புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Poll_c10ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Poll_m10ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Poll_c10ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Poll_m10ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Poll_c10ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Poll_m10ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Poll_c10ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Poll_m10ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 1:28 am

ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் 11953146_912560852149560_2281979138581904433_n

மஞ்சள்:

மகாலட்சுமியின் அம்சமாகவும், அவள் மனத்திற்கு விருப்பமானவைகளில் முக்கியமானதும் மஞ்சள் ஆகும். மகாலட்சுமியின் இருப்பிடம் எனக் கருதப்படும் மஞ்சளை, சுமங்கலிப் பெண்கள் முகத்தில் பூசிக் குளித்தல், புத்தாடைகள் அணியும் பொழுது அவற்றின் நுனியில் தடவுதல், அன்றாட உணவில் கலந்து கொள்ளுதல் எனப் பல வகையில் பயன்படுத்தி வருகின்றனர்.

திருமணங்கள் நடைபெறும் பொழுது கூடியிருக்கும் உறவினர், பெரியோர்களிடமும், மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்வதற்காக அட்சதை என ஒரு பொருளைக் கொடுப்பதுண்டு. அட்சதை என்பது, முனைமுரியாத வெள்ளையான பச்சரியை மஞ்சளில் தோய்த்து எடுத்துத் தருவதாகும்.

எந்த ஒரு பூஜை செய்வதாயிருந்தாலும் முதலில் விநாயகப் பெருமானை வணங்கிவிட்டே, மற்ற தெய்வங்களுக்கான பூஜையைச் செய்வது வழக்கம். இதற்கு மஞ்சளை அரைத்து, அல்லது மஞ்சள் பொடியை நீரில் கரைத்துச் சிறிதாக பிள்ளையார் போல ஓர் உருவத்தைச் செய்து வைத்து அதற்கு திருநீறு குங்குமம் இட்டுப் பூஜை செய்வதுண்டு.

சுமங்கலிகள் நம் வீடுகளுக்கு வரும்பொழுதும் அவர்கள் விடைபெற்றுச் செல்லும் வேளையில் அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமம் ஆகியவற்றுடன் மஞ்சள் கிழங்கையும் சேர்த்துக் கொடுப்பது மிகவும் விசேஷமாகும். சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பதனால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் யாவும் அகன்று, பாக்கியங்கள் பலவும் பெருகும். நீண்ட ஆயுளுடன், ஆரோக்யயமும் ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வார்கள்.

குங்குமம்:

இன்று பெண்கள் பலரும் தங்கள் முகத்தில் நெற்றியிலும் முன் வகிட்டிலும் குங்குமம் வைப்பதைக் காணலாம். இது சவுபாக்கியத்தின் அடையாளமாகும். இதுவும் மஞ்சளினால் தயார் செய்யப்படுவதேயாகும். இப்படி குங்குமத்தை இட்டுக் கொள்வதால், தீய சக்தியால் ஏற்படக்கூடியதான தீமைகள் யாவும் விலகி, நீண்ட ஆயுளும், சகலசவுபாக்கியங்களும் அமையும். அன்னையின் திருவடிகளில் அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமத்தை இட்டுக் கொள்வதால், பிறவியின் பொழுது பிரம்மாவினால் தலையில் எழுதப்பெற்ற தீய எழுத்துக்கள் யாவும் அழித்து நன்மைகளும், நற்பலன்களும் உண்டாகும்.

சந்தனம்:

மங்களகரமான மங்கலப் பொருள்களில் ஒன்றாகவும், மகாலட்சுமிக்குப் பிரியமானவற்றுள் ஒன்றாகவும் சந்தனம் விளங்குகிறது. புனிதமான நிகழ்ச்சிகளிலும், பூஜைகள், திருவிழாக்களிலும் குளிர்ச்சிமிக்க சந்தனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மகாலட்சுமியின் திருவருள் தடையின்றிக் கிடைக்கும். திருமண்:

ஸ்ரீ சூர்ணம் :

திருமாலாகிய பகவானைக் குறிப்பது திருமண்: அவரது பத்தினியாகிய திருமகளாம் லட்சுமியைக் குறிப்பது ஸ்ரீசூர்ணம். பகவானையும், லட்சுமி தேவியையும் பிரிக்கக்கூடாது என்பதால் எப்பொழுதும் திருமண்ணையும், ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்தே நெற்றியில் தரித்தல் வேண்டும்.

வெற்றிலை:

பூஜைகளின் பொழுதும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளின் பொழுதும், அவை நல்லவிதமாக நடந்தேறி நலம் கொழிக்க வேண்டும் என்பதன் அறிகுறியாக வைக்கப்படும் வெற்றிலை, பாக்கு மகாலட்சுமியின் அம்சமாக விளங்குகிறது.

நம் வீடுகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு எவ்வளவு சுவையான விருந்து பரிமாறுவதானாலும், முதலில் வாழை இலையைப் போட்டு, பிறகுதான் உணவை பரிமாறுவோம். அதைப்போல தெய்வ பூஜைகளுக்கு என்னென்ன பொருள்களை நைவேத்தியமாகப் படைத்தாலும், முதலில் வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்துவிட்டு தான் மற்றவற்றைப் படைக்கவேண்டும். அதாவது தெய்வத்திற்குப் போடப்படும் இலையாக வெற்றிலையைக் கொண்டு அதன் பின்னர் மற்றவற்றைப் படைப்பதாக ஐதீகம்.

கண்ணாடி:

காலையில் படுக்கையிலிருந்து கண்விழித்து எழும்பொழுது கண்ணாடியைப் பார்ப்பது பலரின் பழக்கமாக இருந்து வருகிறது. காரணம் என்னவெனில், உள்ளத்தைப் பிரதிபலித்துக் காட்டும் பளிச் என்ற கண்ணாடியும் லட்சுமி வாசம் செய்யும் பொருளாக இந்து தர்ம சாஸ்திரம் கூறுவதேயாகும்.

துளசி:

பழங்கால வீடுகளில் துளசி மாடம் என்றே தனியாக அமைக்கப்பட்டிக்கும், அதற்கு தினமும் நீர் ஊற்றி, பொட்டிட்டு, வலம் வந்து வணங்குவார்கள். துளசிச் செடியின் வடிவிலிருந்து கொண்டு ஸ்ரீமகாலட்சுமி அருள் புரிந்து காப்பதாக ஐதீகம். துளசி இருக்கும் வீட்டில் சகல செலவங்களும் நிறைந்திருக்கும் இதை வணங்கினால் மகாலட்சுமியும் திருமாலும் மனம் மகிழ்ந்து சகல செல்வ சுகங்களையும் அளிப்பர்.

திருமால், மகாலட்சுமி ஆகிய தெய்வங்களின் சந்நிதிகளில் துளசியும், துளசி கலந்த நீரும், குங்குமமும் தான் பிரசாதங்களாக வழங்கப்படுவதைக் காணலாம். இவை லட்சுமிதேவியின் பிரியத்துக்குரியவையாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களிலும், திருவோண நட்சத்திரத்தன்றும், அஷ்டமி, துவாதசி, சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய திதியுள்ள நாட்களிலும், இரவு, அதிகாலைப் பொழுது, மாலை ஆகிய வேளைகளிலும் துளசியைச் செடியிலிருந்து பறித்தல் ஆகாது.

செவ்வந்தி:

காலையில் மலரும் தாமரை மலர் எவ்வாறு மகாலட்சுமியின் பிரியத்துக்குரியதாக விளங்குகிறதோ, அதேபோல் அந்தி நேரத்தில் மலரும் செவ்வந்திப் பூவும் (இதுவே சாமந்தி எனவும் வழங்கப்படுகிறது) மகாலட்சுமியின் மனங்கவர்ந்த மலராகும். இது விரைவில் வாடாத தன்மை கொண்டது.

யானை:

பாற்கடலைத் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்தபொழுது அதிலிருந்து லட்சுமிதேவி வெளிவந்த போது, அவருடன் கூடவே வெளிவந்தது ஐராவதம் என்ற யானையாகும். எனவே யானையும் மகாலட்சுமிக்குப் பிரியமானதாகும்.



ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 1:31 am

மகாலட்சுமியை வீட்டில் எப்படி வழிபடலாம்?

லட்சுமி படத்தை கிழக்கு நோக்கி வைத்து, செந்தாமரை, செவ்வந்தி, முல்லை, பிச்சி, மல்லிகை இவற்றில் ஏதாவது மலர் மாலை சூட்டி தீபமேற்றி வழிபடுங்கள். காய்ச்சிய பாலை பிரசாதமாக படைத்து, லட்சுமி கவசம், அஷ்டோத்திரம், 108 போற்றி இதில் ஏதாவது ஒன்றை படிக்க வேண்டும். வெள்ளியன்று இந்த வழிபாடு செய்வோர் வீட்டில் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்.

மகாலட்சுமி குறித்து தேவர்களால் வழிபாடு செய்யப்பட்ட ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமைகளில் சொல்லி, பூஜை செய்பவருக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று தேவர்களுக்கு மகாலட்சுமி அருள்புரிந்தாள்.

1. நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம:
நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம:

2. த்வம் ஸாக்ஷத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா
பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ

3. பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி
அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா

4. ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா
நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி

5. ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி
ரமா ரக்ஷ்க்ஷகரீ ரம்யா ரமணீ மண்டலோத்தமா



ஸ்ரீ மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:39 am

நல்ல பகிர்வு சிவா புன்னகை................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 30, 2015 8:44 pm

நல்ல பகிர்வு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக