புதிய பதிவுகள்
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:02
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
by ayyasamy ram Today at 8:04
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:02
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' என்ற மாயவலை!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உலகில் அதிக அளவில் வாங்கும் சக்தியுள்ள நாடுகளில், மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. வெளிநாட்டு பொருட்களின் மீதான இந்தியனின் ஆர்வம் கொஞ்சம் அதிகம். அதனால், இந்தியாவில் கடை விரிக்க பல வெளிநாட்டு நிறுவனங்கள் காத்து கிடக்கின்றன. இந்தியாவின் சட்ட திட்டங்களும், சலுகைகளும் அந்நிய நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன.
இதன் காரணமாக பல மல்டி லெவல் மார்க்கெட்டிங், நெட்ஒர்க் மார்க்கெட்டிங், செயின் மார்க்கெட்டிங், பிரமிட் திட்டம் என்ற பெயரில் நுழைகின்றன. ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கவல்ல மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் பல்லடுக்கு சந்தைப்படுத்தலைப் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். மல்டி லெவல் மார்க்கெட்டிங் உட்பட கவர்ச்சிகரமான பெயர்களை கொண்டு, உங்கள் நண்பரோ அல்லது அவருக்கு அறிமுகமானவரோ உங்களை நிச்சயம் தொடர்பு கொண்டு இருப்பர்.
அவர்கள் உங்களை இத்திட்டத்தில் சேரும்படியும் பிரசார கூட்டங்கள், பயிலரங்குகள் கூட்டங்களில் பங்கேற்கும்படியும் அழைத்திருப்பர். நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி தாம் ஏற்கனவே பெற்ற பணத்திற்கான காசோலை நகல்களையும் கண்களில் ஆசை வார்த்தைகளையும் வார்த்தைகளில் ஜாலங்களையும் காட்டி மயக்குவர்.
லாட்டரி பரிசு குலுக்கல் நாகரிகமான உடையில் தோன்றும் வினியோகஸ்தர்கள் அறிமுகப்படுத்தும் இது போன்ற திட்டங்கள், கிட்டத்தட்ட ஒரு பரிசுக்குலுக்கல் லாட்டரியை போன்று நம்மில் பலரை மிக பெரிய நஷ்டத்திலும் துயரத்திலும் ஆழ்த்தி விடுகிறது. இத்திட்டத்தில் பணத்தை தொலைத்து விட்டு நிற்பவர்கள் நம்மில் பலர். பிரமிட் அல்லது பல்லடுக்கு சந்தைப்படுத்தல் இயற்கையிலேயே நிற்கவியலா ஒரு கட்டமைப்பைக் கொண்டது. குழப்பமான, ஆனால் கவர்ச்சிகரமான, சுலபமாக பணம் சம்பாதிக்கும் வாக்குறுதிகள் கொண்டிருப்பதே இவற்றின் அடையாளம்.
மிக கவனமாக நாம் பரிசோதித்தால், பணம் ஒரு வழியாக அதாவது தொடங்கியவரை நோக்கி மட்டுமே செல்வதை அறியலாம். கடைசியாக சேர்ந்தவர்கள் நஷ்டத்தை தவிர வேறு ஏதையும் அடையமாட்டார்கள். தாம் பலியாடாகி விட்டதை உணர்ந்த கொஞ்சம் விவரமானவர், நம் பணம் மட்டுமாவது திரும்பக் கிடைத்தால் போதும் என தனக்கு வேறு ஏதேனும் பலியாடு சிக்காதா? என தனக்கு தெரிந்தவர்களை இதில் இழுத்துவிட முயலுவது தான்.
புதுப்புது பெயர்கள்
25 ஆண்டுகளாக தோல்வியை தழுவி வரும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், விற்பனை தந்திரங்களை புதுப்புது பெயர்களிலும், நவீன முறை களிலும் தருவது ஒன்றும் புதிது அல்ல. இந்நிறுவனங்களின் லாபம் அதன் தயாரிப்பினாலோ அல்லது வழங்கும் சேவையினாலோ இல்லை. இதில் உறுப்பினராக இணைபவர், அவர்களின் சந்தை விலைக்கு பல மடங்கு அதிகமான விலை நிர்ணயிப்புடன் கொடுக்கும் பொருளை, வாங்குபவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே, இதன் லாபம் நிர்ணயிக்கப்படுகிறது.
தெளிவாக கூறினால், கடைசியில் இதில் சேருபவருக்கு மேற்கொண்டு சேர்க்க வேறு நபர் கிடைக்கவில்லை எனில், அவர் எதிர்பார்ப்புடன் களமிறங்கியதற்கு பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சும். அவ்வாறெனில் இறுதியாக உறுப்பினராக சேர்த்த அடித்தட்டு நிலையில் இருக்கும் நுகர்வோர் அனைவரும் கடுமையான நஷ்டத்திற்குள்ளாவர். இதனாலேயே சாதாரணமாக ஒரு நிறுவனம் ஈட்டும் வெற்றியை இந்நிறுவனங்கள் ஏட்டளவில் கூட ஈட்ட இயல முடிவதில்லை.
பயனடைபவர் யார்
ஆனால் பயனடைபவர் இல்லாமல் இல்லை. மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனருக்கு அல்லது துவக்கியவருக்கு கிடைக்கும் வெற்றியோ அமோகமானது. ஏனெனில், இந்த விளையாட்டில் விற்பன்னர்கள் எத்தனை பேர் என்பதில், கட்டுப்பாடு என்பதே கிடையாது. ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் மேலதிகாரி, 'நாம் இவ்வாண்டு விற்பனையை எட்டவுள்ளோம். அதனால் புதிய விற்பன்னர்களை வேலைக்கு நியமிப்பது அவசியமில்லை' என்று கூறுவதெல்லாம் இங்கே சாத்தியமில்லை.
மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தினர், 'நீங்கள் நான்கு பேரை இப்பொருளை வாங்க வைத்து உறுப்பினராகி விட்டால் போதும். மற்றதெல்லாம் தானாகவே நடக்கும். உங்களுக்கு கீழே வலது பக்கத்தில் உறுப்பினராகும் அந்த நான்கு நபர்களும் தலா நான்கு பேரை சேர்க்கும் பட்சத்தில் உங்கள் வீட்டின் கூரையை பிய்த்து கொண்டு பணம் கொட்டும்,' என்பர்.
இந்நிறுவனங்களில் நீங்கள் விற்கப் போகும் பொருள், சந்தையில் பாதி அல்லது அதற்கு குறைவான விலைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்மைபடுத்தப்படும் துறைகள்
மல்டி லெவல் மார்க்கெட்டிங் விற்பனையில் பெரும்பாலும் முதன்மைப்படுத்தப்படுவது இரண்டு துறைகள் மட்டுமே. ஒன்று 'பாஸ்ட் மூவிங் கன்சுயூமர் குட்ஸ்' எனப்படும் அன்றாட வீட்டு உபயோக பொருட்கள். மற்றொன்று மருந்து உபயோக பொருட்கள்.
இந்த இரு துறைகளும் நாட்டின் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டாலும் பாதிக்கப்படாத துறைகள் என்பது கூடுதல் பலம். அதிலும் மருந்துகள் அனைத்தும் ஊட்ட சத்து பொருட்கள் என்றும், மூலிகை மருந்துகள் என்றும் சந்தைகளில் வெளி கொண்டு வரப்படுகிறது.
இந்நிறுவனங்கள் அளிக்கும் பொருட்களோ அல்லது சேவையோ சிறப்பானதாக உள்ளது எனில், ஏன் இது நுகர்வோர் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. ஒரு வியாபாரத்தின் லாப வரவு, அவ்வியாபாரம் சந்தைப்படுத்தும் பொருளின் தரத்தினை சார்ந்து அமையும்.
பொருள் தரமானதில்லை எனில், சந்தையில் வெகுநாள் தாக்கு பிடித்து நிற்காது. வியாபாரத்தை பொறுத்தவரை, உரிமையாளர் அப்பொருளை ஒருவருக்கு விற்பதுடன், அந்த நுகர்வோருடன் உள்ள உறவு முடிந்து விடுகிறது. திரும்பவும் அந்த நுகர்வோர் விருப்பப்பட்டால் அவ்வியாபாரியுடன் மீண்டும் அப்பொருளுக்காக தொடர்பு கொள்ளலாம்.
ஆனால் இங்கே, ஒரு பொருளை அடுத்தவருக்கு விற்பதுடன் வியாபாரம் முடிந்து விடுவதில்லை. வாங்கிய பொருளுக்கான மதிப்பை நுகர்வோர் பெற வேண்டுமெனில் தன் முதுகில் மாட்டப்பட்ட துாண்டிலில் வேறு சிலரை இணைக்க அலைய வேண்டும்.
நிச்சயித்த அந்த சிலர் துாண்டிலில் மாட்டவில்லை எனில் வாங்கிய பொருளுக்கு செலுத்திய காசு தண்டம் தான். எனவே இங்கு தான் நஷ்டம் அடையாமல் தப்பிக்க தான் ஏமாந்தது போல வேறு ஒருவரை ஏமாற்ற துர்பாக்கிய நிலைக்கு ஆளாக வேண்டியுள்ளது. ஆகவே நம்முடைய வருமானம் வருவதற்கு உள்ள ஒரே வழி மேலும் மேலும் ஆள் பிடிப்பது மட்டுமே.
நான்கு பேரில் ஒருவரை இழுக்க அடுத்த நான்கு பேர் வேண்டும். அவர்களில் ஒருவரை இழுத்துச் செல்ல அடுத்த நான்கு பேர். இதில் வலதிலோ இடதிலோ ஒரு பக்க சங்கிலியை ஒருவர் கழற்றிக் கொண்டு போனாலும் சிக்கல்தான்.
ஆசையே அலை போல
மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையில் ஒருவர் இழக்கும் பணமே இன்னொருவருக்கு கிடைக்கிறது. இதில் கண்டிப்பாக 84 சதவீதத்தினர் பணம் இழக்க மட்டுமே செய்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏழையாகவே இருந்தாலும் சுற்றியிருக்கும் நுகர்வு கலாசார வாழ்க்கையின் ஆசைகள் பேதமின்றி அனைவரையும் ஆட்கொள்கிறது.
அதன் காரணமாக கஞ்சிக்கு வழியற்ற நிலையிலும் ஏதோ அற்புதம் நடந்து வாழ்க்கை மாறாதா என நினைத்து இத்தகைய திட்டங்களில் சேருகின்றனர். மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மீது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த தொழில் பற்றிய கவர்ச்சி விளம்பரத்தில் சிக்கிவிடாமல் தடுக்க மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்திட வேண்டும்.
மு.முத்துக்கிருஷ்ணன்,
செயலாளர்,
நுகர்வோர் கண்காணிப்பகம்
மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அதன் காரணமாக கஞ்சிக்கு வழியற்ற நிலையிலும் ஏதோ அற்புதம் நடந்து வாழ்க்கை மாறாதா என நினைத்து இத்தகைய திட்டங்களில் சேருகின்றனர். மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மீது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த தொழில் பற்றிய கவர்ச்சி விளம்பரத்தில் சிக்கிவிடாமல் தடுக்க மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்திட வேண்டும்.//
ஆமாம் , இந்த ஆம்வே போல பல இருக்கு, நாம் தான் அதில் சிக்காமல் ஜாக்கிரதையாக இருக்கணும் .......அரசு தானே இவங்களை உள்ளே விடுகிறது
ஆமாம் , இந்த ஆம்வே போல பல இருக்கு, நாம் தான் அதில் சிக்காமல் ஜாக்கிரதையாக இருக்கணும் .......அரசு தானே இவங்களை உள்ளே விடுகிறது
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மிகவும் நிஜம் .... நல்ல பதிவு க்ரிஷ்ணாம்மா , நன்றி .
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1158449krishnaamma wrote://அதன் காரணமாக கஞ்சிக்கு வழியற்ற நிலையிலும் ஏதோ அற்புதம் நடந்து வாழ்க்கை மாறாதா என நினைத்து இத்தகைய திட்டங்களில் சேருகின்றனர். மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மீது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த தொழில் பற்றிய கவர்ச்சி விளம்பரத்தில் சிக்கிவிடாமல் தடுக்க மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்திட வேண்டும்.//
ஆமாம் , இந்த ஆம்வே போல பல இருக்கு, நாம் தான் அதில் சிக்காமல் ஜாக்கிரதையாக இருக்கணும் .......அரசு தானே இவங்களை உள்ளே விடுகிறது
ஏன் அரசு அனுமதிக்கிறது அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1158472விஸ்வாஜீ wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158449krishnaamma wrote://அதன் காரணமாக கஞ்சிக்கு வழியற்ற நிலையிலும் ஏதோ அற்புதம் நடந்து வாழ்க்கை மாறாதா என நினைத்து இத்தகைய திட்டங்களில் சேருகின்றனர். மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மீது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த தொழில் பற்றிய கவர்ச்சி விளம்பரத்தில் சிக்கிவிடாமல் தடுக்க மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்திட வேண்டும்.//
ஆமாம் , இந்த ஆம்வே போல பல இருக்கு, நாம் தான் அதில் சிக்காமல் ஜாக்கிரதையாக இருக்கணும் .......அரசு தானே இவங்களை உள்ளே விடுகிறது
ஏன் அரசு அனுமதிக்கிறது அம்மா
அரசு அனுமதித்துத்தானே இவங்க நம் நாட்டிற்க்குள் நுழைகிறார்கள் விஸ்வா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவைகள் தினமலர் பின்னுட்டங்கள், இதைப்படியுங்கள் விஸ்வா
1. manohar - kanchipuram,இந்தியா
மிக மிக பயனுள்ள கட்டுரை. தெள்ளதெளிவாக ஆராய்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. நானும் எனக்கு தெரிந்த பல பேரிடம் இது மோசடி முயற்சி என எச்சரித்தும் அதில் பணம் இழந்தவர்கள் ஏராளம். இது முழுக்க முழுக்க நமது பேராசையும் யார் எக்கேடு கெட்டு போனாலும் நமக்கு பணம் கொட்டினால் சரி என்கிற மனமே, இந்த மாதிரி ஏமாற்று வேலைக்கு சாதகமாக உள்ளது. இதை தடுப்பதற்கு சட்டங்கள் இருந்தாலும் மக்கள் தான் விழிப்புடன் இருந்து இந்த மோசடி மன்னர்களை விரட்ட வேண்டும். இந்த கட்டுரை ஆசிரியர்க்கு என் பாராட்டுகளும் வந்தனமும்.
2. MAHA - trichy,இந்தியா
அருமையான கருத்து. ஆனால் இது ஒரு 10, 15 வருசத்துக்கு முன்னாடியே வந்திருந்தா அதையும் மக்கள் கவனமா படிச்சிருந்தா, மனதில் நினைத்து பார்த்திருந்தால் நிறைய பேர் . . . நிறைய பேர் ஏமாற்றத்தை தவிர்த்திருப்பார்கள்.
3. ஏடு கொண்டலு - cupertino,யூ.எஸ்.ஏ
மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பது ஒரு மோசடி. இதில் வெற்றி, பண்டங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்கு மட்டுமே. மேல் தட்டில் உள்ள ஒரு சிலர் அமோக வெற்றி பெற்றது போல் தெரிவதெல்லாம் உண்மையில் மாயையே. கடன் பட்டு, சம்பளப் பணத்தையும், நிம்மதியையும், குடும்ப அமைதியையும் விட்டு ஊர் ஊராக ஓடி ஓடிக் களைத்த பின் மிஞ்சுவது பலரிடம் பட்ட அவமானங்களும், ஏமாற்றங்களுமே !
1. manohar - kanchipuram,இந்தியா
மிக மிக பயனுள்ள கட்டுரை. தெள்ளதெளிவாக ஆராய்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. நானும் எனக்கு தெரிந்த பல பேரிடம் இது மோசடி முயற்சி என எச்சரித்தும் அதில் பணம் இழந்தவர்கள் ஏராளம். இது முழுக்க முழுக்க நமது பேராசையும் யார் எக்கேடு கெட்டு போனாலும் நமக்கு பணம் கொட்டினால் சரி என்கிற மனமே, இந்த மாதிரி ஏமாற்று வேலைக்கு சாதகமாக உள்ளது. இதை தடுப்பதற்கு சட்டங்கள் இருந்தாலும் மக்கள் தான் விழிப்புடன் இருந்து இந்த மோசடி மன்னர்களை விரட்ட வேண்டும். இந்த கட்டுரை ஆசிரியர்க்கு என் பாராட்டுகளும் வந்தனமும்.
2. MAHA - trichy,இந்தியா
அருமையான கருத்து. ஆனால் இது ஒரு 10, 15 வருசத்துக்கு முன்னாடியே வந்திருந்தா அதையும் மக்கள் கவனமா படிச்சிருந்தா, மனதில் நினைத்து பார்த்திருந்தால் நிறைய பேர் . . . நிறைய பேர் ஏமாற்றத்தை தவிர்த்திருப்பார்கள்.
3. ஏடு கொண்டலு - cupertino,யூ.எஸ்.ஏ
மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பது ஒரு மோசடி. இதில் வெற்றி, பண்டங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்கு மட்டுமே. மேல் தட்டில் உள்ள ஒரு சிலர் அமோக வெற்றி பெற்றது போல் தெரிவதெல்லாம் உண்மையில் மாயையே. கடன் பட்டு, சம்பளப் பணத்தையும், நிம்மதியையும், குடும்ப அமைதியையும் விட்டு ஊர் ஊராக ஓடி ஓடிக் களைத்த பின் மிஞ்சுவது பலரிடம் பட்ட அவமானங்களும், ஏமாற்றங்களுமே !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1