புதிய பதிவுகள்
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
34 Posts - 37%
heezulia
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
30 Posts - 33%
Dr.S.Soundarapandian
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
1 Post - 1%
mruthun
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
80 Posts - 34%
Dr.S.Soundarapandian
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
2 Posts - 1%
mruthun
இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_m10இந்திய அரசிலமைப்பு சட்ட நாள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அரசிலமைப்பு சட்ட நாள்


   
   
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri 27 Nov 2015 - 19:27

இந்திய அரசிலமைப்பு சட்ட நாள்(26.11.15) கட்டுரை:-

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாறுஅரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன?சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் அரசர்களின் ஆட்சியே நடைபெற்று வந்தது.



அந்தக் காலங்களில் ஒரு நாட்டை ஆள்வதற்கு நிலையான சட்டங்கள் இருந்திருக்கவில்லை. அரசர்களின் விருப்பப்படியும், மத சம்பிரதாயங்களின் படியும், தலைமுறைகளாக பின்பற்றி வந்த நடைமுறைகளின் படியும் நாடுகள் ஆளப்பட்டு வந்தன. கடந்த முன்னூறு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த தொடர்ச்சியான அரசியல், சமூகப் போராட்டங்களாலும், விழிப்புணர்வாலும் அரசர்களின் அதிகாரங்கள் ஒழிக்கப்பட்டு, சட்டத்தின் அடிப்படையில் மக்களால் அல்லது மக்கள் பிரதிநிதிகளால் ஆட்சி செய்வது உலக நாடுகள் அனைத்திலும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

அரசு என்று சொன்னால் அது மக்கள் தொகை, அவர்கள் வாழும் நிலப்பரப்பு, அரசாங்கம், இறைமை ஆகிய நான்கு அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும். ஆள்வோர், ஆளப்படுவோர் என இரு முக்கிய பகுதிகளை கொண்டுள்ள அரசில், அந்த இரண்டு பக்திகளையும் இணக்கமாக இயங்கச் செய்வதற்கான ஏற்பாடுதான் அரசியலமைப்பு (constitution) எனப்படுகிறது.அரசியலமைப்பானது அரசாங்கத்தின் அடிப்படை அம்சங்களையும், பணிகளையும், அதிகாரங்களையும் நன்கு வரையறுப்பதுடன், மக்களின் உரிமையையும் பாதுகாக்கிறது. சட்டம் எவ்வாறு இயற்றப்பட வேண்டும், சட்டத்தின் ஆட்சி எப்படி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அரசியலமைப்பு வரையறுக்கிறது.இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம்இந்தியாவுடன் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி அளித்து, இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் அரசியார் கி.பி.1600ல் வழங்கிய உரிமை ஆணைகள் தான் இந்தியாவின் நவீன சட்டத்தின் ஆரம்பம் எனலாம். வியாபாரம் செய்யவந்த கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் நிலப்பகுதிகளை படிப்படியாக வென்று ஆளவும் ஆரம்பித்தது. அப்போது கம்பெனியின் அதிகாரத்தையும், நிர்வாகத்தையும் முறைப்படுத்த 1773ல் ஒழுங்குமுறைச் சட்டம், 1784ல் பிட் இந்தியச் சட்டம் ஆகியவை இயற்றப்பட்டன. அவ்வப்போது தேவை ஏற்படும் போது கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை முறைப்படுத்த 1853வரை பல பட்டயச் சட்டங்கள் இயற்றப்பட்டன. 1857ல் சிப்பாய் புரட்சி என்னும் மக்கள் எழுச்சிக்கு பின்னர், இந்தியாவை ஆளும் பொறுப்பை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசு எடுத்துக்கொண்டது. அதைப் பின்பற்றி 1858ல் சட்டம் கொண்டு வரப்பட்டது.



ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri 27 Nov 2015 - 19:28

அரசு நிர்வாகத்தில் மண்ணின் மைந்தர்களான இந்தியர்கள் பங்குபெற வேண்டும் என்ற எண்ணத்திலும், மக்களின் சுதந்தர போராட்டத்தை பலவீனப்படுத்தவும் சிறு சலுகைகள் அளிக்கும் பல சட்டங்கள் அவ்வப்போது இயற்றப்பட்டன. எனினும் 1935ல் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் ஓரளவு முழுமையான அரசியல் சட்டம் எனலாம். அதன் பின்னர் இந்தியா சுதந்தரம் பெறும் நேரத்தில் நமக்கென்று சொந்தமான அரசியல் சட்டம் வேண்டும் என்ற நோக்கில், பிரிட்டனின் கேபினட் தூது குழுவின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர், ராஜாஜி, வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்ற முக்கிய தலைவர்கள் உள்பட 389 உறுப்பினர்களுடன் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி 1946ல் தொடங்கப்பட்டது. இச்சபைக்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார். இரண்டு வருடம் பதினோரு மாதம் பதினெட்டு நாள்கள் உழைத்து , பல நாட்டு அரசியல் அமைப்புகளையும், அரசியல் போக்குகளையும் ஆராய்ந்து விவாதித்து சுதந்தர இந்திய அரசியலமைப்பை உருவாக்கியது.இவ்வாறு உருவாக்கப்படும் அரசியலமைப்பை நுண்மையாக ஆராய்ந்து இறுதி செய்ய டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஆறு உறுப்பினர்கள் அடங்கிய வரைவுக் குழு (draft committee) ஆகஸ்ட் 29, 1947 ல் அமைக்கப்பட்டது. அரசியலமைப்பு வரைவுக் குழு அளித்த அரசியலமைப்பின் இறுதி வடிவத்தை நவம்பர் 26, 1949ல் அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டு டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதில் கையெழுத்திட்டார். அதில் அப்போது 22 பகுதிகளும் (parts), 315 உறுப்புகளும் (articles), 12 அட்டவணைகளும் (schedules) இருந்தன. அவ்வப்போது ஏற்பட்ட கால மாற்றம், தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்டு தற்போது 22 பகுதிகள், 395 உறுப்புகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டமாக இந்திய அரசிலமைப்புச் சட்டம் விளங்குகிறது.ஜனவரி 26, 1930ல் இந்திய மக்கள் சுதந்தர சபதம் எடுத்துக்கொண்டதை நினைவுகூரும் பொருட்டு, 1950ஆம் அண்டு ஜனவரி 26-ஆம் நாள் இந்திய குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இந்தியா தனக்கென உருவாக்கிக்கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜெந்திர பிரசாத் பதவியேற்றார்.
இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள்மக்களின் இறைமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பின் முகப்பில் இவ்வாறு அளிக்கப்பட்டுள்ளது:இந்திய மக்களாகிய நாங்கள் இந்தியாவை மனம் விரும்பி ஒரு முழு இறைமை பெற்ற, சமதர்ம, மதசார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைப்பது என்று உறுதி கொண்டு அதன் குடிமக்கள் யாவருக்கும்“சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் நீதியையும்;“எண்ணம், பேச்சு, கருத்து, நம்பிக்கை, வழிபாடு தொடர்பான உரிமைகளையும், வாய்ப்புகள், அந்தஸ்து ஆகியவற்றில் சமத்துவத்தையும்;நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளையாமல், தனிமனித உரிமையைப் பாதுகாத்து உறுதிப்படுத்தி சகோதரத்துவத்தை வளர்க்கவும்;“1949-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள், இவ்வரசியல் அமைப்பை உருவாக்கி, நிறைவேற்றி எங்களுக்கு நாங்களே வழங்கிக் கொண்டிருக்கிறோம்.”இவ்வாறு உலக நாடுகளின் அரசியலமைப்பில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களையும் ஒருங்கே கொண்டதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் விளங்குகிறது. அடிப்படை உரிமைகள், நீதித்துறை ஆகியவை அமெரிக்க அரசியலமைப்பிலிருந்தும், பாராளுமன்ற ஆட்சி முறை பிரிட்டனிலிருந்தும், அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் அயர்லாந்திலிருந்தும், குடியரசு தலைவரின் அவசர நிலைக் கால அதிகாரங்கள் ஜெர்மனியிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. அனைத்துக்கும் மேலாக இந்திய அரசியலமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கமான சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது.ஒரு முழு இறைமை பெற்ற மக்களாட்சிக் குடியரசாகவும், சமய சார்பற்ற சமதர்ம குடியரசாகவும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை குடிமக்களுக்கு அளித்து, அவர்களுக்கான கடமைகளையும் வரையறுத்து, ஒரு கூட்டாட்சி அரசாங்கமாக, மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டு இயங்கும் பாராளுமன்ற ஆட்சி முறையும், சுதந்தரமான நீதித்துறையையும் கொண்டு இந்திய அரசமைப்பு இயங்குகிறது. வயது வந்தோர் அனைவருக்கும் முழு வாக்குரிமை அளித்து ஒரு முழுமையான ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது.


ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri 27 Nov 2015 - 19:32

இச்சிறப்புகளுக்கெல்லாம் காரணம் இந்திய அரசியலமைப்பு தான்.சென்ற நூற்றாண்டில் சுதந்தர நாடுகளான பல நாடுகளிலும் அரசியலமைப்புகள் சீர்குலைந்தும், சர்வாதிகாரமும் குழப்பமும் ஆட்சி செய்து கொண்டிருக்கையில்,இந்திய நாடு மட்டும் தனித்துவமான பாதையில், மேலும் மேலும் செழுமைப் பெற்ற ஒரு மக்களாட்சி நாடாக விளங்குவதுடன், உலகின் முன்னணி நாடுகளுக்கு சவால் விடும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இத்தகைய அமைதியுடன் கூடிய முன்னேற்றத்துக்கு அடிப்படைக் காரணம் நமது அரசிலமைப்பு தான் என்றால் அது மிகையில்லை. இதை உணர்ந்து கொள்ளும் போதுதான் குடியரசு தினத்தை நாம் சிறப்புடன் கொண்டாடுவதன் முக்கியத்துவம் விளங்கும்.
இந்திய குடிமக்களுக்கு அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள்:
1. சமத்துவ உரிமை2. சுதந்தர உரிமை3. சுரண்டலுக்கு எதிரான உரிமை4. சமய சுதந்தர உரிமை5. பண்பாடு, கல்வி உரிமை6. அரசியலமைப்புக்கு உள்பட்டு பரிகாரங்களைப் பெறும் உரிமை
இந்திய குடிமக்களுக்கு அரசியலமைப்பு விதித்துள்ள அடிப்படை கடமைகள்:
1. அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடத்தல், தேசிய கொடி, தேசிய கீதம் ஆகியவற்றுக்கு மதிப்பளித்தல்2. இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு தூண்டுதலாக அமைந்த கொள்கைகளை போற்றுதல், பின்பற்றுதல்3. இந்தியாவின் இறையான்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த்தல், பாதுகாத்தல்4. நாட்டை பாதுகாக்கவும், தேசப் பணியாற்றவும் அழைக்கும்போது வந்து அவ்வாறுபணியாற்றுதல்5. சமயம், மொழி, வட்டாரம் ஆகியவற்றைக் கடந்து ஒற்றுமையுடன் சகோதர நேயத்தையும், இணக்கத்தையும் பேணுதல்; பெண்களின் கண்ணியத்தைச் சிறுமைப்படுத்தும் செயல்களை விட்டுவிடுதல்6. நமது கூட்டுக் கலாசாரத்தின் மிக உயர்ந்த பாரம்பரியத்தை மதித்தல், பாதுகாத்தல்7. காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சுழ்நிலைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்தல், வாழும் உயிர்களிடம் இரக்கம் காட்டல்8. அறிவியல் சிந்தனை, மனித நேயத்தை வளர்த்தல்9. பொதுசொத்தை பாதுகாத்தல், வன்முறையை ஒழித்தல்10. தேசத்தை முன்னேற்ற தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் முயற்சித்தல், தொண்டாற்றுதல்11. நிலவரத்துக்கேற்ப குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர், அந்தக் குழந்தை ஆறு வயது முதல் பதினான்கு வயதுவரை கல்வி கற்க வசதி ஏற்படுத்தித் தருதல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 28 Nov 2015 - 12:35

ChitraGanesan wrote:
இந்திய குடிமக்களுக்கு அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள்:
1. சமத்துவ உரிமை2. சுதந்தர உரிமை3. சுரண்டலுக்கு எதிரான உரிமை4. சமய சுதந்தர உரிமை5. பண்பாடு, கல்வி உரிமை6. அரசியலமைப்புக்கு உள்பட்டு பரிகாரங்களைப் பெறும் உரிமை
மேற்கோள் செய்த பதிவு: 1177244
அருமையான பதிவு நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக