புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 25 of 46 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 35 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 2:17 am

shobana sahas wrote:அது என்ன ..... தெரியாதே க்ரிஷ்ணாம்மா ?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1169467

இதோ போடுகிறேன்.......சரி நீங்க அந்த ஆமை முயல் போடோக்கள் மேலே கர்சரை வைத்து பார்த்தீங்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 2:39 am

அடுத்த கதை : 17. ஆமையும் முயலும் 2 !

இந்த பாடலை டிவி இல் பார்த்துக்கொண்டிருந்த அந்த வயதான, பாட்டி  முயல் தன் கண்களை துடைத்துக்கொண்டாதாம். அதை கவனித்த குட்டி முயல்கள், "ஏன் பாட்டி அழற? " என்று கேட்டதுகளாம்.

பாட்டி முயலும் , ஹும்..............என்று ஒரு பெருமூச்சு விட்டவாறே, " டிவி ஐ பார்த்தீங்க தானே, அதில் வந்த நம் முன்னோர்  எவ்வளவு அறிவாளியாக ஒரு சிங்கத்தையே சர்வ சாதரணமாய் ஜெயித்துவிட்டார்............இவன்போய் ஒரு ஆமை இடம் தோற்றுவிட்டு வந்திருக்கானே, நம் குலப்பெருமையை எல்லாம் அழித்துவிட்டு வந்திருக்கனே என்று நினைத்தேன், அது தான் அழுதுவிட்டேன்" என்று சொன்னதாம்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று அந்த குட்டிகளுக்கு  தெரியலை.............சோகமாய் பார்த்ததுகளாம். அவ்வளவு தான். இதைக்கேட்டுக்கொண்டே வந்த தகப்பன் முயல், ( இது தான் ஆமை இடம் தோற்ற முயல் ) ,
' ச்சே......தான் பொறாமை கொண்டதால் வந்த விளைவு என்பதை உணராமல், மீண்டும் ஆமை மேல் கோபம் கொண்டது.............தங்கள் குலப் பெருமையை ஆமை அழித்து விட்டதாக நினைத்தது............தன்னால் அம்மா இப்படி கண்ணீர் விடும்படி ஆகிவிட்டதே....இதுக்கு ஏதாவது செய்யணும்.......என்ன செய்யலாம் ?' என்று யோசித்ததாம்.

அந்த சிங்கத்தை ஜெயத்த முயல், தன் புத்திசாலித் தனத்தினால் தனக்கு வந்த ஆபத்தை போக்கிக்கொண்டது.............ஆனால் இந்த புத்தி கெட்ட முயல், தன் பொறாமையால் வீண் பழியை தேடிக்கொண்டது.........ஆனால் அது அதற்கு தெரியவில்லை.............ஏதோ ஆமை தான், தன்னுடைய குலப் பெருமையை  கெடுத்து விட்டதாக நினைத்தது..........

ரொம்ப நேரம் யோசித்து ஒரு ஐடியா பண்ணித்தாம் .............'அந்த ஆமை இங்கே தான் அருகில் அலைந்து கொண்டு இருக்கும், மீண்டும் அதை ஒரு போட்டிக்கு கூப்பிட்டு நாம ஜெய்த்து விட்டால்??????????' என்று யோசித்தது.

மேலும், இந்த முறை வேற போட்டி வெச்சுக்கலாம், நாம் தூங்காமல் சீக்கிரம் ஜெயிக்கும் படி ஏதாவது யோசிக்கலாம் என்று நினைத்து ஒரு வழி கண்டு பிடித்ததாம்.

நேராக அந்த ஆமை இடம்போச்சாம். "இன்னும் ஒரு போட்டி வெக்கலாமா நாம்ப ? " என்று கேட்டதாம்.

ஆமை ஏதோ சொல்ல வாய் எடுக்கும் முன், "இது வேற போட்டி, நீ கஷ்டப்பட்டு ஓட வேண்டாம்" என்று அவசரமாய் சொல்லித்தாம் முயல்.

இதைக்கேட்டதும், அருகில் இருந்த மற்ற மிருகங்களுக்கு சுவாரஸ்யம் கூடியது . எல்லாம் இவற்றின்  கிட்ட வந்ததுகலாம்.

" இன்னைக்கு என்ன போட்டி?" என்று ஆவலாய் கேட்டதுகளாம் .

' இன்னைக்கு நான் தாண்டா ஜெயிப்பேன் , அப்புறம் வெச்சுக்கறேன் உங்களை, அன்று என்னமாய் ஆட்டம் போட்டீங்க' என்று தன் மனதிற்குள் கருவியதாம் அந்த முயல் .

தொடரும் ...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 3:01 am

ஆமை  , " என்ன போட்டி என்று இன்னும் இவன் சொல்லலை, ஆனால் போட்டி வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்!" என்று சொன்னதாம்.

அதற்கு முயல் , " அதெல்லாம் முடியாது, அன்று எனக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை அது தான் தூங்கி விட்டேன், அந்த நேரத்தில்  நீ ஜெயித்து விட்டாய். எனவே, இன்று மீண்டும் வேறு ஒரு போட்டி வைக்கலாம்". என்றதாம்.

மற்ற மிருகங்கள், " பாரேன் இந்த முயல் அன்றும் வம்பு சண்டைக்கு வந்தது, இப்பவும் வீணாக ஆமையைத்  தொந்தரவு செய்கிறது" என்று பேசிக்கொண்டதுகளாம்.

ஆமைக்கு வேறு வழி இல்லை, எனவே மீண்டும் ஒப்புக்கொண்டது  போட்டிக்கு. தயங்கியவாறே கேட்டதாம் அது, " என்ன போட்டி முயலே? " என்று.

முயல் தன் வீட்டில் இருந்து ஒரு 10 அடி தூரத்தில் தான் இருந்தது, அங்கு திரும்பி ஒரு பார்வை பார்த்துக்கொண்டது...........அங்கே அதனுடைய வயதான அம்மா மற்றும் குட்டி முயல்கள் வாசலில் நின்று நடப்பதை பார்த்துக்கொண்டிருந்ததுகளாம்.

அதைப்பத்ததும் இந்த முயல்  தன் மனதுக்குள் , ' அம்மா நீ காலை இல் எப்படி வருத்தப்பட்டாய், இப்போ உன் மகனின் சாமர்த்தியத்தை நேராகவே பார்க்கப் போகிறாய், இழந்த நம் குலபெருமையை நான் மீண்டும் நிலை நாட்டுவதை பார்த்து மயங்கி விழப்போகிறாய் ' என்று சந்தோஷமாய் சொல்லிக்  கொண்டதாம் .

அவர்களுக்கு இந்த போட்டி தெரியவேண்டும், எனவே, வழி விட்டு ஒதுங்கி நில்லுங்கள் என்று மற்ற மிருகங்களைக்  கேட்டுக்கொண்டதாம். மிருகங்களும் வழி விட்டு நின்று கொண்டதுகளாம்.

பிறகு அது ஆமையைப் பார்த்து, " ready 1, 2, 3 என்று சொன்னதும் அவரவர் , அவர்களின் வீட்டுக்கு போய்விடணும். யார் தன்னுடைய வீட்டுக்கு முதலில் போகிறார்களோ அவர்கள் தான் ஜெயித்தவர்கள் "...........இதற்கு சம்மதமா என்று கேட்டதாம்.

தான் முதலில் ஓடிவிடணும் என்று தான் மற்ற மிருகங்களை வழிவிட்டு நிற்க  சொன்னது அந்த கெட்ட எண்ணம் கொண்ட முயல். ஆனால் அதற்கு ஆமை இன் வீடு எங்கு இருக்கு என்று கூட தெரியாது.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 CwgoLa7qTWScycKgnKku+turtel__turtel________tuuuuuuuuuuutellllll_______by_pig7kat2-d505ezl

இந்த போட்டியைக் கேட்டதும் எல்லா மிருகங்களும் கை தட்டின, ஆமையும் ஒப்புக்கொண்டது. அன்று போலவே இன்றும் கிளி தான் , ready 1, 2, 3 என்று சொல்வது என்று ஒப்புக்கொண்டது.

கிளி ready 1, 2, 3 என்று சொன்னது தான் தாமதம், ஆமை தன்னுடைய கால்களையும்  தலையும் ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு விட்டது.......உடனே எல்லா மிருகங்களும் கை தட்டி ஆமை ஜெய்ததுவிட்டது என்று கத்தித்துகள்.

ஓடத்துவங்கிய முயலுக்கு ஒன்றுமே புரியலை, மற்ற மிருகங்கள் கை தட்டி , " ஷேம்  ஷேம்  பப்பி  ஷேம்  " என்று முயலைப்பார்த்து சிரித்துகளாம்..............ஆமைக்கு அதன் ஓடுதானே வீடு, அது தான் அது உடனே உள்ளே போய்விட்டது......ஸோ, அது தான் மீண்டும் ஜெய்த்தது. குதூகலம் குதூகலம் குதூகலம்

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த வயதான முயல் மயங்கி விழுந்தது............ஏறக்குறைய போட்டி வைத்த முயலும் அப்படித்தான் ஆகிவிட்டது.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 7TG0fMfbSU2n2Vo46ehO+IndexTurtel1

அது தான், மறுபடி,சொல்கிறேன் பொறாமை கூடவே  கூடாது புன்னகை............... கூடாது கூடாது கூடாது

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 12:03 pm

என்னவொரு அருமையான கதை பாருங்கள் ...நெட் இல் கிடைத்தது புன்னகை

முள்ளு மொனையில......

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Magic_realism_01

இந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பாலன் கதை” சொல்லுகிறது. 

இந்தக் கதை தோற்றங்களும், அவற்றின் மாயை குறித்தும் வசிஷ்டரால் ராமருக்கு உபதேசிக்கப் படுகையில் இடம்பெறுவது.

கதை இதுதான்.

ஒரு நாள் ஒரு சிறிய குழந்தை தன் தாயாரை வேடிக்கையான கதையொன்றைச் சொல்லக் கேட்க, அவள் இந்தக் கதையைச் சொன்னாள்:

“முன்னொரு காலத்தில் ஆகாயப் பிரதேசத்தில் உண்டாகாத பெரிய பட்டணம் ஒன்றிருந்தது. 

அப்பட்டணத்தில் மூன்று அழகிய ராஜகுமாரர்கள் இருந்தார்கள். அவர்களில் இரண்டு பேர் பிறக்கவேயில்லை; ஒருவன் கர்ப்பம் தரிக்கப் படவேயில்லை. 

இம்மூவரும் ஒருநாள் வெளியூர் சென்று திரவியம் தேடி வரலாமென்று உத்தேசித்துக் கிளம்பிஒரு காட்டுப்பாதையைத் தொடர்ந்து செல்லுகையில் தாகமெடுத்து நீரைத் தேட மூன்று ஓடைகளைக் கண்டார்கள். அவைகளில் இரண்டு நீர் வற்றியும், ஒன்றில் தண்ணீரே இல்லாமலும் இருந்தது. 

மூவரும் ஓடைகளில் இறங்கி ஸ்நானம் செய்து தண்ணீரும் அருந்தி, பக்கத்தில் தென்பட்ட மூன்று மரங்களை அணுகி பழங்களைச் சாப்பிட எண்ணினார்கள். இந்த மூன்று மரங்களில் இரண்டு வளரவேயில்லை. ஒன்றுக்கு விதையே கிடையாது. 

இந்த மரங்களில் ஏறி வேண்டியவாறு பழங்களைத் தின்று திருப்தியடைந்தார்கள். பிறகு அக்காட்டை விட்டுச் சென்று சிறிது நேரத்தில் ஏற்படாத நகரமொன்றை அடைந்து அங்கே சுவரே இல்லாத பெரிய சத்திரமொன்றைக் கண்டார்கள். 

சத்திரத்திலே மூன்று பாத்திரங்கள் இருந்தன. இரண்டு இருக்கவேயில்லை. ஒன்று ஓட்டை. இப்பாத்திரங்களில் நூறு படி அரிசியைச் சமைத்து, வாயில்லா விருந்தாளிகளுக்கு அன்னமிட்டு, பாக்கியைத் தாங்கள் சாப்பிட்டு சுகமாக நித்திரை செய்தார்கள்”. 

இக்கதையைக் கேட்ட குழந்தை மிகவும் சந்தோஷமடைந்தது.

இதில் ஆச்சர்யம் இதுதான்,

”யோக வசிஷ்டம்” எனும் வேதாந்த நூல் பரவலாக அறியப் படாத, ராமாயணத்துக்கும் முந்தைய நூல். இது மஹா ராமாயணம், வசிஷ்ட ராமாயணம், ஞான வசிஷ்டம் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகிறது.

அப்படி மிகக் குறுகிய மக்களால் வாசிக்கப்பட்டதாய்ச் சொல்லப்படும் இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கதை நமது நாடோடிப் பாடல்களில் ஒன்றான- 

”முள்ளு முனையில மூணு குளம் வெட்டி வச்சேன்.
அதில் இரண்டு குளம் பாழு.ஒண்ணுல தண்ணியே இல்லை.

தண்ணியில்லாக் குளத்துக்கு மண்ணெடுக்க வந்த குயவன் மூணு பேரு. ரெண்டுபேரு முடம்.ஒருத்தனுக்குக் கையே இல்லை.

கை இல்லாக் குயவன் செஞ்ச பானை மூணு.
அதில் ரெண்டு ஒடஞ்சி போச்சு; ஒண்ணு ஓட்டை. 

ஓட்டைச் சட்டியிலே சமைச்ச அரிசி மூணு.
அதில் ரெண்டு பச்சை, ஒண்ணு வேகவே இல்லை” 

என்ற பாடலும்,

தொடரும்....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 12:06 pm

”ஆளில்லாத ஊர்ல ராஜா இல்லாத ராஜகுமாரி 
தூரில்லாத குடத்த எடுத்துக்கிட்டுக் கரையில்லாத குளத்துக்குத் தண்ணிக்குப் போனாளாம். 

அங்க தலையில்லாத மான் வேரில்லாத புல்லை மேஞ்சுகிட்டு இருந்ததாம். 

அதைக் கண்ணில்லாதவன் பார்த்துக் காது இல்லாதவன் கிட்ட சொன்னானாம். 

அவன் நரம்பில்லாத அம்பெடுத்து மான் மேல விட்டானாம். 

அது மான் மேல படாம மான் வயித்துலேருந்த குட்டி மேல பட்டு குட்டி செத்துப் போயிருச்சாம்.

குட்டிய சமைச்சு சாப்டுட்டுத் தோலக் கால் இல்லாத பந்தல்ல காயப் போட்டானாம். 

அதத் தலை இல்லாத பருந்து தூக்கிக்கிட்டுப் போயிடுச்சாம். 

அதக் காலில்லாதவன் துரத்திக்கிட்டுப் போனானாம். 

அப்போ அவன் காலுல குத்துன கண்டங்கத்திரி முள்ளால தலைவலி வந்துருச்சாம். 

அதக் காட்ட வைத்தியருகிட்டப் போனானாம். 

இது சரியாகணும்னா ஆல வேரு, அரச வேரு, புங்க வேரு, பூவரச வேரு எல்லாத்தையும் நுனியோட புடுங்கி, அம்மி படாம அரச்சு, நாக்கு படாம நக்குடா. 

இது முதல் வைத்தியம்.

கண்டங்கத்திரி வேரக் கை படாமப் புடுங்கி, உரலக் குப்புறப் போட்டு,  உலக்கை படாமக் குத்திப் பின்னங் கையால எடுத்து நக்குடா. 

இது ரெண்டாவது வைத்தியம்னு சொன்னாராம். 

இப்படிப்பட்ட வைத்தியருக்கு ஏதாவது சன்மானம் தரணும்னு சொல்லி அடி இல்லாத படி எடுத்து ஓட்டச் சாக்குல ஒன்பது முழ உளுந்த அளந்து, சக்கரம் இல்லாத வண்டியில பாரம் ஏத்தி, மாட்டு வண்டி ஓட்டக் குருடன் பாதை காட்ட, வண்டி போயிக்கிட்டே இருந்திச்சாம்.”

என்ற நாடோடிக் கதையும் பிரபலம்.

மக்களின் வாழ்க்கையோடு புதைந்திருக்கும் எளிமையான இந்தப் பாடலிலும், கதையிலும் புதைந்திருக்கும் கற்பனைகளின் வேர் “யோக வசிஷ்டத்தை”த் தொடுகிறது என்பது மிக மிகப் பிரமிப்பான விஷயம்.

இன்றைக்கு நவீனமாய்க் கருதி, இளைஞர்களைப் பேயாய் அலைய வைத்த இந்த மேஜிகல் ரியலிஸ உத்தியின் வயது, நமது இந்திய மரபில் கணக்கிட முடியாத தொன்மை வாய்ந்தது மற்றொரு பிரமிப்பு. 

நன்றி சுந்தர்ஜி's blogspot  !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 12:13 pm

ஆஹா.....2 மாதமாய்  யாரையுமே  காணுமே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 1:25 pm

krishnaamma wrote:
”யோக வசிஷ்டம்” எனும் வேதாந்த நூல் பரவலாக அறியப் படாத, ராமாயணத்துக்கும் முந்தைய நூல். இது மஹா ராமாயணம், வசிஷ்ட ராமாயணம், ஞான வசிஷ்டம் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகிறது.
அப்படி மிகக் குறுகிய மக்களால் வாசிக்கப்பட்டதாய்ச் சொல்லப்படும் இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கதை நமது நாடோடிப் பாடல்களில் ஒன்றான- 
தொடரும்..
மேற்கோள் செய்த பதிவு: 1180151
ஞான வசிஷ்டம் ஒரு விடுகதை குவியல் மாதிரி தோற்றுகிறது அம்மா தொடருங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 14, 2015 6:29 pm

கண்டிப்பாக தொடருகிறேன் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 7:42 pm

அடுத்த கதை  18 ..............காக்காயும் ராணியின் வைர மாலையும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 4:58 pm

அடுத்த கதை :...............18 ..............காக்காயும் ராணியின் வைர மாலையும்  தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 Icon_smile
ஒரு காட்டில் ஒரு ஆண் பெண் பறவைகள் சந்தோஷமாய்  வாழ்ந்து வந்ததாம் . பெண் பறவை கரு தரித்து முட்டை இட ஆரம்பித்ததாம்.. இரு பறவைகளும் தாய் தந்தை ஆக போவதை நினைத்து ரொம்ப ஆனந்தமாக இருந்தது. ஒரு நாள் இரையை தேடுவதற்காக இரு பறவைகளும் கூட்டை விட்டு வெளியே சென்றது அந்த சமையம் பார்த்து அந்த  மரத்தின் கீழே இருந்த ஒரு பாம்பு,  இது தான் நல்ல  சமயம் என்று மரத்தின் மேல் ஏறி எல்லா  முட்டைகளையும் உடைத்து குடித்து விட்டதாம். சோகம்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 25 1ePhstoHTHidQ6kPDzSo+Snake_Crow_Neclakce_1
திரும்பி வந்த பறவைகள் கூட்டில் முட்டைஎல்லாம் உடைந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி ஆயிடுத்தாம். பெண் பறவை ரொம்ப அழுததாம்.....புலம்பியதாம்.  ஆண் பறவை , 'அழாதே!' என்று ஆறுதல் சொல்லி, சமாதானம் செய்ததாம். இப்படி 
பலதவடைகள் நடந்ததாம். பாவம், அந்த பறைவகள் போட்ட எல்லா முட்டைகளையும், சுலபமாய் அந்த பாம்பு குடித்துவிட்டதாம்.
ஒருநாள், இந்த காக்கைகள் இரண்டும், உணவுக்காக வெளியில் செல்லாமல் , வேறு ஒரு மரத்தில் ஒளிந்து கொண்டு பார்த்ததாம். பார்த்தால், மரத்தின் அடியிலிருந்து ஒரு பாம்பு மேலே ஏறி கூடுக்கு வருவதை பார்த்ததுகலாம். ஒருவழியாக, அந்த காக்கைகள் தங்களின் முட்டைகளை எடுத்து செல்வது மரத்தின் கீழ் உள்ள பாம்புதான் என்று கண்டுபிடித்ததுகளாம்.

ஆனால், பாவம் அவைகளுக்கு என்ன செய்வது என்று தெரியலையாம். ஒரு பாம்பை எதிர்த்து விரட்டும் அளவுக்கு நமக்கு சக்தி இல்லையே என்று பெண் பறவை அழுததாம். 

"நாம இங்குஇருந்து  வேறு இடத்திற்கு சென்று விடலாமா?" என்று கேட்டதாம் பெண் பறவை.

அதற்கு ஆண் பறவை, சரி...ஆனால்,  நாம் புதுசா போற இடத்திலும் வேறு ஏதாவது கஷ்டம் வரது என்று என்ன நிச்சயம்?....அப்போ............ அங்கிருந்தும்  வெளியேபோவாயா?"  என்று கேட்டதாம்.

"இங்கேயே இருந்து இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பதை யோசிப்போம், நீ கவலைப்படாதே !" என்றதாம் ஆண் பறவை. 

தொடரும்.........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 25 of 46 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 35 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக