புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
21 Posts - 70%
heezulia
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
1 Post - 3%
viyasan
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
213 Posts - 42%
heezulia
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
21 Posts - 4%
prajai
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருணைக்கடல்  Poll_c10கருணைக்கடல்  Poll_m10கருணைக்கடல்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணைக்கடல்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 29, 2015 6:22 am

கருணைக்கடல்
*********************

உச்சிவெயில் மண்டையைப் பிளந்தது.ஆள் நடமாட்டம் இல்லாத அந்த வனாந்திரத்தில்,இடையன் ஒருவன் இருநூறு ஆடுகளை ஓட்டிக்கொண்டு எங்கோ போய்க்கொண்டிருந்தான்.

அந்த ஆட்டு மந்தையிலே இருந்த ஆடுகள் உணவின்றி மெலிந்து காணப்பட்டன. நடப்பதற்குக்கூட சிரமப்பட்டன.அந்த ஆட்டு மந்தையிலே முடமான ஆட்டுக்குட்டி ஒன்று நடக்கமுடியாமல் தவித்தது.கல்லடி பட்டதன் காரணமாக அதன் காலிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டு இருந்தது.அது நடந்து சென்ற பாதையில் ரத்தத்துளிகள் சிந்தியிருந்தன. முன்னே சென்ற அதன் தாய்,தன் குட்டியைத் திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டே சென்றது.சேய் படும் துன்பம் கண்டு கண்ணீர் வடித்தது. இரக்கமற்ற ஆட்டு இடையனோ ஆடுகளைக் குச்சியால் குத்தி விரட்டுவதிலேயே குறியாக இருந்தான்.வெயிலின் உக்கிரம் தாங்காத இடையன்,அங்கிருந்த ஓர் ஆலமர நிழலில் ஆடுகளை நிறுத்திவிட்டு சற்றுநேரம் கண் அயர்ந்தான்.

தாயின் அருகில் வந்த முடமான ஆட்டுக்குட்டி,தன் தாயிடம் வயிறாரப் பால் குடித்தது.தன் தாயின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவது கண்டு,

" ஏனம்மா அழுகிறாய்?"என்று கேட்டது.

" கண்ணே! உன் ஆசைதீரப் பாலைக் குடி! அநேகமாக இதுவே நீ பால் குடிப்பது கடைசி தடைவையாக இருக்கும்"

" ஏனம்மா அப்படிச் சொல்கிறாய்?"

"ஆம் கண்ணே! நாளைக்கு இந்த நேரத்தில் நாம் இருவரும் உயிரோடு இருக்க மாட்டோம்.யாரோ ஒரு மன்னன் யாகம் செய்கின்றானாம்.அந்த யாகத்திலே இருநூறு ஆடுகளையும் பலியிடப்போகிறார்களாம்."

" இதிலிருந்து தப்புவதற்கு வழியேதும் இல்லையா அம்மா?"

" இல்லையடி என் கண்ணே! எந்தப் பிறவி எடுத்தாலும் தவறில்லை. ஆனால் ஆடாக மட்டும் பிறக்கக்கூடாது. மனிதர்கள் கையால் வெட்டுண்டு இறக்கவேண்டும் என்பதுதான் நம் தலைவிதி.இரைபோடும் மனிதருக்கே இரையாக வேண்டும் என்பதுதான் நம் தலைஎழுத்து.இதை யாராலும் மாற்ற இயலாது."

தூக்கத்திலிருந்து எழுந்த ஆட்டிடையன், மீண்டும் ஆடுகளை ஓட்டிச்செல்ல முற்பட்டான்.இளமறி மீண்டும் நடப்பதற்கு துன்புற்றது.அப்போது அங்குவந்த கருணைக்கடலாம் புத்தர் அந்த இளமறியைத் தன் கைப்புறத்தில் ஏந்தி நடக்கலுற்றார். அவர் இடையனை நோக்கி,

"தம்பி இந்த ஆட்டுமந்தையை எங்கு அழைத்துச் செல்கிறாய்?"

" ஐயா!இன்று இரவு மன்னன் பிம்பிசாரன் நடத்தப்போகும் மாபெரும் யாகத்திற்காக இவைகளையெல்லாம் அழைத்துச்செல்கிறேன். அந்த யாகத்தில் இவைகளை எல்லாம்
பலியிடப்போகிறார்கள்"

"தம்பி! அந்த யாகத்தைக் காண நானும் வருகிறேன்."

புத்தர், பிம்பிசார மன்னனுடைய நாட்டில் நுழைந்தவுடனேயே வெங்கதிரோனின் வெம்மை தணிந்தது.தென்றல் வீசியது.அங்குப் பாய்ந்தோடிய சோணை நதி பொன்னிறம் பெற்றுப் பொலிவுடன் திகழ்ந்தது.முல்லையும், ஆம்பலும் மலர்ந்தன.சோலையில் வண்டுகள் இன்னிசை பாடின.அரண்மனை வாயிலைக் காத்திடும் சேவகர்கள், ஐயனைக் கண்டு வழிவிட்டு நின்றனர்.மக்கள் அனைவரும் வைத்தகண் வைத்தபடி வள்ளலின் அழகிலே மயங்கி நின்றனர்.

யாகசாலையை புத்தர் வந்தடைந்தார்.மன்னன் பிம்பிசாரன் யாகசாலையின் நடுவில் வந்து நின்றான்.வேதம் ஓதும் அந்தணர்கள் ஒரு பக்கமாய் நின்றனர்.யாகத் தீ சுடர்விட்டு எரிந்தது.தீயிலே நெய்யைச் சொரிந்தனர்.பண்டங்களை வாரி இறைத்தனர்.
யாகத்திலே பலியிடுவதற்காக வெள்ளாடு ஒன்றினைக் கூட்டிவந்தனர்.தீட்டிய வாளும் கையுமாக தீட்சிதர் ஒருவர் வந்து நின்றார்.

ஆட்டின் கழுத்தை அறுப்பதற்காக தீட்சிதர் வாளை ஓங்கியபோது புத்தர்,

" நில்லுங்கள்! மன்னா! நான் கூறுவதை தயவுசெய்து கேளுங்கள்.வாழும் உயிரை வாங்குவது எளிது;ஆனால் வீழ்ந்த உயிரை எழுப்ப உம்மால் முடியுமா?உயிர் என்பது எல்லோருக்கும் பொது.ஒரு சிறு எறும்பு கூட தன் உயிரைக் காத்துக்கொள்ள பாடுபடுகிறது.பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் என்பது சான்றோர் மொழியல்லவா?ஆட்டினை அறுத்து ஆக்கப்படும் அவியுணவை ஆண்டவன் ஏற்றுக்கொள்வானா?தன் மகன்களுள் ஊமைமகன் ஒருவனின் உடல் அறுத்துக் கறி சமைத்தால், அதை எந்தத் தந்தையாவது ஏற்றுக்கொள்வாரா?ஆடுகள் நமக்கு என்ன தீங்கிழைத்தன? நம்மைத்தேடி வந்து பால் கொடுத்தது குற்றமா?வாடையிலே மனிதர்கள் வாடாமலிருக்க கம்பளி ஆடை கொடுத்தது குற்றமா?மண்ணில் வளரும் புல்லைத் தின்றது குற்றமா?விண்ணிலிருந்து பெய்யும் நீரை உண்டது குற்றமா?சொல்லுங்கள் மன்னா! சொல்லுங்கள்!!

இந்த யாகம் செய்தால் நீர் செய்த பழிபாவம் எல்லாம் நீங்கி உமக்கு இந்திரபதவி கிடைக்கும் என்று இந்த அந்தணர்கள் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல!உதிரம் சிந்த உயிர்க்கொலை செய்தவன் உதிரம் சிந்தியே சாவான்.தீயனவும், நல்லனவும் செய்தவரைவிட்டு ஒருநாளும் செல்லாது.முன்னைப் பிறவியில் செய்த வினையாவும் மூண்டெழுந்து பின்னைப் பிறவியிலே உன்னை வந்து சேரும். ஆட்டை அறுத்தவன் மறுபிறவியில் ஆடாவான்.அறுக்கப்பட்ட ஆடு மறுபிறவியில் மனிதனாகும். இது இயற்கையின் நியதி.இதை மாற்ற யாராலும் ஆகாது.உன்னுயிர் நீங்கினாலும் உன்னை நம்பி வாழும் மன்னுயிர்க்குத் தீங்கிழைக்கலாகுமா?"

" நெய் சொரிந்து ஆயிரம் யாகங்கள் செய்வதால் வரும் புண்ணியத்தைக் காட்டிலும் ஓர் உயிரைக்கொன்று, அதன் புலாலை உண்ணாதிருப்பது மேலானதாகும்.ஆகவே யாகத்தை நிறுத்தி, நிகழவிருக்கும் பாவத்தைத் தடுத்திடுவீர்"

தாயினும் மிஞ்சிய தயாபரனின் அருளுரை கேட்ட பிம்பிசாரன் சிந்தை தெளிந்தான்.
புத்தரின் பொன்னடிகளில் விழுந்து வணங்கினான்.

" ஐயனே! என் பிழை பொறுத்தருள்வீர்! இனி என் நாட்டில் ஊன் உண்பதும், உயிர்க்கொலை புரிவதும் இருக்காது.கொல்லாவிரதம் குவலயத்து நிலை நிறுத்தி எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கப் பாடுபடுவேன்" என்று கூறிய மன்னன் பிம்பிசாரன் யாகத்தை நிறுத்தி, ஆடுகளை அவிழ்த்துவிடுமாறு ஆணையிட்டான்.

அவிழ்த்து விடப்பட்ட ஆடுகள் அண்ணலின் அருள்முகம் பார்த்து நின்றன.புத்தரின் கையிலிருந்த இளமறி துள்ளிக்குதித்துத் தாயிடம் சென்றது.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

நன்றி: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய "ஆசியஜோதி" என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக்கதை



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 29, 2015 7:12 am

கருணைக்கடல்  103459460 கருணைக்கடல்  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக