ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 6:14 pm

» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm

» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm

» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm

» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm

» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm

» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm

» அம்புலி திருவிழா!
by ayyasamy ram Today at 4:14 pm

» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm

» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm

» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm

» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm

» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm

» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by ayyasamy ram Today at 3:44 pm

» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm

» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm

» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm

» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm

» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am

» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am

» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am

» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am

» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am

» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm

» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm

Admins Online

கவிதை மூன்று காணலாம்

Go down

கவிதை மூன்று காணலாம் Empty கவிதை மூன்று காணலாம்

Post by kirikasan on Sat Sep 19, 2015 10:14 pm


அறியாயோ???

************
பெருமசைவு காணுமுருள் பரவும்விரிவானமதில்
பிறழ் வசை வில்லாது சுழல் புவிமீது
தருஎரிதீ ஆதவனை ஒளியுறவு மோகமதில்
தலைசுழல தான்திரியும் நிலைபோலே
கருகுமுட லாகும்வரை கரைகடந் துலாவலின்றி
கருதும் பிழையான வழி திரிவோரும்
உருகு மனதொடு தமிழ் உரிய பெருமாசனத்தில்
இருத்தி அர சாளும் வழி மறந்தாலும்

செருகும் மரமீதில்கொடி, சிலமலரைத் தாங்கும்சுனை
சிறிதளவும் உரிய துணை மாறாது
மருகிடவு மாகத் தமிழ் மனிதர் மனதூடு பல
மாறிடும் வினோத குணம் எதனாலே
குருவினுடான கல்வி குழந்தையெனில் தாயின்மொழி
குமரனெனில் குலவுமனைசொலும் வார்த்தை
அருந்தமிழ் என்றாக உயர் அகிலம் பரந்தே விளங்கும்
அதிசய மென்றாகும் வளம் புரியாது

தருமுனது வார்த்தையின்று தமிழினுயர் மாண்பிழந்து
தலைமொழியென் றாங்கிலத்தைக் கொளலாமோ
பெருமைகொள் விநோதமெனப் புகழெழுமாம் பேசவெனப்
பிறிதொருவன் மனைவிரும்பிப் புகலாமோ
ஒரு நிலையில் லாதமனம் உயர்வும் இழி வானதென
உரிய நிலைதான் மறந்த உளமேனோ
தெரு வழியிலோ டலையும் தனம் விரும்பும் யாசகனின்
தினமிரங் கலான நிலை பெறலாமோ

வரவு செலவோடு சமன் விலையும் கொடுத்தார்வமுடன்
விரும்பி நின தாய்மொழியை மதிப்பாரோ
கரவுமனதோடு வந்து கயமை செய்யும் தூதுவரும்
கரம்கொடுத்து உயிர்பறிக்க முயல்வேளை
பரவுமொழி ஆங்கிலமும் பழமை தமிழோடு துணை
புணர்வில் ஐயாம் கோயிங் கோவில் என்பாரோ
இரகசியமாக இவர் உலகில் தமிழ்சிதைக்கும் விதி
இயற்றித் தமிழ் படைஅழித்த தறியாயோ
***********************
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கவிதை மூன்று காணலாம் Empty Re: கவிதை மூன்று காணலாம்

Post by kirikasan on Sat Sep 19, 2015 10:16 pm

அரண்மனையில் ஒருகாட்சி


(முன்னிருட்டு நேரம் அரண்மனையில் நிசப்தம் ஆச்சரியப் படுகிறாள் தோழி)

நந்தவன மாகாதோ?
தோழி:
அன்பிலே விதை விதைத்து ஆசையெனும் நீரூற்றி
பொன்னாய்ப் பயிர்வளரும் பூத்து மலர் பொலியுமெனத்
தென்போடு காத்திருக்கத் தேய் பிறையின் பொலிவெடுத்து
தன்னில் உளம்வாடித் தவிப்பதுமேன் சொல்தலைவி

தலைவி
கண்முன் கணம் தோன்றிக் காற்றிலெழும் வித்தைசெய்து
பெண்ணின் மனமுருகப் பேசியெனைப் பித்தாக்கி
எண்ணம் மயக்கி உரு எத்தனை தானெடுத்தாலும்
திண்ணமின் றெனை மறந்தால் தேகம் பதை பதைக்காதோ

செந்நெல் விதையெறிந்து சீராக மண்குழைத்து
வெந்து வியர்வைகொட்டி வெய்யில் நின்றுடல்கறுத்து
வந்து மழை வானூற்றும் வயல் செழிக்குமென்றிருக்க
அந்தோ வான்பொய்த்துவிடின் அகமெடுத்த வகையானேன்

தோழி:
நொந்து படும் வேதனையும் நிகழ்வுச் சிறுமைதனும்
மந்தவெயில் முன்னெழுந்த மறைமுகிலாய் பறந்துவிடும்
செந்தமிழும் கேட்குமதில் சிந்தையொலி சந்தமெழும்
வந்தவனும் தந்திடுவான் வானுறையும் தெய்வ முண்டு

தந்தனதா ஓசையெழத் தமிழினித்த மங்கையவர்
வந்துநடம் செய்யுமொலி வானமெழும் பொற்கவிதை
சந்தமெழச் சத்தமிடும் சிந்தை குளிர்ந் தின் வசந்த
நந்தவன மென்றொளிர நாளும் இறை பூச்சொரிவாள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கவிதை மூன்று காணலாம் Empty Re: கவிதை மூன்று காணலாம்

Post by kirikasan on Sat Sep 19, 2015 10:17 pm

பூவும் மறந்த தேனியும்

(பூ)
ஓடிச் சென்று பூக்களில்
உள்ள தேனும் சேர்ப்பதில்
நாடிச் செல்லு முன்மனம்
நாளில் இன்ற யர்ந்ததென்
வாடித் தானிப் பூவிழும்
வாழ்வு என்ப தென்னவோ
கூடு்ந் தேன்க சப்பதில்
கோல மிந்த எண்ணமோ

(தேனீ)
தேடி வைத்த தேனடை
தேவைக் கின்று போது்மாய்
வேடிக் கைகொண் டென்மனம்
வீணில் தூக்கம் கொள்வதென்
நாடி வந்து தேனதை
நாளும் கொள்ள என்னிடம்
நீடி ழந்த மோகமும்
நெஞ்சில் கொள்வ தெப்படி

(பூ)
யாது வந்த போதிலும்
யார் தடுப்ப ராயினும்
நீதி உன்க டன்முடி
நேரும் நன்மை யாதென
ஊதி யத்தைக் காத்தி் டும்
உள்ள மும்த விர்த்திடென்
றோது கின்ற கீதையும்
உள்ம னத்தில் கொள்ளுவாய்

யாது வந்து சேரினும்
நன்மை யென்றே எண்ணிடில்
சூது கள்ளம் வெஞ்சினம்
செய்த லின்றி யாவரும்
ஏது உண்மை வாழ்வெனும்
இன்பங் கொண்டொன் றாகிடில்
போது மென்ற தேவைகள்
பூத்த வாழ்வொ ளிர்ந்திடும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கவிதை மூன்று காணலாம் Empty Re: கவிதை மூன்று காணலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum