புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2016 - புத்தாண்டு பலன்கள் !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 9:43 am

First topic message reminder :

2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 QaOgEnJhQMyU3VH1JQE0+newrasi

வளமாக இருக்க போகும் ராசிகள்: 
ரிஷபம் - மிதுனம் - மகரம் - மீனம்

முயற்சிக்குப் பின் வெற்றி பெறப் போகும் ராசிகள்:
கடகம் - சிம்மம் - கன்னி - தனுசு

இறைவனை சரணடைவதன் மூலம் உபாயம் பெறப் போகும் ராசிகள்:
மேஷம் - துலாம் - விருச்சிகம் - கும்பம்


நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீமன்மத வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி (1.1.2016) கிருஷ்ணபக்ஷ சப்தமியும் உத்திர நக்ஷத்ரமும் சௌபாக்ய நாமயோகமும் பத்ரை கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் முன் இரவு 12.00 மணிக்கு கன்னியா லக்னத்தில் 2016 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.



உத்திர நக்ஷத்ரம் கன்னி ராசி கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் அனைவரும் சீரும் சிறப்புடனும் - ஆயுசுடனும் - ஆரோக்கியத்துடனும் - அனைத்து விதமான ஷேமங்கள் பெறவும் - திருமணம் கைகூடி வரவும் - சந்தாண பாக்கியம் கிட்டவும் - நல்ல வேலை கிடைக்கவும் - வெளிநாடு பயணம் இனிதே பெறவும் - வீடு மனை வாகனம் அமையவும் ஆண்டின் தொடக்க நாளில் இறைவனை திருக்கோவில்களில் சென்று வழிபாடு செய்து வருவது நல்லது.

இந்த ஆண்டு சிவனுக்கும் சாஸ்தாவிற்கும் அய்யனாருக்கும் உகந்த நக்ஷத்ரமான உத்திரநக்ஷத்ரத்தில் பிறக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு எல்லாம் பொன்னும் பொருளும் போகமும் செல்வாக்கும் சொல்வாகும் இன்னும் பெருகும். கன்னியர்களின் கவலைகள் தீரவும் - காளையர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும் - எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறவும் சுகஸ்தானத்தில் இருக்கும் 



லகனதிபதி ராசிநாதன் புதனுக்கு உகந்த தேவதையான ஸ்ரீமன் நாராயணனையும் நக்ஷத்ரத்திற்கு உகந்த தேவதையான பரமனையும் வணங்கி வர அனைத்தும் நிறைவேறும். மன்மத வருடம் மார்கழி மாதம் 16ம் தேதி நிகழும் புத்தாண்டை முதல்நாளே கொண்டாடுவது சிறப்பானதாகும். புத்தாண்டின் கிரகநிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் 


நவக்கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷங்களை அள்ளித்தரும் கிரக அமைப்பில் இருப்பது நன்மையே.
ஆண்டின் தொடக்கத்தில் லக்ன தொழில் அதிபதி புதன் சுகஸ்தானத்தில் விரையாதிபதி சூரியனுடன் இணைந்தும் - தனவாக்கு பாக்கியாதிபதி சுக்கிரன் தைரியஸ்தானத்திலும் -  தைரிய அஷ்டம ஸ்தானாதிபதி செவ்வாய் தனஸ்தானத்திலும் சுக களத்திர சப்தமாதிபதி குரு லக்னத்திலும் - பஞ்சம ரண ருண ரோகாதிபதி சனி தைரிய ஸ்தானத்திலும் - லாபாதிபதி சந்திரன் லக்னத்திலும் சஞ்சரிக்கிறார்கள். சுக்கிரனும் - செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள்.


தொடரும்................



நன்றி :  4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) 





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:00 am

2016 துலாராசி பலன்கள் !

2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Dnfu3ge5QvWUWh88joHH+thulam



துலாம்:
உங்களது நேர்மையான செய்லகளால் மற்றவர்களின் பாராட்டுதல்களையும் -  சுக்கிரனின் பூரண அருளாசியும் ஒருங்கே பெற்ற துலா ராசி அன்பர்களே,

கிரகநிலை:    

குருபகவான் லாப ஸ்தானத்திலும் ராகு அயன சயன போக ஸ்தானத்திலும் சனி பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் கேது ரண ருண ரோகஸ்தானத்திலும் - இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது லாப  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசி  -  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  பாக்கிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    


08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  ஸப்தம   லாப  ஸ்தானம் -  தைரிய வீரிய  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் அயன சயன போக  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  சுக ஸ்தானம் -  சப்தம பார்வையால்  ரண ருண ரோக  ஸ்தானம் -  நவம பார்வையால்  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:
இந்த பெயர்ச்சியில் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய  பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும்  கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்.  மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும்.  பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன்  சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.  

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 2016ம் ஆண்டில் அதி அற்புதமான பலன்களை பெறப் போகிறீர்கள். ராகு கேதுவின் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. உங்களது ஒவ்வொரு செயலும் தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு செய்வீர்கள். சகல் செல்வங்களும் பெற்று வாழும் பேறு கிடைக்கும். நண்பர்களின் உதவியும் - குடும்பத்தினரின் பாசமும் - அரசுத்துறை சார்ந்தவர்களின் ஆதரவும் உங்களை சந்தோஷத்தில் நிலைகுலையச் செய்யும். பெரிய மனிதர்களின் ஆதரவால் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் அடிக்கடி நிகழும், அதன்மூலம் லாபமும் கிடைக்கும். வீடு - மனை - ஆடை -ஆபரண சேர்க்கை உண்டு. சொல்லும் செயலும் ஒருங்கே இருக்கும். தைரியம் மிளிரும். அதிக புகழ் உண்டாகும். புதிய லக்வி கற்பதற்கான சூழல் ஏற்படும். அதிக புக உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரும். எதிரிகள் பலமிழந்து போவார்கள். பெற்றொர்ர்கள் உங்களுக்கு அணுசரனையாக இருப்பர்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வந்த பிணி நீங்கும். தியான - யோக செய்வது நன்மை தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:
அரசு - தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். நீதி - நெர்மையுடன் செயல்பட்டு மக்கள் ஆதரவைப் எப்றுவீர்கள். அத்தியாவசிய கோரிக்கைகள் அனைத்தும் எமேலிடத்தால் அங்கீகரிக்கபப்டும். நடைமுறை ம்வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கன சூழல் உருவாகும். புகழ் அதிகரிக்கும்.வாகனஞ்களை மாற்றூவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பூமி - மனை - வீடு வசதிகளுக்கான வங்கிக் கடனுதவி தாரளாமகக் கிடைக்கும். அலுவலக எதிரிகள் காணாமல் போவார்கள். கிடைக்கும் ஆதாயத்தை சேமிக்கும் பழக்கம் உருவாகும். அலுவகத்தில் சிறப்பாக பணிபுரிவதால் அரசாஞ்கத்தில் சிறப்பு சலுகைகள் கிட்டும். பழையகால் இழப்புகள் இவ்வாண்டில் சரிசமமாகும். வேலையில் அதிக கவனம் செலுத்துவதால் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

தொழிலதிபர்களுக்கு:
பால் - மருத்துவம் - பண்ணைகள் வைத்திருப்போருக்கு சில கட்டுப்பாடுகளால் தொழிலில் விரக்தியான சூழ்நிலை உருவாகலாம். ஆனாலும் மனதில் தைரியத்துடன் பீடு நடை போடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். சனி - குரு சஞ்சாரத்தால் ஆட்டோமொபைல் - இயந்திரம் சார்ந்த துறையினருக்கு லாபங்கள் அதிகமாகும். வீடு - அலுவலகம் போன்றவற்றில் பணம் - ஆவணங்கள் - நகைகள் ஆகியவற்றை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது நல்லது. பஞ்குதாரர்களுடன் வீண் மனக்கிலேசம் ஏற்படூ மனநிம்மதி குறையக்கூடும். கடுமையான உழைப்பை செலவழிக்க வேண்டி வரலாம். வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. குருப்பெயர்ச்சிக்கு பின் அனுகூலமான நிலை வந்து சேரும். பாங்க் கடனகள் பைசல் ஆகும். கடந்த ஆண்டில் இருந்து வந்த நிலுவைத் தொகை அனைத்தும் கொஞ்ச கொஞ்சமாக அடையும். ஆடை வடிவமைப்பளருக்கு ஆச்சர்யங்கள் தரும் வைகயில் லாபங்கள் வந்து சேரும்.

மாணவர்களுக்கு:
உயர்கல்வி பயில்வதற்கான சூழல் உருவாகும். கல்வி நிமித்தமாக வெளிநாடு செல்லவேண்டி வரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். படிப்பில் நல்ல முன்ன்ற்றம் ஏற்படும். நண்பர்கள் - ஆசிரியர்கள் சகஜமாகப் பழகுவார்கள். சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். அதிக நேரம் விழித்திருந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் உங்களுக்கு அனுசரனையாக இருந்து உங்களை ஊக்குவிப்பார்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று நற்பெயர் எடுப்பீர்கள்.

பெண்களுக்கு:
அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் வேலைகளை திருப்திகரமாக முடித்து நிர்வாகத்தினரிடம் நற்பெயர் வாங்குவார்கள். பணி உயர்வும் - சம்பள உயர்வும் எதிர்பார்த்தபடி  கிடைக்கும். குடும்ப நிர்வாகம் செய்யும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். இதனால் முதுகுவலி - உடல்வலி ஏற்படலாம். மாத விலக்கின் போது அதிகமான வயிற்று வலியும் ஏற்படலாம் - கவனம் தேவை. வருமானத்திற்கு எவ்வித குறைவும் இருக்காது. கால்நடை வளர்ப்போருக்கு அதிகமான லாபங்கள் வந்து சேரும். சிறுதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் கிடைப்பதோடு நல்ல அங்கீகாரமும் வந்து சேரும். திருமண வாய்ப்பினை எதிர்பார்த்திருந்த பெண்களுக்கு மங்கள நாண் ஏறும் வருடமிது. 

கலைஞர்கள்:
திரைக்கலைஞர்கள் கூடுதல் திறமையினை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவார்கள். கிராமியக் கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து குவியும். நகைத்தொழில் செய்பவர்களுக்கு மிக அதிக லாபம் வந்து சேரும். கட்டிட கலைஞர்களுக்கு பொன்னான காலமிது. புதிய வாகனங்கள் சேர்க்கை உண்டு. தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் சேர்க்கையால் தொழில் அபிவிருத்தி ஏற்படும். 

அரசியல்துறையினர்:
பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டு மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடலாம். கவனம் தேவை. மேடைப் பேச்சாளர்களுக்கு சக மனிதர்களாலேயே பிரச்சனைகள் வரலாம். பெண் அரசியல்துறையினருக்கு செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். வீணாண பஞ்சாயத்தில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கவும். வருமானம் நல்ல முறையில் வந்து சேரும். எதிரிகளை கண்டுகொள்ளாமல் பயணிப்பது நன்மை தரும்.
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு
செல்ல வேண்டிய தலம்: கஞ்சனூர், திருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:01 am

மற்றவை, அந்த தளத்தில் போட்டதும் போடுகிறேன் புன்னகை................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 11:51 am

2016 -ம் ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக
இருக்க கூடுமாம்....
-
2016 ம் ஆண்டு பலன்களில் எந்தெந்த ராசிக்காரர்கள்
அதிக வெயிலால் பாதிப்படைவார்கள் என்றும்
சோதிடர்கள் கணித்துக் கூறினால் உபயோகமாக இருக்கும்..!!
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 11:59 am

ayyasamy ram wrote:2016 -ம் ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக
இருக்க கூடுமாம்....
-
2016 ம் ஆண்டு பலன்களில் எந்தெந்த ராசிக்காரர்கள்
அதிக வெயிலால் பாதிப்படைவார்கள் என்றும்
சோதிடர்கள் கணித்துக் கூறினால் உபயோகமாக இருக்கும்..!!
-

மேற்கோள் செய்த பதிவு: 1180845

அண்ணா, இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் தெரியலை............ஹா...ஹா....ஹா........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 7:31 pm



வெயில் வாட்டும் போது அனைத்து ராசிக்காரர்களும்
வாடப்போவது உறுதி .இதனால் வரக்கூடிய நோய்
தாக்கம் ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு
இருக்கலாம்.
எனக்கு-
அஸ்வினி
மேஷம்
கஷ்டம் தான் போல


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 7:45 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:

வெயில் வாட்டும் போது அனைத்து ராசிக்காரர்களும்
வாடப்போவது உறுதி .இதனால் வரக்கூடிய நோய்
தாக்கம் ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு
இருக்கலாம்.
எனக்கு-
அஸ்வினி
மேஷம்
கஷ்டம் தான் போல
மேற்கோள் செய்த பதிவு: 1180909


இதெல்லாம் ஒரு டைம் பாஸ் போல படிக்கணும் ஐயா, நல்லா இருந்தால் நமக்கு என்று சந்தோஷப்படனும்  ............இல்லாவிட்டால் சீ சீ இது நமக்கு இல்லை என்று விட்டுடனும் ஜாலி ஜாலி ஜாலி....ஏன்னா இது உலக மக்கள் அனைவருக்கும் மானது, நம் தனி ஜாதகத்துக்கானது  இல்லை புன்னகை  ...........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 16, 2015 8:12 pm

பழ முத்துராமலிங்கம் அவர்களே,
அவரவர் ஜாதகப்படித்தான் எல்லாமே நடக்கும் .
பிறந்த லக்னம் ,கிரக அமைப்புகள் இவைகளைப் பொறுத்தே
யாவும் நடக்கும் .
வருடாந்திர பலன்கள் பொதுவாக சொல்லப்படுபவை .

நல்லதே நினைக்கவும் ,நல்லதே செய்யவும் ,
நல்லதே நடக்கும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 8:15 pm

T.N.Balasubramanian wrote:பழ முத்துராமலிங்கம் அவர்களே,
அவரவர் ஜாதகப்படித்தான் எல்லாமே நடக்கும் .
பிறந்த லக்னம் ,கிரக அமைப்புகள் இவைகளைப் பொறுத்தே
யாவும் நடக்கும் .
வருடாந்திர பலன்கள் பொதுவாக சொல்லப்படுபவை .

நல்லதே நினைக்கவும் ,நல்லதே செய்யவும் ,
நல்லதே நடக்கும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1180918


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 6:41 pm

2016  விருச்சிக  ராசிப்பலன்கள் !  


2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Virushikam




விருச்சிகம்:   நிதானத்தைக் கடைபிடித்து லட்சிய மனதுடன் செய்பட்டு எதிலும் எளிதாக வெற்றி பெறும் விருச்சிகராகி அன்பர்களே!


கிரகநிலை:    
குருபகவான் தொழில் ஸ்தானத்திலும் ராகு லாப ஸ்தானத்திலும் சனி பகவான் ராசியிலும் கேது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது தொழில்  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  அயன சயன போக  ஸ்தானம் -  சுக ஸ்தானம் -  அஷ்டம ஆயுள்  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது சுக ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  ரண ருண ரோக  ஸ்தானம் -  தொழில்  ஸ்தானம் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் லாப  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  தைரிய வீரிய  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  நவம பார்வையால்  ஸப்தம  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:
இந்த பெயர்ச்சியில் எதிர்பார்த்த வசதிகள் கிடைக்கும்.  எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும் வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற  சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.     

இதுவரை எதிரிகளால் இருந்த தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரையமானது. இந்த 2016ம் ஆண்டில் நிலை மாறப் போகிறது. நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் தைரியத்தையும் பெறுவீர்கள். முடிவெடுக்காமல் இருந்த விஷயத்தில் ஒரு சுமுகமான முடிவைக்  காண்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் பார்வை உங்கள் மீது படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடலில் ஏற்பட்ட  உபாதைகள் நீங்கி மிடுக்குடன் நடப்பீர்கள். உங்களை உதாசீனம் செய்த உற்றார், உறவினர்கள்  உங்களுக்கு உதவ முன் வருவார்கள். மற்றவர்களுக்கு  கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பல புராதன ஆலயங்களுக்கு சென்று  வழிபாடு  செய்வீர்கள்.  புதிய உறவு முறைகள் ஏற்பட்டு மனதில் மகிழ்ச்சி நிறையும். கர்வத்தினால் எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வம்பு  வழக்குகளில் விட்டுக்கொடுத்து சமரசமாக முடித்துக் கொள்ளவும்.  உங்கள் செய்தொழிலை விரிவு படுத்த எந்தக் குறுக்கு வழியையும் நாட வேண்டாம்.

சிறிய கௌரவப் பிரச்னைக்காக நண்பர்களுடன் மனக்கசப்புகள் உண்டாகும். பயணங்கள் ஓரளவு நன்மையே தரும் என்பதால் அனாவசியப்  பயணங்களைத் தவிர்க்கவும். மற்றபடி செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். மேலும் செய்தொழிலை வேறு ஊருக்கு மாற்றுவீர்கள்.  வங்கிகளிடமிருந்து தேவையான நேரத்தில் தேவையான கடன் கிடைக்கும். உங்கள் உடல் உழைப்பு அதிகரிக்கும். முக்கியமான காரியங்களை தனித்து  நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி பெற்றோர் பெருமைப் படத் தக்க வகையில்  குடும்பத்தில் உங்கள் அணுகுமுறை இருக்கும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம்  விட்டுக் கொடுத்துப் பழகவும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு மாட்டிக் கொள்ள நேரிடலாம். அசையாச்சொத்துக்களை நல்ல  விலைக்கு விற்று லாபமடையும் ஆண்டாக இது அமைகிறது. 

உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.  எனவே  பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாகப் பணியாற்றவும். அலுவலகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப ஒத்துழைப்பு  தருவார்கள். அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுங்கள். 

தொழிலதிபர்களுக்கு: 
வியாபாரிகளுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். வருமானம் நல்லபடியாக வரத்  தொடங்கும். ஆனாலும் பழைய பாக்கிகளை சிரமத்துடன் வசூலிப்பீர்கள். மற்றபடி புதிய முயற்சிகள் பலனளிக்கும். மொத்த விலைக்கு பொருட்களை  வாங்கும்போது அவற்றுக்கு சிறிது கூடுதல் பணம் கொடுக்க நேரிடும். எனவே சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விலையைக் கூட்டியோ குறைத்தோ  பொருட்களை விற்பனை செய்யவும். 

பெண்மணிகளுக்கு:
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை  அதிகரிக்கும். ஆனாலும் உற்றார், உறவினர்கள் அனுகூலமான இருக்க மாட்டார்கள. அனாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும். தெய்வ வழிபாட்டில்  மனதைச் செலுத்தி நிம்மதி அடையுங்கள். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணத்தைத் தவிர்க்கவும். நிர்வாகத்தாலும் உயர்அதிகரிகளாலும் இடப்படும் கட்டளைகளை கவனமுடன் செயல்படுத்தி வேலையை செய்து முடிப்பீர்கள். அதனால் பதவி உயர்வு வந்து சேரும். தொழில் சிறக்க வேலை தெரிந்த மற்ற பெண்களையும் கூட்டு சேர்த்துச் கொள்ளலாம். கையில் நிறைவான பணம் கிடைக்கும். அனைத்து தரப்பினரிடமும் நற்பெயர் வாங்கும் வகையிலான செயல்களை செய்வீர்கள். உங்கள் பெயரில் வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. கணவனின் ஆயுள் பலம் அதிரிக்கும். மன அமைதியையும்  செய்வ அனுகூலத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகளுக்கு நீங்கள் சேமித்து வைத்த பணத்தை கொடுத்து உதவுவீர்கள்.

மாணவர்களுக்கு: 
மாணவமணிகள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.  கடுமையாக முயற்சி செய்து எல்லா தடைகளையும் உடைத்து வெற்றிவாகை சூடுவீர்கள். எதையும் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். விளையாட்டில்  வெற்றி பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு:
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தானாகவே  கிடைக்கும். அவற்றை முடித்துக் கொடுத்து நற் பெயர் வாங்குவீர்கள்.  மற்றபடி உங்கள் செயல்களை சீரிய முறையில் திட்டமிட்டுச் செய்யவும்.  எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று எது முக்கியமோ அதை செய்ய முற்படுங்கள். உங்கள் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். இந்த ஆண்டு உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்துகொண்டிருக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் சில பயணங்களைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு:
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச்  செய்வீர்கள்.  எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்களின் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக்  காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.

சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி
அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், மதுரை, திருவெற்றியூர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 6:54 pm

2016 தனுசு ராசிப் பலன்கள் !

 2016 - புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Thanuதனுசு:  அன்பையும் பண்பையும் உணர்வோடும் உயிரோடும் இணைத்து செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!
கிரகநிலை:    
குருபகவான் பாக்கிய ஸ்தானத்திலும் ராகு தொழில் ஸ்தானத்திலும் சனி பகவான் அயன சயன போக ஸ்தானத்திலும் கேது சுகஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.    

08 - ஜனவரி - 2016 அன்று ராகு பகவான் உங்களது பாக்கிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  லாப  ஸ்தானம் -  தைரிய வீரிய  ஸ்தானம் -  ஸப்தம  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

08 - ஜனவரி - 2016 அன்று கேது பகவான் உங்களது தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் -  பாக்கிய  ஸ்தானம் -  ராசி -   ஆகியவற்றைப் பார்க்கிறார்.    

01 - ஆகஸ்டு - 2016 அன்று குருபகவான் தொழில்  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் தனது  பஞ்சம பார்வையால்  தன வாக்கு குடும்ப  ஸ்தானம் -  சப்தம பார்வையால்  சுக ஸ்தானம் -  நவம பார்வையால்  ரண ருண ரோக  ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்:
இந்த பெயர்ச்சியில் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம்.  சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல்  சற்று மந்தமாக  காணப்படும்.  பணவரத்து தாமதமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள்  ஏற்படலாம். உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 

இந்த 2016ம் ஆண்டில் செய்தொழிலில் உங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும். எதிர்பாராத நபர்களிடமிருந்து நல்லாதரவு கிடைக்கும்.  இன்முகத்துடன் வலம் வருவீர்கள். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களின் சிறுசிறு தவறுகளைக் கண்டுகொள்ள மாட்டீர்கள். பெற்றோர் பெருமைபடத்தக்க வகையில் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். எல்லா விஷயங்களுக்கும் உடனடி தீர்வைக் காண்பீர்கள். நண்பர்களிடம் தன்னம்பிக்கையை  ஏற்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் அகலும். அவற்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை  செலுத்துவீர்கள். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன் வட்டியும் முதலுமாகத் திரும்பி வரும்.  உங்களின் சொந்தக் காலில் நின்று வெற்றி பெறுவீர்கள். தெய்வ பலத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். 

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உறவினர்களை  எக்காரணம் கொண்டும் சந்தேகப் பார்வை பார்க்க வேண்டாம். எந்த வியாதி என்று அறிய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று  குணமடைந்துவிடுவார்கள். மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்கள். சிலருக்கு இந்த ஆண்டு விசாலமான இல்லங்களுக்கு  மாறும் யோகம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய நண்பர்களைச் சேர்க்கும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். ஏனெனில்  தகுதியில்லாதவர்களால் வில்லங்கம் வரலாம். மற்றபடி நஷ்டம் வரும் தொழில்களிலிருந்து பக்குவமாக விலகிவிடுவீர்கள். பணப்புழக்கத்தில்  பின்னடைவுகள் ஏற்படாது. எவருக்கும் முன் ஜாமீன் போட வேண்டாம். உங்கள் பெயரில் கடன் வாங்கித் தர வேண்டாம். 
உத்தியோகஸ்தர்களுக்கு,
உத்தியோகஸ்தர்கள்  கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும் என்பதால்  கவனமாக நடந்துகொள்ளவும். அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவும். பிரச்னைகளை வளரவிட வேண்டாம். ஊதிய உயர்வு சிறப்பாக  அமையும். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயரை வாங்குவீர்கள்.

தொழிலதிபர்களுக்கு:
வியாபாரிகள் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின்  எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முதலீடுகள் செய்வதற்கு பழைய முதலீடுகள் கைகொடுக்கும். போட்டிகள் சற்று கடுமையாக இருந்தாலும்  அவற்றை சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப்  பெற்று செயல்பட்டால் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

பெண்களுக்கு:
பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த  கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். சகோதர, சகோதரி  உறவில் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.  வாழ்வில் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடமாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். குழந்தைகளிடம் அன்புடன் பழகுங்கள். மேலும் அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் மனிதாபிமானத்துடன் பழகுங்கள். இதன்மூலம் மனக்கவலை மறைந்து மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். புதிய பொருட்கள் வந்து சேரும். ஆனால் அவற்றை நீண்ட நாட்கள் வைத்திருக்க அதன்மீது கவனம் தேவை. பழைய வீடு, வாகனங்கள் வந்து சேரும்.

மாணவர்களுக்கு;
மாணவமணிகள் நல்ல முறையில் படித்து  மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உற்சாகம் அடைவீர்கள். உங்களின் வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள்  தென்படும். படிப்புக்கு தேவையான பெருளாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆபத்தான இடங்களுக்குள் பிரவேகித்தல் ஆகாது. எதிர் கருத்துகள் கொண்டவர்கள் கூட  அனுகூலமாக மாற  நிலை உண்டு. அறச்செயல்களும் ஆன்மிக வழிபாடுகளும் உங்களை காத்து நிற்கும்.

கலைஞர்களுக்கு:
கலைத்துறையினருக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். கால தாமதம் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களில்  நம்பகமானவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் குறையும். பல நாட்களாக  வராமல் இருந்த தொகை உங்கள் கையைத் தேடி வரும். புதிய தொழில் நுட்பத்தை அறிந்துகொள்வீர்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு பொருளாதாரத்தில் சிறந்த நிலைக்கு வரலாம். வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு:
அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை  உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில்  மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க  முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும், புகழும் உயரும்.

பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.

சிறப்பான கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், திருவானைக்காவல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக