்த நூல் கதைப்பாடல் (Ballad) என்ற வகையைச் சேரும்.

இந்த நூலின் கும்மிப் பகுதியை மட்டும்  ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பும் (transliteration), மொழிபெயர்ப்பும் (translation) செய்தவர் ஜே.வாசக் (Jaroslav Vacek) (பிறப்பு 1943 ) என்ற செக்கோஸ்லாவியா நாட்டுக்காரர் ( இவரை நான் பார்த்திருக்கிறேன்) .

வாசக்கின் இந்த மொழிபெயர்ப்பு எப்படிப் பலராலும் அறியப்படாததோ அதைப் போலவே இந்த மொழிபெயர்ப்பு இடம் பெற்ற நூலான Introduction to the Historical Grammar of the Tamil Language (1970) என்ற நூலையும் பலர் அறியார் . இந்த நூலும் செக்கொஸ்லாவியா நாட்டிலிருந்தே வெளி வந்தது.

என் கையில் இருப்பது இந்த நூலே ! இதை ஆதாரமாகக் கொண்டே இக் கட்டுரையை நான் எழுதுகிறேன்.இந்த நூலின் ஆசிரியர்கள் இருவர் – மேற்சொன்ன வாசெக்கும், கமில் சுவலபில் (Kamil Zuvelebil , 1927 - 2009)  அவர்களும் ஆவர். கமில் சுவலபிலும் செக்கொஸ்லாவியாக்காரர்தான்.

இந்த நூலில் வாசெக் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள சுவையான  வரலாறு ஒன்று ! :-

’ சென்னை நவாபு துரை’’ , ‘காருபார் பிள்ளை’யிடம் கேட்டார் – “இன்னும் வரி செலுத்தாதோர் யார்?யார்?”
காருபார் பிள்ளை – “சேது ராசா , சிவகங்கை ராசா , பாஞ்சைக் கட்டபொம்மு ஆகிய மூவரும்தான் இன்னும் வரியைக் கட்டவில்லை !”

அதைக் கேட்டு  நவாபு  சினம் மிகக் கொண்ட அவ் வேளையில் , கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள் சிலர் நவாபு முன் வந்தனர்!

அவர்களைப் பார்த்து நவாபு “யார் நீங்கள் ? எங்கே உள்ளவர்கள்? எதற்காக இங்கே வந்தீர்கள்?” எனக் கேட்டார் !

அதற்கு அந்தக் கிழக்கிந்தியக் கம்பெனி வியாபாரிகள் – “அரசே ! நாங்கள் வியாபாரிகள் ! இந்த நாட்டில் வியாபாரம் செய்வதற்கு உங்களிடம் அனுமதி கேட்க வந்துள்ளோம் !”

அவர்கள் மேலும், “எங்கள் நாடு இங்கிலாந்து ! இங்கே வியாபாரம் செய்வதற்காக உங்கள் முன்னே வந்துள்ளோம் !”

வியாபாரிகள் தொடர்ந்தார்கள் – “நாங்கள் உங்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டுவந்த பொருள்களைக் கூறுகிறோம் கேளுங்கள் !” :

“குண்டு , துப்பாக்கி , வெடி மருந்து , பிஸ்தோல் , பீங்கான், சுருட்டுக் கத்தி , நல்ல சூரிக் கத்தி , எறியீட்டிகள், கையில் எப்போதும் இருக்கும் சுரிகை வாள் , ஈரல் பிடுங்கும் வாங்கருவாள் , இன்னும் என்னென்ன தேவையோ அவற்றை நாங்கள் தருவிச்சுத் தருவோம் !” –

கேட்ட நவாபு – “இப்போது உங்களுக்கு என்ன வேண்டும் ?”

வந்தவர்கள் – “நாங்கள் வசிப்பதற்காக ஓர் இடம் வேண்டும் !”

நவாபு – “எந்த இடத்தில் வேண்டும் ? எவ்வளவு வேண்டும் ?”

வந்த வியாபாரிகள் – “கடற்கரை ஓரப் பகுதியில் ஆட்டுத் தோல் இடம் போதும் !”

நவாபு – “நீங்கள் கேட்டபடியே ஆட்டுத்தோல் அளவு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் !”

அதன்பின் அந்தக் கிழக்கிந்திய வியாபாரிகள் , சுற்றிலும் வேலி அடைத்து ஓர் இடத்தை அமைத்துக் கொண்டார்கள் ! அந்த இடம் எப்படியென்றால் தெற்கிலிருந்து வடக்கே இரண்டு மைல் நீளம் , கிழக்கிலிருந்து மேற்கே இரண்டு மைல் நீளம்! அந்த இடத்தில் நான்கு சத்திரம் கட்டினார்கள்! இப்படியாகக் கட்டியவர்கள் ஒரு கோட்டையும் கட்டி அதில் இங்கிலீசுக் கொடியைப் பறக்கவிட்டார்கள் ! கோட்டையின் நாலு பக்கமும் கொத்தளம் கட்டி , நான்கு பக்கமும் பங்களாக்களைக் கட்டிக்கொண்டார்கள் !

ஆட்டுத்தோல் இடம் கேட்டவர்கள் பின்னாளில் இந்தியர் தோலை உரித்த வரலாறு உங்களுக்கே தெரியும் !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Dec 25, 2015 5:57 am

நன்றி

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 25, 2015 9:12 am

நன்றி மு.நமச்சிவாயம் அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 10:14 pm

Dr.S.Soundarapandian wrote:
நவாபு – “நீங்கள் கேட்டபடியே ஆட்டுத்தோல் அளவு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் !”
அதன்பின் அந்தக் கிழக்கிந்திய வியாபாரிகள் , சுற்றிலும் வேலி அடைத்து ஓர் இடத்தை அமைத்துக் கொண்டார்கள் ! அந்த இடம் எப்படியென்றால் தெற்கிலிருந்து வடக்கே இரண்டு மைல் நீளம் , கிழக்கிலிருந்து மேற்கே இரண்டு மைல் நீளம்! அந்த இடத்தில் நான்கு சத்திரம் கட்டினார்கள்! இப்படியாகக் கட்டியவர்கள் ஒரு கோட்டையும் கட்டி அதில் இங்கிலீசுக் கொடியைப் பறக்கவிட்டார்கள் ! கோட்டையின் நாலு பக்கமும் கொத்தளம் கட்டி , நான்கு பக்கமும் பங்களாக்களைக் கட்டிக்கொண்டார்கள் !
ஆட்டுத்தோல் இடம் கேட்டவர்கள் பின்னாளில் இந்தியர் தோலை உரித்த வரலாறு உங்களுக்கே தெரியும் !
***
மேற்கோள் செய்த பதிவு: 1182820
நாம் எப்படி அடிமையானோம் என்பதின் மூலத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2015 9:21 am

நன்றி பழ.முத்துரமலிங்கம் அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:28 am

Dr.S.Soundarapandian wrote:நன்றி பழ.முத்துரமலிங்கம் அவர்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1183029
நன்றி ஐயா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 12:22 pm

   சிவகங்கைச் சரித்திர நூல் – அறியப்படாத கருத்துகள்! 3838410834 இந்த தலைமுறைக்கு தெரியாத தகவல்கள் , பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக