புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
56 Posts - 73%
heezulia
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
221 Posts - 75%
heezulia
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
8 Posts - 3%
prajai
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வசீகர வள்ளி! Poll_c10வசீகர வள்ளி! Poll_m10வசீகர வள்ளி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசீகர வள்ளி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2015 6:21 am

வசீகர வள்ளி! VXAYDAv3Tc69eQOMLSnt+E_1382431072
-
நடனக் கலைஞர் அலர்மேல் வள்ளிக்கு, இந்த ஆண்டுக்கான ‘நாட்டிய கலா ஆச்சார்யா விருது’ வழங்கி சிறப்பிக்கவுள்ளது சென்னை மியூசிக் அகாதமி, பத்மஸ்ரீ, பத்மபூஷண், கலைமாமணி என்று விருதுகளால் நிறைந்திருக்கும் அவரது மணிமகுடத்தில் இது மற்றுமொரு ரத்தினக் கல். அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரதத்தில் தனி முத்திரை பதித்து ஜொலிக்கும் வசீகர வள்ளி, எப்போதும் பி.ஸி. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடன நிகழ்ச்சிகள், பரத நாட்டிய வகுப்புகள் என்று நிரம்பி வழிகிறது அவரது டைரி குறிப்புகள்.


மேகம் கறுத்து மழை வரக் காத்திருந்த ஒரு மதிய வேளையில் சென்னையிலுள்ள அலர்மேல் வள்ளியின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தோம். நடனம் அவரது உயிர் மூச்சு என்பதை உணர்த்தும் ஆத்மார்த்தமான பேச்சு… குருமார்களிடம் அவர் கொண்டிருக்கும் பக்தி. சிஷ்யைகளிடம் காட்டும் அக்கறை என்று பல விஷயங்களையும் தொட்டுச் சென்றது உரையாடல்….

இந்த வருட டிசம்பர் சீசன்ல நான் ஆடப் போறதில்லை. ஜனவரியில மியூசிக் அகாதமியில் நடக்கிற நடன விழா நிகழ்ச்சியில்தான் நடனம் ஆடப்போறேன்.
நடனம்கிறது என்னைப் பொறுத்தவரை, உள்மன ஆழத்திலிருந்து வரணும். நான் ஒரு கவிதைப் ப்ரியை. நாட்டிய நாடகத்தை நான் முயற்சிக்கிறதில்லை. நடனம் ஆடும்போது, எனக்குள்ளேயே பாடிட்டே நடனம் ஆடறது என் வழக்கம். உடலைக் கொண்டு நான் பாடறேன்னுகூட சொல்லலாம்.


என்னோட குருமார்கள் பந்தநல்லூர் சொக்கலிங்கம் பிள்ளை, சுப்பராயபிள்ளைகிட்ட நான் கத்துக்கிட்டது ஒண்ணுதான். ‘நாட்டியத்துக்கு சரக்கு தான் (அதாவது அடவுதான்) முக்கியம். மினுக்கு முக்கியமில்லை’ங்கிறதுதான் அது. நாம ஆடற பாட்டை மனசுல நல்லா ஊறப்போட்டு, அதன் அர்த்தத்தை நன்கு புரிந்து கொண்டு, நம்மளோட கற்பனா சக்தி மூலமா நாட்டியத்துல வெளிப்படுத்தும்போது, அதுதான் உண்மையான, ஆத்மார்த்தமான நடனமா இருக்கும். பாதங்களின் அசைவுகள் கூட இசையோட, பாட்டோட இணைஞ்சு இருக்கணும். அபிநயம்கிறது யாரும் சொல்லிக் கொடுத்து வராது.ந மக்குள்ள இருந்து அது தானா வரணும்.


மியூசிக் அகாதமியில பால சரஸ்வதி அம்மாவுக்கு சங்கீத கலாநிதி விருது கிடைச்சப்போ நான் போயிருந்தேன். அப்போ நான் ரொம்பவும் சின்னப் பொண்ணு. அகாதமி முழுவதும் கூட்டம் நிரம்பி வழிஞ்சது. பாலாம்மா தானே பாட்டுப்பாடி ஆடினாங்க. ‘வாரி முடியாத கூந்தல் வரிசை கலைந்ததென்ன’ங்கற வரிகளுக்கு 20 முறையாவது வெவ்வேறு விதமான கமகங்கள், சங்கதிகள்னு வித்தியாசமான பாவங்களைக் காட்டி அவங்க ஆடின நடனம் என் மனசுல ஆழமாப் பதிஞ்சு போச்சு. நடனம்தான் பாடுதோனு நினைக்கத் தூண்டிய நடனம் அது. பாலாம்மாதான் என்னோட மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன்.


நடனக் கலைஞர்கள் பாட்டுக் கத்துகறது ரொம்பவும் முக்கியம். டி. முக்தாம்மாகிட்ட நான் சின்ன வயசுலயே பதம், ஜாவளி கத்துக்கிட்டேன். அதை எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய வரப் பிரசாதம்னுதான் சொல்வேன். நிறைகுடம் போல நிறைஞ்சிருந்தாலும், தான்கிற அகந்தை கொஞ்சம்கூட இல்லாதவங்க முக்தாம்மா. என் குருமார்கள் எனக்கு கலையை வாரி வாரி வழங்கினதாலதான் நான் இன்னிக்கு இந்த நிலையில் இருக்கேன் நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் வள்ளி.

சமீபகால நிகழ்ச்சிகளை, சம்பவங்களை, புதுமையைப் புகுத்தி ஆடப்படும் நடனங்கள் பற்றி என்ன நினைக்கறீங்க?
பல புதுமையான நடனங்கள்ல மினுக்குதான் இருக்குது. சரக்கில்லை. இப்படிப்பட்ட நடனங்களைப் பார்க்கும்போது ரொம்பவும் பிரமிப்பா, மலைப்பா இருக்கலாம். ஆனா, அது நம்ம மனசை ஊடுருவிப் பார்க்கறதில்லை. நம்மை யோசிக்க வைக்கிறதில்லை. அந்த நிமிஷத்துக்கு உற்சாகமா இருந்தாலும், மறு நிமிஷமே மனசுலருந்து மறைஞ்சு போயிடுது. ஒரு நல்ல பாட்டு, டான்ஸ் எப்படி இருக்கணும் தெரியுமா? அதைக் கேட்கும் போதும், பார்க்கும்போதும் நமக்கே ஒரு நிறைவு. நம்ம மனசுல ஒரு தெளிவு, ஒரு சந்தோஷம் ஏற்படணும்.

---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2015 6:23 am

வசீகர வள்ளி! QpakVf7CTeGq7aQuYfYE+1alarmelvalli1_jpg_1610420g
-

உங்க சின்ன வயசு எப்படியிருந்தது…?

எங்கப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பெண். ஒரே குழந்தைங்கறதால எங்கம்மா எனக்கு எந்தவித செல்லமும் கொடுத்து வளக்கவில்லை. எனக்கு ஒரு கலைதெரிஞ்சுக்கணும்கிறதுக்காக ஆறு வயசுலேயே நாட்டியம் கத்து வெச்சாங்க. பெரிய நடன மேதையாகணும்ங்கிற லட்சியமெல்லாம் அப்ப எனக்கு இருந்ததில்லை. காலையில் ஐந்து மணிக்கு எங்கம்மா எழுப்பி விடுவாங்க. 5.45 மணிக்கு வாத்தியார் வீட்டுக்கு வந்துடுவார். நடன வகுப்பை முடிச்சுட்டு ஸ்கூலுக்குப் போவேன். ஸ்கூல் விட்டு வந்ததும் மறுபடியும் நடனப் பயிற்சி. நான் நாட்டியம் கத்துக்கறபோது எங்கம்மா என் கூடவே இருப்பாங்க. ஜதிஸ்வரத்துலயோ, அபிநயத்துலயோ ஒரு தப்பு பண்ணிட முடியாது. உடனே மறுபடியும் சரியா செய்யச் சொல்லுவாங்க. பரதத்தை ஒரு பூஜைபோல நினைச்சுத்தான் செய்யணும்பாங்க. ‘உன்னோட 100 சதவிகித உழைப்பைக் கொடுத்தாதான் எந்தக் கலையும் வரும். உன்னால முடியற வரைக்கும் முயற்சி செய்யணும். பணம் இன்னைக்கு இருக்கும். நாளைக்கு போகும். கலைதான் எப்பவும் அழிவில்லாதது’னு சொல்லி சொல்லி எங்கம்மா என்னை வளர்த்தாங்க.


என்னோட 16வது வயசுல மலேசியாவுல ஆடின நாட்டிய நிகழ்ச்சிகளை மறக்கவே முடியாது. ராமசுப்பையா ஸ்காலர்ஷிப் ஒன்பது கச்சேரிகள்ல ஆடற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. எங்கம்மாகூட நான் மலேசியா போய் இறங்கினப்போ, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் யாரும் நான்தான் நடனமாட வந்திருக்கிற பொண்ணுனு நம்பவே இல்லை. காரணம், ரொம்பவும் ஒல்லியா, சின்னப் பொண்ணா இருப்பேன். என்னோட நடனத்தைப் பார்த்தபிறகுதான் அவங்களுக்கு நிறைவாச்சு.
நான் கலேஜ்ல பி.யூ.சி. படிச்சுட்டிருந்தப்போ பாரீஸ்ல நடந்த பெஸ்டிவல் ஆஃப் இந்தியன் மியூசிக் அண்ட் டான்ஸ் புரோகிராம்ல நடனமாட வாய்ப்புக் கிடைச்சது.



தியேட்டர் டீ லா வில்லேங்கிற புகழ்பெற்ற நான்கு மாடி தியேட்டர் அது. அதுல ஆட அவ்வளவு சுலபத்துல வாய்ப்புக் கிடைக்காது. புரோகிராம் நடக்கிற தேதியில எனக்கு ஃபைனல் இயர் எக்ஸாம். படிப்பா, நடனமான்னு ஒரே குழப்பம், பாரீஸ்ல ஆடற வாய்ப்பு இனியொரு முறை வாய்க்காதுங்கிறதால எக்ஸாமை ஒதுக்கிட்டு, புரோகிராமுக்குத் தயாரானேன். என் வாழ்க்கையில திருப்புமுனையா அமைஞ்ச நிகழ்ச்சி அது. ஒரு வருஷத்துக்குப் பிறகு மறுபடியும் தேர்வு எழுதி, காலேஜ்ல சேர்ந்தேன். அதுக்குப்பிறகு நடனம் தான் என் வாழ்க்கைனு முடிவு செய்தேன் – மலரும் நினைவுகளில் மூழ்கிப் போகிறார் வள்ளி.
(சூடாகத் தேநீர் வருகிறது. மெல்லப் பருகியப்படியே பேச்சைத் தொடர்கிறோம்)

இந்தக் காலத்துக் குழந்தைகள், முழு நேர டான்ஸராக விரும்பறதில்லையோ.. டாக்டராகவோ, என்ஜினியராகவோ இல்லை வேற ஏதாவது ஒரு வேலை பார்த்துட்டோ, நடனத்தை ஒரு சைட் ஆர்ட் போல நினைக்கிறவங்களைப் பற்றி…
என்கிட்ட நிறைய குழந்தைகள் நடனம் கத்துக்கிறாங்க. எல்லோருமே நல்ல திறமைசாலிங்க. ஆனா திறமைக்கேற்ற படி அவங்கிட்ட பொறுமை இல்லை. உழைப்பில்லை. சீக்கிரம் டான்ஸ் கத்துட்டு மேடையேறணும். அரங்கேற்றம் செய்யணும்னு எல்லாத்துலயுமே ஒரு அவசரம். குறுகிய காலத்துல புகழ், பேர் கிடைக்கணும்கிற எண்ணம். உழைப்பு இல்லாம எதுவுமே சாத்தியமில்லைங்கிறதை புரிஞ்சுக்கணும். அர்ப்பணிப்பு உணர்வும், முயற்சியும் இருந்தா, நிச்சயம் கலை நம்மளோட வரும்.


நடனத்தை முழு நேரத் தொழிலா எடுத்துக்கிட்டாலும், பகுதி நேர கலையா எடுத்துக்கிட்டாலும் சரி, எல்லோருமே ஏதாவது ஒரு கலையைத் தெரிஞ்சு வெச்சிக்கிறது நல்லது. வாழ்க்கைக்கு கலை ஒரு பொக்கிஷம். மரியாதை, பவ்யம், பயபக்தி, மனஒருமைப்பாடு ஏற்படும். நடனம் கத்துக்கிறது உடல்நலத்துக்கும் நல்லது. நடனம், நம்மள நளினமா வெச்சுக்க உதவுது. எந்த ஒரு கலைக்கும், பாஸிட்டிவ் எஃபக்ட்ஸ் உண்டு. கலையைப் போலவே இலக்கியத்தையும் எல்லோரும் படிக்கணும். இலக்கியம் நம்மளோட கற்பனைத் திறனை அதிகப்படுத்தும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2015 6:23 am

நடன நிகழ்ச்சிக்கு முன் உங்களை எப்படித் தயார்ப்படுத்திக்கறீங்க?
நான் ஒரு பர்ஃபெக் ஷனிஸ்ட். ஒவ்வொரு புரோகிராமும் எனக்கு ஒரு பப்ளிக் எக்ஸாம் போலத்தான். ஒரு சின்ன கவிதையா இருந்தாகூட, பத்துநாள்ல மேடை ஏறி ஆடிடலாம்னு நினைக்க மாட்டேன். ஒரு மாசம், ரெண்டு மாசம் அதுக்காக உழைச்சு, மெருகேத்தினபிறகுதான் மேடையேறுவேன். தினமும் பிராக்டீஸ் செய்வேன். உடல்நலத்துலயும் அக்கறையா இருப்பேன். சுவர் இருந்தாத்தானே சித்திரம் வரைய முடியும்?

உங்களோட குறிப்பிடத்தக்க நடன நிகழ்ச்சி…?
கலித்தொகை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற சங்கத்தமிழ் பாடல்கள்ல இல்லாத விஷயங்களே இல்லை. சங்கத் தமிழ் இலக்கியங்களை எல்லோரும் படி்கணும். அதைப் படிச்சாலே, இயற்கை மீதான ஆர்வம் தானாகவே ஏற்படும். பிரேமா ராமமூர்த்தி பாட்டமைச்சு நான் ஆடின சங்கத்தமிழ் கவிதைகளை என்னுடைய குறிப்பிடத்தக்க நடன நிகழ்ச்சியா சொல்லலாம்…
(கலித்தொகை பாடல்களில் ஒரு சிலவற்றை நமக்கு விளக்குகிறார்)

வருங்காலத் திட்டம்?
நடனக் கலைங்கிறது இப்ப ரொம்பவும் காஸ்ட்லியான விஷயமாப் போயிடுச்சு. நாட்டியத்துல ஆர்வமுள்ள, ஏழ்மை நிலையிலிருக்கிற மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்து அவங்களுக்கு நாட்டியம் கத்து தர்ற எண்ணம் இருக்குது. நடனக் கலையை கத்துக்கிட்டு சிறப்பா நாட்டியமாடிட்டு வர்ற 30, 40 வயக்குட்பட்ட நடனமணிகளைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு புதுசு புதுசா கத்துக் குடுக்கணும். எனக்கு என் குருமார்கள் அள்ளித் தந்த இந்தக் கலையை நானும் நிறையப் பேருக்குச் சொல்லிக் கொடுக்க வேணும்தானே?

அக்கறையும், ஆர்வமும் அலர்மேல் வள்ளி பேசியபோது, பரதம் மீது அவர் கொண்டிருக்கும் பக்தியின் விஸ்வரூபம் புரிய, அந்த நிறைவுடனேயே அவருக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெற்றோம்.

– ஜி. மீனாட்சி

மங்கையர் மலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 11:51 am

ayyasamy ram wrote:
அக்கறையும், ஆர்வமும் அலர்மேல் வள்ளி பேசியபோது, பரதம் மீது அவர் கொண்டிருக்கும் பக்தியின் விஸ்வரூபம் புரிய, அந்த நிறைவுடனேயே அவருக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெற்றோம்.
மங்கையர் மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1178926
வசீகர வள்ளி! 3838410834 வசீகர வள்ளி! 103459460 வசீகர வள்ளி! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக