புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகமம் என்றால் என்ன?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 16, 2015 10:53 pm

First topic message reminder :

ஆகமம் என்றால் என்ன? - Page 2 VktI7b9Tfqd2x3TrTPvw+agamam

இன்று (16 12 2015) ஆகமவிதிகளின்படிதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆகமம் என்பது பற்றி அரசியல்வாதிகளுக்கோ, பொதுமக்களுக்கோ, வழக்காடுமன்றத்தில் இருப்பவர்களுக்கோ தெரியுமா ?......... என்று கேட்பதைவிட முதலில் கோயில் தொடர்புடையவர்களுக்கு தெரியுமா? என்று கேட்டால்........பதிலை மிகத்தெளிவாகச் சொல்லலாம்.

??????????????????????????????????????????????????????

தெரியாது! தெரியாது!! தெரியாது!!!...................சிலருக்கு ஒருசில தெரியலாம். முழுமையாக தெரிந்தவர்கள் யார் எனில் விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சரி. கோயில் தொடர்புடையவர்கள் யார்?
அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், கோயில் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள், பத்தர்கள் ....... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களின் நலனுக்காக ஆகமம் பற்றிய ஒரு சுவையான திரி இது! பின்னூட்டங்கள் அளித்தால் மகிழ்ச்சியாக உங்களோடு நானும் பயணம் செய்வேன்!

(தொடரும்)


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 5:43 pm

சாமி wrote:2) ஆகமத்தைச் சொன்னது (தோற்றுவித்தது) யார்?
"மன்னு மாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்"

ஆக மணிவாசகர் சொன்ன இந்த வரி உண்மை என நாம் உணரமுடியும். ஆகமத்தை அதாவது தன்னை அடையும் வழியை பரம்பொருளான சிவபெருமான்தான் சொன்னான் என்பது உறுதியாகிறது.
(தொடரும்)
மேற்கோள் செய்த பதிவு: 1180996
சிவபெருமான் எழுதியதில் பிழையிருக்குமா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 5:51 pm

சாமி wrote:3) ஆகமம் எங்கு சொல்லப்பட்டது?
காராணாகமம் என்ற ஒரு ஆகமத்தின் வசனம் பின்வருமாறு சொல்கிறது. "சைவம், சைவாகமம் தெற்கே உற்பத்தியாயிற்று" என்று.
எனவே, கடல்கோளுக்கு முன் இலங்கைக்கு தெற்கே கபாடபுரத்தருகே இருந்ததாகக் கூறப்படும் மகேந்திர மலையில் சிவபெருமான் ஆகமத்தைக்கூறினான் என்பது தெளிவாகிறது.
(தொடரும்)
மேற்கோள் செய்த பதிவு: 1181087
எத்தனை எத்தனை விளக்கங்கள் அருமை,நன்றி ஐயா.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Dec 17, 2015 7:08 pm

அருமையான பதிவு, முழுமையாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Dec 18, 2015 1:22 pm

4) இறைவன் ஆகமத்தை யாருக்குச் சொன்னான்?

சிவபெருமான் மகேந்திரமலையில் ஆகமத்தைச் சொன்னான் என்பதை இதுகாறும் பார்த்தோம். ஆகமத்தை யாருக்குச் சொன்னான்?

சிவபெருமான் ஆகமத்தை தமிழ்முனிவர்களுக்குச் சொன்னான்.

ஆகமம் என்றால் என்ன? - Page 2 OezxWkqjTYmkIPLMaSiT+images(2)

அதெப்படி சொல்லமுடியும்? நீங்கள் தமிழராக இருப்பதால் தமிழ் முனிவர்களுக்குச் சொன்னான் எனச் சொல்கிறீர்கள் என ஒரு சிலருக்கு ஐயம் ஏற்படலாம். கூர்ந்து கவனித்தால் உண்மை புலப்படும்.

1) கபாடபுரத்திலுள்ள மகேந்திரமலை குமரிக்கண்டத்தில் இருந்தது. அந்தக் குமரிக்கண்டமானது பல கடற்கோள்களினால் (சுனாமிகளினால்) கடலுக்குள் மூழ்கியது.

2) இந்தக் குமரிக்கண்டம் தற்போதுள்ள கன்னியாகுமரியிலிருந்து சுமார் 7500 மைல் தெற்கே பரவியிருந்தது.

3) முதல் கடற்கோள் வந்த காலம் சுமார் கி.மு. 18,000 என கடலியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் கோந்தரதேவ் குறிப்பிடுகிறார்.

4) ஆரியர்களாகிய வடமொழியாளர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காலம் கி.மு.1500 முன்னதாக இல்லை என வரலாற்றாசிரியர்கள் (ஆரிய வரலாற்றாசிரியர்கள் உட்பட) அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

5) அவர்கள் நுழைந்தது இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் (தற்போதுள்ள ஆப்கானிஸ்தானில்)

6) ஆக கி.மு. 18,000 க்கு முற்பட்ட காலத்தில் வடமொழியாளர்களாகிய ஆரியர்கள் குமரிக்கண்டத்திற்கு வந்திருப்பது சாத்தியமேயில்லை. எனவே அங்கிருந்திருப்பது தமிழர்களாகிய தமிழ் முனிவர்கள்தான் என்பது உறுதியாகிறது.

இந்தத் தமிழ் முனிவர்களுக்குத்தான் சிவபெருமான் நான்கு வேதங்களான அறம், பொருள், இன்பம் , வீடு இவற்றின் உட்கிடையான ஆகமங்களைப் போதித்தான். இது பல திருமுறைப்பாடல்களில் பல அருளாளர்களினால் சொல்லப்படுகிறது.

சிவபெருமானுக்கு ‘ஆலமர்ச்செல்வன்’ என்ற பெயர் இருப்பதை நாம் கேள்விப் பட்டிருப்போம். அதாவது ஆலமரநிழலின் கீழிருந்து நான்கு வேதங்களையும் அதன் உட்பொருளான ஆகமத்தையும் சில முனிவர்களுக்கு உபதேசித்தான்.

ஆகமம் என்றால் என்ன? - Page 2 MosFzKyKQEC2p6UV1vIz+c582f55225ae8e2832bb04564ce0ab05_i

ஒரு சில திருமுறைப் பாடல்கள்:-

 அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கண் ஆதிமேயது முதுகுன்றே – திருஞான சம்பந்தர் தேவாரம்

 அரித்தானை ஆலதன் கீழ் இருந்து நால்வர்க்கு
அறம் பொருள் இன்பம் வீடு ஆறங்கம் வேதம்
தெரித்தானைத் திருநாகேச் சுரத்துளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேராதாரே - திருநாவுக்கரசர் தேவாரம்

 அன்றாலின் நிழல்கீழ் அறம் நால்வர்க்கு அருள்புரிந்து – சுந்தரர் தேவாரம்

 நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங்கு அறமுறைத்தான் காணேடி – மணிவாசகர் திருவாசகம்

 அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே – அருணகிரிநாதர் திருப்புகழ்

(தொடரும்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 18, 2015 3:43 pm

பல அரிய விஷயங்களை .பலரும் அறிய,
செம்மையாக சொல்லி உள்ளீர் .
தொடருங்கள் .சாரமிக்க பதிவு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Dec 18, 2015 4:20 pm

5) சிவபெருமான் அளித்த அந்த ஆகமங்கள் இப்போது உள்ளனவா?

ஏறத்தாழ மூன்று பெரிய கடற்கோள்களால் அன்று இருந்த தமிழ்நாட்டின் பெரும்பகுதி கடலில் மூழ்கியது.

தி.பி முதல் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் சங்கநூலான “இறையனார் களவியல்” என்ற நூலுக்கு அக்காலத்திய நக்கீரர் எழுதிய உரையில் குமரிக் கண்டத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது.

ஆகமம் என்றால் என்ன? - Page 2 6cQltpQLmD7xrHzUPrEw+IMG_0737

குமரிக்கண்டமானது தற்போதைய கன்னியாகுமரியிலிருந்து 750 காவதம் அதாவது 7500 மைல் தூரம் தெற்கே பரவியிருந்ததாகவும், அவையெல்லாம் மிகப்பெரிய மூன்று கடற்கோள்களினால் மெல்ல மெல்ல கடலுள் மூழ்கிவிட்டதாகவும் குறிப்புகள் கிடைக்கின்றன. மூழ்கிய நாடுகளின் பெயரும் கிடைக்கின்றன.

ஆகமம் என்றால் என்ன? - Page 2 XNMmcKxRlWbOuQlgMPBW+tamilnadu

இவற்றையெல்லாம் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் தனது உரையில் குறிப்பிட்டு உறுதி செய்கிறார்.

ஆகமம் என்றால் என்ன? - Page 2 O2XGLywNQNS7lgRzAcDy+27738

பேரழிவினால் கட்டடங்கள் மறைந்தன; காட்சிகள் மாறின என்பதெல்லாம் ஒரு புறமிருக்க, தமிழர்களின் உயிரோட்டமான பண்பாட்டுக் கூறுகள் அடங்கிய ஆகமம் சிதைந்து சின்னா பின்னமானதே பெருங்கொடுமை. இக்கடல் கோள்களுக்குத் தப்பி உயிர் பிழைத்தோர்கள் நினைவில் தங்கிய ஆகமங்களின் கூறுகளே பின்தொடர்ந்தன. அவையும் காலக்கோளாறினால் பல சிதைவுகளைப் பெற்றன.

ஆகமம் என்றால் என்ன? - Page 2 OoDlfqOGQqmEs69Jz8wh+shiva
இந்த நிலையில் தான் சொன்ன ஆகமத்தை மீண்டும் மீட்டெடுக்க இறைவன் ஒரு உபாயம் செய்தான். அது என்ன?
(தொடரும்)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 7:02 am

சாமி wrote:
இந்தத் தமிழ் முனிவர்களுக்குத்தான் சிவபெருமான் நான்கு வேதங்களான அறம், பொருள், இன்பம் , வீடு இவற்றின் உட்கிடையான ஆகமங்களைப் போதித்தான். இது பல திருமுறைப்பாடல்களில் பல அருளாளர்களினால் சொல்லப்படுகிறது.
சிவபெருமானுக்கு ‘ஆலமர்ச்செல்வன்’ என்ற பெயர் இருப்பதை நாம் கேள்விப் பட்டிருப்போம். அதாவது ஆலமரநிழலின் கீழிருந்து நான்கு வேதங்களையும் அதன் உட்பொருளான ஆகமத்தையும் சில முனிவர்களுக்கு உபதேசித்தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1181318
அருமையான பதிவு ஐயா,பல அரிய சரித்திர தகவலும் நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 7:14 am

சாமி wrote:
ஏறத்தாழ மூன்று பெரிய கடற்கோள்களால் அன்று இருந்த தமிழ்நாட்டின் பெரும்பகுதி கடலில் மூழ்கியது.
இவற்றையெல்லாம் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் தனது உரையில் குறிப்பிட்டு உறுதி செய்கிறார்.
பேரழிவினால் கட்டடங்கள் மறைந்தன; காட்சிகள் மாறின என்பதெல்லாம் ஒரு புறமிருக்க, தமிழர்களின் உயிரோட்டமான பண்பாட்டுக் கூறுகள் அடங்கிய ஆகமம் சிதைந்து சின்னா பின்னமானதே பெருங்கொடுமை. இக்கடல் கோள்களுக்குத் தப்பி உயிர் பிழைத்தோர்கள் நினைவில் தங்கிய ஆகமங்களின் கூறுகளே பின்தொடர்ந்தன. அவையும் காலக்கோளாறினால் பல சிதைவுகளைப் பெற்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1181342
அற்புத விளக்கம் ஐயா,நன்றி.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 7:27 am

ஆகமத்தை பற்றி தெறிந்து கொள்ளும் அதேவேளையில் தமிழ் குடி யின் வரலாற்றை நாங்கள் அறிந்து கொள்ள இந்த திரி உதவியாக உள்ளது.

நன்றி சுவாமி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Dec 19, 2015 4:50 pm

6) ஆகமத்தை மீட்டெடுக்க இறைவன் செய்த உபாயம்:-

இமயமலைச் சாரலிலிருந்து மிகப் பழமையான காலத்தில் ஒரு முனிவர் தெற்கே பொதிகை நோக்கிப் புறப்பட்டார். அவர் பெயர் சுந்தரநாதர். பொதிய மலையில் அக்காலத்திலிருந்த அகத்தியரை அவர் சந்திக்கப் புறப்பட்டார்.

இந்த நெடும்பயணத்தில் தெற்கெ திருவாவடுதுறைக்கு அருகே சாத்தனூர் என்ற ஊர் அருகில் ஒரு மேய்ச்சல் நிலத்தைத் தாண்டி வந்து கொண்டிருக்கும்போது அவருக்கு ஒரு புதுமையான காட்சி தென்பட்டது.

ஆகமம் என்றால் என்ன? - Page 2 WFzNEtjREK8tpRHqjYlA+tt

மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் எல்லாம் கூடி ஓர் இடத்தில் வட்டமிட்டு நின்று கொண்டிருந்தன. எட்டிப் பார்த்தபோது நடுவே ஒரு மனிதன் இறந்து கிடந்தான். அவனை இந்த மாடுகள் உடலெங்கும் நக்கிக் கொடுத்தன. அவைகளின் கண்களிலிருந்து நீர் கொட்டிக் கொண்டிருந்தன. இறந்த மனிதன் கையில் கோல் இருந்தது. எனவே, இவன் இந்த மாடுகளை மேய்த்தவனாக இருப்பான் என்றும் திடீரென இறந்துவிட்டதால் அவன்பால் அன்பு கொண்ட மாடுகள் அவன் உடலைச் சூழ்ந்து நின்று நக்கிக் கொடுத்து அவனது பிரிவால் துயருற்று கண்ணீர் சொரிந்தன என்பதை சுந்தரநாதர் ஊகித்தறிந்தார்.

ஆகமம் என்றால் என்ன? - Page 2 TFzBJDYLTkaomCi2krjT+t

மாடுகள் அந்த இடையன் மீது காட்டிய அன்பு அவரை என்னவோ செய்தது. உடன் அந்தப் பசுக்களின் துயரைப் போக்க எண்ணம் கொண்டார். தனக்குத் தெரிந்த கூடுவிட்டு கூடு பயும் சித்தியை மாடுகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்த முனைந்தார். தமது உடலிலிருந்து அந்த இடையனின் உடலில் புகுந்தார். உடன் எச்சரிக்கையாக தமது உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்துப் பத்திரப் படுத்தினார்.

இடையன் எழுந்து கொண்டான் என மாடுகள் மகிழ்ந்து, அதன் அடையாளமாக வாலை நிமிர்த்தி வானை நோக்கி, ‘அம்மா…. அம்மா…’ என்று பெரு முழக்கம் செய்தன. மாலை வந்தது. மாடுகளை ஓட்டி ஊருக்குச் சென்றார் சுந்தரநாதர்.

ஊரில் இவரைப்பார்த்து மூலன் என்று பிறர் அழைத்தது கண்டு, அந்த இடையனின் பெயரைத் தெரிந்து கொண்டார்.

மூலனது மனைவி மூலராக எழுந்து வந்த சுந்தரநாதரைத் தனது கணவன் என்று நெருங்கினாள். பதைத்துப் போன திருமூலர் (இப்பொழுது இருந்து அவர் பெயர் திருமூலர் ஆயிற்று) ஊர்ப் பெரியவர்களின் துணையோடு நடந்ததைக் கூறி இடையனது மனைவியிடமிருந்து தப்பி மேய்ச்சல் நிலத்திற்கு வந்தார்.

தனது பழைய உடலைத் தேடினார். அது வைத்த இடத்தில் இல்லை. பதறிப் போனார். என்ன செய்வது என்று திகைத்த திருமூலர் தனது நெற்றிக் கண் பார்வையை நாடினார். அதன்மூலம் இறைவனது திட்டத்தை உணர்ந்தார். உடலை மறைத்தது இறைவனே என்று அறிந்தார். இறைவன் அதற்குக் காரணத்தையும் திருமூலர்க்கு உணர்த்தினான்.

ஆகமம் என்றால் என்ன? - Page 2 RLVLZJFbQ8Ky77LNtdXi+t5

ஐயறிவு உயிர்களாகிய பசுக்களின் துயரத்தைப் போக்கியது போல், ஆறறிவுப் பசுக்களாகிய உயிர்கள் (மனிதர்கள்) ஆகமத்தைத் தொலைத்து விட்டுத் துயருறுகின்றன. எனவே அந்த ஆகமத்தை மீண்டும் தமிழில் வகுத்து உலகத்திற்கு இப்போது பெற்ற மூலன் உடலிலிருந்தே உதவுக என்பது இறைவன் கட்டளை என திருமூலர் உணர்ந்து, உடன் அப்பணியில் இறங்கி தமிழாகமம் என்று போற்றப்படும் திருமந்திரத்தை 3000 பாடல்களாக அருளினார். இவ்வாறு இவரது வரலாற்றை பெரியபுராணம் கூறுகிறது.

ஆகமம் என்றால் என்ன? - Page 2 54Awe4jFS8qAEzRiXiGp+t6

திருமூலர் இறைவனது கட்டளையை உணர்ந்த பெரியபுராணப் பாடல் பின்வருமாறு:-
தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை
மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப
கண்ணிய அத் திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த உணர்வுடையார் ஈசர்அருள் என உணர்ந்தார்

(இங்கேயும் ஆகமம் முன்னம் அருளியது எனக்கூறப்பட்டுள்ளது அதை திரும்ப அருள வேண்டும் என்பதனால் அது இடையில் ஏதோ காரணத்தினால் மறைந்து போயிற்று  என்பதை அறிகிறோம். திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப என்பதனால் முன்னால் அது இறைவன் வாக்கினால் தமிழில் கூறப்பட்டது என்பதை அறிகிறோம். அதை இப்போது திருமூலர் வாக்கினால் தமிழில் கொண்டுவர திட்டமிட்டுள்ளான் என்பது புலனாகிறது).

சரி. திருமந்திரம்தான் ஆகமம் என்பதை அதை அருளிய திருமூலர் சொல்லியிருக்கிறாரா?
(தொடரும்)

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக