புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
3 Posts - 8%
heezulia
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 14, 2015 10:35 am


பாரீஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் வெவ்வேறு இடங்களில்
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு
வெடிப்பு சம்பவங்களில் 160 பேர் பலியாயினர். பலர்
காயமடைந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் கிழக்குப்பகுதியில்
உள்ள சினிமா வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவன்
நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலியானதாக முதல்
கட்ட தகவல்கள் தெரிவித்தன.

அதேபோல், அமெரிக்கன் ராக்பேண்ட் இசை நிகழ்ச்சி நடந்த
மைதானத்திற்குள் நுழைந்த தாக்குதல்காரர்கள் பலபேரை
பணையக்கைதிகளாக சிறைபிடித்தோடு, அவர்கள் மீது வெடி
குண்டுகளையும் வீசியுள்ளனர். அந்த இடத்தை சுற்றிவளைத்த
போலீஸ் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இதில் தாக்குதல் நடத்திய 3 பேர் கொல்லப்பட்டதாக கூறப்
படுகிறது. உணவு விடுதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில்
11 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

அதேபோல், அந்நாட்டு தேசிய விளையாட்டு அரங்கு வெளியேயும்
குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புகள்
நடைபெற்றபோது,
நாட்டின் அதிபர் பிரான்ஸ்வா ஹேலண்ட் ஜெர்மனிக்கு எதிராக
பிரான்ஸ் விளையாடிக் கொண்டிருந்த கால்பந்து போட்டியை
பார்த்துக் கொண்டிருந்தார். பிரான்சு அதிபருடன் வெளியுறவுத்
துறை மந்திரி பிரான்க்-வால்டர் ஸ்டீன்மெய்டரும் உடன் இருந்தார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து உடனடியாக நள்ளிரவு
அமைச்சரவை கூட்டத்தை கூட்டிய அதிபர் ஹோலண்டே நாடு
முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தியுள்ளார்.
போலீசாருக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அந்நாட்டில் நடைபெறும் மிகப்
பெரும் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக எந்த கருணையும் இன்றி
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பிரான்சு அதிபர் ஹேலேண்டே
தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த
தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒபாமா, அப்பாவி பொது
மக்களை அச்சுறுத்துவது மூர்கத்தமான செயல் என்றும்
தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர்
மோடியும் தாக்குதலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாரீஸில் தாக்குதல்
நடத்தப்பட்ட செய்தி மிகுந்த வேதனையும் அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது .பலியானவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மோசமான தருணத்தில் இந்தியா பிரான்ஸுக்கு துணை நிற்கும்
எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் உள்ள இந்தியர்கள் உதவிக்காக இந்திய துணைத் தூதரகம்
சார்பில் 0140507070 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி
மாதம் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ என்ற வார பத்திரிகை
அலுவலகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்
12 பேர் பலியாகினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
-
---------------------------------------------
தினத்தந்தி


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 14, 2015 12:55 pm

தீவிரவாத இயக்கங்கள் இளைங்கர்களை பயன்படுத்திக் கொண்டு மூளை சலவை செய்து தங்கள் கொடூர கனவுகளுக்கு இளைஞர்களையும், அப்பாவி மக்களையும் பலியாக்கிக் கொண்டிருக்கின்றன.
"ஒரு மரத்தின் கிளையை உடைத்து அக்கிளையை கோடரி காம்பாக மாற்றி அந்த மரத்தையே வெட்டுவது "

இதற்கு ஒரே தீர்வு

'வாழ்வியல் கல்வி' முறையாக மாணவர்களுக்கு இளம் வயது முதலே கற்றுத் தருவதே. உடல் உழைப்பையும், மூளையின் சுறுசுறுப்பையும் சரிவிகிதத்தில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்வதாக வாழ்வியல் கல்வி அமைந்திருக்க வேண்டும். அது சரியான முறையில் மாணவர்களிடம் சென்றடைந்தால், தீவிரவாத இயக்கங்களும் நிச்சயம் ஒருநாள் ஒழிந்துப் போகும்.

மேலும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பணக்காரா முதலைகளும் , நாடுகளும் உணரவேண்டும்

"தீவிரவாதம் என்பது இரண்டு பக்கமும் கூர்முனை கத்தி ஒரு புறம் வேட்டிகொண்டிருக்கும் போது அதன் மறு முனை வெட்டுபவரின் கையை பதம்பார்த்துவிடும் "

"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது - மனம்
மேலும் கீழும் புரளாது."

என்னும் பட்டுக்கோட்டையின் வரிகள் வாழ்வியல் ஆக்கப்படும் போது தான், தீவிரவாதம் ஒழிந்த சமூகம் இங்கு உருவாகும்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Nov 14, 2015 3:42 pm

சோகம் சோகம் சோகம்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 4:11 pm

மிக கொடுமை




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:03 pm

மனித இனத்தை இப்படி கொன்று குவித்து இந்த தீவிரவாதிகள் எதை சாதிக்க போகிறார்கள் கொடுமையின் உச்சம்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Nov 14, 2015 9:01 pm

கார்த்திக் செயராம் wrote:

இதற்கு ஒரே தீர்வு

'வாழ்வியல் கல்வி' முறையாக மாணவர்களுக்கு இளம் வயது முதலே கற்றுத் தருவதே. உடல் உழைப்பையும், மூளையின் சுறுசுறுப்பையும் சரிவிகிதத்தில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்வதாக வாழ்வியல் கல்வி அமைந்திருக்க வேண்டும். அது சரியான முறையில் மாணவர்களிடம் சென்றடைந்தால், தீவிரவாத இயக்கங்களும் நிச்சயம் ஒருநாள் ஒழிந்துப் போகும்.

மேலும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பணக்காரா முதலைகளும் , நாடுகளும் உணரவேண்டும்

மேற்கோள் செய்த பதிவு: 1174701

1. கல்வி முறையை மாற்ற மாட்டார்கள் .. இசலாமிய மதராசாக்களில் என்னக் கற்றுக் கொடுக்கப் படுகிறது என்று யாருக்கு தெரியும். யார் தன் பிள்ளைகளை மதராசாவிர்க்கு அனுப்பாமல் இருப்பார்கள்

2. சன்னி தீவிரவாதம் ஷியா தீவிரவாதம் என்று இரு தீவிரவாதம் இருக்கிறது, ஏமன் நாட்டில் நடப்பது ஷியா தீவிரவாதம் சிரியா நாட்டில் நடப்பது சன்னி தீவிரவாதம்.. இக்கரைக்கு அக்கரை பச்சை அவ்வளவே.

ஈரான் - ஷியா தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு,
சவூதி - சன்னி தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு,

இருவருமே பரஸ்பரம் எதிரிகளே..அவர்களுக்குள் அடித்து சாவுங்கள், யாரும் கேட்கவில்லை. மற்ற மதத்தினரை தொல்லை செய்யாதிருங்கள்.

இராக்கில் யசீதி கிறிஸ்தவர்களிடமும், குர்து பழங்குடிகளிடமும் வாலாட்டினால் ஐரோப்பாவும் அமெரிக்காவும் தாக்கத் தான் செய்வார்கள்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக