புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
85 Posts - 79%
heezulia
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
250 Posts - 77%
heezulia
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
8 Posts - 2%
prajai
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_m10அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:35 am

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Usopen_logo

உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) நிஷிகோரி (ஜப்பான்), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), டேவிட் பெரர் (ஸ்பெயின்), போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

ஜோகோவிச் இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் தோற்று இருந்தார். இதனால் அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்ல இயலும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஜோகோவிச் ஒரே ஒருமுறை மட்டுமே அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் (2011) பெற்று உள்ளார். 4 தடவை இறுதிப் போட்டியில் தோற்று இருக்கிறார்.

அவருக்கு ஆன்டி முர்ரே, ரோஜர் பெடரர், வாவ்ரிங்கா, சவாலாக இருப்பார்கள். மேலும் கால் இறுதியில் 8–ம் நிலை வீரரான ரபேல் நடாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

9 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற சாதனை வீரரான நடால் சமீபகாலமாக சரியாக ஆடவில்லை. கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற பிறகு அவர் கிராண்ட்சிலாமில் அரை இறுதியை தொட்டது இல்லை.

இரண்டாம் நிலை வீரரான ரோஜர்பெடரர் 17 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனையாளர் ஆவார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் எந்த கிராண்ட்சிலாமையும் வெல்லவில்லை.

பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தொடர்ச்சியாக 4 கிராண்ட் சிலாம் பட்டங்களை (2014– அமெரிக்க ஓபன், 2015 ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன்) வென்று இருந்தார். அவரது ஆதிக்கம் இந்தப் போட்டியிலும் நீடிக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

34 வயதான செரீனா இந்த அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றால். ஸ்டெபிகிராப் சாதனையை சமன் செய்வார். ஜெர்மனி முன்னாள் வீராங்கனையான ஸ்டெபிகிராப் 22 கிராண்ட் சிலாம் வென்று உலக அளவில் 2–வது இடத்தில் உள்ளார். செரீனா 21 கிராண்ட்சிலாம் பட்டம் கைப்பற்றி உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற அவருக்கு இந்த முறையாவது சவால் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியனான அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை மட்டும் 6 தடவை வென்றுள்ளார்.

ஷிமோனா ஹெலப் (ருமேனியா), ஷரபோவா (ரஷியா), குவிட்டோவா (செக்குடியரக), வோஸ்னி யாக்கி (டென்மார்க்), இவானோவிக் (செர்பியா) போன்ற முன்னணி வீராங்கனைகளும் சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளனர்.



அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:36 am

ஷரபோவா காயத்தால் விலகல்

முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான மரியா ஷரபோவா (ரஷியா) விலகியுள்ளார். வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக போட்டி அமைப்பாளர் டேவிட் புருவர் தெரிவித்துள்ளார். ஷரபோவாவின் விலகல் செரீனாவுக்கு கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உலக தரவரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் அவர் 2006–ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:37 am

முதல் சுற்றில் ராட்வன்ஸ்கா வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை ராட்வன்ஸ்கா வெற்றி பெற்றார்.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 6-4, 6-1, 6-2 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் சிமோன் போலெலியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 17-ம் நிலை வீரர் கிரிகோர் டிமித்ரோவ் (பல்கேரியா) 6-4, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் மேத்யூ எப்டெனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் மிகைல் குகுஷ்கின் (கஜகஸ்தான்) 6-3, 6-3, 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது சீன தைபே வீரர் வான் சன் லூ காயம் காரணமாக விலகியதால் மிகைல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் செக் குடியரசின் காதெரினா சினிகோவாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்ற ஆட்டங்களில் மரியானா மரினோ (கொலம்பியா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), அனெட் கொடாவெய்ட் (எஸ்டோனியா), மகரோவா (ரஷியா), ஜோவோனாஸ்கி (செர்பியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், 2006-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியவருமான ரஷியாவின் அழகு பதுமை மரியா ஷரபோவா இந்த போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகி உள்ளார். காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் அவர் விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:37 am

ஜோகோவிச், செரீனா 2–வது சுற்றுக்கு தகுதி

உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) தொடக்க சுற்றில் பிரேசிலை சேர்ந்த ஜோ.சவுசாவை எதிர் கொண்டார். இதில் ஜோகோவிச் 6–1, 6–1, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

8–ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் குரோஷியாவை சேர்ந்த போர்னா கோரிக்கை சந்தித்தார். இதில் நடால் 6–3, 6–2, 4–6, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியனும், 9–ம் நிலை வீரருமான சிலிச் (குரோஷியா), 7–ம் நிலை வீரர் டேவிட் பெரர் (ஸ்பெயின்), 10–ம் நிலை வீரர் ரோஸ்னிக் (கனடா), 19–ம் நிலை வீரர் சோங்கா (பிரான்ஸ்) ஆகியோர் வென்று 2–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

உலகின் 4–ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப் பான்) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார்.

அவர் 4–6, 6–3, 6–4, 6–7 (6–8), 4–6 என்ற கணக்கில் பிரான்ஸ் வீரர் பெனாய்டிடம் தோற்றார். நிஷிகோரி கடந்த அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டி வரை நுழைந்தவர் ஆவார்.

இதேபோல 16–ம் நிலை வீரரான மான்பிலசும் (பிரான்ஸ்) தொடக்க சுற்றிலேயே வெளியேறினார்.

நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றில் ரஷியாவை சேர்ந்த விட்டாலியாவை சந்தித்தார். இதில் செரீனா 6–0, 2–0 என்ற கணக்கில் முன்னணியில் இருந்த போது விட்டாலியா காயத்தால் விலகினார். இதனால் செரீனா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்ற ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ரட்வன்ஸ்கா (போலந்து) ஆகியோர் வெற்றி பெற்று 2–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

7–ம் நிலை வீராங்கனை அனா இவானோவிக் (செர்பியா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார்.

சுலோவாக்கியாவை சேர்ந்த டொமினிக்கா சிபுல் கோவா 6–3, 3–6, 6–3 என்ற கணக்கில் இவானோவிக்கை தோற்கடித்தார்.

இதேபோல 21–ம் நிலை வீராங்கனை ஜெலீனா ஜான்கோவிக் (செர்பியா), 29–ம் நிலை வீராங்கனை ஸ்டெப்ஹென்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் முதல் சுற்றில் தோற்றனர்.



அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:37 am

பெடரர், முர்ரே முன்னேற்றம்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் 2–ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 6–1, 6–2, 6–2 என்ற கணக்கில் லியானர்டோ மேயரை (அர்ஜென்டினா) வீழ்த்தி 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

3–ம் நிலை வீரரான ஆண்டிமுர்ரே (இங்கிலாந்து) 7–5, 6–3, 4–6, 6–1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் கைரோஜசை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) ஆகியோர் வென்று 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷிமோனா ஹெலப் (ருமேனியா) முதல் சுற்றில் மரினாவை (நியூசிலாந்து) எதிர்கொண்டார். இதில் ஹெலப் 6–2, 3–0 என்ற கணக்கில் இருந்தபோது மரினா காயத்தால் விலகினார். இதனால் ஹெலப் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

4–ம் நிலை வீராங்கணையான வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6–2, 6–0 என்ற கணக்கில் ஜேமிலோயிப்பை (அமெரிக்கா) வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் குவிட்டோவா (செக் குடியரசு) அசரென்கா (பெலாரஸ்), கெர்பர் (ஜெர்மனி) ஆகியோர் வென்று 2–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

செக்குடியரசுவை சேர்ந்த 6–ம் நிலை வீராங்கனை ஷபரோவா அதிர்ச்சிகரமான தோற்றார். பிரெஞ்சு ஓபனில் 2–வது இடத்தை பிடித்த அவர் 4–6, 1–6 என்ற கணக்கில் லெசினாவிடம் (உக்ரைன்) தோற்றார்.



அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:38 am

கிவிடோவா எளிதில் வெற்றி

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இது கடின தரையில் நடத்தப்படும் போட்டியாகும். பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் செக்குடியரசின் பெட்ரோ கிவிடோவா, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் சீஜ்மன்ட்டை பந்தாடினார். விம்பிள்டனை இரண்டு முறை வென்றவரான கிவிடோவா அமெரிக்க ஓபனில் பங்கேற்று இருப்பது இது 8-வது முறையாகும்.

ஆனால் ஒரு தடவையும் அவர் 4-வது சுற்றை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகளான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-2, 6-0 என்ற நேர் செட்டில் ஜாமி லோப்பையும் (அமெரிக்கா), விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-1, 6-2 என்ற நேர் செட்டில் லூசி ராடெக்காவையும் (செக்குடியரசு) விரட்டியடித்தனர். பிரெஞ்ச் ஓபனில் இறுதி சுற்று வரை முன்னேறி ஆச்சரியப்படுத்தியவரான செக்குடியரசின் லூசி சபரோவா முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றுப்போனார்.

தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள அவரை 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் 37-ம் நிலை வீராங்கனையான லெசியா சுரென்கோ (உக்ரைன்) சாய்த்தார். இதே போல் வளர்ந்து வரும் நட்சத்திரமான தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தின் பாக்சின்ஸ்கி 5-7, 0-6 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் பார்போரா ஸ்டைரிகோவாவிடம் ‘சரண்’ அடைந்தார். மற்றபடி ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், சபினே லிசிக்கி, ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுர், இத்தாலியின் சாரா எர்ரானி, பிளவியா பென்னட்டா ரஷியாவின் எலினா வெஸ்னினா ஆகிய முன்னணி வீராங்கனைகள் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.



அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:38 am

நடால், செரீனா 3–வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கணையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2–வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த கிசி பெர்ட்டன்சை சந்தித்தார்.

இதில் செரீனா 7–6 (7–5), 6–3 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

15–ம் நிலை வீராங்கணையான ரட்வன்ஸ்கா (போலந்து) 6–3, 6–2 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த மக்டாவை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ், மேடிசன், பெதானி (அமெரிக்கா) ஆகியோர் வென்று 3–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

8–ம் நிலை வீரரும், 2 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 2–வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த டியோகோவை எதிர்கொண்டார். இதில் நடால் 7–6 (7–5), 6–3, 7–5 என்ற கணக்கில் வென்றார்.

நடப்பு சாம்பியனும், 9–ம் நிலை வீரருமான சிலிச் (குரோஷியா) 6–2, 6–3, 7–5 என்ற கணக்கில் இவான்ஜனியை வீழ்த்தினார்.

உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் 2–வது சுற்றில் ஆஸ்திரியாவை சேர்ந்த ஆண்டிரியாசை சந்தித்தார். இதில் ஜோகோவிச் 6–4, 6–1, 6–2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.

மற்ற ஆட்டங்களில் 7–ம் நிலை வீரர் டேவிட் பெரர்– (ஸ்பெயின்) 10–ம் நிலை வீரர் ரோனிக் (கனடா), சோங்கா (பிரான்ஸ்), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோர் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்– மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

இதேபோல ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா– புனோரின் (ரூமேனியா) ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.



அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:39 am

பெடரர், குவிட்டோவா 3–வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 4–ம் நாளான நேற்று 2–வது சுற்று ஆட்டங்கள் நடந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) பெல்ஜியம் வீரர் டார்சிசை எதிர்கொண்டார்.

இதில் ரோஜர் பெடரர் 6–1, 6–2, 6–1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இங்கிலாந்தின் ஆண்டிமுர்ரே 2–வது சுற்றில் போராடி வென்றார். பிரான்ஸ் வீரர் மார்னேரிவுக்கு எதிரான போட்டியில் முதல் 2 செட்டை இழந்த ஆண்டி முர்ரே சுதாரித்து கொண்டு அடுத்த 3 செட்டை கைப்பற்றி வென்றார். சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 7–6 (7–2), 7–6 (7–4), 7–6 (8–6) என்ற செட் கணக்கில் தென்கோரியா வீரர் சூங்கை வீழ்த்தி 3–வது சுற்றுக்கு முன்னேறினார்.

தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) 7–6 (7–2), 6–1, 6–3 என்ற செட் கணக்கில் ரஷியா வீரர் யூசோனய்வை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் டோமிக் (ஆஸ்திரேலியா), யங் (அமெரிக்கா), பெல்லுச்சி (பிரேசில்) ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), கேஸ்யூட் (பிரான்ஸ்) ஆகியோர் 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5–ம் நிலை வீராங்கணையான குவிட்டோவா (செக் குடியரசு) அமெரிக்க வீராங்கனை கிய்சுடன் மோதினார். இதில் 6–3, 6–4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ரூமேனியாவின் ஹலப் 6–3, 6–3 என்ற நேர்செட் கணக்கில் உக்ரைனின் போன்டேரன்கோவை வீழ்த்தினார். பெலராஸ் வீராங்கணை அசெரன்கா 7–5, 6–4 என்ற செட் கணக்கில் விக்மேயரை (பெல்ஜியம்) வீழ்த்தி 3–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் பொன்னாட் (இத்தாலி), கெர்பர் (ஜெர்மனி), சமந்தா (ஆஸ்திரேலியா), இரானி (இத்தாலி), லிசிக்கி (ஜெர்மனி), ரோஜர்ஸ் (அமெரிக்கா), பெட்கோவிக் (ஜெர்மனி) ஆகியோர் வென்று 3–வது சுற்றுக்கு முன்னேறினர்.



அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:39 am

டென்னிஸ் வீரர்களை வாட்டி வதைக்கும் கடும் வெயில்: அமெரிக்க ஓபனில் இதுவரை 14 பேர் ஓய்வு

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஒபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது, அமெரிக்காவில் 30 டிகிரிக்கும் அதிகமாக வெயில் வாட்டி வதைப்பதால், டென்னிஸ் விளையாடும் வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனல் பறக்கும் ஆடுகளத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் போட்டியில் சுருண்டு விழுவதும், பாதியிலேயே போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதும் தொடர்கிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில், 28ம் தரநிலையில் இருக்கும் அமெரிக்க வீரர் ஜேக் சோக் (வயது 22), பெல்ஜியம் வீரர் ரூபன் பெமில்மேன்சை எதிர்த்து விளையாடினார். முதல் இரண்டு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றிய சோக், மூன்றாவது செட்டை 3-6 என இழந்தார்.

4-வது செட் ஆட்டத்தில் சோக் 1-2 என பின்தங்கிய நிலையில், ஆடிக்கொண்டிருந்தபோது தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் திடீரென மைதானத்திலேயே நிலைதடுமாறி விழுந்தார். கடும் வெப்பமும் இருந்ததால் சோர்வுடன் காணப்பட்டார். உடனே, மருத்துவர்கள் ஐஸ் பேக் மற்றும் குளிர்ந்த துண்டுகளை பயன்படுத்தி அவருக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரால் தொடர்ந்து எழுந்து நடக்க முடியாததால் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். எனவே, எதிர்த்து விளையாடிய வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அமெரிக்க ஓபன் போட்டியில் இருந்து விலகும் 11-வது வீரர் இவர் ஆவார்.

இவரைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் உஸ்பெகிஸ்தான் வீரர் டேனிஸ் இஸ்டாமின் பாதியில் வெளியேறினார். இவர் 7-வது கோர்ட்டில் நடந்த போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமை எதிராக 6-4, 6-4, 1-0 என முன்னிலை பெற்றிருந்தபோது ஓய்வு பெற்றார்.

இதுதவிர மகளிர் பிரிவில் இரண்டு வீராங்கனைகள் முதல் சுற்றில் ஓய்வு பெற்றனர். இதன்மூலம், இந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் இதுவரை 14 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.



அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:40 am

பயஸ், சானியா முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சானியா மிர்சா ஆகியோர் 2-ம் சுற்றுக்கு முன்னேறினர்.

இந்தியாவின் முன்னணி வீரரான லியாண்டர் பயஸ், இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் வெர்டாஸ்கோவுடன் இணைந்து களமிறங்கினார். இந்த ஜோடி, ஜெர்மனியின் புளோரியன் மேயர்-பிராங்ஸ் மோடர் ஜோடியை 6-2, 6-3 என்ற நேர்செட்களில் வென்றது. இந்த வெற்றியை பெறுவதற்கு பயஸ் ஜோடிக்கு 62 நிமிடங்களே தேவைப்பட்டது.

இரண்டாம் சுற்றில் அமெரிக்காவின் அதிவேக ஆட்டக்காரர்களான ஸ்டீவ் ஜான்சன்-சாம் கெர்ரி ஜோடியை எதிர்த்து பயஸ் ஜோடி விளையாட உள்ளது.

இதேபோல், மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், முதல் தரநிலை ஜோடியான சானியா-மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிஸ்) ஜோடி, அமெரிக்காவின் கெய்த்லின் கிறிஸ்டியன்-சப்ரினா சான்டமரியா ஜோடியை எதிர்கொண்டது. 56 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், சானியா-ஹிங்கிஸ் ஜோடி 6-1, 6-2 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாம் சுற்றில் இந்த ஜோடி, டிமியா(சுவிஸ்)-சியா ஜங் (தைபே) ஜோடியை எதிர்கொள்கிறது.



அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2015 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக