புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2015 8:08 pm

First topic message reminder :

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2015 6:58 pm

முமுக்ஷுத்வம்

சச்சிதானந்த சிவமே,உன்னை நான் அடைந்தாக வேண்டுமென்று முழு மனதோடு முயன்றால் நொடிப்பொழுதில் உன்னில் நான் ஒன்றித்து விடுவேன்.

தண்ணீருக்குள் அமிழ்த்தி வைக்கப்பட்டிருப்பவனுக்கு வேறு எந்த விதமான நாட்டமும் உண்டாவதில்லை. சுவாசிப்பதற்குக் கொஞ்சம் காற்றுக் கிடைத்தால் போதுமென்று அதன் பொருட்டே அவன் திணறுவான். உயிரைக் காப்பாற்றத் திண்டாடுவது போன்று தெய்வத்தை அடையத் திண்டாடுவது முமுக்ஷுத்வம்.

தித்திக்குந் தெள்ளமிர்தை சித்தாந்தத்துட் பொருளை

முத்திக்கு வித்தை முதனினைப்பதெக் காலம்?

--பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 24, 2015 7:55 pm

கடலின் அடிமட்டம்

உள்ளத்தினுள்ளே அமைதியில் நிலைத்திருந்து இறைவா, உன்னை நான் போற்றுவேனாக.

கடலின் மேற்பகுதியில் அலை வீசுகிறது. மலைபோன்று அது உயர எழுகிறது. ஆனால் ஆழமான அடிமட்டத்தில் அது அசையாதிருக்கிறது. மனிதனுடைய மனதின் அடிப்பகுதி அங்ஙனம் அசையாதிருக்க வேண்டும். தெய்வ சாந்தி நிலவுதற்கு அந்த அடிப்பகுதியே உற்ற இடமாகும்.

மற்றிடத்தைத் தேடியென்றன்

வாழ்நாளைப் போக்காமல்

உற்றிடத்தைத் தைடி

உறங்குவது மெக்காலம்?

--பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 25, 2015 7:08 pm

பரபோதம்

உலகை எண்ணி உலகமயமாய் இருக்கும் நான், உன்னை எண்ணி உனது போதத்தில் நிலைத்து நின்று விடுவேனாக.

மாறுபடும் இரண்டு எண்ணங்கள் மனதில் ஏக காலத்தில் வருவதில்லை. ஓர் எண்ணத்தில் அது ஊறியிருக்கும்போது ஏனைய எண்ணங்கள் அடிபட்டுப் போய் விடுகின்றன. பரபோதம் என்னும் பேரறிவால் எண்ணங்கள் யாவும் அடிபட்டுப் போய் விட்டால் பேரறிவே எஞ்சி நிற்கும்.

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்

பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்

தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்

தன்னில் மறைந்தது தன்கர ணங்களே

--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 26, 2015 6:27 pm

சரியை

குழந்தையாயிருந்து வாழ்வைத் துவக்குவது போன்று சாதனம் சரியையில் துவங்குகிறது. பின்பு வாழ்நாளெல்லாம் அது அனுஷ்டிக்கப்படுகிறது.

ஒரு குடுபத்துள் பிறந்து வளரும் குழந்தைக்கு முதலில் வாழ்க்கைமுறை புகட்டப்படுகிறது. பெற்றோர் சொற்படி அது பணிந்து நடக்கவேண்டும். பெற்றோர் ஒழுகுவதைப் பார்த்தும் அது பின்பற்றுகிறது. பழக்கத்தால் நல்ல வாழ்க்கை வாழுதலில் படிந்து விடுவது சரியை.

நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்

தேடித் திரிந்து சிவபெரு மான்என்று

பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்

கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே

--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 27, 2015 9:27 pm

கிரியை

மனம், மொழி, மெய், ஆகிய திரிகரணங்களால் தேவே, உனக்கென்றே நான் செயல் புரிவேனாக.

வயது வரும்பொழுது ஒவ்வொரு மனிதனும் வினையாற்றத் தகுதியுடையவன் ஆகிறான். அவன் புரியும் கருமம் தனக்கு மட்டுமல்லாது உலகுக்கும் நன்கு பயன்படவேண்டும். அத்தகைய கருமத்தைக் கடளுக்கென்றே செய்வது கிரியை ஆகிறது.

இதுபணிந் தெண்டிசை மண்டலம் எல்லாம்

அதுபணி செய்கின் றவளொரு கூறன்

இதுபணி மானுடர் செய்பணி ஈசன்

பதிபணி செய்வது பத்திமை காணே.

--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 28, 2015 6:41 pm

சம்யோகம்

யான், எனது என்பவற்றைநெல்லாம் நீ, உனது என்று உன்மயமாக்க கற்றுக் கொள்வேனாக.

கடலினுக்குப் புறம்பாக அலைக்கு வியக்தியில்லை. கடவுளுக்குப் புறம்பாக மனிதனுக்கு வியக்தியில்லை. கடலைச் சார்ந்திருந்தே அலை தன் வலிவைப் பெறுகிறது. கடவுளைச் சார்ந்திருந்தே மனிதன் தனது ஆற்றலைப் பெறுகிறான். தனக்குரிய யாவையும் கடவுளிடத்திருந்து பெறுவது சம்யோகம்.

யோகச் சமயமே யோகம் பலவுன்னல்

யோக விசேடமே அட்டாங்க யோகமாம்

யோகநிர் வாணமே உற்ற பரோதயம்

யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே.

--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 29, 2015 8:38 am

ஞானம்

ஆதிபகவன் எனும் சிவசக்தியினிடத்திருந்தே உலகனைத்தும் உருவெடுத்திருக்கிறன என்பதை அறிந்துகொள்வேனாக.

ஜடப்பொருள்களுள் வேற்றுமை காண்பதும் ஜீவர்களுக்கிடையில் வேற்றுமை காண்பதும் அக்ஞானம். அவையாவும் ஒரே மூலப்பொருளிடத்திருந்து தோற்றத்துக்கு வந்துள்ளன. ஒரு பொருளே பலவாய்த் தோன்றிக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது ஞானம்.

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை

ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று

ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்

ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 30, 2015 6:18 pm

சோம்பல்

யாண்டும் பேருக்கம் படைத்திருந்து பரமனைப் போற்றி வருவேனாக.

ஆத்ம சாதனத்துக்குப் பேரிடைஞ்சலாயிருப்பது சோம்பல். அதை அகற்ற இயலாதவர்க்கு முன்னேற்றமில்லை. தேவைக்குமேல் உடலுக்கு ஓய்வும்,உறக்கமும் கொடுத்தால் அது சோம்பலாகும். இன்று செய்து முடிக்க வேண்டியதை நாளைக்கென்று ஒத்திவைப்பது சோம்பல்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்

--திருக்குறள்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 31, 2015 7:02 pm

செயலும் சாந்தியும்

இடையறாது வினையாற்றுவதும், மனதுயாண்டும் அமைதியுற்றிருப்பதும் ஒன்று சேர்ந்து நல்ல வழிபாடு ஆகிறது.

ஹிருதயம் ஓயாது அடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் அது களைப்புறுவதில்லை. உடல் அங்ஙனம் உழைத்துக்கொண்டிருக்கட்டும். மனது சாந்தியில் நிலைத்திருந்தால் உழைக்கிற உடலுக்கு ஆயாசம் உண்டாகாது. வினையாற்றுதலும் விச்ராந்தியும் சேர்ந்தே நிகழ்கின்றன.

சித்த நினைவுஞ் செயுஞ்செயலும் நீயெனவாழ்

உத்தமர்கட் காண உறவே பராபரமே.

-- தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 6:34 pm

சில்லரை மாற்றுதல்

பரம்பொருளே, உன்னை உள்ளத்தினுள் உள்குவதும் உரக்க உன்னைப் போற்றிப் புகழ்வதும் எல்லாம் உனக்குகந்த வழிபாடே.

பொன் காசு ஒன்றுக்குச் சில்லரை மாற்றினால் பை நிறைய தாமிரக்காசுகள் கிடைக்கும். சிறிய பண்டங்களை விலைக்கு வாங்குதற்கும் அவைகள் உதவும். ஆனால் அவைகளின் மதிப்போ குறைவானது. கடவுளைப் பற்றி மனதில் உணர்வது பொற்காசு போன்றது. அவரைப்பற்றிப் பேசுவது தாமிர சில்லரைக்காசு போன்றது.

அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே

சொல்லும் பொருளுஞ் சுமைகான் பராபரமே
.

-- தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

Sponsored content

PostSponsored content

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக