புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
7 Posts - 64%
heezulia
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
8 Posts - 2%
prajai
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
4 Posts - 1%
mruthun
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 1:30 pm

ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், பின்னாளில்
சட்ட மொழி பெயர்ப்புத் துறை தலைவராக பதவி வகித்தார்.
அப்போது, அவர் சொன்னது:
-
ஷேக்ஸ்பியரின், 'கிங்லியர்' நூலை மொழி பெயர்க்கும் போது,
எனக்கு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. இளவரசி கார்லியா
இறந்து விட்டாள்; அவளுடைய பிரேதத்தை தூக்கிக் கொண்டு
ஓடுகிறான் அரசன், லியர்.

அவனுக்கு, தன் அருமை மகள் இறந்திருக்க மாட்டாள் என்ற
சந்தேகம், உள் மனதில் எழுகிறது.
-
உடனே, தன் வீரர்களிடம், 'ஒரு கண்ணாடியை கொண்டு வாருங்கள்...
அவள் மூக்குக்கு எதிரே அதைப் பிடித்தால் சுவாசம் இருக்கிறதா,
இல்லயா என்று தெரிந்து விடும்...' என்று கூறினான்.
-
இவ்விடத்தில், 'It with mist the mirror' எனும்
ஆங்கில வாக்கியத்தை எப்படி தமிழில் மொழி பெயர்ப்பது என
யோசித்தேன்.
-
பத்து நாட்கள் ஆகியும், இதற்கு பொருத்தமான தமிழ்ச் சொல்
கிடைக்கவில்லை. ஒருநாள் சமையலறையில், என் மனைவி இட்லி
தயார் செய்து கொண்டிருந்தாள். அதை பார்த்தவுடன்,
'கொப்பரையின் மூடியில் ஆவி படிகிறபோது, அதற்கு என்ன
சொல்வது வழக்கம்?' என்று கேட்டேன்.
-
அவள், 'வேர்த்து விடறதைக் கேட்கிறீங்களா...' என்றாள்.
-
கண்ணாடியை மூக்குக்கு எதிரே கொண்டு போனால், 'கண்ணாடி
வேர்த்து விடும்!' என்று மொழி பெயர்த்தால், எவ்வளவு பொருத்தமாக
இருக்கும்... 'mist' என்ற வார்த்தைக்கு, அப்படியே பொருள்
கொண்டேன்.
-
------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 1:30 pm


சற்றே சிரமம் எடுத்துக் கொண்டால், எந்த ஒரு ஆங்கிலச் சொல்லுக்கும்,
பொருத்தமான தமிழ்ச் சொல், புழக்கத்திலுள்ள தமிழிலேயே இருப்பதைக்
காணலாம்.

மூலத்தினுடைய அந்தராத்மாவை எப்படியாவது சொல்லித் தீர்த்துவிட
வேண்டும் என்பதே, நம்முடைய உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும்.
இந்த நோக்கத்திற்குப் புறம்பான எந்த கருத்தையும் புறக்கணிக்க
வேண்டியது, மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை.

ஒரு குறிப்பிட்ட சொல், சுயம்பான தமிழ்ச் சொல்லா, பிற மொழி சொல்லா
என்பது அல்ல பிரச்னை. அது உயிருள்ள சொல்லா, செத்த சொல்லா,
மூல நூலின் சுவையையும், மணத்தையும் தமிழில் தரவல்ல சொல்லா,
இல்லையா என்பது தான் பிரச்னை.

உயிருள்ள, தமிழ்நாட்டில், சமபந்தி போஜனம் செய்து கொண்டிருக்கிற
சொல்லானால், அதை விட்டுக் கொடுக்கக் கூடாது; அது கிடைக்காது.

கத்தரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்... கதே என்பது சீனச் சொல்.
அதை, தமிழில் கத்தரிக்காய் என்று புழக்கத்தில் கொண்டு வந்து
விட்டோம். கத்தரிக்காய்க்குள் சீன மொழி இருக்கிறது.
அதனால், கத்தரிக்காய்க்கு வேறு சொல்லையா கண்டுபிடிக்க
வேண்டும்?
-
'கஷ்டம்' என்ற சொல்லும் அம்மாதிரிதான். அது சமஸ்கிருதச் சொல்;
ஆயினும், பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழில் ஏற்றுக் கொண்டு விட்டோம்.
-
'டாய்லெட்' என்பதை, பிரெஞ்சு மொழியில், 'துவாலே' என்று
உச்சரிக்க வேண்டும். நாம் குளிப்பதற்கு உபயோகப்படுத்துகிற,
'துவாலைத் துண்டு' என்கிற தமிழ் சொல், இந்த பிரெஞ்சு சொல்லிலிருந்து
தான், நம்முடைய பழக்கத்திற்கு வந்திருக்கிறது.
-
மயில் தோகையில் உள்ள, 'தோகை' என்கிற சொல்லையே ரோமில்,
'தோகா' என்று குறிப்பிடுகின்றனர். 'தோகை' என்ற சொல், தமிழிலிருந்து
ரோமுக்குப் போயிருக்கிறது.
-
துருக்கி மொழியில், 'கூலி' என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
துருக்கியிலிருந்து வந்திருந்த தூது கோஷ்டி, நம் ஊர், 'ஹார்பரில்'
பேசப்படுகிற, 'கூலி' என்கிற வார்த்தையை கேட்டு, 'இந்த சொல்லை
எப்படி நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?' என்று கேட்டார்களாம்.
-
அப்போது ரா.பி.சேதுபிள்ளை, 'எவ்வளவு காலமாக துருக்கி இலக்கியத்தில்
இந்த சொல் பயன்படுகிறது?' என்று கேட்டார். 'துருக்கி இலக்கியம் பிறந்தே
1,000 ஆண்டுகளுக்குள் தான்...' என்று பதில் வந்தது.
-
'மெய் வருத்தக் கூலி தரும்...' என்று, 3,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த
சொல்லை திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்...' என்று, சேது பிள்ளை
விளக்கம் தந்தபோது, 'கூலி' என்ற சொல், தமிழ் சொல்தான் என்று,
ஒப்புக் கொண்டனர்.
-
ஆகவே, தாராள மனப்பான்மையுடன் கொடுக்கல், - வாங்கல் செய்ய
வேண்டும்.
'Unless the context other wise required' என்று,
சட்ட சம்பந்தமான ஆங்கிலச் சொற்றொடர் உண்டு. இதை, 'தருவாயின்
தேவை வேறானால் அன்றி' என்று மொழி பெயர்த்துள்ளனர்.
-
'சூழ்நிலை வேறு; பொருள் குறித்தாலன்றி' என்று, எவரும் புரிந்து
கொள்ளக் கூடியவாறு மொழி பெயர்க்கலாமே!
'In any other case' என்பதை, 'பிற எந்த தேர்விலும்' என்று
மொழி பெயர்த்து வந்துள்ளனர். இதை, 'பிற தருணம் எதிலும்' என்று
மாற்றி அமைக்கலாம். இதைவிட நல்ல சொற்களை மற்றவர்கள்
சொல்லக் கூடும்.
-
— இவ்வாறு அவர் கூறினார்.

விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், பொருளாதாரம் ஆகியவைகளை
தமிழர்கள், தமிழில் படிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நம்மில்
பலரிடையே உண்டு. அவற்றை தமிழில் மாற்றும் போது, எவ்வளவு
சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை, யோசித்துப் பாருங்கள்!
-
--------------------------------
அந்துமணி பா கே ப
நன்றி- வாரமலர்







View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக