புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_m10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10 
11 Posts - 55%
Dr.S.Soundarapandian
ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_m10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10 
6 Posts - 30%
heezulia
ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_m10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10 
3 Posts - 15%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_m10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10 
98 Posts - 41%
ayyasamy ram
ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_m10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10 
88 Posts - 37%
i6appar
ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_m10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10 
13 Posts - 5%
Anthony raj
ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_m10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_m10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_m10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_m10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_m10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_m10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_m10ஏட்டில் முடங்கும் தாலாட்டு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏட்டில் முடங்கும் தாலாட்டு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 02, 2015 12:20 pm

ஏட்டில் முடங்கும் தாலாட்டு! OuuwdDkmTlyn79b24Yx7+Tamil_News_large_1287121

கடன்காரன் வந்தால்கலங்காத நெஞ்சம்
கை மீது பிள்ளை
அழுதாலே அஞ்சும்'

என்று பாட்டு உண்டு. அழுகிற குழந்தையை சமாதானம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. மூன்று வேளை நல்ல உணவு கொடுத்து, நல்ல சம்பளமும் கொடுத்து, பிள்ளையை மட்டும் பார்த்து கொள்ள ஆள் தேடுவோமானால், இன்றைய சூழலில் இந்த பணிக்கு ஆள் கிடைப்பது அரிது.

இந்த மாதிரி ஒரு பணிக்கு ஆள் கேட்டோமானால், அவர்கள் சொல்வது “பிள்ளை எடுத்து சாப்பிடுவதற்கு, பிச்சை எடுத்து சாப்பிடலாம்” என்கிறார்கள். பொழுதுக்கும் குழந்தையை பார்த்து கொள்வது, அதுவும் இந்த காலத்து குழந்தைகளை பார்த்து கொள்வது என்பது சிரமமான பணி.

அழும் குழந்தையை சமாதானம் செய்வது என்பது ஒரு கலை. குழந்தை எதற்கு அழுகிறது என்று அதற்கு சொல்ல தெரியாது. இதற்காகத்தான் அழுகிறது என்று நம்மாலும் அறுதியிட்டு கூற முடியாவிட்டாலும், ஒரு உத்தேசமாக, இதற்குத்தான் அழுகிறது என்று ஒரு தாயால் ஊகிக்க முடியும்.

பாலுாட்ட நேரமில்லை அழும் குழந்தையை துாங்க வைக்க ஒரு அருமையான அணுகுமுறை, தாலாட்டு பாடி துாங்க வைப்பது. இந்த காலத்து தாய்மார்களுக்கு “பாலுாட்டவே” நேரமில்லாத போது, “தாலாட்டு” எங்கே பாடப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா. அதிலும் எத்தனை தாய்மார்களுக்கு 'தாலாட்டு' என்று ஒன்று இருப்பதாக தெரியும். 'தாலாட்டு' ஒரு அருமையான சொல்.

நல்ல தமிழ் சொற்களால் தாலாட்டை பாடும்போது, குழந்தை அதைக்கேட்டு ஒரு மயக்க நிலைக்கு வந்து துாங்கி விடுகிறது. இனி குறைந்தது இரண்டு மணி நேரத்திற்காவது கவலை இல்லை, என நிம்மதி பெருமூச்சு விடும் தாய்மார்கள் எத்தனை பேர்.

தாலாட்டின் வாயிலாக ராமர் கதை, சொக்கர் மீனாட்சி கதை, முருகன் வள்ளியை மணந்த கதை, தாய்வீட்டு பெருமை, புகுந்த வீட்டு பெருமை, கணவனின் பெருமை என எவ்வளவோ தகவல்களை, அந்த தாய் சொல்லி, சொல்லி பாடுகிறாள். தாலாட்டை கேட்டதால் பின் காலத்தில் உருவான கவிஞர்கள் எத்தனையோ பேர், தமிழ்பால் பற்று கொண்டவர்கள் பல பேர்.

கணவன் -மனைவி உறவு

தாலாட்டு குழந்தையை துாங்க வைக்க மட்டும் செய்வதில்லை. கணவன், மனைவி பிணக்கை கூட சரி செய்கிற ஆற்றல், தாலாட்டாய் வரும் தமிழுக்கு உண்டு. கணவன் மனைவிக்குள் பிணக்கு ஏற்படுகின்றது. மூன்று நாட்கள் முழுதாய் முடிந்து விட்டது.

அவர்கள் இன்னும் சமாதானம் ஆகவில்லை. கணவனும் மனைவியும் எப்படி சமாதானம் ஆவது, என்று சிந்தனை வயப்பட்டு இருந்தனர். பின் இரவு நேரம் குழந்தை அழுகிறது. மனைவி தாலாட்டு பாடுகிறார்.

''ஆராரோ ஆரிரரோ - என் கண்ணே
ஆராரோ ஆரிரரோ

ஆரடித்தார் ஏனழுதாய்
கண்ணே என் கண்மணியே
அடித்தாரை சொல்லியழு
விளக்கிலிட்ட வெண்ணையை போல்
வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறது போல்
கண் கலக்கந்தீர்த்தாயே

கொப்புக் கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக் கழுதா யோ
வாயெல்லாம் பால்வடிய

மாமன் அடித்தானோ
மல்லி கைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ
அல்லி மலர்ச் செண்டாலே

அடித்தாரை சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
தொட்டாரை சொல்லியழு

தோள் விலங்கு போட்டு வைப்போம்
வெண்ணையால் விலங்கு பண்ணி
வெய்யிலிலே போட்டு வைப்போம்
மண்ணினால் விலங்கு பண்ணி
தண்ணீரிலே போட்டு வைப்போம்''

எனப்பாடி தொடரும்போது

''ஆரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
தானா அழுகின்றான்
தம்பி துணை வேணுமென்று
அவனா அழுகின்றான்
தங்கை துணைவேணுமென்று''

என்று முடிக்கின்றாள்.

இந்த தாலாட்டை கேட்டதும் முற்றத்தில் படுத்து இருந்த கணவன், வீட்டுக்குள் வந்து விடுகின்றான். அங்கே குழந்தையும் துாங்கிவிட்டது. கணவன், மனைவி சமாதானமும் ஆனது. மனதுகள் சங்கமமும் ஆனது.

-மாமியார் --மருமகள்

மாமியார் ஒருவர் தன் மருமகளை எப்பவும் உன் அப்பன் வீட்டில் இருந்து என்ன பெரிசா கொண்டு வந்து விட்டாய் என்று நிந்தித்து கொண்டே இருப்பாள். மருமகள் கொண்டு வந்து இருந்தாலும், மாமியார் கண்களுக்கு அவை போதவில்லை. அது கண்ணின் குற்றமல்ல பார்வைக்கோளாறு. மருமகள் பாடுகிறார்.

'போட்டு விளையாடப்
பொன்னாலே அம்மானை
வைத்து விளையாட
வைர கிலுகிலுப்பை
கட்டி விளையாடகாசிச் சிண்டுமணி
ஒட்டி விளையாட ஒயிலார ரயில் வண்டி
நெத்திக்கு சுட்டிநிழல் பார்க்க கண்ணாடி
காலுக்கு தண்டை கைக்கு கணையாழி
கொண்டு வந்து தருவார்கள் -
கோதை கிளிக்கு அம்மான்மார்
சங்கினால் பால் கொடுத்தால்
சந்தணர்வாய் நோகுமென்று
தங்கத்தினால் சங்கு செய்து
தருவார்கள் தாய்மாமன் - என்றும்
மாடுகட்டி போரடித்தால்
மாளாது சென் நெல் என்று
யானை கட்டி போரடிக்கும்
அம்மான்மார் சீமையிலே'- என்றும்

தான் பிறந்த வீட்டு பெருமையை தாலாட்டாய் பாடுகின்றார்கள். இப்பாடலை கேட்டு குழந்தை அமைதியானதோ இல்லையோ, மாமியார் அமைதியானார்.

இன்னொரு தாலாட்டு பாட்டில்...

'ஆராரோ ஆரிரரோ
ராமருக்கோ பஞ்சு மெத்தை
பஞ்சுமெத்தை மேலிருந்து - ராமர்
பஞ்சாங்கம் பார்க்கையிலே
வயது நுாறென்று சொல்லி
வாசித்தார் பஞ்சாங்கம்
எழுத்து நுாறென்று சொல்லி
எழுதினார் பஞ்சாங்கம்'

என்று தன் பிள்ளை நுாற்றாண்டு காலம் வாழ வேண்டும் என பாடுகின்றாள். திரும்ப,திரும்ப, தன் பிள்ளையை உயர்த்தியும்,வாழ்த்தியும் பாடுவதால் குழந்தைக்கு தாயின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கின்றது. நேயர் விருப்பம் போல் சில பிள்ளைகள் தான் விரும்பும் தாலாட்டு பாடலை, தாயை பாடச் சொல்லி கேட்கும்.

பரம்பரை, பரம்பரையாக செவி வழியாக வாழ்ந்து வந்த தாலாட்டு இன்றைய தலைமுறைகளின், செவிகளில் விழாமலே போய்விட்டது பரிதாபம். பாரம்பரியமிக்க பல தாலாட்டு பாடல்கள் காலப்போக்கில் அழிந்து தாலாட்டு என்று ஒன்று இருந்ததா? என கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே தாய்மார்களே பிள்ளைகளுக்கு தாய்ப்பாலும் ஊட்டுங்கள், கூடவே தாலாட்டும் பாடுங்கள்.

பி.சுப்பிரமணியன்,
வங்கி மேலாளர் (ஓய்வு)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2015 1:40 pm


மாமன் அடித்தானோ
மல்லி கைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ
அல்லி மலர்ச் செண்டாலே

-
சகோரன் மீதான பாசத்தை
மாமன் அடித்தானோ மல்லிகைப்பூ செண்டாலே
என்கிறாள்...!
-
அதே நேரம் நாத்தனார் (குழந்தைக்கு அத்தை)
அடித்தாளோ அரளிப்பூ செண்டாலே...என்கிறாள்
-
சொல்லும் நயத்தைப் பாருங்க.
அத்தை அடிச்சது எதால?
அரளிப்பூ... விஷம்.... அவ அத்தடா, உங்கப்பாவோட சகோதரி....
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 02, 2015 3:08 pm

ayyasamy ram wrote:
மாமன் அடித்தானோ
மல்லி கைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ
அல்லி மலர்ச் செண்டாலே

-
சகோரன் மீதான பாசத்தை
மாமன் அடித்தானோ மல்லிகைப்பூ செண்டாலே
என்கிறாள்...!
-
அதே நேரம் நாத்தனார் (குழந்தைக்கு அத்தை)
அடித்தாளோ அரளிப்பூ செண்டாலே...என்கிறாள்
-
சொல்லும் நயத்தைப் பாருங்க.
அத்தை அடிச்சது எதால?
அரளிப்பூ... விஷம்.... அவ அத்தடா, உங்கப்பாவோட சகோதரி....
-
மேற்கோள் செய்த பதிவு: 1149157

அடாடா...............அது அரளி இல்லை அண்ணா, அல்லிப்பூ ....அத்தையும் நல்ல வ தான் ராம் அண்ணா புன்னகை

ஏட்டில் முடங்கும் தாலாட்டு! UG5ETMvKSrKsUkZyNh4U+2644116 இது அரளி................

ஏட்டில் முடங்கும் தாலாட்டு! 7cdXQ23jRxugM3bE3EE6+download இது அல்லி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2015 4:51 pm

தாலாட்டுப் பாடல்களில் அரளிச் சென்டால்
அடித்ததாகவே வரும்....
-
இந்த தாய் நாத்தனாரை சேசிப்பவள் போலும்
அதனால் அல்லி பூ என பாடுகிறாள்.!!!!
-


அனைவருக்கும் கிடைக்கக்கூடிய  எளிய மலர் செவ்வரளி.
-
இது தான் இதன் பிறப்பிடம் என்று குறிப்பாகச் சொல்ல
முடியாதபடி தெற்காசியப் பகுதிகளில் வியாபித்திருக்கும்
அழகுமலர்.
-
மிகவும் நச்சுத்தன்மை கொண்ட இம்மலரை மிகவும்
ஜாக்கிரதையாக மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
வேர் மிகவும் நச்சுத்தன்மை கொண்டது.
-
ஆனாலும் அரைத்துப் பசையாக்கி மேல்பூச்சாகப் பயன்படுத்த,
தொழுநோய் குணமாகுமாம்.
-
அரளி விதையின் விஷத்தன்மை மிகவும் கொடூரமானது.
மனித உயிர்களை பலிவாங்கும் அளவுக்கு வீரியம் வாய்ந்தது.
இம்மலருக்குரிய வருந்தத்தக்க விஷத் தன்மை குறித்து,
ப்ரியா எனும் பெண் இது என்ன பூ?
கவிதையில் மிக அழகாகக் குறிப்பிடுகிறார்.

வண்ணத்தில் வனப்பும்
வாசத்தில் வசியமும்
விதையில் ஏனோ வஞ்சகமும்
வைத்திருக்கும் பூ என்னப்பூ? அரளிப்பூ!

-
இந்தக் கேள்வி  எல்லோர் மனதிலும் ஏற்படுவது இயற்கைதானே!
-
பொதுவாக இந்த பூவில் விஷம் இல்லாமலிருக்கலாம்....
-
ஆனால் அரளியின் விதை, தண்டு எல்லாமே
விஷத்தன்மை உடையவை ஆகும்...
-


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 02, 2015 4:59 pm

ayyasamy ram wrote:
சொல்லும் நயத்தைப் பாருங்க.  
அத்தை அடிச்சது எதால?
அரளிப்பூ...  விஷம்....   அவ அத்தடா, உங்கப்பாவோட சகோதரி....
-



அதானே ... நானும் படித்தவுடன் நினைத்தேன் பிறகு விட்டுவிட்டேன்.....

"தாலாட்டு தானே" நமக்கேற்ற மாதிரி மாற்றிக்கொள்ள வேண்டியது தான் புன்னகை




லக்க்ஷனா கைக்குழந்தையாக இருக்கும் போது எனது தோளில் போட்டுகொண்டு நடந்துகொண்டே "தாலாட்டு என்று (வாய்க்கு வந்ததையெல்லாம்) பாடுவேன்" உடனே தூங்கிவிடுவார். இப்ப அந்த ஞாபகத்தில் பக்கத்தில் படுத்துக்கொண்டு தூங்கவைக்கும் போது பாடினால் "அப்பா ப்ளீஸ்பா நானே தூங்கிக்கிறேன் பாடாதீங்கப்பா" என்று சொல்லுகிறார் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக