புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
Shivanya | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவ்விலக்கியம் : சூழலியல் மாற்றம்
Page 1 of 1 •
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
செவ்விலக்கியம் : சூழலியல் மாற்றம்
நம்மிடம் கொட்டிக்கிடக்கின்ற செல்வங்களை எல்லாம் இத்தலைமுறை முடிவதற்குள்ளாகவே இழந்து விடும் பேராபத்து நம்மைச் சூழ்ந்துள்ளது. ஆகையினால் இன்று வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் இருக்கின்ற விஞ்ஞானிகளின் ஆய்வு முயற்சிகள்யாவும் இழந்துவிட்ட செல்வங்களை மீட்டெடுக்க முடியுமா? என்றும் இழந்து விட்டவைகளை ஓரிரு நாட்களிலோ அல்லது ஓரிரு வருடங்களிலோ உண்டாக்கிவிட முடியாது; பலகோடி ஆண்டுகள் தேவைப்படும் என்பதை உணர்ந்திருப்பதால் வேறு கோள்களுக்குப் பாதுகாப்பாக இடம்பெயர்ந்துவிட முடியுமா? என்றும் கொண்டு அதற்கென பல்லாயிரம் கோடிகளைச் செலவழித்துப் போராடி வருகின்றனர். மீளும் வழிதான் ஏது?
நாம் வாழும் இப்பூமி நாளுக்கு நாள் வெப்பமாகிக் கொண்டு வருகிறது. உயிரினப்பெருக்கத்தின் விளைவால் மனிதன் இயற்கைச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது இன்று நேற்றல்ல. காலம் காலமாத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதனை நம் செவ்விலக்கியங்கள் விலங்குகளின் வாழ்க்கையூடாகப் பதிவு செய்துள்ளன. அவற்றிலிருந்து ……
அனல்காற்று வீசும் ஏப்ரல் மே மாதங்களில் மக்களின் பயன்பாட்டிற்காக இன்றும் ஆங்காங்கே தண'ணீர் பந்தல் வைப்பதைப் பார்க்கின்றோம். இவ்வழக்கம் பண்டைக்காலந்தொட்டே இருந்து வருகிறது. நாவுக்கரசர் மீது பேரன்பு கொண்ட திங்க@ரைச் சேர்ந்த அப்பூதியடிகள் நாவுக்கரசர் பேர்விளங்க செய்த பல்வேறு அறங்களில் ஒன்று வேனிற்காலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தடங்களில் தண்ணீர்பந்தல் வைத்தது என்று அப்பூதியடிகள் புராணம் குறிப்பிடுகின்றது.
வடிவுதாங் காணா ராயு மன்னுசீர் வாக்கின் வேந்தர்
அடிமையுந் தம்பி ரானா ரருளுங்கேட் டவர்நா மத்தாற்
படிநிகழ் மடங்க டண்ணீர்ப் பந்தர்கண் முதலா யுள்ள
முடிவிலா வறங்கள் செய்து முறைமையால் வாழு நாளில்;
(திருத்தொண்டர் புராணம் 1785)
அளவில்சனஞ் செலவொழியா வழிக்கரையி லருளுடையார்
உளமனைய தண்ணளித்தா யுறுவேனிற் பரிவகற்றிக்
குளநிறைந்த நீர்த்தடம்போற் குளிர்தூங்கும் பரப்பினதாய்
வளமருவு நிழறருதண் ணீர்ப்பந்தர் வந்தணைந்தார்.
(திருத்தொண்டர் புராணம் 1787)
அக்காலத்தில் மக்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளின் குடிநீர் தேவையை நிறைவு செய்யவும் தண்ணீர் பந்தல் வைத்துள்ளனர். வறட்சிக் காலத்தில் விலங்கினங்களின் செயல்பாடுகள் குறித்த (உவமை) பதிவுகள் நற்றிணையில் அருமையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த பதிவொன்றினை நற்றிணை (92) சுட்டிக்காட்டுகிறது. ஆசிரியர் பெயர் இல்லை.
துணையுடன் வாழும் ஓந்தியும் வாட்டமடையும் முதுவேனிற்காலமும் காற்றும் தன் ஈரப்பசையை இழக்க எங்கும் வெப்பம். வறட்சியுற்ற நிலையில் மக்கள் தங்களுக்கு என்றும் பயன்தரக்கூடிய ஆனிரைகளின் நீர் தேவையைப் போக்க வேட்டுவர்கள் வாழும் சிற்றூரை அடுத்த அகன்ற வாயுடைய கிணற்றிலிருந்து நீரைக் கொணர்ந்து குன்றத்தின் ஒரு பக்கத்தில் தெளிந்த நீர்ப்பந்தலை அமைத்து அதன் வாய்ப்புறத்தில் விற்பொறியையும் இட்டு அடைத்து வைக்கின்றனர்.
இங்கு நீர் இருப்பதை அறியும் ஆண் யானை அந்நீர்ப்பந்தலின் வாயிற்புறத்தை முறித்துப் போட்டுவிட்டு நீரின்றித் தவிக்கும் தன் பிடிக்கும் கன்றுக்கும் நீரூட்டி பின் அவ்விடத்தை விட்டு அகன்று செல்லும் என்று அப்பாடல் குறிப்படுகின்றது.
உள்ளார்கொல்லோ - தோழி - துணையொடு
வேனில் ஓதிப் பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி,அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சிக் கவாஅன்
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்
புன் தலை மடப்பிடி கன்றொடு ஆர
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல சுரன் இறந்தோரே?
........................
இப்பாடல் தலைவன், தலைவியை விட்டுப் பிரிந்து செல்லும் பாலை நிலத்தின் காட்சி. தோழி கூற்றில் வெளிப்படுவது.
முதுவேனில் காலத்தில் எங்கும் நீரின்மையால் விலங்குகள் வருந்தியிருப்பதும் அந்நிலையிலும் அன்பு மாறாது ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. என்றாலும் இச்சங்க இலக்கியப் பதிவு எனக்குப் புதிதாகத் தெரிந்தது.
யானை தன் உணவுத் தேவையை நிறைவு செய்ய உணவுப் பொருள் இருக்கும் இடங்களைக் குறிவைத்து தாக்கி சிதைத்துச்செல்வது இன்றும் நடைமுறையில் இருப்பதைக் காணுகின்றோம். இந்நிலையில் இந்நற்றிணைப் பாடல் பதிவை எப்படி புரிந்துகொள்வது.
முதுவேனில் காலத்தில் குன்றினை ஒட்டிய சிற்றூரில் வாழும் மக்கள் அதன் ஒரு பக்கத்தில் ஆனிரைகளுக்காக நீர்ப்பந்தல் வைக்கும் வழக்கத்தினை அக்காலத்தில் கொண்டிருந்தனர். அவ்வழிவரும் நீர்வேட்கை மிகுந்த யானைகள் பந்தலினை முறித்து நீர் அருந்திச் சென்றன என்றா? இக்கருத்தினை விளங்கிக்கொள்வதற்கு ஏதுவாக நற்றிணையின் பாடல்கள் உதவுகின்றன.
பாலைத்திணையில் ஒரு காட்சி மூங்கில் அடர்ந்த காட்டுப் பகுதி. எங்கும் அனல்காற்று. ஏற்கனவே வெப்பத்தால் மரங்களைச் சுற்றியுள்ள சிறு கொடிகளெல்லாம் காய்ந்து போயிருக்க அனல்காற்றானது அடிப்பகுதியில் முட்களையுடைய இலவ மரத்தின் கிளைகளை அதிரச் செய்வதோடு அவற்றை முறித்துப்போடும் ஆற்றலுடையதாகவும் இருக்கிறது. இத்தகைய பாலையின் நீண்ட வழிதோறும் குடிக்க நீரும் இருக்க நிழலும் இன்றி வருந்தும் விலங்குகள் குறித்த பதிவுகளில் யானைக் குடும்பம் ஒன்றைப் புலவர் முடத்திருமாறன் கீழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட
வெவ்வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடுநடை யானை கன்றொடு வருந்த
நெடுநீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ்சுரக் கவலைய என்னாய்................ (நற்றிணை பாடல் 105,)
நீர் வறட்சியின் காரணமாக விலங்குகள் நீருள்ள இடம் தேடி புலம் பெயர்ந்து செல்வது வழக்கம். இனவிருத்திக்காகவும்தான். அவ்வாறு ஆண்டுதோறும் செல்லும் விலங்குகள் தாம் செல்லும் பாதையை மறப்பதில்லை. அதுவும் குறிப்பாக யானைகள் தமது வாழிட வழித்தடங்களை என்றுமே மறப்பதில்லை என்பதுதான் ஆய்வாளர்கள் முடிபு. (இவற்றில் மீன்களும் அடங்கும் (உதாரணம் சாமன் மீன்கள்)
உணவு, நீர் தேடலில் இடம்விட்டு இடம் பெயர்ந்து நெடுந்தூரம் செல்லும் வழக்கம் உடையதாக உள்ள விலங்குகளில் யானை, நடப்பதற்கு என்றும் சளைத்ததில்லை. அதற்கு, தான் அறிந்த தன்வாழிடங்கள் அனைத்திலும் நிழலையும் நீரையும் தேடியபின் கிடைக்காததால் ஏற்பட்ட ஏமாற்றந்தரும் தொய்வுதான் வருத்தமாக மாறுகிறது. அதுவும் முதுவேனில் காலம்? ஓரிடத்திலேயே முடங்கிக் கிடக்கும் இயல்பற்றது யானை. அதனால்தான் கடுநடை யானை கன்றொடு வருந்த என்று புலவர் குறிப்பிடுகிறார்.
இப்படி கூறுவதில் யானைக்கு அதன் வாழிடம் சார்ந்த அழிப்பு இல்லை என்றும் ஆம் என்றும் கூற இயலாது. இப்பாடலில் அப்பதிவு இல்லை.அவ்வளவுதான். மற்று நற்.92ஆவது பாடலில் உள்ளதா? என்றால் நேரடிப் பதிவு இல்லை. ஆனால் கொல்களிறு நீர்பத்தரின் வாயை மூடியுள்ள விற்பொறியை முறித்துப் போட்டுவிட்டு நீரூட்டிச் செல்லும் என்பதனால் நீர்பத்தர் அதன் வாழிடத்திற்கு உட்பட்ட பகுதியாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும் யானை முகர்தல் அறிவில் மேம்பட்டது என்றும் கூறுவர்.
ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒன்றை அவ்வறிவைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளும் ஆற்றலுடையது .ஆகவே தன் வாழிடத்திற்கு உட்பட்ட (அ) அருகாமையிலுள்ள நீர்பத்தரை அறிந்து கொள்கிறது. மேலும் இயல்பில் யானை உணவுள்ள இடங்களுக்கு ஒருமுறை வந்து சென்றால் குறைந்தது ஆறு மாதத்திற்குள் அவ்விடம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் கூறுவர்.ஆனால் முற்றாகச் சிதைத்துச் செல்லும் என்ற பதிவு இல்லை. மனித வாழிடங்களுக்குள் வரும்போதுதான் அது தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி சிதைத்துச் செல்கிறது. இது வாழிட ஆக்ரமிப்பிற்கான மோதலாகவும் இருக்கலாம். ஆய்விற்குரியது.
கூர்ந்து கவனித்தால் சூழலியல் சார்ந்து ஏற்பட்டுள்ள (அ) ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை, நம் தமிழ் செவ்விலக்கியத்துள் பதிவு செய்யப்பட்டுள்ள அரிய தகவல்களைக் கொண்டு அடையாளம் காண இயலும். அதற்கு இப்பதிவு ஓர் உதாரணம் அவ்வளவே.
முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உலகம் வெப்ப மயமாதலைத் தடுக்க மனிதன் போராடி வருகிறான் . உலகம் வெப்பமயம் ஆதல் யாரால் நடந்தது ? அதற்கு யார் காரணம் ? விலங்குகளா ? பறவைகளா ? அன்றி மனிதனா ? என்று கேட்டால் மனிதனே என்பதுதான் விடையாக இருக்கமுடியும் .
காடுகளையும் , கழனிகளையும் அழித்து வீடுகள் ஆக்கியது யார் ? நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்தது யார் ? ஆற்றுப் படுகைகளில் இருக்கின்ற மணலைச் சுரண்டிக் கொள்ளையடித்தது யார் ? கனிம வளங்களைக் காசாக்கியது யார் ?
காடுகள் அழிந்ததால் மழைப்பொழிவு குறைந்தது . மழைப்பொழிவு குறைந்ததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது . நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர்ப் பஞ்சம் வந்தது . மழை இல்லையேல் நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் என்னும்போது பூமி எம்மாத்திரம் ? ஆகவே எங்கும் வெப்பம் ! எதிலும் வெப்பம் !
மனிதர்களுக்காத் தண்ணீர்ப் பந்தல் அமைப்பதும் , விலங்குகளுக்காக நீர்ப்பத்தர் வைப்பதும் இன்றும் இருந்துவருகின்ற வழக்கமாகும் .
“ கொல்களிறு நீர்பத்தரின் வாயை மூடியுள்ள விற்பொறியை முறித்துப் போட்டுவிட்டு நீரூட்டிச் செல்லும் என்பதனால் நீர்பத்தர் அதன் வாழிடத்திற்கு உட்பட்ட பகுதியாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது “ என்கிறார் ஆசிரியர் .
தன் வாழிடத்திற்கு உட்பட்ட பகுதியில் , மனிதன் ஏற்படுத்துகின்ற தடைகளை யானைகள் அனுமதிப்பதில்லை ; அவற்றை முறித்துவிட்டுச் செல்லும் என்ற கருத்தை ஆசிரியர் முன்வைக்கிறார் . அதேபோல
“ மனித வாழிடங்களுக்குள் வரும்போதுதான் அது தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி சிதைத்துச் செல்கிறது. இது வாழிட ஆக்ரமிப்பிற்கான மோதலாகவும் இருக்கலாம். ஆய்விற்குரியது. “ என்கிறார் ஆசிரியர் .
அறிவில் மேம்பட்டது யானை . ஆற்றலிலும் மேம்பட்டது . ஆனால் ஒரு சிறிய புலி தாக்கினால் கூட பயந்து நடுங்க வல்லது .
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் . ( ஊக்கமுடைமை – 599 )
என்ற குறளில் இவ்வுண்மை புலப்படுகிறதல்லவா ?
தறுகண் யானை தான்பெரிது ஆயினும்
சிறுகண் மூங்கில் கோற்குஅஞ் சும்மே .
என்ற வெற்றிவேற்கை வரிகளாலும் யானை ஒரு பயந்த சுபாவம் உடைய விலங்கு என்பதனை அறியலாம் . இப்படிப்பட்ட யானை மனிதனை எதிர்த்துப் போராடமுடியுமா ? யானைக் கூட்டமானது தன் பசியைப் போக்கிக் கொள்வதற்காகவே புலம் பெயர்கிறது . உணவு கிடைக்காத வழி , அக்கூட்டமானது அழிவு வேலையில் ஈடுபடுகிறது . அதை வாழிட ஆக்கிரமிப்பிற்கான போராட்டம் என்று கூறுவது வலிந்து பொருள் கொள்வதாகவே அமையும் .
நற்றிணை 92 ம் பாடலில்
பத்தர் மேலுள்ள பொறியை அழித்துவிட்டு ஆண் யானை , பெண் யானையையும் ,கன்றையும் நீரூட்டி அருளுவதைத் தலைவன் காண்பான் .தாமும் அவ்வாறே தலைவிக்கு உதவ வேண்டும் என்று கருதுவான் . எனவே தலைவன் விரைவில் வருவான் ! வருந்தாதே ! “ என்று தோழி கூறுகிறாள் . இது உள்ளுறை உவமம் அல்லவா ? இப்பாடலில் ஆண் யானையின் தலையாய நோக்கம் பிடி மற்றும் அதன் கன்று ஆகியவற்றின் பசி நீக்குதல் ஆகும் . இதில் வேறு நோக்கம் எவ்வாறு இருக்கமுடியும் ?
யானை அறிவில் எத்துணை மேம்பட்டிருந்தாலும் , மனிதனைப் போல சிந்திக்கும் திறன் அற்றவை . எனவே உணவு ,நீர் ஆகிய தேவைகளின் பொருட்டே அது இடம் பெயர்கிறது . மனிதன் வாழ்விடங்களுக்கு உணவைத் தேடியே அவை வருகின்றன . அதுவொழிய வாழ்விட ஆக்கிரமிப்பின் பொருட்டாகவும் இருக்கலாம் என்று கூறுவது மிகைப் படுத்தப்பட்ட செய்தியே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான திரி ............பகிர்வுக்கு மிக்க நன்றி !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிருஷ்ணம்மா & சசி அவர்களுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» சூழலியல் சீர்கேடு- செய்யூர் திட்டம்: உண்மை விலை என்ன?
» குடும்ப அட்டைக்கு (RATION CARD) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை
» மாற்றம் என்பதும் மாற்றம் இல்லை...
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
» படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு - தமிழ் பிரியன் !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1