புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_lcapஆகமம் என்றால் என்ன? - Page 3 I_voting_barஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_rcap 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
ஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_lcapஆகமம் என்றால் என்ன? - Page 3 I_voting_barஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_lcapஆகமம் என்றால் என்ன? - Page 3 I_voting_barஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_lcapஆகமம் என்றால் என்ன? - Page 3 I_voting_barஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_lcapஆகமம் என்றால் என்ன? - Page 3 I_voting_barஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_lcapஆகமம் என்றால் என்ன? - Page 3 I_voting_barஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_lcapஆகமம் என்றால் என்ன? - Page 3 I_voting_barஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
ஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_lcapஆகமம் என்றால் என்ன? - Page 3 I_voting_barஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_lcapஆகமம் என்றால் என்ன? - Page 3 I_voting_barஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_lcapஆகமம் என்றால் என்ன? - Page 3 I_voting_barஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_lcapஆகமம் என்றால் என்ன? - Page 3 I_voting_barஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_lcapஆகமம் என்றால் என்ன? - Page 3 I_voting_barஆகமம் என்றால் என்ன? - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகமம் என்றால் என்ன?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 16, 2015 10:53 pm

First topic message reminder :

ஆகமம் என்றால் என்ன? - Page 3 VktI7b9Tfqd2x3TrTPvw+agamam

இன்று (16 12 2015) ஆகமவிதிகளின்படிதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆகமம் என்பது பற்றி அரசியல்வாதிகளுக்கோ, பொதுமக்களுக்கோ, வழக்காடுமன்றத்தில் இருப்பவர்களுக்கோ தெரியுமா ?......... என்று கேட்பதைவிட முதலில் கோயில் தொடர்புடையவர்களுக்கு தெரியுமா? என்று கேட்டால்........பதிலை மிகத்தெளிவாகச் சொல்லலாம்.

??????????????????????????????????????????????????????

தெரியாது! தெரியாது!! தெரியாது!!!...................சிலருக்கு ஒருசில தெரியலாம். முழுமையாக தெரிந்தவர்கள் யார் எனில் விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சரி. கோயில் தொடர்புடையவர்கள் யார்?
அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், கோயில் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள், பத்தர்கள் ....... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களின் நலனுக்காக ஆகமம் பற்றிய ஒரு சுவையான திரி இது! பின்னூட்டங்கள் அளித்தால் மகிழ்ச்சியாக உங்களோடு நானும் பயணம் செய்வேன்!

(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Dec 20, 2015 7:31 am

7) திருமந்திரம் ஆகமம் என்பதை அதை அருளிய திருமூலர் சொல்லியிருக்கிறாரா?

திருமந்திரத்தைத் திருமூலரே ஆகமம் என்கின்றார். கீழ்வரும் திருமந்திர வரிகள் இதனை உறுதி செய்கின்றன.
“அந்திமதி புனை அரனடி நாள்தொறும்
சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே”

(சந்திரனை தலையில் சூடிய சிவபெருமானது திருவருட் பெருமையை தினமும் இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்த வாற்றால், சிவ ஆகமப் பொருளைக் கூறத்தொடங்கினேன்)

மேலும் தான் படைத்த அந்த ஆகமத்தை முழுத்தமிழில் படைக்கவே தன்னை மூலன் உடலில் படைத்துப் பணித்தான் இறைவன் என்பதையும் திருமூலர் கூறுகின்றார்.
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே”

(இறைவன் என்னைத் தன்னைத் - தன்னை வந்து அடையும் வழியான ஆகமத்தை - தமிழ்மொழியால் நன்றாகப் பாடும் வண்ணம் செவ்விய முறையால் இந்த மூலன் உடலில் படைத்தான்).

ஆகமம் என்றால் என்ன? - Page 3 Oonsku7ORiG3kAQc8IK2+nandhi

மொத்த ஆகமங்களையும் முதன் முதலில் நந்தியம்பெருமான்தான் சிவபெருமானிடம் பெற்றார் என திருமூலர் சொல்கிறார். அதன் பின்தான் ஆலமர்ச் செல்வனாய் மகேந்திரமலையில் தமிழ் முனிவர்களுக்கு ஆகமங்களைக் கற்பித்தான் என அறிகிறோம்.

அப்படியானால் நந்தி பெற்ற மொத்த ஆகமங்கள் எத்தனை?
(தொடரும்)


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 10:05 am

சாமி wrote:
(இங்கேயும் ஆகமம் முன்னம் அருளியது எனக்கூறப்பட்டுள்ளது அதை திரும்ப அருள வேண்டும் என்பதனால் அது இடையில் ஏதோ காரணத்தினால் மறைந்து போயிற்று  என்பதை அறிகிறோம். திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப என்பதனால் முன்னால் அது இறைவன் வாக்கினால் தமிழில் கூறப்பட்டது என்பதை அறிகிறோம். அதை இப்போது திருமூலர் வாக்கினால் தமிழில் கொண்டுவர திட்டமிட்டுள்ளான் என்பது புலனாகிறது).
சரி. திருமந்திரம்தான் ஆகமம் என்பதை அதை அருளிய திருமூலர் சொல்லியிருக்கிறாரா?
மேற்கோள் செய்த பதிவு: 1181564
திருமூலர் அருளிய திருமந்திரம் தான் ஆகமம் என்பதில் ஐயமில்லை நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 10:10 am

சாமி wrote:
மொத்த ஆகமங்களையும் முதன் முதலில் நந்தியம்பெருமான்தான் சிவபெருமானிடம் பெற்றார் என திருமூலர் சொல்கிறார். அதன் பின்தான் ஆலமர்ச் செல்வனாய் மகேந்திரமலையில் தமிழ் முனிவர்களுக்கு ஆகமங்களைக் கற்பித்தான் என அறிகிறோம்.
அப்படியானால் நந்தி பெற்ற மொத்த ஆகமங்கள் எத்தனை?
மேற்கோள் செய்த பதிவு: 1181731
முதலில் ஆகமம் அறிந்தது நந்தி தேவன் என்பதை அறிந்து கொண்டேன்.அருமை,நன்றி ஐயா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 20, 2015 12:07 pm

ஆகமம் என்றால் என்ன? - Page 3 3838410834 :வணக்கம்: தொடர்கிறேன்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Dec 20, 2015 3:49 pm

8)  ஆகமங்கள் மொத்தம் எத்தனை?

ஆகமங்கள் மொத்தம் ஒன்பது என்கிறார் திருமூலர். மொத்த ஆகமங்களையும் முதலில் நந்தியெம் பெருமான்தான் சிவபெருமானிடம் பெற்றார். அதன் பின்தான் ஆலமர்ச் செல்வனாய் தமிழ் முனிவர்கள் இடையே ஆகமத்தைத் தோற்றுவித்தான் என நாம் அறிகிறோம்.

சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே
"  
-  எனப்பாடுகிறார் திருமூலர்.

ஆகமம் என்றால் என்ன? - Page 3 CjvyzWxDRWSP5fECudK2+images(2)

அந்த ஒன்பது ஆகமங்கள் எவையெவை எனவும் சொல்கிறார்.
பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.


நந்தி பெற்ற ஆகமங்களின் பட்டியல்:-

ஆகமம் என்றால் என்ன? - Page 3 ZRfFeb5rThafEjkyaiq7+books

இந்தப் பெயர்களை எல்லாம் பார்த்தவுடன் இவை அனைத்தும் வடமொழிப் பெயர்கள் என்பது கூறாமலே விளங்கும். எனவே இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது. நன்றாகத் தமிழ் செய்யுமாறு இறைவன் கட்டளை இட, அதை ஏற்றுப் பாடிய திருமூலர் வேண்டுமென்றே வடமொழிப் பெயர்களைக் கூறிப் பாடி இருக்க மாட்டார். எனவே இது பிற்காலத்திய சான்றோர் ஒருவர் பழைய தமிழ் திருமந்திரப் பாடலுக்குப் பதில் வடமொழிப் பெயரில் பாடி திருமந்திரத்தில் நுழைத்து இருக்க வேண்டும்.

(இது ஆரியர்கள் வழக்கமாகச் செய்யக்கூடிய விஷயம். கோயில் பெயர்களையும் இறைவன் இறைவிப் பெயர்களையும் வடமொழியில் மாற்றிச் சொல்வது அவர்களுக்கு கைவந்த கலை. அதேபோல் பல இலக்கிய நூல்களிலும் தங்களுடைய வேலைகளைக் காட்டியிருப்பார்கள். திருமந்திரம் அருளிய திருமூலரே தான் 3000 பாடல்கள் தான் பாடி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே .

ஆனால் இன்று கிடைக்கின்ற பாடல்களோ 3000 க்கும் மேல்.)

இந்த ஒன்பது ஆகமங்களின் பிழிவாகத்தான் ஒன்பது தந்திரங்களாக (ஒன்பது பகுதிகளாக) திருமந்திரம் பாடப்பட்டது என சான்றோர்கள் கூறுகிறார்கள்.

ஆகமங்கள் மொத்தம் 28 என சிலர் கூறுகிறார்களே! எது உண்மை ... ஆகமங்கள் ஒன்பதா? அல்லது இருபத்தெட்டா?

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Dec 22, 2015 10:22 pm

9) மொத்த ஆகமங்கள் ஒன்பதா? … இருபத்தெட்டா?
ஆகமம் என்றால் என்ன? - Page 3 FMsaJF1XQTOnqw2qosdz+Nandhi-Bhagavan

இந்த ஒன்பது ஆகமங்கள்தான் 28 ஆயிற்று என்கிறார் திருமூலர்.

ஒவ்வொரு ஆகமமும் மூன்று பிரிவுகளை உடையது. அவையாவன கிரியைப் பகுதி, யோகப்பகுதி மற்றும் ஞானப்பகுதியாகும்.
ஆக மொத்த ஆகமம் 9, ஒவ்வொன்றிலும் 3 பிரிவுகள்.
9 ஆகமம் X 3 பிரிவுகள் = 27

இந்த 27 ஆகமங்களும் ஒன்று போலக் கூறுவதில்லை. இவை ஒன்றிற்கொன்று முரண்பாடுகள் கொண்டவையாக உள்ளன. அதனால் இந்த முரண்பாடுகளை  அமைதிப்படுத்திய ஆகமம் ஒன்று எழுந்தது. ஆக மொத்தம் 28 ஆகமங்களாயிற்று. அந்தத் திருமந்திரப்பாடல்:-
ஆகமம் ஒன்பான் அதில்ஆன நாலேழு
மோகமில் நாலேழு முப்பேதம் உற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன்று
ஆக முடிந்தது அருஞ்சுத்த சைவமே.


திருமந்திரம்தான் ஆகமம் என்று முன்னர்க் கண்டோம். சரி சொல்லப்பட்ட 28 ஆகமங்களுள் தற்போது கிடைக்கின்ற ஒருசில ஆகமங்கள் வடமொழியில் உள்ளனவே ஏன்?
(தொடரும்)

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Dec 23, 2015 2:03 am

அஹ்ஹா .... மிகவும் பயனுள்ள , அற்புதமான திரி அய்யா . மிக்க நன்றி .
படங்களும் , விளக்கங்களும் அருமையோ அருமை.
தொடருங்கள் அய்யா படிக்கிறோம் .
நன்றி .

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 16, 2016 8:36 am

10)  ஆகமங்கள் 28 இல் தற்போது கிடைக்கின்ற ஒருசில ஆகமங்கள் வடமொழியில் உள்ளனவே. ஏன்?

ஆகமம் என்றால் என்ன? - Page 3 J64TmVTpKYbkiDWaZMNQ+T_500_578

திருமந்திரம் தமிழ் ஆகமமாக தற்போது நம்மிடையே உள்ளது. ஆனால் முன்னர் சிவபெருமானால் வெளிப்படுத்தப்பட்ட 28 ஆகமங்கள் தற்போது (இதில் சில ஆகமங்கள்தான் கிடைக்கின்றன) வடமொழியில்தான் உள்ளது.

தமிழில் தமிழ்நெறியோடு மட்டுமே தொடர்பு கொண்ட, ஆரியர்களுக்கு தொடர்பேயில்லாத ஆகமங்கள் எப்படி வடமொழியில் தற்போது உள்ளது? இதைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமெனில் நாம் காலச் சக்கரத்தில் ஏறி சற்றுப் பின்னோக்கி போகவேண்டும்.

கவனமாக என்னுடன் பின் தொடர்ந்து வாருங்கள். சுருக்கமாகச் சொல்கிறேன்!

தலைச் சங்கம் (கிட்டத்தட்ட திருவள்ளுவர் பிறப்புக்கு முன் 18000 ஆண்டுகள்) 549 உறுப்பினர்களைக் கொண்டு குமரிக்கண்டத்தில் இயங்கியது. அதன்பின்னர் இடைச்சங்கம் 59 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கியது. கடைச்சங்கம் தற்போதைய மதுரையில் 49 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கியது. இந்தச் சங்கங்களில் தமிழ்நூல்கள் பல ஆராயப்பட்டு தமிழ் வளர்க்கப்பெற்றது.

ஆகமம் என்றால் என்ன? - Page 3 Iae3VHFlS6OeHfmGJJFn+images

(தி.பி-திருவள்ளுவர் பிறப்புக்குப்பின்) தி.பி. 281இல் இருந்து தி.பி.606 வரை தமிழகத்தை ஆண்ட களப்பிரர்களால் தமிழ் வளர்ச்சி முடக்கப்பட்டது. இவர்களது ஆட்சிக்காலம் ‘தமிழத்தின் இருண்ட காலம்’ என வரலாற்றாசிரியர்களால் பதிவு செய்யப்படுகிறது. இவர்களின் காலத்தில் ஆரியமொழி தமிழகத்தில் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்தது.

அதன் பின் பல்லவர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. பல்லவர்கள் பரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்த ஆரியப் பரம்பரையினர் என்பதால் இயல்பாகவே பல்லவ அரசில் ஆரியமொழியின் செல்வாக்கு அரசுத்துறை அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக சமயத்துறையிலும் மொழித்துறையிலும் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலில் அப்போது வழிபாடுகளில் ஆரிய மொழி இல்லை. காரணம் ஆரிய வேதங்களுக்கும் (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) கோயில்களுக்கும் தொடர்பே இல்லை. தமிழர்கள்தான் கோயில் கட்டி தெய்வங்களை வணங்கியவர்கள்.

பல்லவ அரசர்களோ ஆரிய மொழியினர். அரசன் மொழி ஆரியமொழி என்பதால் அரசனால் வெறுக்கப்படாமல் அரசனால் ஆதரவு பெறவேன்டுமானால், அரசனது மொழியில் வழிபாடுகளை மாற்ற கோயில் சிவாச்சாரியார்கள் முனைந்தனர். அரசர்களுக்கு ஏற்ப ஆரிய மொழிக்குத் தாவுவது அவர்களுக்கு வாழ்வாதாரக் கட்டாயமாயிற்று. ஆரிய மொழிக்கு எழுத்து வடிவம் இல்லாதது சிவாச்சாரியார்களுக்கு வசதியாய்ப் போயிற்று.

இதனால் பல்லவ அரசர்களின் மொழியான ஆரிய மொழிக்குத் தமிழ் எழுத்து வடிவங்களை இப்படியும் அப்படியுமாகச் சிற்சில மாற்றங்களைச் செய்து கிரந்தங்களை உருவாக்கிக் கொடுத்தார்கள் சிவாச்சாரியார்கள். இதற்கு பல்லவ கிரந்தம் என்றே பெயர். ஆரிய மொழிக்கு தமிழ் எழுத்து வடிவங்களைக் கொடுத்ததே கிரந்தம் ஆகும்.

ஆகமம் என்றால் என்ன? - Page 3 AJSMG6ckR1iL5Xvx6MfA+Other_Languages-II

புதிய எழுத்து வடிவம் கிடைத்தபின் கோயில் சிவாச்சாரியார்கள் கோயில் வழிபாட்டிற்குச் சொந்தமான ஆகமங்களை எல்லாம் கிரந்தத்தில் தமிழிலிலிருந்து ஆரிய மொழியாக்கம் செய்தனர்.
பல்லவ அரசர்களைத் திருப்திபடுத்த தமிழில் இருந்த ஆகமங்கள் ஆரியமொழிக்குச் சென்றது. காலப்போக்கில் புதியதில் காட்டும் இயல்பான ஆர்வம் காரணமாகவும், அரச மரியாதை பெறவும் அப்படியே நிரந்தரமாகிவிட்டது.

பல்லவ கிரந்தங்கள் தோன்றிய காலத்தில் ஆகமங்கள் வடமொழியாக்கம் செய்யப்பட்டாலும் தமிழ் ஆகமங்கள் மறையவில்லை. பயன்பாட்டிலிருந்துதான் விலகினவேயன்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. இதனை முற்றிலுமாக அழிக்க முனைந்த இதில் அக்கறையுள்ளவர்கள் சிலர் தமிழ் ஆகம மூலங்களையும் தமிழ்த் திருமுறைகளையும் குறிவைத்து தாக்கி அழித்தார்கள். (அது ஒரு பெரிய…… கதை. முடிந்தால் பிறகு பார்ப்போம்). இப்படித்தான் தற்போது கிடைக்கும் ஆகமங்கள் வடமொழியில் உள்ளது.

இதில் கோயில் சிவாச்சாரியார்கள் எனச் சொல்லப்படுகிறதே…! அவர்கள் ஆரியர்களா …?  தமிழர்களா….?  
(தொடரும்)

rajshan
rajshan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 24/08/2017

Postrajshan Fri Aug 25, 2017 1:32 am

ஏன் இந்த கட்டுரை இதற்குப்பின் தொடரவில்லை?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 25, 2017 1:51 am

தெரியவில்லை. ராஜன் .
உங்கள் வருகைக்கு நன்றி.:நல்வரவு: :நல்வரவு:
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக