புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் எப்படி இருப்பான்? I_vote_lcapஇறைவன் எப்படி இருப்பான்? I_voting_barஇறைவன் எப்படி இருப்பான்? I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
இறைவன் எப்படி இருப்பான்? I_vote_lcapஇறைவன் எப்படி இருப்பான்? I_voting_barஇறைவன் எப்படி இருப்பான்? I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் எப்படி இருப்பான்? I_vote_lcapஇறைவன் எப்படி இருப்பான்? I_voting_barஇறைவன் எப்படி இருப்பான்? I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
இறைவன் எப்படி இருப்பான்? I_vote_lcapஇறைவன் எப்படி இருப்பான்? I_voting_barஇறைவன் எப்படி இருப்பான்? I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
இறைவன் எப்படி இருப்பான்? I_vote_lcapஇறைவன் எப்படி இருப்பான்? I_voting_barஇறைவன் எப்படி இருப்பான்? I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைவன் எப்படி இருப்பான்? I_vote_lcapஇறைவன் எப்படி இருப்பான்? I_voting_barஇறைவன் எப்படி இருப்பான்? I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இறைவன் எப்படி இருப்பான்? I_vote_lcapஇறைவன் எப்படி இருப்பான்? I_voting_barஇறைவன் எப்படி இருப்பான்? I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இறைவன் எப்படி இருப்பான்? I_vote_lcapஇறைவன் எப்படி இருப்பான்? I_voting_barஇறைவன் எப்படி இருப்பான்? I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
இறைவன் எப்படி இருப்பான்? I_vote_lcapஇறைவன் எப்படி இருப்பான்? I_voting_barஇறைவன் எப்படி இருப்பான்? I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
இறைவன் எப்படி இருப்பான்? I_vote_lcapஇறைவன் எப்படி இருப்பான்? I_voting_barஇறைவன் எப்படி இருப்பான்? I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
இறைவன் எப்படி இருப்பான்? I_vote_lcapஇறைவன் எப்படி இருப்பான்? I_voting_barஇறைவன் எப்படி இருப்பான்? I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
இறைவன் எப்படி இருப்பான்? I_vote_lcapஇறைவன் எப்படி இருப்பான்? I_voting_barஇறைவன் எப்படி இருப்பான்? I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் எப்படி இருப்பான்?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 12:51 pm

உண்மையைத் தேடிய ஒருவன் ஞானி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தான். அவனை எப்படியாவது வீட்டிற்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பிட சைத்தான் முடிவு செய்தான்.

அதனால் ஞானியின் வீட்டுக்குள் நுழைய முடியாதபடி அந்த மனிதனுக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. அழகிய பெண்ணொருத்தி அவனை அணுகி இன்முகத்துடன் கொஞ்சும் மொழியில் பேசினாள். சரசமாடித் தன்னுடன் அவனை அழைத்துச் சென்றாள். சிறிது தூரம் சென்றதுமே, சுய உணர்வு பெற்றவனாக அவளிடமிருந்து விடுபட்டுத் திரும்பி விட்டான். அவ்வாறு திரும்பும் வழியில் பிரபு ஒருவர் அவனைக் கண்டு பேசினார். தனது அரண்மனைக்கு வரும்படி அவனை அன்புடன் அழைத்தார்.

அந்த சமயத்தில் சாத்தான் தன்னிடம் இருந்த அத்தனை விதமான அஸ்திரங்களையும் ஒன்றுவிடாமல் எய்தான். பொருள், காமம், புகழ், அதிகாரம், அந்தஸ்து என அத்தனையும் அணிவகுத்து நின்று ஒன்றன்பின் ஒன்றாக அவனைத் தாக்கின. எனினும் எதனாலும் அவனது உறுதியை அசைக்க முடியவில்லை.

எந்த மயக்கங்களுக்கும் ஆட்படாமல் இயல்பாக அவற்றையெல்லாம் உதறிவிட்டு ஞானியிடம் வந்து சேர்ந்தான். தனது அத்தனை ஆயுதங்களும் செயலற்றுப் போன சைத்தான் ஒரு மூலையில், இருட்டில் சோர்ந்து போய் ஒடுங்கினான்.

ஞானியிடம் வந்து நிமிர்ந்து பார்த்த அந்த மனிதன் அதிர்ச்சி அடைந்தான். இவர் ஆசனத்தில் அமர்ந்திருக்க இவரைச் சுற்றி சீடர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். ஒரு குருவுக்கு இருக்க வேண்டிய அடிப்படை இலக்கணமான அடக்கம் இவரிடம் இல்லையே என்று எண்ணினான் அவன்.

ஞானி இவன் வந்ததை கவனிக்கவில்லை. அங்கிருந்த எவரும் இவனைப் பொருட்படுத்தவும் இல்லை. வந்தவரை வரவேற்பது இன்சொல் கூறுவது என்ற எந்த நல்ல பழக்கமும் இல்லையே அவரிடம்... என்று எண்ணினான் அவன்.

சற்று நேரம் மவுனமாக அங்கே நடப்பனவற்றைக் கவனித்தான். ஞானியின் பேச்சில் உயர்ந்த தத்துவங்களோ, கோட்பாடோ ஏதும் காணப்படவில்லை. ஒரு படிப்பறிவற்ற கிராமவாசிகூட இதைவிடச் சிறப்பாகப் பேசுவான் என்று எண்ணிய அவன், ஞானியின் உடை பேச்சு செயல்பாடுகள் எதிலுமே ஒரு சராசரி மேதைக்குரிய இலக்கணங்கள் கூட இல்லை. எப்படி இவரை எல்லோரும் ஞானி என்று கூறுகிறார்கள் என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டான்.

அவனுக்குள் மெல்லிய ஏளனப் புன்னகை எழுந்தது. 'இந்த மக்கள் முட்டாள்கள். யாரையாவது தொழுது வணங்க வேண்டும். அதற்காக எந்த பரதேசியையாவது பிடித்துக் கொண்டு விடுகிறார்கள்...' என்று நினைத்தவாறு ஒன்றுமே சொல்லாமல் மவுனமாக வந்த வழியே வெளியேறினான் அந்த மனிதன்.




அவன் வெளியேறியதும் குரு அந்த இடத்தின் மூலையில் உற்றுப் பார்த்தார். 'நீ இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டியதே இல்லை. அவன் தொடக்கத்திலிருந்தே உன்னுடையவன்தான்' என்றார் சாத்தானிடம் சிரித்தபடியே.

இறைவனைத் தேடும்போது பொருள், புகழ், பெருமை, ஆசை எல்லாவற்றையும் உதறத் துணிந்தவர்கள் கூட இறைவன் இப்படித்தான் இருப்பார் என்று தங்கள் மனதில் தாங்கள் உருவாக்கிக் கொண்டுள்ள கருத்துகளிலிருந்து விடுபட மாட்டார்கள் என்பது தெரிகிறதா...?




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக