புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10 
1 Post - 50%
heezulia
தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10 
20 Posts - 3%
prajai
தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு சிறுதானியம் !


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 12:53 am

தினம் ஒரு சிறுதானியம் ! M50nlobYQZuJR0lSJFxe+Millets

இன்று, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டுவலி என அனைவருமே ஏதேனும் ஒரு நோயைச் சுமந்து, மருந்துகளையே உணவாக உட்கொள்கிறோம். உணவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய விவசாய முறை என்பது படுபாதாளத்தை நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. விளை நிலங்களைப் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் ஆக்கிரமித்து விட்டன.

உணவும் நஞ்சாகி நோய்களுக்கு ரத்னக் கம்பளம் விரித்து விட்டது. இனி, உணவு புரட்சி செய்து, அதிகம் ஆர்கானிக் உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்வது ஒன்றே நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே வழி.

தினம் ஒரு சிறுதானியம் ! ZW9GYb9QOacqyd1eDYbj+hy19millets_GCB_HY_1555591g

சிறுதானிய உணவுப் பொருட்கள், நம் உடலுக்கு ஊட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தினம் ஒரு சிறுதானியம் பற்றிய இந்த சிறப்புத் தகவல்கள், ஆரோக்கியமான வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பது உறுதி.


ஆனந்த விகடனில் பார்த்தேன், அதை இங்கு உங்களுடன் பகிறுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 12:55 am

1. சாமை

மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும், சாமையில்தான் இரும்புச்சத்து அதிகம். ரத்தசோகை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். தாதுப் பொருட்களை உடலில் அதிகரிகக்ச் செய்து, உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். இதில், கலோரி அளவு மிகக்குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம். புரதமும் இதில் இருக்கிறது. அதிகம் சேர்த்துக்கொண்டாலும் ஆபத்து இல்லை.

பலன்கள்

மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்னைகள் தீரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது.   உடலில் சத்துக்களை அதிகரிக்கச் செய்யும் சாமையை, தினமும் காலை உணவாகச் சமைத்துச் சாப்பிடலாம்.

சாமை பொங்கல்!

தினம் ஒரு சிறுதானியம் ! MZJ091P1Tcmrtcf5Dz6I+sams01


சாமையில் சாதம், உப்புமா, இட்லி, இடியாப்பம், பொங்கல், தோசை, புட்டென வெரைட்டியாக ருசியாகச் சமைக்கலாம்.

ஒரு கப் சாமைக்கு, கால் கப் பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் தனித்தனியாக வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும். குக்கரில் பால் ஒரு கப் மற்றும் கொஞ்சம் தண்ணீர் விட்டு, வறுத்த சாமை, பருப்புச் சேர்த்து, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகம், சிட்டிகை பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி அரை டீஸ்பூன் போட்டு வதக்கவும். கடைசியாக, முந்திரியை வறுத்து, பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதற்குத் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி தொட்டுச் சாப்பிடலாம்.

வயோதிகர்கள், சர்க்கரை நோயாளிகள் நெய், முந்திரியைத் தவிர்த்துவிடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 12:57 am

2 .தினை

தினைக்கு ஆங்கிலத்தில், 'இத்தாலியன் மில்லட்' என்று பெயர். உலக அளவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானிய வகைகளில் ஒன்று. இனிப்புச் சுவைகொண்டது.

பலன்கள்

தினையோடு, எள் சேர்ப்பதால், கால்சியம் நிறைவாகக் கிடைக்கும். இதனால், எலும்புகள் நன்றாக உறுதியாகும். இதயத்தை பலப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். தேவையான புரதச்சத்து கிடைப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வாயு, கபத்தைப் போக்கும்.

தினை, எள் சாதம் 2

தினம் ஒரு சிறுதானியம் ! XSNS0hn5Taa3S66G61ae+thinai01

ஒன்றரை கப் தினையை இரண்டரை கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். வெந்த தினை சாதத்தை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும். சிறிது நல்லெண்ணெயில் 150 கிராம் எள், 5 காய்ந்த மிளகாய், 50 கிராம் உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, அரை டீஸ்பூன் கடுகு, சிறிது உளுத்தம் பருப்பு, 50 கிராம் வேர்க்கடலையைப் போட்டுத் தாளிக்கவும். இதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, கிளறி இறக்கவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 12:58 am

3. குதிரைவாலி

சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர், விருதுநகர் மாவட்டங்களில் சிறுதானியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

பலன்கள்

குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம். மலச்சிக்கலைத் தடுத்து உடலில் கொழுப்பைக் குறைத்துவிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மெதுவாக வெளியேறுவதற்கு உதவுகிறது. ரத்தசோகை வராமல் தடுக்கும். இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

தினம் ஒரு சிறுதானியம் ! RrRXu8NWT8ClXC9zxKtb+kuthiraivali01(1)

குதிரைவாலி பிரியாணி ரெசிப்பி

300 கிராம் - பீன்ஸ், கேரட், 100 கிராம் - வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 4 கப் குதிரைவாலி அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு, ஏலக்காய், லவங்கப்பட்டை, வெங்காயம், பூண்டு, இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், டீஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். இதில், அரிசியைக் கொட்டிக் கிளறி, ஏழரை கப் தண்ணீர் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினாவைக் கலந்து கிளறி, குக்கரை மூடவும். மூன்று விசில்கள் வந்ததும், குக்கரை இறக்கி நெய் ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 12:59 am

4. வரகு
 
பண்டை தமிழர்கள் உட்கொண்டு வந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வரகின் பலன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் அப்பம், வெல்லப் பணியாரம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலுவைக் கூட்டலாம்.

பலன்கள்

நார்ச்சத்து மிக அதிகம். மாவுச்சத்தும் குறைந்த அளவே இருப்பதால் ஆரோக்கியத்துக்கு நல்லது. புரதம், கால்சியம், வைட்டமின் பி, தாது உப்புக்கள் நிறைய உள்ளன. விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். தினமும் வரகு, பூண்டு பால் கஞ்சியை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டலாம். உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம்.

வரகு கஞ்சி

தினம் ஒரு சிறுதானியம் ! VqiIa9HYSy6VwK0mWooh+Milletresiby01

சுத்தம் செய்த கால் கப் வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும். பாதி அளவு வெந்ததும், உரித்த பூண்டு பல் 10, ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம், ஒரு டம்ளர் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள, கறிவேப்பிலை துவையல் அருமையாக இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:00 am

5.சிறுதானிய கார அடை

தினம் ஒரு சிறுதானியம் ! Nf0WL2k8QFCqmpYrXNt9+milletadai1

குழந்தைள்கள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட உகந்தவை சிறுதானிய உணவுகள். கேழ்வரகு, கம்பு, தோசை, வரகரிசிச் சோறு, தினை உருண்டை, சோள கொழுக்கட்டை, கேப்பை களி என சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம்.

செய்முறை:

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 டீஸ்பூன் அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.  

நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி, இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை ரெடி!    

பலன்கள்:

கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:01 am

6. சோளம்

அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சோளத்துக்கு முக்கிய இடம் உண்டு. சோளத்தை முழுதாக அல்லது உடைத்து, வேகவைத்து சாதமாகச் சாப்பிடலாம். அரைத்து மாவாக்கி, சப்பாத்தியாகவும் செய்யலாம்.

அதிக மாவுச்சத்து, கொழுப்பு, புரதச்சத்து நிறைந்து இருப்பதால், வெளிநாடுகளில் சோளத்தை அதிக அளவில் பயிரிடுகின்றனர்.

உடலுக்கு உறுதியைத் தந்து, ஆரோக்கியத்தைத் தக்கவைக்கும் சோள உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.


சோள ரவை கொழுக்கட்டை

தினம் ஒரு சிறுதானியம் ! HkXDPHVbQ2Gyunc2FrF7+cornresiby

செய்முறை:

கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில், கறிவேப்பிலைச் சேர்த்து, மூன்று கப் தண்ணீரை விடவும். பெருங்காயத்தைத் தண்ணீரில் கரைத்து ஊற்றி, தேங்காய்த் துருவல், உப்பு போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், ஒரு கப் சோள ரவையைப் போட்டு, அடுப்பை 'சிம்'மில் வைக்கவும். அடிக்கடி திறந்து கிளறிவிடவும்.

மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆறவைத்து, கொழுக்கட்டைகளாகப் பிடித்து, 10 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுக்கவும்.

பலன்கள்:

சோளத்தில் புரதம், மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டாகரோடின் போன்ற பல சத்துக்கள் உள்ளன. பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். சிறுநீரைப் பெருக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். மூல நோய் உள்ளவர்கள் சோளத்தைத் தவிர்ப்பது நல்லது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:02 am

ராகி

ஒரு கிலோ கேழ்வரகை நீரில் ஊறவைத்து, வடித்து, முளைக்கட்டிய பின் காயவைத்து, மாவாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது சுவையான இனிப்பு மற்றும் கார உணவுகளைச் செய்யலாம். முழுமையான சத்துக்கள் சேர்ந்து,  உடலுக்கு வலுவைக் கூட்டும்.

ராகி வேர்க்கடலை அல்வா

தினம் ஒரு சிறுதானியம் ! R5Qd7dSSOaCcNVH7KDzI+ragihalwa01

100 கிராம் கேழ்வரகு மாவை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலக்கவும். கடாயில் ஒரு கப் பாலை ஊற்றி, கொதித்ததும் 100 கிராம் நறுக்கிய பூசணித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இதில், கால் கிலோ சர்க்கரை, கரைத்து வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் தோல் நீக்கிய 100 கிராம் வேர்க்கடலை, தேங்காய்த் துண்டுகள், முந்திரித் துண்டுகளை வறுத்து, அல்வாவில் சேர்த்து, கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்

நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாகச் செய்து தரலாம். உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இளம்  தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். ரத்தசோகையைத் தடுக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:04 am

8. கேழ்வரகு

ஆவியில் வேகவைத்துச் சாப்பிடும் எந்த உணவுமே, உடலுக்கு நன்மையைத் தரக்கூடியதுதான். அதிலும், கேழ்வரகில் செய்யும் இட்லி, உடலுக்கு ஊட்டத்தைத் தரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம்.

கேழ்வரகு இட்லி

தினம் ஒரு சிறுதானியம் ! HeqThPaQLe63IomlkQ4A+idlin_1

செய்முறை: தலா 200 கிராம் கேழ்வரகு, இட்லி அரிசி எடுத்துக் கொள்ளவும். இதனுடன், 100 கிராம் பச்சரிசி சேர்த்து, நன்றாகக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். 400 கிராம் உளுந்தைத் தனியாக ஊற வைக்கவும். ஊறிய உளுந்தில் தண்ணீர் தெளித்து அரைக்கவும். அரிசியையும் கேழ்வரகையும் அரைத்து எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, இட்லி தட்டில் மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.

பலன்கள்

கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், வயதானோர் என அனைவரும் சாப்பிடலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:05 am

9. மல்டி கிரெய்ன் ரொட்டி

இன்று பெரும்பாலான வீடுகளில் இரவு நேரத்தில் சப்பாத்திதான் உணவாக இருக்கிறது. இதயநோய், சர்க்கரை நோய், ஒபிசிட்டி என நோயின் பாதிப்புகள் அதிகரித்திருப்பதுதான் இதற்கு காரணம்.

கோதுமையைப் பயன்படுத்தி மட்டுமே சப்பாத்தி செய்யாமல், சிறுதானியங்கள், பயறு வகைகளையும் சேர்த்து அரைத்து, சப்பாத்தி செய்வது உடலுக்கு வலுவைக் கூட்டும். இதனுடன் காய்கறி கலவைச் சேர்த்துக்கொண்டால், ஒட்டுமொத்த சத்தும் உடலில் சேரும்.

மல்டி கிரெய்ன் ரொட்டி

தினம் ஒரு சிறுதானியம் ! 3TkaKMnlSGWKrDAWnHyi+mutibread01

தேவையானவை: முழு கோதுமை, மக்காச்சோளம், முளைக்கட்டி காயவைத்த கேழ்வரகு, தோல் நீக்காத கறுப்புக் கொண்டைக்கடலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கொடுத்துள்ள தானியங்களை சம அளவு எடுத்து, நைஸாக அரைத்து மாவாக்கவும். இதை நன்றாகச் சலித்துக்கொள்ளவும். இந்த மாவைத் தேவையான அளவு எடுத்து, தண்ணீர் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து சப்பாத்திகளாக இடவும். தோசைக் கல்லில் சிறிது எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும்.

சுவையும் சத்தும் நிறைந்த இந்த மல்டி கிரெய்ன் ரொட்டியை, குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதற்குத் தொட்டுக்கொள்ள காய்கறிக் கலவையைக் கூட்டாகச் செய்து சாப்பிடலாம்.

பலன்கள்

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். கோதுமையில் தாது உப்புக்களும், முக்கியமான அமினோ அமிலங்களும் உள்ளன. சோளத்தில் வைட்டமின்கள், கேழ்வரகில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள், பருப்பு வகைகளில் புரதம் என மல்டி கிரெய்ன் ரொட்டியின் மூலம், அனைத்துச் சத்துக்களும் உடலுக்குக் கிடைத்துவிடும். அனைத்து வயதினரும் சாப்பிட ஏற்றது. வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம், நிறைவான ஊட்டச்சத்தை அவர்களுக்கு வழங்கலாம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக