புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
24 Posts - 62%
heezulia
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
10 Posts - 26%
Balaurushya
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
1 Post - 3%
Barushree
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
1 Post - 3%
nahoor
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
1 Post - 3%
kavithasankar
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
78 Posts - 76%
heezulia
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
1 Post - 1%
nahoor
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
1 Post - 1%
Barushree
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகுபலி - விமர்சனம் | செய்திகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 10:37 pm

பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Baahubali%203

நாம் பார்த்து ரசித்த மன்னர்கதைகளின் புதியவடிவமாய் வந்திருக்கிறது பாகுபலி. இதற்குமுன் பார்த்த படங்களை விடப் பிரமாண்டமாகவே இருக்கிறது என்பதுதான் இதன்பலம். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் சகோதர யுத்தத்தின் காரணமாக அரண்மனையை விட்டு காட்டுக்குள் வந்துவிட்ட பிரபாஸ் மீண்டும் அரண்மனைக்குச் சென்றவுடன் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைத்தான் நெஞ்சம் அதிரச் சொல்லியிருக்கிறார்கள்.

தொடக்கத்திலேயே மிகப்பெரிய அருவியின் முன்னால், முதுகில் அம்பு தைத்தநிலையில் கைக்குழந்தையுடன் ரம்யாகிருஷ்ணன் வரும் காட்சியிலேயே படத்துக்குள் நம்மை இழுத்துவிடுகிறார்கள். ரம்யாவின் மறைவும் அந்த நேரத்திலும் அந்தக்குழந்தையைக் காப்பாற்றிவதோடு அது எங்கிருந்து வந்தது? என்பதை விரலசைவிலேயே சுட்டிக்காட்டி மரணிப்பதும் படத்தின் போக்கை நமக்குச் சொல்லிவிடுகிறது.

ஆதிவாசிகள் கூட்டத்தில் வளர்ந்திருந்தாலும் நாயகன் பிரபாஸ், மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதைச் சுட்டுகிற மாதிரியே காட்சிகள் இருக்கின்றன. அவர் எங்கிருந்து விழுந்தாலும் அவர் உடம்பில் ஒரு கீறலும் விழாது என்பது உட்பட மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருப்பினும், பிரபாஸின் உடற்கட்டும், அலட்சியப்புன்னகையுடன் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் விதமும் அந்தக்காட்சிகளுக்கு நியாயம் செய்கிற மாதிரி இருக்கின்றன.

சிவலிங்கத்தை அவர் தூக்கிக்கொண்டு போய் அருவியில் வைக்கும் காட்சி சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வளவு பெரிய மலையருவியை பிரபாஸ் ஏறிக்கடக்க முயன்று தோற்பதும், அதன்பின்னர் தமன்னா திரையில் வந்ததும் அவரைப் பின்தொடர்ந்து மலையருவியைக் கடக்கும் காட்சிகள், கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர் கடுகாம் என்கிற பாரதிதாசனின் வரிகளின் காட்சி வடிவமாக அமைந்திருக்கின்றன.

துரோகத்தால் வீழ்த்தப்பட்டதோடு திறந்தவெளிச்சிறையில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கைதியாக இருக்கும் மன்னரின் மனைவியை மீட்கும் போராளிக்கூட்டத்தில் ஒரு போராளியாய் நடித்திருக்கும் தமன்னாவுக்கு இந்தப்படம் நற்பெயரைத் தரும். போராளியாகத் துடிப்புடன் செய்லபடுவதோடு பிரபாஸோடு காதலில் கசிந்துருகும் காட்சிகளில் ரசிகர்களைக் கவருவார் என்பது நிச்சயம். ஓரிருகாட்சிகள்தாம் என்றாலும் பிரபாஸ், தமன்னா காதலில் இளமைப்போதை நிறைந்திருக்கிறது.

ஓரிரு காட்சிகளில் வயதான கைதியாக அனுஷ்காவைக் காட்டிப் பெரும்பாவம் செய்துவிட்டார் ராஜமௌலி. (அடுத்த பாகத்தில் அதற்குப் பிராயச்சித்தம் செய்துவிடுவார் என்று நம்பலாம்)காயங்களும் தழும்புகளும் கொண்ட ஒப்பனையோடு, என் மகன் வருவான் என்று மிகநம்பிக்கையாகச் சொல்லும் அனுஷ்காவும் வரவேற்புப் பெறுகிறார்.

பல்லாளதேவராக நடித்திருக்கும் ராணாவின் அறிமுகக்காட்சி, ஜோதாஅக்பரில் யானையோடு மோதும் ஹிருத்திக்ரோஷனை நினைவு படுத்தினாலும் அதைவிடச் சிறப்பாகக் காட்டெருமையோடு மோதுகிறார் ராணா. அவருடைய நூறடி உயரச்சிலையை நிர்மாணிக்கும் காட்சியும் அதற்குள் பிரபாஸ் வருவதும் சிலிர்ப்பு.

ராஜவிசுவாசியாக வருகிற சத்யராஜ், நன்றாக நடித்திருக்கிறார், பாகுபலீலீலீ என்று வேகமாகப் போய் மண்டியிடும் காட்சியிலும் இறுதியில் வருகிற போர்க்காட்சியிலும் சபாஷ் சொல்லவைக்கிறார் சத்யராஜ். ராணாவின் அப்பாவாக நடித்திருக்கும் நாசர், எள்ளல் சிரிப்பிலும் கடுப்புப் பார்வையிலுமே நடித்து தன் இருப்பைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார்.

அரசியாக வருகிற ரம்யாகிருஷ்ணனுக்கு படையப்பாவுக்குப் பிறகு அமைந்திருக்கும் கம்பீரமான வேடம். முகத்திலேயே கம்பீரத்தைக் காட்டுவதோடு வீரர்களை எதிர்கொண்டு கொல்லும் காட்சிகளிலும் ரசிக்கவைத்திருக்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு வருகிற போர்க்காட்சிகள், இதுவரை வந்த போர்க் காட்சிகளின் உச்சம் என்று சொல்லுமளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் மேலிருக்கும் பெரிய விசிறி போல தேரின் முன்னால் கத்திகளை விசிறிபோல் சுற்றவிட்டுக்கொண்டு ராணா வரும்போது நாசரோடு சேர்ந்து ரசிகர்களும் ரசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒற்றைக்குதிரையில் பிரபாஸின் சாகசங்களும் வியக்கவைக்கின்றன.

அப்பாவி மக்களைக் கேடயமாக எதிரிப்படைகள் பயன்படுத்துகிற நேரத்தில் பிரபாஸ் எடுக்கும் முடிவு உண்மையான வீரர்களுக்கான இலக்கணம். போர்க்காட்சிகள் பனைமரங்களுக்கு இடையே நடப்பது போல் காட்டியிருப்பது படத்தை தமிழுக்கு நெருக்கமாக்கிக் காட்டுகிறது.

சாகறதுக்குள்ள அவனைப் பார்த்துவிடமாட்டோமா என்று நீயும், இன்னொருமுறை அவனைக் கொல்லவேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறோம், இரண்டுமே நிறைவேறாத ஆசைகள் என்று ராணா பேசுவது உட்பட கார்க்கியின் வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன.

கீரவாணியின் இசையில் உருவான பாடல்கள் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் படத்தின் வேகத்துக்குத் தடைபோடுகின்றன. பின்னணிஇசையில் அவர் திரைக்கதைக்கு இணையாகப் பயணித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரின் உழைப்பும் சிறப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. மலையருவி, மகிழ்மதி அரண்மனை, போர்க்களம் ஆகிய எல்லா இடங்களிலும் அவருடைய பங்கு மிகப்பெரிது.

ஒவ்வொரு காட்சியிலும் கடும் உழைப்பு தெரிவதும், காதல், வீரம், கோபம் உள்ளிட்ட உணர்வுகளைக் காட்சியழகோடு சேர்த்துக்கொடுத்திருப்பதும் இயக்குநர் ராஜமௌலியின் பலம். மையக்கதை புதிதல்ல என்றாலும் காட்சிகள் வடிவமைப்பில் ரசிகர்களுக்குப் புதியஅனுபவங்களைக் கொடுத்திருக்கும் ராஜமௌலியைப் பாராட்டலாம்.

கடைசியில் சத்யராஜ் பேசும் வசனத்தின் மூலம், இவ்வளவு பெரியபடத்தை இது முன்னோட்டம்தான் கதை இனிமேல்தான் இருக்கு என்பது போலச் சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும். அது ராஜமௌலி குழுவினருக்கு இருக்கிறது.

விகடன்



பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 10:39 pm

திரை விமர்சனம்: பாகுபலி

பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Baahubalireview_2470363f

காவியத் தன்மை கொண்ட கதைகளை, பிரம்மாண்டமான திரைப்படங்களாக இந்தியா வாலும் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது எஸ்.எஸ்.ராஜ மவுலியின் இயக்கத்தில் வந்திருக்கும் பாகுபலி.

பல இந்தியக் காவியங்களில் கையா ளப்படும் அரியணைக்கான போட்டியும், உறவுகளை வீழ்த்தும் ரத்தக் கறை படிந்த துரோகப் பக்கங்களும்தான் பாகுபலியின் கதை. பிரம்மாண்டமான மலை, காட்டருவி, காட்டருவியைத் தாண்டினால் மகிழ்மதி ராஜ்ஜியம், அங்கே 25 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசி தேவசேனா என, பழைய அடிமைப் பெண் படத்தின் கதையை ஞாபகப்படுத்தும் கதை.

மகாராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) ஒரு கைக்குழந்தையைக் காப்பாற்றிவிட்டு மரணமடையும் காட்சி யுடன் தொடங்குகிறது படம். மலைப்பகுதி மக்களில் ஒருவரான ரோகிணியால் வளர்க்கப்படும் குழந்தை சிவா அருகிலுள்ள அபாயகரமான மலை உச்சியின்பால் ஈர்க்கப்படுகிறான். புஜபலம் பொருந்திய வீர இளைஞனாக வளரும் சிவா (பிரபாஸ்) தொடர்ந்து அந்த மலை உச்சியை நோக்கிச் செல்ல முயல்கிறான். பலமுறை தோற்கும் அவன் முயற்சி, மலையின் அந்தப் பக்கம் ஒரு அழகிய பெண்ணைக் (தமன்னா) கண்டதும் புதிய உத்வேகம் பிறக்கிறது. அந்தப் பெண் மீது மையல் கொண்டவன் அவளது லட்சியத்தைத் தன் லட்சியமாக ஏற்றுப் புறப்படுகிறான்.

தென்னிந்திய நிலப்பரப்பில் மகிழ்மதி ஒரு சாம்ராஜ்யம். அங்கே அரங்கேறும் சதியின் விளைவால் ஒரு அரச குடும்பம் வீழ்த்தப்படுவதும், ராஜ வாரிசு எங்கோ வளர்ந்து, உண்மை அறிந்து பழி தீர்த்து பகை முடிப்பதும்தான் கதை. மன்னன் பாகுபலியாகவும், மகன் சிவாவாகவும் பிரபாஸ்... அரசி தேவசேனாவாக அனுஷ்கா... பாகுபலியுடன் வாரிசுரிமைப் போர் நடத்தும் சகோதரன் பல்லாளனாக ராணா டகுபதி.

மகிழ்மதி தேசத்தின் சோதனையான சூழ்நிலையில் பல்லாளனுக்கும் பாகு பலிக்கும் இடையில் நடந்த போட்டி என்னவாயிற்று என்பதைச் சொல்லி படம் முடிகிறது. பாகுபலி என்ன ஆனான்? அவன் மனைவிக்கும் வாரிசுக்கும் என்ன ஆயிற்று என்ற முன் கதையைத் தெரிந்துகொள்ள பாகுபலி இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருக்க வேண்டுமாம்.

அமர் சித்திரக் கதைகளை ஞாபகப் படுத்தும் ஃபேண்டசி படம்தான். அடிப் படைக் கதையும் திரைக்கதையும் புதுமையானவை அல்ல. எனினும் படத்தின் காட்சி அமைப்பும் பாத்திர வார்ப்புகளும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகின்றன.

படத்தில் வரும் பிரம்மாண்டப் போர்க்காட்சிக்கான காரணம் எதிர் பார்த்ததுதான். ஆனால் அதைப் பல திருப்பங்களுடன் சுவாரசியமாக்கி யிருக்கிறார் ராஜமௌலி.

போர்க் களம், நகர அமைப்பு, போர் முதலானவற்றைத் திரையில் காட்சிப்படுத்திய விதம் பிரமிக்க வைக்கிறது. ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட காலகேயனின் படையை, 25 ஆயிரம் வீரர்களைக் கொண்ட மகிழ்மதியின் படை எதிர்கொண்டு வெல்ல அமைக்கும் வியூகமும், அந்த வியூகம் செயல்படும் விதத்தைக் காட்சிப்படுத்திய விதமும் விரிவும் நுணுக்கமும் கொண்டவை.

திரண்ட புஜங்களும் முறுக்கேறிய உடலும் கொண்ட பிரபாஸ், ராணா டகுபதி இருவருமே சண்டைக் காட்சிகளில் தனித்துவமாக வெளிப் படுகின்றனர். பிரபாஸ் புஜபலம் காட்டும் இடங்களில் சோபிக்கும் அளவுக்கு அழுத்தமான உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய இடங்களில் சோபிக்க வில்லை. நாயகனுக்கு இணையான பாத்திரத்தில் ராணாவின் கண்களில் தெறிக்கும் வன்மம் மனதில் நிற்கிறது. தமன்னா, வண்ணத்துப் பூச்சிகள் மொய்க்கும் தேவதையாக அறிமுகமாகி, போராளியாகவும் காதலியாகவும் இரு வித உணர்வு பாவங்களைக் காண்பிக்க முயற்சி செய்கிறார்.

நடிப்பு என்று சொன்னால் நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகி யோர்தான் ஜொலிக்கிறார்கள்.

நிர்மாணிக்கப்பட்ட செட் எது, கம்ப்யூட்டர் உதவியுடன் உருவாக்கப்பட வெர்ச்சுவல் செட் எது என்கிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியாத சாபு சிரிலின் கலை இயக்கம், ஸ்ரீனிவாஸ் மோகனின் மேற்பார்வையிலான விஷுவல் எஃபெக்ட் ஆகிய இரண் டும் படத்தின் பிரம்மாண்டத்துக்கு அடித் தளம். குறிப்பாகப் போர்க்களக் காட்சிகள் அபாரம். மகிழ்மதி ராஜ் ஜியத்தின் தலைநகரைப் பிரமாத மான கற்பனையுடன் நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார்கள். கதாபாத்திரங் களின் ஆடை, அணிகளின் வடிவமைப் பாளர்கள் ரமா, பிரசாந்தியும் பாராட்டுக்குரியவர்கள்.

இத்தனை இருந்தும் முதல் பாதி சற்று இழுவைதான். பாத்திரங்களின் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது கதை நடக்கும் நிலப்பரப்பு தமிழகம் அல்லது தென்னிந்தியா என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே பனி படர்ந்த மலை எங்கே இருக்கிறது? பனிச் சரிவில் பிரபாஸும் தமன்னாவும் தப்பித்து வரும் காட்சியில் விறுவிறுப்பு இருக்கும் அளவு நம்பகத்தன்மை இல்லை. தேவசேனாவை மீட்டு வரும் காட்சியும் அப்படியே. பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளும் கலை வேலைப்பாடுகளும் அபாரமான தொழில்நுட்பமும் சேர்ந்து இந்தக் குறைகளை ஈடுகட்டுகின்றன.

காலகேயர்களின் மொழி, தோற்றம், கொடூரம் ஆகியவை அவர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் அவர்களுக்குக் கருப்பு வண் ணம் பூசப்பட்டிருப்பது கருப்பு நிறம் மீதான ஒவ்வாமையையே பிரதிபலிக் கிறது.

மதன் கார்க்கியின் வசனமும் பாடல் வரிகளும் செழுமையைச் சேர்க்கின்றன. மரகதமணியின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசை படத்தின் மற்றொரு பலம்.

எதிர்பார்ப்புகள் அதிகமாகக் கிளம்பு வது ஒரு படைப்புக்குப் பாதகமாகவும் அமைந்துவிடக்கூடும். ஆனால் பாகுபலி ஏற்படுத்தும் பிரமிப்பு, அது ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது.

இந்து டாக்கீஸ் குழு



பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 10:49 pm

முதல் நாள் வசூல் 76 கோடி! சாதனை படைக்கும் பாகுபலி!

உலகம் முழுவதும் நான்காயிரம் தியேட்டர்களில் வெளியாகி, ரசிகர்களுக்கு திரைவிருந்தாக அமைந்துவிட்ட 'பாகுபலி' திரைப்படம், முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்து, இந்திய சினிமா உலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.34 கோடி, தமிழ்நாட்டில் ரூ.5 கோடி, கர்நாடகாவில் ரூ.7 கோடி, மற்ற மாநிலங்களில் ரூ.5.15 கோடி வசூலாகியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ரூ.15½ கோடி வசூலாகியுள்ளது. அமெரிக்காவில் 1 டிக்கெட் 20 டாலருக்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்பு அங்கு ஒரு படத்துக்கு அதிகபட்சமாக 12 டாலருக்கே விற்கப்பட்டது.

மன்னர்களின் வாழ்க்கையை சினிமாவாக்கும் கலை, ஹாலிவுட் கலைஞர்களுக்கு மட்டும்தான் கைவரும் என்று இருந்ததை, இயக்குனர் ராஜமௌலி உடைத்து தென்னிந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரே நாளில் 1600 காட்சிகள் திரையிடப்பட்டன. விஜயவாடாவில் மட்டும் ஒரே நாளில் 150 காட்சிகள் திரையிடப்பட்டன. இந்திய திரையுலக வரலாற்றில் ஒரே நாளில் ரூ.76 கோடி வசூலானது புதிய சாதனை ஆகும். இதற்கு முன்பு ஷாருக்கான் நடித்த ‘ஹேப்பி நியூ இயர்’ படம் ஒரேநாளில் ரூ.45 கோடி வசூலித்தது. அந்த சாதனையை பாகுபலி படம் முறியடித்தது.

உலகப் புகழ் பெற்ற டென் கமாண்ட்மென்ட்ஸ், லாரன்ஸ் ஆப் அரேபியா, க்ளாடியேட்டர், அவதார் என பிரம்மாண்டத்துக்கும், கலை வார்ப்புக்கும் ஹாலிவுட் படங்களையே இந்தியர்கள் உதாரணம் காட்டி வந்த காலம் மலையேறிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

அதிலும் தெலுங்கு, தமிழ் மொழிகளில் நேரடியாக 'பாகுபலி' திரைப்படம் வெளிவந்திருப்பது இரண்டு மாநில திரை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் மலையாளம்,ஹிந்தி மொழிகளிலும் 'பாகுபலி' வெளிவந்திருப்பது கூடுதல் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'பாகுபலி'யில் கதாநாயகனாக பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா,சத்யராஜ்,நாசர், ராணா, கோபிசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இசை மரகதமணி, ஒளிப்பதிவு செந்தில்குமார். மற்றும் பல தொழில் நுட்பக்கலைஞர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி 'பாகுபலி' யை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் அடுத்தப்பாகத்திற்கு 2016 வரை காத்திருக்கவேண்டும்.



பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 10:50 pm

பாகுபலியை விமர்சித்து மற்ற இயக்குநர்கள், நடிகர்களை சீண்டிய ராம் கோபால் வர்மா!

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் ரிலீஸ் ஆகியுள்ள படம் ‘பாகுபலி’. படத்தின் ரிலீஸ் ஆன நேற்று இந்தியா முழுக்க பாகுபலி மயமாகவே இருந்தது.

இந்த படத்திற்கு இசை கீரவாணி. இந்த படத்தை பார்த்த அனைவரும் பிரம்மாண்டம், மேக்கிங் என புகழ்ந்து வருகிறார்கள். தற்போது தெலுங்கின் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா படம் குறித்து ட்விட்டரில் பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.

நல்ல கான்செப்ட்டுடன் இணைந்த பெரிய நடிகரின் படம் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும் என ’பாகுபலி’ நிரூபித்துவிட்டது’, ’முதல் முறையாக நடிகர் பிரபாஸைக் காட்டிலும் அவரது படம் பெரிய விஷயமாக இருக்கிறது. ’அனைத்து நடிகர்களுக்கும் தங்களை தாங்களே பெரிய நடிகர்களாக நிரூபிக்க, ‘பாகுபலி’ ஒரு எச்சரிக்கை மணி ஓசை’.

இந்த சினிமா உலகில் சிங்கங்கள், புலிகள், அனகோண்டா, யானைகள் என இருப்பினும் ‘பாகுபலி’ என்ற ஒற்றை டைனோசரஸ் வெளியாகி, உயிர் பிழைக்கும் முறையையே மாற்றியமைத்து விட்டது. மற்ற இயக்குநர்கள் பொறாமையிலேயே உங்களை விழுங்க போகிறார்கள் ராஜமௌலி. அடுத்த படம் கொடுக்க நான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக சினிமா உலகில் படமே இல்லாமல் போய்விடும் என கொஞ்சம் கருத்துகளில் பல பெரிய ஹீரோக்கள், மற்றும் இயக்குநர்களை சீண்டி விட்டுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

இதற்கு முன்பு ’ஓ காதல் கண்மணி’ படம் பார்த்துவிட்டு, மம்முட்டியையும் துல்கரையும் ஒப்பிட்டு பேசி துல்கரிடம் அமைதியான முறையில் வாங்கிக் கட்டிக் கொண்டார் தற்போது ‘பாகுபலி’ படத்தையும் மற்ற இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை சீண்டியதால் என்ன கிடைக்கப் போகிறதோ என தெலுங்கு சினிமா உலகம் சலசலக்கிறது.



பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 10:54 pm

பாகுபலியால் பாதிக்கப்பட்ட பிற மொழிப் படங்கள்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது 2 முதல் 3 படங்களாவது எல்லா மொழிகளிலும் வெளிவரும், ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அதற்கு நேர்மாறாக பெரிய அளவில் எந்தப் படங்களும் வெளியாகவில்லை.

இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி படம் வெளியானதால் இந்தியா முழுவதும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில், வெளியாக இருந்த அனைத்துப் படங்களின் வெளியீட்டுத் தேதிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன

தமிழில் மட்டும் மகாராணி கோட்டை மற்றும் காமராஜ் என்று 2 சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவந்துள்ளன, மற்ற அனைத்து மொழிகளிலும் எந்தப் படங்களும் வெளியாகவில்லை.

இதே மாதிரி வேறு எப்போதும் நிகழ்ந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது. இதனால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு வேறு எந்தப் படங்களும் வசூலில் பெரிய அளவில் சாதனை நிகழ்த்துமா? என்பது சந்தேகம்தான்.



பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 12:43 am

//மகிழ்மதி தேசத்தின் சோதனையான சூழ்நிலையில் பல்லாளனுக்கும் பாகு பலிக்கும் இடையில் நடந்த போட்டி என்னவாயிற்று என்பதைச் சொல்லி படம் முடிகிறது. பாகுபலி என்ன ஆனான்? அவன் மனைவிக்கும் வாரிசுக்கும் என்ன ஆயிற்று என்ற முன் கதையைத் தெரிந்துகொள்ள பாகுபலி இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருக்க வேண்டுமாம்.//

இது தான் எனக்கு கொஞ்சம் குறையாக இருக்கு சோகம்.............அப்புறம் அனுஷ்காவை, அட்லீஸ்ட் ஒருமுறை, ஒரு நல்ல உடை இல்காட்டுவார்கள் என்று எதிர்பார்த்து ஏமார்ந்தேன் ..................மற்றபடி ரொம்ப அருமையான் படம் புன்னகை ............... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 4:31 pm

பாகுபலி இவ்வளவு வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை- ராஜமெளலி!

பாகுபலி படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று உண்மையாகவே நான் எதிர்ப்பார்க்கவில்லை என்று இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

உலகளவில் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய பாகுபலி படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மிகப் பெரிய வெற்றியைக் குவித்துள்ளது.

இந்தியத் திரைப்பட வரலாற்றில், ஒரு தென்னிந்தியத் திரைப்படம் ஒன்று வெளியாகி, பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது இதுவே முதல் முறை.

இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரரான இயக்குநர் ராஜமௌலி, நிறைகுடம் தளும்பாது என்பதற்கு அறிகுறியாக அமைதியாகவே இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“பாகுபலி குறித்து வரும் செய்திகள், வசூல் விபரங்கள் எங்களுக்கே மலைப்பைத் தந்துள்ளது. இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றியை நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. இந்தப் படம் ஒரு புதிய களம், புதிய அனுபவம் என்பதால் இரசிகர்களை ஈர்த்துள்ளது. ஒரு புதிய உலகைக் காணும் ஆர்வத்தில் வருகிறார்கள். அடுத்த பாகம் இன்னும் சிறப்பாக வரும். அதை அடுத்த ஆண்டு நிச்சயம் வெளியிட்டுவிடுவோம்” என்றார்.



பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 13, 2015 4:46 pm

முதல் பாகத்துல சங்க தலைவி அனுச்க்காவை கிழவியாக்கிட்டாங்கலேன்னு கோவம் வந்தது அப்புறம் தமனாவை தன்நில பார்த்தபிறகு கோவம் போச்சு ரண்டாவது பாதில அனுச்காவை அழகா காட்டலேனா இயக்குனர் பலித்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் பாகுபலி - விமர்சனம் | செய்திகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 13, 2015 6:19 pm

பாகுபலி - விமர்சனம் | செய்திகள் WFURtPTjeT59rJf5y8lw+baahubali-review1

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 10:31 pm

பாகுபலி இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஆரம்பம்

பாகுபலி படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளிவந்து எதிர்பார்த்ததற்கம் மேல் வசூல் குவிந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 150 கோடி ரூபாய் வரை வசூலாகியிருக்கும் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

முதல் பாகத்தின் வசூல் அதிகமாக இருந்தாலும் பொதுவான ஒரு கருத்தாக கதை என்பது அழுத்தமாக இல்லை என்ற பேச்சும் அதிகமுள்ளது. அது மட்டுமல்ல அனுஷ்கா ஏன் கைதியாக இருக்கிறார், பிரபாஸை சத்யராஜே ஏன் கொலை செய்கிறார், ரம்யா கிருஷ்ணன் ஏன் ஒரு கைக்குழந்தையுடன் தப்பித்து வருகிறார். தமன்னாவும் சிலரும் ஏன் அனுஷ்காவை மீட்க மறைந்து வாழ்கிறார்கள் என்பது போன்ற பல கேள்விகளுக்கு முதல் பாகத்தில் விடையில்லை.

ஆனால், இந்த அத்தனை கேள்விகளுக்கும் இரண்டாம் பாகத்தில் விடை இருக்கிறதாம். அது மட்டுமல்ல அனுஷ்காவின் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்கிறார்கள். இரண்டாம் பாகம் முழுவதுமே பல திருப்பங்களுடன் கூடியதாக இருக்குமாம்.

அதற்கான பாதி வேலைகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் மீதியுள்ள வேலைகளை ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பித்து முடிக்க இருக்கிறார்களாம். அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த வேலைகள் முடிவடைந்து அதன் பின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து முதல் பாகம் வெளிவந்தது போல ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்பாக கோடை விடுமுறையிலோ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.



பாகுபலி - விமர்சனம் | செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக