புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
53 Posts - 42%
heezulia
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
304 Posts - 50%
heezulia
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
21 Posts - 3%
prajai
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
3 Posts - 0%
Barushree
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 குழந்தை வளர்ப்பு Poll_c10 குழந்தை வளர்ப்பு Poll_m10 குழந்தை வளர்ப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 6:48 am


தந்தை-சிறந்த ஆசிரியர்

கல்விக் கூடங்களோ புத்தகங்களோ உங்களது மகனுக்குத் தேவையான அனைத்து வாழ்க்கைக் கல்வியைத் தரமுடியாது என்பதற்காகத்தான் இறைவன் தந்தையாகிய உங்களைப் படைத்துள்ளான். உங்களது மகனுக்கு நீங்கள் தந்தையாக இருப்பதற்காக பெருமிதம் கொள்ளுங்கள். பேரானந்தமடையுங்கள். அவனது வளர்ச்சிக்காக தினமும் ஒரு அரை மணி நேரம் ஒதுக்குங்கள். உரிய நாளில் உலகம் போற்றும் வகையில் உயர்ந்துவிடுவான்.

அவன் எப்படிப்பட்ட குணங்களில் சிறப்படைய வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அப்படியே நீங்கள் இருக்க முயலுங்கள். அதற்கான வழிவகைகளை கண்டறிந்து சொல்லுங்கள். உங்களைவிட சிறந்த வழிகாட்டி அவனுக்கு வேறு யாரும் இருக்க முடியாது. அவனுக்குச் சரியான வழி காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

உங்கள் குழந்தைக்கு வேண்டிய அனைத்துப் பயிற்சிகள் தரத்தான் உங்களை ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கின்றான். எனவே உங்கள் குழந்தைக்கு நல்ல பயிற்சி அளிக்க வேண்டியது உங்களின் மாபெரும் பொறுப்பு.




 குழந்தை வளர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 6:49 am

குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு

செய்யவேண்டியவை:

1. தினமும் குழந்தைக்கு மசாஜ் செய்யுங்கள். இது உடற்பயிற்சி செய்வது போன்ற பலனைத்தரும்.

2. ரசாயனம் கலக்காத அல்லது கிளிசரின் சோப்பால் குளிப்பாட்டுங்கள்.

3. குறைந்தது மூன்று மாதமாவது தாய்ப்பால் ஊட்டுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் முன் மார்பகக்காம்பை சுத்தம் செய்யுங்கள்.

4. குழந்தையை தினமும் கொஞ்ச நேரமாவது வெயிலில் வைத்திருங்கள். குழந்தைக்குத் தேவையான வைட்டமின்-டி கிடைக்கும்.

5. எப்போதும் குழந்தைக்கு காட்டன் துணிகளை அணிவியுங்கள். இது குழந்தையின் உடல் நலனுக்குப்பாதுகாப்பானது.

6. பால் கொடுக்கும் முன்பும், கொடுத்த பின்பும் பால் புட்டியை வெந்நீரில் கழுவுங்கள்.

7. உடல் நலக்கோளாறு இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.

செய்யக்கூடாதவை :

1. குழந்தை அழும்போதெல்லாம் பால்கொடுக்காதீர்கள். பசியை தவிர வேறேதேனும் காரணத்திற்காகவும் குழந்தை அழக்கூடும்.

2. தேவையில்லாமல் கண்ட மருந்துகளை கொடுக்காதீர்கள்.

3. உச்சி வெயிலோ, வெப்பக்காற்றோ குழந்தையின் தோலை உறுத்துவதோடு, தோல் அழற்சியையும் ஏற்படுத்தும்.

4. நைலான் இழைகளால் ஆன உடையை குழந்தைகளுக்கு அணிவிக்காதீர்கள்.

5. நீங்களாகவே குழந்தைக்கு சொந்தமாக மருந்து கொடுக்காதீர்கள்.

6. குழந்தைக்கு உடல் நலன் சரியில்லாவிட்டால் மருத்துவரிடம் செல்ல தாமதிக்காதீர்கள். ஏற்கனவே பயன்படுத்தி சில நாட்களான மருந்துகளை குழந்தைக்கு கொடுக்காதீர்கள்.

7. எப்போதும் குழந்தையை இடுப்பிலேயே வைத்திருக்காதீர்கள். இது குழந்தையின் உடல் நலனை பாதிக்கும்.

8. வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், வலிப்பு போன்ற ஏதேனும் வர நேர்ந்தால் அவற்றைக் குறித்து அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்.



 குழந்தை வளர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 6:50 am

குடும்பம் - பல்கலைக்கழகம்

"தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தியிருப்பச் செயல்".

இப்படித் தன் மகன் அனைத்துத் துறையிலும் சிறந்தவனாக வாகை சூடி அவனி போற்றும் வகையில் பவனி வர வேண்டும் என்று ஆசைப்படும் தந்தையர்கள் வெறுமனே ஆசைப்படுவதோடு விட்டுவிடாமல் ஆக்கப் பூர்வமான செயலில் இறங்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் குடும்பம் "நல்லதொரு பல்கலைக்கழகமாக" அமையும். குழந்தைகள் நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது என்பதையெல்லாம் தெரியாத நிலையில்தான் இந்த உலகிற்கு வருகின்றனர்.பெற்றோர்கள் தான் அவர்களுக்கு அனைத்தையும் கற்றுத் தரும் நிலையில் இருக்கின்றார்கள். உங்களது பிள்ளை உங்களது சொத்தோ கடனோ-எதுவாயினும் 70% உங்களையே நம்பியுள்ளார்கள்! 30 அதிர்ஷ்டத்தையும் சூழ்நிலையையும் நம்பியுள்ளனர்.



 குழந்தை வளர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 6:50 am

தாய்ப்பாலின் நன்மைகள்

தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு ஒரு முழுமையான ஊட்ட உணவு.

நோயுற்ற குழந்தைக்கு தாய்ப்பாலும், தாயின் அரவணைப்பும் இதமளிக்கின்றன. குழந்தையின் மன வளர்ச்சிக்கு அது உதவுகிறது.

தாய்ப்பாலூட்டுவது தாய்க்கும் பல நண்மைகளை அளிக்கும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பாலூட்ட ஆரம்பிப்பதால், கருப்பை விரைவில் சுருங்கி உதிரப் போக்கு குறையும். அதனால், தாயின் இரத்தம் வீணாகாமல், சோகை ஏற்படாமல் தடுக்கப்படும். தாய்ப்பாலூட்டும் தாய் தேவையற்ற தன் உடல் எடையைக் குறைத்து மீண்டும் பழைய வடிவைப் பெற முடியும். முதல் 4-6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே அளிக்கும் தாய்மார்கள் உடனே கர்ப்பம் ஆவதில்லை. இத்தகைய தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதும் குறைவு.

புட்டிப்பால்

அலுவலகப் பணியை முன்னிட்டு வெளியில் போகிற தாயும், தன் குழந்தைக்குப் போதிய பாலை சுரக்க முடியாத தாயும் குழந்தைகளுக்காக சிபாரிசு செய்யப்படும் பவுடரை, வெந்நீரில் கரைத்து புட்டியில் அடைத்துக் கொடுக்கலாம். தயாரிப்பாளர் குறித்திருக்கும் அளவில் கரைத்து பாலைத் தயாராக்க வேண்டும்.

தாய்ப்பால் போதவில்லை. (குழந்தை பிறந்த நான்கைந்து மாதங்களில்) என்கிற நிலை வரும்போது பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம். பாலுடன் ஒரு மடங்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைத்து ஆறவிடவேண்டும். மேலே படர்ந்து இருக்கும் பாலாடையை நீக்கிவிட்டு, புட்டியில் பாலை ஊற்றிக் கொடுக்கலாம்.

பாட்டிலில் பால் புகட்டும்போது கவனிக்க வேண்டியவை -

பால் புகட்டும் புட்டி, மூடி, ரப்பர் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறையாவது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சுத்தம் செய்ய வேண்டும். ரப்பரில் போடப்படும் துளை (ஓட்டை) சிறியதாக இருந்தால் குழந்தை பால் உறிஞ்சிக் குடிக்க சிரமப்பட்டு விரைவிலேயே களைத்துவிடும். அதே சமயம் ஓட்டை பெரிதாக இருப்பின் குழந்தைக்கு புரையேற வாய்ப்பு உண்டு. எனவே, ரப்பரில் இடப்படும் துளை சரியான அளவில் இருப்பது அவசியம்.

சில குழந்தைகள் கால வரையறைக்கு முன்னதாகப் (Premature) பிறந்துவிட்டிருக்கும். அத்தகைய குழந்தைகள் பலவீனமாக இருப்பதால் தாயின் மார்பகத்தில் இருந்து பாலை உறிஞ்ச இயலாது. சில நேரங்களில் தாயின் நோய்க் காரணங்கள் தாய்ப்பாலை பரிந்துரைக் வொட்டாமல் செய்துவிடும். அந்நிலையில் புட்டிப் பால்தான் கைகொடுக்கும்.

தாய்ப்பாலுக்கு நிகரானது பசுவின் பால். எருமை அல்லது ஜெர்ஸி பசுவின் பாலில் வெண்ணெய்ச் சத்து அதிகம் இருக்கும். அந்தப் பால் குழந்தையின் வயிற்றை கனக்கச் செய்துவிடும்.

முன்கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கும், பலவீனமான குழந்தைகளுக்கும் ஏடு நீக்கிய பாலைத்தான் தரவேண்டும்.

குழந்தைக்குப் பால் கொடுப்பது பற்றிய திட்டம் எல்லாக் குழந்தைக்கும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அது குழந்தையின் அளவு, எடை, விழிப்பு, ஆர்வம் இவற்றைப் பொறுத்தது. சாதாரணமாக நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை (விடியற்காலை இரண்டு மணி முதல் இரவு பத்து மணி வரை) பால் கொடுக்கலாம்.

பால் கொடுக்கிற புட்டி, ரப்பர், மூடி ஆகியவற்றை கொதித்த நீரில் கழுவி, நன்றாக உலரவைக்க வேண்டும்.

குழந்தைக்கு நான்கு, ஐந்து மாதங்கள் முடிந்தவுடன் பாலில் உள்ள சத்துக்கள் போதுமானதாக இருக்காது. அப்போது குழந்தைகளுக்கென்றே தயாரிக்கப்படுகிற ஃபாரெக்ஸ், ஸெரிலாக், நெஸ்டம் போன்றதை தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம்.



 குழந்தை வளர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 4:10 am

குழந்தை ஏன் அழுகிறது ?

நீங்கள் பார்த்து பார்த்து உபசாரம் செய்தாலும் குழந்தை வீலென்று அழவே செய்யும். அது எதற்காக அழுகிறது என்று உங்களுக்குக் காரணம் புரியாது. எரிச்சல்தான் வரும். சனியனே, எதுக்கு அழறே? என்று சத்தம் போடுவீர்கள். ஒன்றைப் புரிந்கொள்ளுங்கள். உங்கள் அதட்டலுக்கோ, சின்னதாய் நீங்கள் கொடுக்கிற அடி உதைக்கோ குழந்தை பயந்துவிடாது, உங்களுடைய கணவர் சொல்வார், அதுக்கு பசிக்கிறதோ, என்னவோ என்று.

குழந்தை பசித்தால் மட்டும் அழுவதில்லை. தனக்கு எந்த மாதிரி அசௌகரியம் ஏற்பட்டாலும் அது அழும். அழுகையில்தான் அது தனது அதிருப்தியை வெளிப்படுத்தும். ஹாலில் கேட்கிற சத்தம், கண்ணைக் கூசுகிற விளக்கு வெளிச்சம், சூழ்நிலை மாற்றம் இப்படி குழந்தை அழுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள்.

குழந்தை, பிறந்த சில வாரங்களுக்கு உங்களிடம் இருந்து பிரத்யேகக் கவனத்தை எதிர்பார்க்கும். உங்கள் அருகாமை அதற்குத் தேவைப்படும்போதெல்லாம் அழும். உங்களுடைய அரவணைப்பில்தான் பாதுகாப்பை அது உணர்கிறது.

நாளாவட்டத்தில் அழுகை குறையும். க்கா, ... ங்கா என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்.

குழந்தை பசியில் அழும். அழும்போதே காற்றை விழுங்கிவிடும். அதனால் வயிறு நிரம்பி, களைப்பில் தூங்கிவிடும். மீண்டும் விழிக்கும் போது பசி எடுத்து அழும்.

இதுக்கு எப்போ பசிக்கும்னே தெரியலை என்று முணுமுணுப்பீர்கள்.

ஒருமுறை பசியாறிய குழந்தை அடுத்து எவ்வளவு நேரம் கழித்து அழுகிறது என்பதைக் கவனியுங்கள். குழந்தை அழுது சோரும்படி விட்டால் என்னவாகும்? உங்களுக்கே தெரியும். உடனுக்குடன் அதன் தேவையை தீர்த்து வையுங்கள். பிறகு அது அடிக்கடி அழாது.

குழந்தை மலம் கழிக்க அழும். தான் ஈரப்படுத்திய துணியை மீண்டும் ஈரப்படுத்த விரும்பாமல் அழும். அவ்வப்போது புதிதாய் துணி மாற்ற வேண்டும்.

அறையின் வெப்பம் அல்லது குளிர் தாங்காமலும் குழந்தை அழும். அதேபோல் உடம்பின் சூடு அல்லது சில்லிப்பும், வயிறு முட்ட பால் குடித்திருந்தால் உடம்பு சீக்கிரமே சூடாகிவிடும். வெறும் வயிற்றோடு கிடந்தால் உடம்பு வெடவெடக்கும். குழந்தை உருண்டு, புரண்டு, தவழ்ந்து சுறுசுறுப்பாக செயல்படும்போதும் உடம்பு சூடாகும். குழந்தையின் கழுத்து அல்லது முதுகைத் தொட்டுப் பார்த்தால் தெரியும். அதன் கால், கைகளை தொட்டுப் பார்க்க வேண்டாம். அவை எப்போதுமே சில்லென்றுதான் இருக்கும்.

குழந்தையை நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் கொஞ்ச நேரம் இடுப்பில் அல்லது மடியில் விட்டு வையுங்கள். உடனே, தொட்டிலில் போடுவதை அது விரும்புவதில்லை.

வளர்ந்த குழந்தைகள் படுக்கை நேரத்தில் அழுவதற்குப் பல காரணங்கள் உண்டு. தூங்கிய பின் விழித்தெழுவதே அதற்கு விநோதமான விஷயம். அது புதுப்புது இயக்கங்களில் திருப்தி அடைகிறது. (உ - ம் நிற்பது, நடப்பது, பொருள்களைக் கையில் பற்றுவது).

அடுத்தவர்களுடன் கலந்து பழகும் போது அது பேசும், சிரிக்கும்.

குழந்தைக்கு உறங்கும்போது இதமான வெளிச்சம் வேண்டி இருக்கும். கதவை மூடி வைப்பது கட்டோடு பிடிக்காது. தனித்து இருப்பதும் ஆகாது. இனம் தெரியாத பயம் வந்துவிடும்.

பல் முளைக்கும்போது ஈறுகளில் நமைச்சல் இருக்கும். லேசான வலி தெரியும். அதனை அழுகையில் வெளிப்படுத்தும். படுக்கை நேரத்தில்தான் அது அந்த உபாதையை உணர்கிறது.

குழந்தையை விளையாடும்படி நீங்கள் தூண்ட வேண்டியதில்லை. அதற்கேற்ற அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தால் போதும், தன்பாட்டுக்கு விளையாடி மகிழும்.

நீங்கள் குழந்தையோடு விளையாட விரும்பும் நேரத்தில் அது அழுதுவைக்கும். உங்களுக்கோ எரிச்சல் பற்றிக் கொண்டு வரும். உண்மையில் குழந்தைக்கு உறக்கம் தேவைப்படும் நேரமாக அது இருக்கலாம்.

ஆறுமாத வளர்ச்சிக்குப் பிறகு அது மனிதர்களை அடையாளம் கண்டுகொள்கிறது. தனக்குப் பிடித்த முகங்களைக் கண்டால் மகிழ்வை வெளிப்படுத்தும். தூக்கத்தில் இருந்து விழிக்கும்போது அந்நிய முகம் தன்னை நோக்கி குனிந்தால் அழுது வைக்கும்.

தனிமையில் தூங்குவதைவிட, உங்கள் தாலாட்டை கேட்டபடி அல்லது உங்கள் தோளில் சாய்ந்தபடி உறங்குவது குழந்தைக்குப் பிடிக்கும். அதற்குத்தான் கண்ணும், காதும் நன்கு செயல்பட ஆரம்பித்து விட்டதே.

களைத்துப் போகும் குழந்தை அழும். சோர்ந்த நிலையில் அது பொறுமை இழந்துவிடுவதே காரணம். ஏதாவது சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலோ, அது நினைத்த விதத்தில் பொம்மைகள் இயங்காவிடிலோ அதற்குக் கோபம் வந்துவிடும். தனது கையில் இருக்கிற பொம்மை அல்லது பொருளை நீங்கள் விளையாட்டாகப் பிடுங்கினாலும் அழும்.

நீங்கள் எத்தனைக்கெத்தனை பரிவு காட்டி அதன் தேவைகளைத் தீர்த்து வைக்க உடனுக்குடன் அணுகுகிறீர்களோ, அத்தனைக்கு அதன் அழுகை குறையும். திருப்தி அடையும். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அழுவதைவிட சிரிப்பதே ஆரோக்கியமான காரியம் என்று குழந்தைக்குப் புரியும்போது உங்கள் பிரச்சினைகள் இலேசாகிவிடும்.



 குழந்தை வளர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 4:11 am

தலைமை ஏற்கும் தனித்திறமை

சிலர் மட்டும் முன்னால் நடக்கிறார்கள். அவர்களின் பின்னே அநேகம் பேர். தலைமை ஏற்பவர்களுக்கு, மற்றவர்களை தனது பின்னாக வரச் செய்யும் சக்தி எப்படி அமைந்தது? எப்போதாவது நீங்கள் எண்ணிப் பார்த்தது உண்டா? உலகில் எல்லாமே தற்செயலாக நடந்து விடுவதில்லை. தகுதியற்ற ஒருவர் தலைவராவது விபத்து மாதிரி. அவரால் நீடிக்க முடியாது. வரலாற்றில் நிலையான இடம் பெற்றவர்கள் எல்லாம் படிப்படியாக உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். அவர்கள் பட்ட சிரமங்களுக்கு அளவே இருக்காது.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். யாரும் பிறவியிலேயே தலைவராகிவிடவில்லை. அவர்கள் உருவாகிறார்கள், உருவாக்கப்படுகிறார்கள். சிறு வயதிலேயே தலைமைக்குரிய மனோபாவத்தை பெற்றோர் அவர்களுக்குள் வளர்த்து விட்டிருப்பார்கள். ஒரு நிறுவனத் தலைவர், விளையாட்டுக் குழுவின் கேப்டன், ஆராய்ச்சித் துறை முதல்வர் என்று அவரவரின் பின்னணியை ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.

அதென்ன தலைமைக்குரிய மனோபாவம்? கேட்பீர்கள். மனதிடமும், சுயேச்சையான சிந்தனையும்தான் தலைமைக்குரிய திறமை. அது உள்ள குழந்தையை நீங்கள் அடையாளம் காண முடியும். அது தன் வயது ஒத்த குழந்தைகளின் பேச்சுக்கு இணங்கிப் போகாது. தான் நம்புகிறதையே அது பின்பற்றும். மற்ற குழந்தைகளையும் தன்னைப் பின்பற்றுமாறு செய்யும்.

இன்று விதைப்பது, இன்னொரு நாளில்தான் பலன் கொடுக்கும். தலைமை தாங்குகிற மனோபாவமும் அப்படித்தான். குழந்தைப் பருவத்தில் வகுப்புத் தலைமை மாணாக்கனாக இருப்பது, விளையாட்டு, மாணவர் மன்றம் போன்ற இதர நடவடிக்கைகளில் ஈடுபடுவது இவையெல்லாம் பின்னாள் உயர்வுக்கு இந்நாளில் போடப்படும் அடித்தளமாகும். தலைமைக்குரிய தகுதியை, தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் நிரூபிப்பதில்லை.

நான்கு, ஐந்து வயதிலேயே எதிர்காலத் தலைவனை நீங்கள் இனம்கண்டு கொள்ள முடியும். அந்தக் குழந்தை பெரியவர்களை மட்டுமின்றி தன் வயதொத்தவர்களையும் மரியாதையாக நடத்தும். அதனுடைய பேச்சிலும், செயலிலும் தன்னம்பிக்கை மிளிரும். நகைச்சுவை உணர்வு கொண்டிருக்கும். தன்னுடைய விளையாட்டு கருவிகளை மற்ற குழந்தைகளுடன் மனமுவந்து பகிர்ந்துகொள்ளும். எதையும் அறிந்து கொள்கிற ஆவலை, எதையும் துணிச்சலுடன் தொடங்குகிற போக்கை வெளிப்படுத்தும்.

டீன்ஏஜ் பிள்ளைகளிடையே அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? அவர்கள் எப்போதும் புன்முறுவலுடன் காணப்படுவார்கள். தங்களை நல்லவிதமாக உணர்வார்கள். மற்றவர்களையும் அப்படியே உணரச் செய்வார்கள்.



 குழந்தை வளர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 4:12 am

கூச்சப்படும் குழந்தைகள்

கூச்ச சுபாவம் ஒரு தடை. ஆணோ, பெண்ணோ கூச்ச சுபாவத்தின் காரணமாக வாழ்க்கையில் பெருத்த முன்னேற்றத்தை அடைய முடியாதவர்களாகி விடுகிறார்கள்.

கூச்சம் உள்ள குழந்தையை எப்படி அடையாளம் காண்பது? தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும். எந்தப் பொழுதுபோக்கிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும். வளரும் பருவத்திற்கேற்ற கொடுத்து வாங்கும் பழக்கம் இருக்காது. வளரும் பருவத்தில் சமூகத்துடன் கலந்து பழகாமல் ஒதுங்கியே இருந்துவிடும். கூச்ச சுபாவம் உள்ளவர் (ஆணாயினும், பெண்ணாயினும்) ஒன்று தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ மணம் செய்துகொள்கிறார். அரிதாக சிலர் திருமணமே வேண்டாம் என்று இருந்துவிடுவது உண்டு.

சிலர் வேலை தேடும்போது பொறுப்பு அதிகம் இல்லாத வேலையாக தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். சிலர், தங்களுடைய மனக்குறையை போதை மருந்துகளில் மறக்கப் பார்ப்பார்கள்.

குழந்தையின் கூச்ச சுபாவத்தை அகற்ற மனவியல் நிபுணரின் ஆலோசனையும், பெற்றோரின் பரிவும் தேவைப்படும்.

பத்துக் குழந்தைகளில் நான்கு பேர் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். நம்முடைய கண்ணுக்கு ஒன்றிரண்டு பேர்தான் அப்படி தெரிவார்கள். மனவியல் நிபுணர் மேலும் இருவர் அல்லது மூவரை அடையாளம் காண்பார். பிலிப் ஜிம்பார்டோ, மனவியல் நூல்கள் எழுதிப் புகழ் பெற்றவர். Shyness : What it is, what to do about it, என்ற தனது நூலில் குழந்தைகளின் வயதுக்கேற்ப கூச்சத்தின் அளவு வேறுபடும், எட்டாம் வகுப்புப் பையன்களில் அரைவாசி பேரும், பெண்களில் அறுபது சதவிகிதத்தினரும் கூச்சம் நிரம்பியவர்கள், என்று குறிப்பிடுகிறார்.

பெரும்பாலும் ஆசிரியர்களும் சரி, பெற்றோரும் சரி குழந்தைகளின் சுபாவத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஒரு குழந்தை வகுப்பு விவாதங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதையும், இன்னொரு குழந்தை விளையாட்டு மைதானத்தில் ஒதுங்பியே நிற்பதையும் அவர்கள் காணத் தவறிவிடுகிறார்கள். சிரித்துக் கைதட்ட வேண்டிய சந்தர்ப்பங்களில் கூச்ச சுபாவம் கைதட்ட வேண்டிய சந்தர்ப்பங்களில் கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் சிரிப்பது போலவும், கை தட்டுவது போலவும் பாவனைதான் செய்யும். சில குழந்தைகள் தங்களுடைய கூச்ச சுபாவத்தை மறைக்கிற முயற்சியாய் உரக்கப் பேசும், மற்ற குழந்தைகளை சீண்டிப் பார்க்கும். வளர்ந்த நிலையில் அசட்டுத் துணிச்சலுடன் தத்துப்பித்தென்று எதையாவது செய்து வைக்கும்.

என் பிள்ளைக்கு அதெல்லாம் பிடிக்காது. அங்கெல்லாம் போகமாட்டான் என்று பெருமைப்பட்டுக் கொள்கிற விதமாய் தங்கள் குழந்தைகளைப் பற்றி பேசுகிற தாய்மார்கள் உண்டு. அவர்களுடைய பேச்சு தெரிந்தோ, தெரியாமலோ அந்தக் குழந்தைகளின் கூச்சத்தை மேலும் அதிகப்படுத்திவிடும். நான் குறைபாடுள்ளவன் என்று தன்னைப்பற்றி குழந்தை முடிவு கட்டிக்கொள்ளும்.

நீ அசாத்திய குண்டு! இந்த ட்ரஸ் உனக்குப் பொருந்தாதுடி என்று அம்மாக்காரியே சொல்லிவிட்டால் குழந்தையின் மனநிலை கண்டிப்பாக பாதிக்கப்படும். பத்து பேர் நடுவே இருந்தாலும் தான் மட்டும் தனித்து விடப்பட்ட உணர்வையே அது அடையும்.

கூச்சமான குழந்தைகளை மற்றவர்கள் விமர்சிக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் எப்போதுமே சுய விமர்சனம் செய்து கொள்கிறார்கள். அது அவர்களை மேலும் மோசமாக்கிவிடுகிறது என்பது உண்மை.

உங்களுடைய இரண்டு மூன்று குழந்தைகளில் ஒன்று கூச்சத்துடன் அதிகம் பேசாமல் இருக்கலாம். ஆமா, அந்த உம்மணாம் மூஞ்சியிடம் கேட்டு என்ன ஆகப்போகிறது, என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள். இதில் உன்னோட கருத்து என்ன, இதற்கு என்ன செய்யலாம்? என்று எல்லாவற்றிலும் அந்தக் குழந்தையின் கருத்தைக் கேளுங்கள். நிறைய பேசும்படி தூண்டுங்கள்.

நம் அண்ணனுக்கோ, அக்காவுக்கோ நாம் எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை என்ற உணர்வை அது பெறும். பேச்சில் முழு ஈடுபாடு கொள்ளும். கூச்சத்தை விடும். தன்னம்பிக்கையோடு செயல்படும்.

பொதுவாகவே, கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகள் மோசமான சுயமதிப்பீடு (Self Valuation) கொண்டிருக்கும். தன்னை யாராவது தாங்கி நிறுத்தமாட்டார்களா என்று எதிர்பார்க்கும்.

குழந்தையின் கூச்சம் வெளிப்படுகிற இடம் அதன் வகுப்பறைதான். அங்கேதான் அந்தக் குறை திருத்தப்பட வேண்டியதும், ஆசிரியர்களின் கவனம் பெரும்பாலும் குறும்புக்கார பிள்ளைகள் செய்யும் விஷமங்களைக் கண்டு பிடிப்பதிலேயே இருக்கும் அல்லது புத்திசாலிப் பையனை மேலும் புத்திசாலி ஆக்குவதில் இருக்கும். கூட்டுப்புழுவான உங்கள் குழந்தையை வெளியே கொண்டுவருவதில் ஆசிரியரின் உதவியை வேண்டிப் பெறுங்கள்.

குழந்தையின் கூச்சத்தை எப்படிப் போக்குவது? அது ஆசிரியருக்குத் தெரியும். உங்கள் பையனுக்கு எந்தப் பாடத்தில் ஆர்வம் அதிகம் என்பதை அவர் கண்டறிவார். அவனுக்கு கணிதம் விருப்பமானது என்று வைத்துக் கொள்வோம். வா, இந்தக் கணக்கை எப்படி செய்வது என்று பிளாக் போர்டில் நீயே போட்டுக் காண்பி. உன் ஃப்ரண்ட்ஸ் புரிஞ்சிக்கட்டும், என்பார் ஆசிரியர். பையன் தயக்கத்தை விடுத்து கரும் பலகையில் கணக்கைப் போடுவான். ஆசிரியர் ஊக்குவித்தால், அதை உற்சாகத்துடன் சக மாணவர்களுக்கு விளக்கவும் முற்படுவான்.

கூச்சமுள்ள குழந்தைக்கு, கடைக்குப் போய் வா, போனை அட்டண்ட் பண்ணு என்று சின்னச் சின்னதாய் வேலை கொடுக்க வேண்டும்.

வளர்ந்த குழந்தையின் கூச்ச சுபாவத்தைப் போக்க தன்னைவிட சிறு பையன்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம். தன் வயதொத்தவர்களுடன் இணைந்து பழக யூத் க்ளப் (youth club) எதிலாவது உறுப்பினராக்கிவிடலாம். மேடையேறி சின்னச் சின்ன நாடகங்களில் நடிக்கும்படி தூண்டலாம். பள்ளிக் கூடங்களுக்கிடையே நடத்தப் பெறும் பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்தலாம்.

உங்கள் குழந்தை வாழ்க்கையில் முழுமையை உணர்ந்து மகிழ்ச்சியோடு அனுபவிக்க நீங்கள்தான் உதவ வேண்டும். அவர்களுக்காக முயல்வது உங்கள் கடமை. எந்த முயற்சியும் ஒரே நாளில் பலனைக் கொடுத்து விடாது. பொறுமையோடு உழையுங்கள், பிரமிக்கத்தக்க ரிஸல்ட் கிடைக்கும். எத்தனையோ குழந்தைகள் வளரும் பருவத்தில் கூச்சத்தை உதறிவிட்டிருக்கிறார்கள். உங்கள் குழந்தையாலும் அது முடியும்.



 குழந்தை வளர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 4:13 am

குழந்தைகளின் மனநிலை

சார் நல்ல மூட்ல (Mood) இருக்காரா காரியம் சாதித்துக் கொள்ள வந்தவர் கேட்பார்.

உங்க ஃபைல்ல இப்போ கை எழுத்து போடற மூடில் அவர் இல்லை உயர் அதிகாரி பற்றி கடைநிலை ஊழியர் சொல்வார்.

ப்சு .. படிக்கிற மூடே இல்லை புத்தகத்தை வீசி எறிந்துவிட்டு வெளியில் புறப்படுவான் கல்லூரி மாணவன்.

ம் ... கல்யாணத்தைப் பத்தி பேசலாம்னு பார்த்தா அவன் மூடில் இருந்தால்தானே அம்மாக்காரி முணகுவாள்.

இவர்கள் குறிப்பிடுகிற அந்த மூட் மனநிலையன்றி வேறில்லை. மனநிலை சரியாக இருந்தால்தான் காரியம் பண்ண, படிக்க, பேச முடியும். இந்த மனநிலை முக்கியத்துவம் பெரியவர்களுக்கு மட்டும்தானா? குழந்தைகளுக்குக் கிடையாதா? உண்டு.

குழந்தை என்றால் களிமண் அல்ல, நீங்கள் விரும்பிய விதத்தில் வடிவமைத்துக் கொள்வதற்கு. நம் குழந்தைதானே நாம் சொன்னதைக் கேட்கும். நாம் விரும்பிய விதத்தில் வளர்ப்போம் என்று எண்ணிவிடக் கூடாது. குழந்தைகளுக்கும் மனம் உண்டு. பெரியவர்களைப் போல் அவர்களுக்கும் மனநிலை அவ்வப்போது மாறும். தங்களை சரியான விதத்தில் நடத்த வேண்டும் என்று ஓர் எதிர்பார்ப்பு அவர்களுக்குள் இருக்கும். அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

பொதுவாக, குழந்தை எப்படி என்பது அதன் பெற்றோருக்குத் தெரிந்திருக்கும். தங்கள் உள்ளுணர்வு மூலமும், குழந்தையிடம் நெருக்கம் இருப்பதாலும் அறிந்துகொள்ள முடியும். குழந்தையின் மனநிலையை சரியாகத் தீர்மானிக்கக் கூடியவள் தாய்தான்.

குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும்போது அதை அப்படியே விட்டுவைக்க வேண்டும். உதாரணமாக தனக்குப் பிடித்தமான பொம்மையை வைத்து அது விளையாடிக் கொண்டு இருக்கும்போது வா, குளிக்க என்று இழுக்கக் கூடாது.

குளியலில் விருப்பம் உள்ள குழந்தைகூட அப்போது முரண்டு பண்ணும். குழந்தைக்கு அந்த பொம்மையிடம் சலிப்பு ஏற்பட்டு விளையாட்டை நிறுத்திய பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதன் மனநிலையை பாத்ரூம் பக்கம் திருப்ப வேண்டும்.

குளிக்கும்போது தண்ணீரை வாரி இறைத்து விளையாடினால் தடுக்காதீர்கள். எதையும் அனுபவித்து மகிழும் மனநிலை குழந்தையுடையது.

குழந்தை தனது மனோபாவத்தை சட்டென்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். எதற்கும் கட்டாயப்படுத்தாதீர்கள். சுபாவத்தில் பெரியவர்களைப் போல் அத்தனை திடமனம் கிடையாது குழந்தைகளுக்கு. அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் எரிச்சலூட்டுகிற, மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருந்து சீக்கிரமே விடுபடுவார்கள். குழந்தை, பெரியவர்கள் மாதிரி கடுமையான அளவு சோர்ந்து விடுவதில்லை.

குழந்தை வழக்கத்தைவிட நீண்ட நேரம் ஒரே மனநிலையில் இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் அதன் மனதை வேறு வழியில் திருப்ப முயலலாம். ஒரு பூங்காவிற்கு அழைத்துப் போகலாம் அல்லது அதற்கு விருப்பமான கதை சொல்லலாம்.

குழந்தை தனது நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று நாம் கால அட்டவணை போடுவதற்கில்லை. நீங்கள் சோறூட்ட விரும்பும்போது குழந்தைக்கு பசி எடுக்க வேண்டும் என்றோ, அதைத் தூங்க வைக்க நீங்கள் விரும்புகிறபோது அதற்கு தூக்கம் வரவேண்டும் என்றோ எதிர்பார்க்கக் கூடாது.

குழந்தையின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். அது விரும்பியபோது தூங்கும். சில நாள்கள் தொடர்ந்து மதியம் ஒரு மணிவாக்கில் தூங்குகிற குழந்தை, ஒருநாள் அந்த நேரத்தில் விளையாடும். நீங்கள் நினைக்காத கணத்தில் சிரித்து வைக்கும். சில நேரங்களில் குழந்தையை சிரிக்க வைக்கிற உங்கள் முயற்சி கொஞ்சமும் எடுபடாது. 1-4 வயதுக் கட்டத்தில் உள்ள குழந்தைகளின் மனநிலை அப்படித்தான்.

5 - 12 வயதுப் பிள்ளைகளுக்கு படிப்பைவிட விளையாட்டு முக்கியமாகப்படும். காரணம், அவர்கள் நாளின் பெரும்பகுதியை வகுப்பறையில் கழிக்கிறார்கள். வெளியில் வந்ததும், அப்பாடா என்றாகிவிடுகிறது. விளையாட்டில்தான் அவர்களுடைய மனநிலை சீரடைகிறது.

குழந்தைகள் நீண்ட நேரம் படிக்க வேண்டி இருக்கிறது. அந்த அளவுக்குப் புத்தகங்கள், அதன் விளைவாக அவர்களுடைய மனநிலை பாதிக்கப்படுகிறது. சாந்தத்திற்கு பதில் எரிச்சலும், சந்தோஷதூதிற்கு பதில் வருத்தமும் கொண்டு வடிகிறார்கள்.

ஸ்கூல் விட்டு வந்ததுமே குழந்தையை ஹோம் ஒர்க் பண்ணு. ட்யூஷனுக்கு புறப்படு என்று அதட்டி மிரட்டும் அம்மாக்களைப் பார்க்கிறோம். ஐந்து மணியில் இருந்து ஏழு மணி வரை குழந்தை அவ்விதம் முடக்கிப் போடப்படுவதால், அது விளையாட வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. அந்நிலையில் குழந்தை நீங்கள் விரும்பிய விதத்தில் இயங்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? கொஞ்ச நேரமாவது தோட்டத்தில் சுற்றித்திரியவோ, விளையாடவோ அனுமதிக்க வேண்டும். அதன் பிறகுதான் ஹோம் ஒர்க்கிற்கோ, ட்யூஷனுக்கோ அதனுடைய மனநிலை ஒத்துப்போகும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதாவது ஒரு பொழுதுபோக்கு இருக்கும். அது தன்னுடைய திறமையை எந்தத் துறையில் வெளிப்படுத்த விரும்புகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். குழந்தையின் திறனை மேம்படுத்துவது பெற்றோர் பொறுப்பு. ஒரு குறிப்பிட்ட பொழுதுபோக்கில் குழந்தைக்கு ஆர்வம் இருக்கலாம். அதில் ஈடுபட்டிருக்கும்போது எந்தக் குறுக்கீட்டையும் அது விரும்பாது. உதாரணமாக, உங்கள் குழந்தை ஓவியம் வரைவதில் முனைப்பாயிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இடையில் நீங்கள் புகுந்து, படிச்சு உருப்பட்டாய்பலதான் என்று ப்ரஷ்ஷை பிடுங்கிப்போட்டால் அதற்கு எப்படி இருக்கும்? படிப்பைவிட எதுவுமே முக்கியம் இல்லை என்று குழந்தைக்கு உணர்த்துவது உங்கள் நோக்கமாக இருக்கும். குழந்தையின் ஓவியத் திறனோ முளையிலேயே கருகிப்போகும்.

படிப்பைப் போலவே கலைகளிலும், விளையாட்டிலும் குழந்தையை ஊக்குவியுங்கள். அதற்காக, உங்களுக்கு விருப்பமான நடனத்தை, உங்கள் பெண்ணும் விரும்பவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவளுக்கு பாட்டு பிடித்தமானதாயிருக்கலாம்.

வீட்டில் அன்பும், பரிவும் கிடைத்தால் குழந்தைகள் ஏன் மோசமான மனநிலைக்கு தள்ளப்படுகிறது? எண்ணிப் பாருங்கள். அவர்களுடைய மனநிலையை நல்லவிதமாகப் பராமரிப்பது உங்கள் பொறுப்பு.



 குழந்தை வளர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 4:13 am

பெற்றோரின் மனப்பக்குவம்

உன்னுடைய உடைகளை நீதான் துவைத்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது உன் பொறுப்பு என்று குழந்தையை வேலைகளுக்குப் பழக்குவதில் தவறில்லை. ஆனால், சில பெற்றோர் ஒட்டுமொத்த வேலையையும் குழந்தைகள் தலையில் சுமத்திவிட்டு தாங்கள் ஹாய்யாக சுற்றக் கிளம்பி விடுவார்கள். பிள்ளைகளுக்குப் பொறுப்பை உணர்த்துகிற பாவனையில் தாங்கள் பொறுப்பற்றவராகும் நிலைதான் அது.

தங்கள் வயதுக்கு மீறிய காரியங்களைச் செய்யக் கற்றுக்கொண்ட குழந்தைகள் வயது வந்தவர்களைப் போல் நடந்து கொள்ளவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். பெற்றோரின் அன்பும், பரிவும் கிடைக்காத நிலையில் அவர்களின் புகலிடம் போதை மருந்துகள்தாம். அதற்குப் பணம் தேவை. நிறையப்பணம் தேவைப்படும் போது அவர்கள் பொய் சொல்லவோ, தங்கள் வீட்டிலேயே திருடவோ தயங்குவதில்லை.

குழந்தைக்குத் தேவை மகிழ்ச்சியும், பத்திரத்தன்மையும் உள்ள வீடு. பெற்றோர், நாயும், பூனையுமாய் சண்டையிட்டுக் கொண்டு வீட்டை நரகமாக்குவதை எந்தக் குழந்தையாலும் சகித்துக் கொள்ள முடியாது. தன்னால் சகித்துக் கொள்ள முடியாத கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறவும் செய்யும்.

பத்து வயது மகனையும், எட்டு வயது மகளையும் பற்றிக் கவலைப்படாமல் விவாகரத்துக்குத் தயாராகும் தம்பதிகளும் உண்டு. அவர்களால், குழந்தைகளின் வண்ணக் கனவுகள் சின்னாபின்னமாகி விடுகின்றன. அவர்கள், தங்களின் நலனில் அக்கறை காட்டாத பெற்றோரை வெறுக்கவே செய்வார்கள்.

மூன்று பெண் குழந்தைகளை அடுத்தடுத்துப் பெற்ற தாய்க்கு, நான்காவதாகப் பிறந்த ஆண் குழந்தையிடம் அளவற்ற பிரியம் இருக்கும். தவமிருந்து பெற்ற பிள்ளை மீது யார் கண்ணாவது பட்டுவிடுமோ என்று அஞ்சுவாள், பிள்ளையை வெளியில் விளையாடப் போகவும், அனுமதிக்கமாட்டாள். கறிவேப்பிலைக் கொத்து மாதிரி ஒரு பிள்ளை. காற்றுக் கறுப்பு பட்டுவிடுமோ என்று கலங்குவாள்.

சத்தான உணவு வகைகளை சளைக்காமல் ஊட்டி விடுவாள். பையன் கொழுகொழுவென்றாகி மந்த கதியை அடைவான். காலையும், மாலையும் ட்யூஷன், ஒவ்வொரு சப்ஜக்டிற்கும் தனித்தனி டியூஷன். அத்தனைக்குப் பிறகும் பையன் ஆவரேஜ் என்ற நிலைதான்.

மனப்பக்குவம் இல்லாத பெற்றோரால், பிள்ளைகள் குட்டிச்சுவராவதற்கு இதுபோல் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். பெற்றோர், செல்லம் கொடுப்பதை சில பிள்ளைகளால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிகிறது. சில குழந்தைகள் மனம் சுளிக்கும். தம்மை வளர்ந்த பிள்ளைகளாக நடத்த வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம்.

சில பெற்றோரின் விபரீதமான நடத்தைகளும் குழந்தைகளைப் பாதிப்பதாகிவிடும்.

உணர்வுபூர்வமாக வளர்ச்சியுறாத பெற்றோர் குழந்தை வளர்க்கும் பொறுப்பை தங்கள் தோள்களில் சுமக்க விரும்புவதில்லை. குழந்தையை ஆளாக்கவும். படிக்க வைக்கவும் பணம் கொடுப்பது மட்டும் தனது கடமை என்று தந்தை நினைப்பார். குழந்தைக்கு சமைத்துப் போடுவதோடு தன் வேலை முடிந்துவிட்டதாக தாய் கருதிக் கொள்வாள். இத்தகைய பெற்றோர், தங்கள் குழந்தையிடம் இரக்கமற்ற மனோபாவத்தையே கடைப்பிடிப்பார்கள். இவர்கள் எப்படி உணர்வுபூர்வமான பாதுகாப்பை தங்கள் குழந்தைகளுக்கு வழங்க முடியும். உண்மையில் அவர்களுக்கே அல்லவா அப்படி ஒரு பாதுகாப்பு தேவைப்படுகிறது.

குருவி தலையில் பனங்காயாக கூடுதல் பொறுப்புகளை சுமக்க நேரும் குழந்தைகள், குழந்தைப் பருவ உல்லாசத்தை இழந்துவிடுகிறார்கள், சுயநலத்தோடும், பரபரப்போடும் இயங்க முற்படுகிறார்கள். தங்கள் பெற்றோர் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டு விடுகிறார்கள்.

பிள்ளை மீது கவனம் வைக்காத பெற்றோரைவிட கூடுதல் கவனம் வைக்கிற பெற்றோர்தாம் பிள்ளைக்கு அதிகக் கெடுதல் ஏற்படக் காரணம் ஆகின்றனர். அவர்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியம், உணவுப் பழக்கம், வளர்ச்சி, கல்வி மற்றும் அற்ப காரணங்களுக்கும் அநாவசியமாய் கவலைப்படுகிறார்கள்.

குழந்தையின் காரிய முனைப்பு, தன்னம்பிக்கை, சுய ஆற்றல், ஆர்வம் கெட அவர்களே காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

கூடுதல் கவனம் வைக்கிற பெற்றோரின் பிள்ளைகள், நல்ல விதமாக நடப்பது எப்படி என்றே அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஓர் இக்கட்டான நிலைமை ஏற்படும்போது அதை எப்படி சமாளிப்பது என்றும் அவர்களுக்குத் தெரிவதில்லை.

அதீத அக்கறை செலுத்தி வளர்க்கப்படும் பிள்ளைகள், தேக வலிமையற்றவர்களாகவும், பயங்காளிகளாகவும் இருப்பார்கள். வாழ்க்கை முழுவதும் பிறரை அண்டிப் பிழைப்பவராகவே இருக்க நேரிடும்.

உணர்ச்சிவசப்படுகிற பெற்றோராலும் குழந்தையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படும். தங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றி அவர்கள் எக்கச்சக்க கனவுகள் (சாத்தியமில்லாத) வைத்துக் கொண்டிருப்பார்கள். கல்வியிலும், விளையாட்டிலும், கலைப் போட்டிகளிலும் தங்கள் குழந்தை முதலாவதாக வரவேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி அந்தக் குழந்தை சாதிக்க முடியாது போயின் மனம் சோர்ந்து விடுவார்கள். அதற்காகக் குழந்தையைத் தண்டிக்கவும் செய்வார்கள்.

பேரார்வம் (Ambitions) மிக்க பெற்றோர் என்றாலே உபத்திரவம்தான். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடியாத குழந்தை தன்னம்பிக்கை அற்றதாகிறது. சுய கௌரவத்தை இழந்து போகிறது.

ஒவ்வொரு குழந்தையும் தனக்கென்று விருப்பு, வெறுப்புகள் வைத்திருக்கும். வளர்ச்சியுள்ள குழந்தை, வாழ்க்கையில் தான் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதே நல்லது. தங்கள் பெற்றோருடைய அனுமதிப்பதே நல்லது. தங்கள் பெற்றோருடைய விருப்பத்துக்கு மாறாக கலைத் துறையைத் தேர்ந்தெடுத்துப் பிரகாசிக்கிற இளைஞர்கள் எத்தனையோ பேர்!

சில வீடுகளில், குழந்தைகள் முன்னிலையில் கணவனும், மனைவியும் கொஞ்சிக் குலவிக் கொள்வார்கள். தங்களுடைய படுக்கை அறையிலேயே குழந்தைகளையும் தூங்க அனுமதிப்பார்கள்.

குழந்தைகளை மனோதிடமும், ஆரோக்கியமும் உடையவர்களாக வளர்க்க விரும்பும் பெற்றோர் புத்திசாலித்தனமும், மன முதிர்ச்சியும் கொண்டிருக்க வேண்டும். மனமுதிர்ச்சி என்பது யார் வேண்டுமானாலும் பண்படுத்திக்கொள்கிற, அபிவிருத்தி செய்து கொள்கிற மனநிலை ஆகும்.

மனப்பக்குவம் உள்ள பெற்றோருக்குக் குழந்தைகள் பிரச்சினை ஆவதில்லை.



 குழந்தை வளர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 4:14 am

தாயின் கவனத்திற்கு...

உங்களுடைய கர்ப்ப காலத்தில் இயக்குநீர் (Hormone) மாற்றங்களால் உங்களுக்கு பல் ஈறுகள் வீங்கலாம். இதனை ப்ரக்னன்ஸி ட்யூமர் என்பார்கள். மற்ற கட்டிகளுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மகப்பேறு மருத்துவர் ஆலோசனையுடன் இதுபோன்ற கட்டிகளை அகற்றுதல், பல் எடுத்தல், பல் சுத்தம் செய்தல், பல் அடைத்தல் போன்ற சிகிச்சைகளை செய்து கொள்ளலாம். ஆனால் இவற்றை எல்லாம் கருவுற்ற 5-8 மாதங்களில் முடித்துக் கொண்டுவிட வேண்டும். இரத்தக் கொதிப்பு, நீரிழிவு உள்ள கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் பற்சிகிச்சைகளை தள்ளிப் போடுவது நல்லது.

நாட்டுப்புறப் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்காமல் சதை மூடிக்கொண்டிருக்கும் போது நெல்மணி கொண்டு கீறினால் பல் வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். குழந்தையின் தாய்மாமனைக் கொண்டு அவ்விதம் கீறவும் செய்கிறார்கள். அது தவறு, நெல்மணி தூய்மையானது என்று சொல்ல முடியாது. அதில் கிருமிகள் இருக்கலாம். அதன் வழியாக காயத்திலும், பின்னர் இரத்தத்திலும் பாக்டீரியா போன்ற நுண் கிருமிகள் நுழைய வாய்ப்பு இருக்கிறது. பல் டாக்டர் மரப்பு மருந்து அல்லது மரப்பு ஊசி போட்டு குழந்தைக்கு வலி இல்லாமல் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கருவி மூலம் கீறிவிடுவார்.

குழந்தையின் பற்கள் மஞ்சள் அல்லது வேறு நிறத்தில் இருந்தால் பயப்பட வேண்டாம். நீங்கள் கர்ப்ப காலத்தில் டெட்ரா சைகிளின் மாத்திரைகள் சாப்பிட்டிருந்தால் குழந்தையின் பற்கள் மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். வளரும் பருவத்தில் அம்மை, டைபாய்டு தாக்கினால் பற்கள் கருநீல நிறமடைவது உண்டு. நிறம் மாறிய பற்களுக்கு நிரந்தர நிவாரணமாக பல் வைத்தியத்தில் அநேக சிகிச்சை முறைகள் வந்தாயிற்று.



 குழந்தை வளர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக