புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_m10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10 
56 Posts - 73%
heezulia
தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_m10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_m10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_m10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_m10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_m10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_m10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_m10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel
தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_m10தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி - Page 7 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Sep 16, 2015 7:01 am

First topic message reminder :

ஹைக்கூவில் எப்போதும் ஒரு பருவ வார்த்தை இருக்கும். அவ்வார்த்தை கவிதையின் சூழலைப் புலப்படுத்தும். அது ஒரு விதையாக, உணர்ச்சி உலகின் விசையாக, ஒலி, வாசனை, நிறம் இவைகளாக இருக்கும். இவ்வாறு சுருங்கச் சொல்லப்பட்ட ஒன்றின் உருவம், நாம் நிலவு எனக் கூறும்போது, இலையுதிர் கால முழுமதியைக் குறிக்கிறது. வசந்த காலத்தைக் குறிக்க மங்களான நிலவு, மழைக்காலத்தில் குளிர் நிலவு என வரும் (முனைவர் மித்ரா, ஜப்பானிய, தமிழ் ஹைக்கூக்கள், ப.16). ஹைக்கூ ஒரு காலத்தில் பருவங்களுக்கேற்றபடியும் கருத்துக்களுக்கேற்றபடியும் பிரிக்கப்பட்டன. அதில் ஐந்து பருவங்கள் உள்ளன. புத்தாண்டு, வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் காலம் என ஐந்தாகும். தற்காலத்தில் பருவகாலமின்றி எழுதுவது வழக்கமாகிறது; பருவம் தெரிவிக்கப்படாமல் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் ஒரு மறைமுகமான கருத்து ஏதாவது ஒரு பருவத்தைப் பற்றி இருக்கும்போது கவிதை மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. நாமும் தமிழ் ஹைக்கூக்களை மதிப்புடையதாகச் செய்வோம். பருவ காலங்களுக்கான பகுப்புகள் (கருப்பொருள்) கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மித்ரா, நெல்லை சு. முத்து, நிர்மலா சுரேஷ், பரிமளம் சுந்தர் ஆகியோரின் ஹைக்கூ ஆய்வு நூலிலிருந்து தொகுக்கப்பட்டு எடுத்துக்காட்டப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றி சமர்ப்பிக்கிறேன்.

வசந்த காலம்(இளவேனில்)
வசந்த காலம் என்பது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்கள் ஆகும்.

பருவம், தட்ப வெப்பம்
நெடிய பகல், மெல்ல நகரும் நாள், இளவேனில் பகல், இளவேனில் கனவு, நெருங்கும் கோடை, வெப்பம், அமைதி, தெளிவு, குளிர்ச்சி, வெதுவெதுப்பு, இதமான குளிர்.

வானவியல் பகுப்பு
மறக்கப்பட்ட பனி, மெல்லிய பனி படரல், மங்கிய நிலவு, நிலவொளி, உறைபனி, மாலைப் பனி, பலமான காற்று, கிழக்குக் காற்று, இனிய தென்றல், வாசம் நிறைந்த காற்று, மங்கிய காலை சூரிய ஒளி, வசந்த கால நிலவு, நிலவின் பின் வட்டம்.

புவியியல் பகுப்பு
மீதியான பனி, உருகும் பனி, மிதக்கும் பனிக் கட்டிகள், வெதுவெதுப்பாகும் நீர், காடும், பெயரில்லாத மலையும், மூடுபனி, கடற்கரை, மந்தமான நீரோட்டம், நீளமானகரை, கடலின் நீரோட்டம், நீரின் சத்தம், சதுப்பு நிலம், கறம்பு நிலம், பசுமையான வயல்கள், தொலைவில் உள்ள வீடுகள், மலர்களின் புன்னகை.

கவனிப்புகள்
பொம்மைத் திருவிழா, பணியாளர் திருவிழா, புத்தரின் நிர்வாண ஓவியம், புனிதப் பயணம்,  வசந்தகாலத் தேவதை.

வாழ்வியல் பகுப்பு
வயலை உழுதல், நெல் விதைத்தல், பட்டுப் பூச்சிகள், காற்றாடி, ஊஞ்சல், பலுன், கடற்கரை மணலில் காலடிச் சுவடுகள், காதல் செயல்கள், வேட்டையாடுதல், தேயிலை பறித்தல், கிளிஞ்சல் சேகரித்தல்.

விலங்குகள்
காதல் பூனைகள், பூனைக் குட்டிகள், விரையும் அணில்கள், கரிச்சான் குருவி, கழுகின் கூடு, எலிவளை, குயில், முயல், புறா, ஆந்தை, காட்டு வாத்து, கொக்கு, நாரை, கோழி, தவளை, பல்லி, வண்ணத்துப்பூச்சி, தவளைக்குஞ்சுகள், மணலில் குளிக்கும் குருவிகள்.

தாவரங்கள், பூக்கள்
தாமரை, புன்னைமரம், பலதரப்பட்ட கோரைகள், நடனமாடும் கொடி, புற்கள், பூண்டுகள், கடல்பாசி, வெங்காயப் பூக்கள், கடுகு, டூலிப், மலை ரோஜா போன்றவை.

கோடைக்காலம்

மே, ஜூன், ஜூலை மாதங்களை உள்ளடக்கியது இது.

பருவ, தட்பவெப்பப் பகுப்பு
கோடைக்காலைத் துவக்கம், கோடை வெப்பம், கோடை இரவு, கோடை குளிர்ச்சி, ஜூன் இருட்டு, குறுகிய இரவு.

வானவியல் பகுப்பு
ஜூன் மழை, திடீர் மழை, வானவில், மின்னல், கோடை காலப் புயல்காற்று, குளிர்காற்று, கோடை மழை, வெப்பக் கதிரவன், எரியும் கதிரவன்.

புவியியல் பகுப்புகள்
பச்சை மலைகள், தோட்டம், பசுமை நெல் வயல், அமைதியான மலை, தோட்டத்தில் சூடான பொருட்கள், சதுப்பு நிலம், கோடை ஆறு, தெளிந்த நீர்வீழ்ச்சி.

கவனிப்புகள்
மரக்கத்தி, தொங்கி அசையும் விளக்கு, பதாகைகள், ஆடை மாற்றல்.

வாழ்வியல் பகுப்பு
சதுப்பு நிலத்தில் சவாரி செய்தல், மழைக்கால வேண்டுதல், நெல் விதைத்தல், பகல் தூக்கம், பறைகள் அடிக்கும் ஓசை, நிலவொளியில் துணிகளைத் துவைத்தல், குழந்தைகளைத் தூங்க வைத்தல், ஆற்றைக் கடக்கும் மகிழ்ச்சி.

பறவை, விலங்குகள், பூச்சிகள், பயிர்கள்
கிராமத்துக் குருவிகள், மரத்தில் கட்டப்பட்ட குதிரை, மரங்கொத்தி, தோப்பில் விழும் அட்டை, குயில், நீர்க்கோழி, நண்டு, ஈக்கள், மின்மினி, வண்ணத்துப்பூச்சி, எறும்பு, பாம்பு, சிலந்தி, வெட்டுக்கிளி, பச்சைத் தவளை, நத்தை, இறந்து விழும் விட்டில், காய்ந்துபோன நாணல்கள், சோளம், கோதுமை, திராட்சை, வாழை, பூசணி, பச்சைப் புல்,

இலையுதிர் காலம்

ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களை உள்ளடக்கியதாகும்.

பருவநிலை, வெட்பதட்ப நிலைப் பகுப்புகள்
நீண்ட இரவுகள், இரவுக்குளிர், ஒளிரும் நிலவு.

வானியல் பகுப்புகள்
பால்வீதி, பிறை நிலா, நட்சத்திர இரவு, மாலை நிலவு, அறுவடை நிலவு, நிலாப் பார்த்தல், பனி மூட்டம், மூடுபனி கிளம்பல், சிவப்பு நிறச் சூரிய வெப்பம், தெளிவான நீல வானம், இலையுதிர் கால மழை, வெள்ளைப் பனித்துளி.

புவியியல் பகுப்புகள்
நிறங்கள், பழ மர நிழல்கள், எங்கிருந்தோ வரும் ஒளி, நெல், வயல், சதுப்பு நிலம், வெள்ளிய கடலலைகள், பரந்த கடல், பயங்கரமான மலைகள், வரிசையான மலைகள், இருளடையும் மலை.

கவனிப்புகள்
இலையுதிர்காலத் திருவிழா, அனைத்து ஆன்மாக்கள் திருவிழா, வீட்டில் கடவுள் பீடம், நெசவுத் திருவிழா, பிரார்த்தனைக்கயிறுகள் (நோன்புக் கயிறு), வாண வேடிக்கை, கல்லறைக்குச் சென்று வேண்டுதல், தெரு விளக்கு.

வாழ்வியல் பகுப்புகள்
நெல் அறுவடை, பூச்சிக் கூண்டு, மாலை நேரத்தில் பாதை வழியாக யாரும் போகாமை, இலையுதிர் காலத்தனிமை, குறட்டை ஒலி, புல்லின்மீது நடத்தல், காளான் சேகரித்தல்.

பறவை, விலங்குகள்
இடம்மாறிச் செல்லும் வாத்துகள், சிவப்புத் தும்பிகள், காய்ந்த கிளையில் அமர்ந்த காக்கை, கொக்கு. காட்டுப் பன்றிகளை அசைக்கும் காற்று, சப்தமின்றிச் செல்லும் காகம், சுவர்க்கோழி கூவுதல், பூனைகள், நடுங்கும் குரங்கு, மான், இறந்த உருப்பில் அமர்ந்திருக்கும் காக்கை, பசுவின் கொட்டகையில் கொசுக்கள், சிள்வண்டுகள், புல்புல் பறவை, நாரை, மரங்கொத்திப் பறவை, வெட்டுக்கிளி, பூச்சிக் குரல்.

தாவரப் பகுப்புகள்
வெள்ளைக் கிரிசாந்தமம், சோளம், கோதுமை, திராட்சை, வாழை, ரோஜா ஆகியவை.

குளிர்காலம்
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களை உள்ளடக்கியது.

பருவகாலம், தட்பவெப்பப் பகுப்பு
குளிர்காலம், குளிர்காலத் துவக்கம், குளிர்கால இரவு, மழைகால முதல் மழை, மழைகாலத் துவக்கம், மேமாத மழை, ஜூன்மாத மழை.

வானவியல் பகுப்பு
குளிர் நிலவு, பனி நிலவு, குளிர்கால விண்மீன்கள், கார்கால முதல் மழை, தூறல், அடர்பனி, பனிப்பந்து, பனிப்புயல், மங்கிய நிலவொளி, தேய்ந்த நிலவு, நள்ளிரவு மழை.

புவியியல் பகுப்பு
உறைந்த நிலம், வற்றிய நீர்வீழ்ச்சி, சமவெளியில் ஓடும் மழை, ஆறு, சேதமான பாலம், நீர்வீழ்ச்சி ஓசை, பெயரில்லா சிற்றாறு.

வாழ்வியல் பகுப்பு
கரி நெருப்பு, தீ மூட்டல், பழைய நாள்காட்டி, முள்ளங்கி பிடுங்குதல், கண்களுக்கு வலி உண்டாவதால் விளக்கு ஏற்றாமை, அதிக குளிர்ச்சி, போர்வை, மேலாடை, கம்பளியின் தேவை.  மழையால் குழந்தையை அழைக்கும் தாயின் பாசக் குரல்.

பறவை விலங்குகள்
கரடி, கழுகு, காட்டு வாத்து, நீர்க்கோழி, சிப்பி, கடல் பறவை, குளிர் காலத்தில் உயிரினங்களின் இயக்கம். தொடர் மழையால் மாட்டுக்கொட்டகை நீரில் மூழ்குதல். இரவு பகல் என்று அறியாமல் கூவும் சேவல். மழையில் எருதுகள், மழையில் திரியும் பூனை, தேரையின் அடங்கிய குரல்,  இடைவிடாது ஒலிக்கும் பூச்சிகளின் பாட்டு.

தாவரங்கள்
மழையால் பாதிக்கப்படும் தோட்டம், காற்றால் பாதிக்கப்படும் பயிர்கள் - வயல்வெளிகள், வெளிவரும் புற்கள், மரமொட்டுகள் வெளிவருதல், மழையால் ஒன்றன்மீது ஒன்றாக விழும் இலைகள், கற்பூர மரம், உதிர்ந்த கிரிசாந்தமம், .

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Jan 27, 2016 10:15 am

அடர்ந்த இலைகளினூடே
இன்னமும் தெரிகிறது
மரத்திலான சிலுவை
(செல்லம்மாள் கண்ணன், ஓஷோ தமிழ் ஹைக்கூ புரிதல், ப.76)

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Mar 01, 2016 8:21 am

Somasundaram Sundara Barathy
வசந்தகாலப் புனிதப் பயணம்
மலைக்குருவிகளின் குரலோசைகள்
மலர் வசந்தம்

மகிழ்நன் மறைக்காடு
கண் மறைக்கும் மூடுபனி
காட்சித் தெளிவின்றி
தூரத்திலுள்ள வீடுகள்.

GurunAthan RamaNi
சித்திரை யிலோர் மாலை
வாய்க்கால் வழியெங்கும் சலசல...
தனியாய் ஓர் உழவன்.

இரட்டை வால் குருவி
லாவகமாய்த் தாவித் தழைய...
கொசுக்கள் யமன் காணும்!

Raja Kumaran
வீதியோர கடை
வியர்வை தரும்
நீண்ட பகல்.

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக