புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
5 Posts - 14%
heezulia
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
3 Posts - 9%
Raji@123
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
8 Posts - 2%
prajai
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
திருநீற்றுப் பதிகம் Poll_c10திருநீற்றுப் பதிகம் Poll_m10திருநீற்றுப் பதிகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீற்றுப் பதிகம்


   
   
nirujan
nirujan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/11/2015

Postnirujan Wed Dec 02, 2015 2:00 pm

முன்னுரை
சமயங்கள் கடவூள் ஒருவர் இருக்கிறார் என்பதையூம் அவரே உலகை இயக்குகிறார் என்பதையூம் அவரவர் செய்கின்ற கருமங்களுக்கு ஏற்ற பலன்கள் அவரவர்கள் அனுபவித்து ஆக வேண்டும் என்றும் ஆணித்தரமாக கூறுகின்றன. மறு பிறப்பு அனைவருக்கும் உண்டு என்றும் கூறுகின்றன.  சமயங்களே மக்களின் வாழ்க்கை நெறியினை அமைத்து அதன்படி நல்ல நெறியினை கடைபிடிக்க வழிகளை கூறி வந்துள்ளன.  மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கும்  லெவ்விக வாழ்க்கைக்கும் வழிநெறிகளை அமைத்து அவர்களை இறைபக்குவம் அடைய வழி சொல்கின்றன. அறவழியில் மக்கள் வாழ சமயம் தான் வழி என்றால் அது மிகையாகாது.
இறைவனிடத்திலும் இறைவன் வாழ்கின்ற பிற உயிர்களிடத்திலும் அன்பை வளர்த்து இன்பநிலை அடைவதே வழிபாட்டின் நோக்கம். இந்நோக்கம் நிறைவேற உள்ளத்தில் காமம்இ கோபம்இ மயக்கம் என்ற மூன்று குற்றங்கள் நீங்க வேண்டும். இக்குற்றங்களே நமக்கு “யான்-எனது” என்கின்ற அறியாமையை ஏற்படுத்துவனவாய் உள்ளன. இச்செருக்கே நம்மைக் கீழ்த்தன்மைபடுத்துகின்றன. இத்தகைய குற்றங்களைக் களையவே அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதற்குப் பின்பற்றுவதற்குச் சாதனங்கள் என்று சைவம் சிலவற்றைக் கூறுகிறது. அவற்றில் ஒன்று திருநீறு அணிதல். இதன் முக்கியத்துவம் உணர்ந்து சம்பந்தா; திருநீற்றுப் பதிகம் பாடியூள்ளாh;.
அவ்வகையில் இங்கு திருநீற்றின் முக்கியத்துவம்இ திருநீற்றுப் பதிகம் பாடிய சந்தா;ப்பம்இ உணா;த்தும் தத்துவங்கள்இ வரலாற்று ரீதியில் திருநீறு பெறுகின்ற முக்கியத்துவம் என்ற பாh;வையில் நோக்கப்பட்டுள்ளது. மேலும் திருநீற்றுப்பதிகத்தினை விடுத்து திருநீறு பெறும் முக்கியத்துவமும் நோக்கப்பட்டுள்ளது.


1. அறிமுகம்
முதல் எட்டு திரு முறைகளும் தேவாரம் என அழைக்கப்பெறுகின்றன. திருமுறைகள் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவூளான சிவபெருமான் மீதுஇ திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இ திருநாவூக்கரசு நாயனார்இ சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும்.
சம்பந்தரால் திருநீற்றின் பெருமையை உலகுக்குணர்த்தும் நோக்குடன்  ‘‘மந்திரமாவது’’ என்னும் திருப்பதிகம் பாடப்பெற்றது. சிவனடியார்களின் முக்கிய சிவ சின்னங்களில் முதன்மை இடத்தை பிடிப்பது திருநீறு ஆகும்.
திருமூலர்  
பூதி அணிவது சாதனம் ஆதியில்
  காதணி தாமிர குண்டலம் கண்டிகை
  ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்
  தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.
இப்பாடல் மூலம் கூறும் கருத்து சிவனடியார்கள் அணிய வேண்டிய முக்கிய சிவ சின்னங்கள் 3 ஆகும.; அதில் திருநீறு முதன்மையூம் முதலும்இ இரண்டாவதாக செம்பிலான குண்டலத்தை காதிலும்இ உருத்திராக்க மாலையை கழுத்திலும் அணிய வேண்டும் என கூறியூள்ளார். இவ்வாறு திருநீற்றின் முக்கியத்துவத்தினை கூறிச்செல்லலாம்.
இறைவன் திருநீறு பூசியிருப்பதைத் திருமூலரும் சம்பந்தப் பெருமானைப் போன்று அழகுற குறிப்பிடுவார். “கங்காளன் பூசும் கவசத் திருநீற்றைஇ மங்காமல் பூசி மகிழ்வரேயாமாகில்இ தங்கா வினைகளும் சாரும் சிவகதிஇ சிங்காரமான திருவடி சேர்வரே” என்பார் திருமூலர். இறைவன் பூசியிருக்கின்ற திருநீறுஇ உயிர்களின் அறியாமையை அவன் எறித்ததற்குச் சான்றாய்க் கிடக்கின்றது என்று சைவ நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனையே திராவிட சிசு என்று அழைக்கப்பெற்ற சம்பந்தப் பெருமான் “காடுடைய சுடலைப் பொடிப் பூசிஇ என் உள்ளம் கவர் கள்வன்” என்பார். மணி மணியாய்த் தமிழில் இறைவனை வாழ்த்திய மணிவாசகரோஇ “பூசுவதும் வெண்ணீறு” என்று திருச்சாழலில் பாடுவார். எனவே திருநீறு சைவத்தில் உயர்ந்த பொருளாய் கூறப்பட்டுள்ளது.
2. திருநீற்றின் சிறப்பும் மருத்துவ குணமும்.
திருநீற்றின் சிறப்பை இரு முறையில் நோக்கலாம். திருநீற்றுப்பதிகத்தில் கூறப்பட்டவை மற்றும் பொதுவான சிறப்புக்கள். முதலில் திருநீற்றுப் பதிகத்தினை நோக்கும் போது பதிகம் முழுதும் திருநீற்றின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. அவ்வகையில் ‘‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு....’’ என்ற முதலாவது பாடலிலேயே திருநீறானதுஇ மந்திரச் சொல் போன்று அச்சம் நீக்கிஇ வேண்டிய நற்பயனைத் தருவது ஆகும். வானவர்கள் திருநீற்றை அணிகின்றனர். மனிதர்களுக்கு இது வானவர்களை விட மேலானதாகி விளங்குவது. அழகினைத் தந்து பொலியூம் திருநீறு துதிக்கப்படும் பொருளாக உள்ளது. உமையவளைப் பாகங் கொண்ட ஆலவாய் அண்ணலாகிய ஈசனின் திருநீறு இத்தகையது ஆகும் என்று கூறப்படுகின்றது.
‘‘எயிலது அட்டது நீறு’’ என்று 7ம் பாடலில் முப்புரத்தை எரித்துச் சாம்பலாக்கியது திருநீறு என்றும் 8ம் பாடலில் ‘‘இராவணன் மேலது நீறு’’ இராவணன் திருநீறு அணியப் பெருமையூறச் செய்தது என்றும் 10ம் பாடலில் ‘‘மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு’’  திருமாலும்இ பிரம்மனும் அறிவதற்கு அரியதாகிய வண்ணத்தை உடையது திருநீறு என்றும் ‘‘ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே’’ நஞ்சினை உண்டமிடற்றுடைய ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும் என்றும் ‘‘தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள்’’ பல புராண இதிகாச கருத்துக்களை முன்வைத்து சம்பந்தா; திருநீற்றின் சிறப்பை விளக்குகின்றாh;.
பொதுவான சிறப்புக்களாக வேதத்தின் ஞானகாண்டப் பொருளை விளக்க எழுந்த நூற்றெட்டு உபநிடதங்களுள் விபூதியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் உபநிடதங்கள் பதினைந்து காணப்படுகின்றன. இது நல்ல அதிர்வூகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வூகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வூகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றௌம். எமது உடலானது இவ் அதிர்வூகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வூகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து மதத்தவர்களிடம் காணப்படுகின்றது
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவூம் வெளியிடப்படுகின்றதுஇ உள் இழுக்வூம்படுகின்றது. சு+ரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யூம் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால் இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். பறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா. அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.
பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியூம். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறுஇ சந்தனம் போன்றவை இடப்படுகின்றன.
அறிவியல்படியூம் திருநீறு பசுவின் மலத்தினால் செய்யப்படுவதினால் அது ஒரு நல்ல கிருமிநாசினி என்றும் புலப்படுகிறது.
திருநீற்றின் உயர்வைப் பற்றிக் குறிப்பிடுகையில் திருநாவூக்கரசர் சுவாமிகள்இ “எவரேனும் தாமாக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி ……உகந்தடிமைத் திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி …..” என்று குறிப்பிடுகிறார். திருநீறு பூசியவர்களைக் கண்டால் மகிழ்ந்து அவர்களுக்கு அடிமை பூண வேண்டும் என்கிறார். இதன் வழி திருநீற்றின் சிறப்பு நமக்கு அறிய வருகின்றது.
ஞானசம்பந்தர் திருமணக் காட்சியைக் காணவந்த அன்பர்களுடன் தென்றலும் பூந்தாதுகளாகிய நீறணிந்து வண்டுகளின் வரிசையாகிய கண்டிகை பூண்டு அடியவர் கோலத்தில் வந்தது என்பார். ஞானசம்பந்தர் மணக்கோலம் கொண்டபோது 'அழகினுக்கு அணியாம் வெண்ணீறு அஞ்செழுத்து ஓதிச்சாத்தினார்" என்று கூறுகிறார்.
3. வலாற்று ரீதியல் திருநீற்றின் முக்கியத்துவம்
திருநீறு பூசினால் தலை துண்டிக்கப்படும் என்று சட்டம் இருந்த காலத்தில் மன்னனான தன் கணவன் அறியாமல் மார்பில் திருநீறு பூசியிருந்த மங்கயர்க்கரசியாரை மங்கயர்க்குத் தனியரசி என்று சேக்கிழார் புகழ்ந்து பாடுகிறார்.
தன் எதிரி திருநீறு பூசியிருந்ததினால் அவன் கையால் இறப்பது மேல்இ அவனுக்குத் தீங்கு இழைப்பது இறைக்குற்றம் என்று அவன் கையில் இறக்கத் துணிந்த ஏனாதி நாயனாரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
தலையில் கூடையில் கொண்டு சென்ற ஊவர்மண் உடம்பில் பட்டுத் திருநீறு போன்று காட்சியளித்த வண்ணான் காலடியில் வீழ்ந்து வணங்கிய மன்னன் சேரமான் பெருமாள் நாயனாரைக் குறிப்பிடுகின்றது.
திருநீறு பூசிய வேடத்துடன் வந்து தன்னை வஞ்சகமாகக் கொடுவாளால் குத்திய முத்தநாதன் என்ற தீயவனை ஊர் எல்லைவரைச் சென்று பாதுகாப்பாய் விட்டு வரும்படி பணித்த மெய்ப்பொருள் நாயனார் என்ற மன்னனை உயர்வாய்க் குறிப்பிடுகின்றது.
4. திருநீற்றுப் பதிகம் பாடிய சந்தா;ப்பம்
பாண்டிய நாட்டை ஆண்டு வந்த மன்னன் கூன் பாண்டியன். சமண மதத்தை சேர்ந்தவன். அவனது மனைவி மங்கையர்க்கரசி சிறந்த சிவபக்தி கொண்டவள். அதே நேரம் கணவனின் மனம் கோணக்கூடாது என்று எண்ணி திருநீற்றை நெற்றியில் அல்லாமல் மார்பில் பூசி வந்தவள்.
    திருஞான சம்பந்தர் பாண்டிய நாடு அடைந்து ஒரு சத்திரத்தில் தங்கினார். அவரது வருகையை அறிந்த சமணர்கள் பாண்டியனிடம் பலவிதமாக எடுத்துக்கூறி அவர் தங்கியிருந்த சத்திரத்திற்கு தீ மூட்டினர். திருஞானசம்பந்தரோ சென்று பாண்டியனை பிடி என்னும் பொருள்படும்படி ஒரு பாடலை பாடினார். அவ்வாறு  சென்று பிடி என்று பாடியதால் அந்த வெப்பம் பாண்டியனை வெக்கை நோயாக சென்று பீடித்தது.
   பாண்டியனுடைய மனைவியான மங்கையர்கரசியூம் தவசீலரும் சிறந்த சிவபக்தி கொண்டவருமான அமைச்சர் குலச்சிறையாரும் ஞானசம்பந்தப் பெருமானை சென்று சந்தித்தனர். திருஞான சம்பந்தரும் பாண்டியனின் வியாதியை குணப்படுத்த சம்மதித்தார். பின்னர் அவர்கள் பலவாறாக பாண்டியனிடம் பேசினார். முதலில் மறுத்த பாண்டியன் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டான். இதற்கிடையில் சமணர்களும் பலவாறாக பாண்டியனிடம் பேசினர். முடிவில் மன்னனும் இரு மதத்தில் எந்த மதத்தால் தன்னுடைய வியாதி குணமாகிறதோ அந்த மதத்தை இறுதிவரை தழுவி வாழ்வது என்கிற உறுதிமொழி ஏற்றுக்கொண்டான்.
  குறிப்பிட்ட நாளில் சமணர்கள் பலவித மந்திரங்களை பிரயோகித்தார்கள் என்றபோதிலும் குணம் கூடவில்லை. திருஞானசம்பந்தரோ கையில் வெறும் விபூதி மட்டும் வைத்துக்கொண்டு  ‘‘மந்திரமாவது நீறு வானவர் மேலதும் நீறு’’ என தொடங்கும் திருநீற்றுப்பதிகம் பாடி உடலின் ஒவ்வொரு பாகமாக திருநீறு பூசினார். முடிவில் பாண்டியனின் வெக்கை நோயூம் மறைந்தது. இவ்வாறாக பாண்டியனும் சைவ மதத்தை தழுவினான்.
5. திருநீறின் விளக்கம்
திருநீற்றினை விபூதிஇ பஸிதம்இ பஸ்மம்இ க்ஷாரம்இ ரக்ஷை என்னும் ஐந்து பெயர்களால் அழைப்பா;. திருநீறு என்ற பெயரிலேயே  திரு என்றால் தெய்வத்தன்மை. நீறு என்றால் வினைகளை நீறாக்குவது என்று பொருள்.  நம் வினைகளை வேரறுத்து நம்மை தெய்வ நலத்தில் இணைக்கும் சாதனமே திருநீறு ஆகும். விபூதி என்று மற்றொரு பெயரும் இதற்கு உண்டு. விபூதி பெயரிலேயே அதனுடைய மகிமை விளங்கும். "வி" என்றால் மேலானது. "பூதி" என்றால் ஐஸ்வரியம்(செல்வம்).
6. திருநீறு அணிதலின் நன்மைகள்
‘‘வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு...’’ என்ற இரண்டாவது பாடலில் வேதத்தால் போற்றப் படுகின்ற பெருமையூடையது திருநீறு. உலக வாழ்க்கையில்இ ஏற்படும் பிணிகளையூம்இ மனதால் ஏற்படும் துயரங்களையூம்இ தீர்ப்பது திருநீறு ஆகும். நல்லறிவூ தருவதும்இ அறியாமை மற்றும் பழி முதலியவற்றால் நேரும் புன்மைகளை அகற்றுவதும் திருநீறு ஆகும். திருநீற்றின் செம்மைஇ ஓதத் தகுந்த பெருமையூடையதும்இ உண்மைப் பொருளாய் எக்காலத்திலும் விளங்குவதாகும் என்று திருநீற்றின் நன்மைகள் கூறப்பட்டுள்ளது.
நம் வினைகளை வேரறுத்து நம்மை தெய்வ நலத்தில் இணைக்கும் சாதனமே திருநீறு ஆகும்.  அதனை மகிழ்ச்சியூடன் பூசி மகிழ்பவர்கள் அடையூம் பேற்றினைக் கூறவந்த திருமூலதேவநாயனார்
   ‘‘கங்காளன் பூசுங்கவசத் திருநீற்றை
    மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
    தங்கா வினைகளும் சாருங் சிவகதி
    சிங்காரமான திருவடி சேர்வரே’’
என்று கூறுகின்றாh;.
   பசுவின் சாணத்தை அக்கினியினாலே தகித்தலால் உண்டாக்கியது வெண்மையான திருநீறு ஆகும். இதனை அணிபவர்கள் தங்களுடைய மும்மலங்களான ஆணவம்இ கன்மம்இ மாயை ஆகியவைகளை சிவாக்கினியில் தகித்து வெண்மையான ஆன்மாவை பெறுவாh;கள். இதன் மூலம் முக்தி பேற்றைப் பெறுவார்கள்.
மேலும் சம்பந்தா; ‘‘முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு...’’ என்ற பாடலில் திருநீறு முத்தி இன்பத்தை தருவது. முனிவர் பெருமக்கள் அணியூம் பெருமை உடையது. எக்காலத்திலும் மேலானதாக விளங்கி நலம் தருவது. இத்தகைய திருநீற்றின் மகிமை அறிந்து சிவனடியார்கள் போற்றுகின்றனர். திருநீறானது மன்னுயிர்களுக்குஇ சிவபக்தியைத் தருவதாகும். அதனைப் போற்றி வாழ்த்த இனிமை நல்கும். எட்டு வகையான சித்திகளைத் தரவல்லது என்று திருநீற்றின் பயன்களை கூறுகின்றாh;.
மந்திரமாகவூம் தந்திரமாகவூம் உள்ள இறைவன்இ திருநீறு பூசினால் இடையூ+றுகளை நீக்கி இன்பம் அருளுவான். முன்பு வைணவர்களும் திருநீறணிந்து வில்வத்தால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்தார்கள் என்று சில வரலாறுகள் சொல்கின்றன. திலகவதியார் அளித்த திருநீறு சமணம் சேர்ந்து சு+லைநோய்க்கு ஆட்பட்ட மருள்நீக்கியாரின் நோயைத் தீர்த்து சைவம் தழுவச்செய்தது.
திருநீற்றை அன்புடன் பூசுவோர் எல்லா நோய்களும் நீங்கப் பெறுவர். அவ்வாறு பூசாதார் நோய்வாய்பட்டு செத்துப் பிறந்து உழலுவார்கள் என்கிறார் அப்பர் சுவாமிகள்.
ஒருவன் உண்மையாக உழைத்து பணி புரிவானாயின் எஜமானனிடம் கூலிக்கு கையை நீட்டிக் கெஞ்சிக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. “ ஐயா ! வேலையை ஒழுங்காகச் செய்தேன்; கொடும் கூலியை” என்று கேட்பான். இது போன்று நாம் நாள் தோறும் அன்புடன் ஐந்தெழுத்தை ஓதி திருநீறு தரித்துக் கொண்டால் சிவபெருமானிடம் சிவகதியைத் தந்தருள வேண்டும் என்று கெஞ்சி கேட்க வேண்டிய அவசியம் இல்லை நாம் உரிமையூடன் “தருவாய் சிவகதி” கேட்கலாம். இவ்வாறு கேட்கின்றார் அப்பர் பெருமான். “………திருவாய் பொலிய சிவாயநம என்று நீறணிந்தேன்இ தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூ+ர் அரசனே.”  இவற்றின் மூலம் திருநீறு அணிவதன் பயன்களை அறிந்து கொள்ளலாம்.
‘‘நீறு இல்லா நெற்றி பாழ்’’ என்பது ஒளவை வாக்கு.
7. திருநீறு உண்h;த்து;ம் தத்துவம் தத்துவம்
திருநீறு நிலையாமையை உணர்த்தும் அரிய பொருளாய் உள்ளது. அதாவது இறைவன் கொடுத்திருக்கின்ற இத்தற்காலிக மானுடலானது உறுதியாய் ஒரு நாளைக்கு இத்திருநீற்றைப் போன்று சாம்பலாய்ப்போகும். உயிராகப்பட்டது தன்னைப் பற்றிக் கொண்டிருக்கின்ற யான் – எனது என்ற அறியாமையையூம்இ கன்மம் என்கின்ற செயலையூம்இ மாயை என்கின்ற மயக்கத்தையூம் விட வேண்டும் என்பதனை முக்கோடுகளாய் ஒவ்வொரு வேளையூம் அணியூம் போது நமக்கு நினைவூறுத்துகின்றது. எனவே திருநீறு என்பது நாம் நம்மிடம் உள்ள உள் அழுக்குகளைத் தூய்மை செய்து அன்பு நெறிக்கு ஆளாகி இன்ப நிலையை அடைய வேண்டும் என்பதை நினைவூறுத்தும் அரிய சின்னமாய் உள்ளது.
நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும். பஞ்சையோஇ கட்டையையோ இட்டால் அது சாம்பலாகும். ஆனால் நெருப்பில் சாம்பலைப் போட்டால் என்னவாகும்? அது சாம்பலாகவே காணப்படும்.  அது எந்த மாற்றமும் அடையாது. இப்படி மாறாமல் இருக்கும் பிரம்ம தத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கிறௌம். மாற்றங்களைக் கடந்தவர் கடவூள். பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாததுஇ அழியாததுஇ சாஸ்வதமானது என்று தத்துவ நூல்கள் சொல்கின்றன. கண்ணில் படுவதுதான் மனதில் நிலைத்து நிற்கும்.
கண்ணில் இருந்து மறைவது காலப்போக்கில் மறைந்து விடும். பிரம்மம் பற்றிய நினைப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் பூசுகிறௌம். ஞான் அக்கினியால் தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளங்கும் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறி விபூதி ஆகும்.
   திருநீற்றை முக்குறியாக அணிகிறௌம். ஏனென்றால் ஆணவம்இ கன்மம்இ மாயை என்ற மூன்று மலங்களை வேரோடு நீக்கினால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறௌம் என்பதை அக்குறி உணர்த்துகிறது.
8. திருநீறு நெற்றியில் அணியூம் முறை
காலை மாலைகளில் குளித்தவூடனும்இ பூஜைக்கு முன்னும்இ ஆலய வழிபாட்டிற்கு முன்னும்இ உணவூ உண்பதற்கு முன்னும்இ விபூதி அணிதல் வேண்டும். வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக நின்றுஇ பூமியில் விபூதி சிந்தாமல்இ மூன்று  விரல்களால் எடுத்து அண்ணாந்து சிவ சிவ எனக் கூறித் திருநீற்றுப்பதிகம் பாடி சிவனைத் தியானித்து நெற்றியில் அணிய வேண்டும். வலது கை சுண்டுவிரல்இ கட்டை விரல் தவிர்த்து ஏனைய விரல்கள்களால் திருநீறை நெற்றியின் இடக் கண் புருவ ஆரம்பத்தில் இருந்து வலது கண் புருவ இறுதி வரை மூன்று கோடுகளாக இடுதல் வேண்டும்.
திருநீற்றை ஒருவருக்குத் தரும் போதும்இ நாம் பூசிக்கொள்ளும் போதும் சிவபெருமானுடைய ஐந்தெழுத்தை அன்புடன் ஓதுதல் வேண்டும். இந்த காரணத்தினால் திறுநீற்றுக்குப் பஞ்சாட்சரம் என்ற ஒரு பெயரும் அமைந்தது.
விபூதியை உத்தூளணமாகவூம் திரிபுண்டரமாகவூம் தரிக்க வேண்டும். உத்தூளணமாவது-பரவப்பூசுதல்இ திரிபுண்டரமாவது - மூன்று குறியாகத் தரித்தல்இ (திரி - மூன்றுஇ புண்டரம் - குறி) திரிபுண்டரமாகத் தரிக்கத் தக்க ஸ்தானங்கள் சிரம்இ நெற்றிஇ மார்புஇ கொப்பூழ்இ இரு முழந்தாள்கள்இ இரு புயங்கள்இ இரு முழங்கைகள்இ இரு மணிக்கட்டுகள்இ இரு விலாப்புறம்இ முதுகுஇ கழுத்து என்னும் பதினாறு இடங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் விலாப்புறம் இரண்டையூம் நீக்கி செவிகளிரண்டையூம் கொள்வதும் உண்டு. மற்றும் முழங்கைகளையூம் மணிக்கட்டுகளையூம் நீக்கிப் பன்னிரண்டு ஸ்தானங்களை கொள்வதுமுண்டு. திரிபுண்டரந் தரிக்குமிடத்து நெற்றியில் இரண்டு கடைப்புருவவெல்லை வரையூம் தரிக்க வேண்டும். மார்பிலும்இ புயங்களிலும் ஆறங்குல நீளந் தரித்தல் வேண்டும். மற்றைய ஸ்தானங்களில் ஒவ்வோரங்குல நீளந்தரித்தல் வேண்டும். எந்தக் காலத்திலும் ஒன்றையொன்று தீண்டலாகாது. மூன்று குறிகளின் இடைவெளி ஒவ்வோரங்குல அளவினதாயிருக்க வேண்டும். சிவதீக்ஷை பெற்ற ஒவ்வொருவரும் காலைஇ உச்சிஇ மாலை என்னும் மூன்று காலங்களில் மாத்திரம் ஜலத்துடன் கூட்டித்தரிக்க வேண்டும். மற்ற காலங்களில் ஜலம் சேர்க்காது உத்தூளணமாகத் தரிக்க வேண்டும்.
9. விபூதி இலக்கணம்.
விபூதியாவது யாகாக்கினியினாலாவதுஇ சிவாக்கினியினாலாவது நல்ல இலக்கணமுடைய பசுவின் சாணத்தைக் கொள்ள வேண்டிய முறைப்படி கொண்டு மந்திரங்களாலுருட்டித் தகிப்பித்த திருநீறாம். இது வைதிக விபூதியென்றும்இ சைவ விபூதியென்றும் இருதிறப்படும். அவற்றுள் வைதிக விபூதியாவது வேதவிதிப்படி செய்யப்பட்ட யாகங்களில் பொடிப்பட்ட நீறாம். இது புத்தியை (போகத்தை) மாத்திரம் அளிக்கும். சைவ விபூதியோ சிவாகமவிதிப்படி சிவதீக்ஷை செய்யப்பட்ட அக்கினியில் பொடிப்பட்ட நீறாம். இது புத்திஇ முத்தியாகிய இரண்டையூந் தரும். இவ்விபூதி கற்பம்இ அநுகற்பம்இ உபகற்பம் என மூன்று வகைப்படும்.
இவ்வாறு திருநீற்றின் முக்கியத்துவம் தொன்று தொட்டு சிறப்பு பெற்று காணப்படுகின்றது.

முடிவூரை

திருநீறு இப்படிப்பட்ட உயரிய உண்மைப் பொருளை உணர்த்துவதால் தான் தமிழர் மரபில் பெரியவர்கள் பிறரை வாழ்த்தும் போது திருநீறு அணிவிக்கின்றார்கள். திருமணத்திலும் சரிஇ இறப்பிலும் சரிஇ இன்னும் சில நிகழ்வூகளிலும் திருநீறு தவறாமல் இடம் பெறுகிறது. இன்பத்திலும் துன்பத்திலும் மேற்கூறிய வாழ்வியல் உண்மையை மறந்துவிடாதே என்று நினைப்பிப்பதுதான் இதன் நோக்கம். எனவேதான் தமிழ்ஞான சம்பந்தர் திருநீற்றுப் பதிகம் என்று பதினோறு பாடல்கள் உரிய சிறப்பு அருந்தமிழ்மாலை ஒன்றைப் பாடியூள்ளார்.
அவ்வகையில் இங்கு திருநீற்றின் முக்கியத்துவம்இ திருநீற்றின் விளக்கம்இ வரலாற்று ரீதியில் திருநீறு பெறும் முக்கியத்துவம்;இ திருநீறு உணா;த்தும் தத்துவம்இ திருநீறு அணியூம் முறைஇ திருநீறு அணிவதனால் ஏற்படும் நன்மைகள் என்ற ரீதியில் நோக்கப்பட்டுள்ளது.
















உசாத்துணை

சுப்பிரமணியன்இநா. (2002) ‘‘நால்வா; வாழ்வூம் வாக்கும்இ’’
  சென்னை : கலைஞா; பதிப்பகம்.

செங்கல்வராயபிள்ளைஇவ.சு. (1967) ‘‘தேவார ஒளிஇ’’
   திருநெல்வேலி : சைவ சிந்தாந்த நூற்பதிப்புகழகம்.

ரகுபரன்இகா. (2014)  ‘‘மூவா; தமிழும் சைவ நெறியூம்இ’’
பிரசாந்தன்இஸ்ரீ.   கொழும்பு : இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம்.

லீலாவதிஇதி. (1987)   ‘‘திருஞான  சம்பந்தா; திருப்பாடல்கள்இ’’
    அண்ணாமலைநகா;: அண்ணாமலை பல்கலைக்கழகம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக